Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக்கின் நெருக்கடி தொடர்கதையா?

Featured Replies

ஈராக்கின் நெருக்கடி தொடர்கதையா?

 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் 
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

ஈராக்கின் வட­ப­கு­தியில் அமைந்­தி­ருக்கும் குர்­திஸ்தான் மாகா­ணத்தில் தொன்­று­தொட்டு ஒரு தேசிய இன­மாக வாழ்ந்த குர்தீஸ் இன­மக்கள் ஓட்­டமான் அர­சாட்­சிக்குப் பின்னர் தமக்குத் தனி­நாடு வேண்டும் என்­கின்ற அபி­லாஷை­களைத் தொடர்ந்து வெளிப்­ப­டுத்­தி­னார்கள். அவர்­க­ளு­டைய தனி­நாட்டு முஸ்­தீ­புகள் சதாம் ஹுசைன் ஆட்­சிக்கு முன்­னரும், சதாம் ஹுசைன் ஆட்­சிக்­கா­லத்­திலும் இரும்­புக்­கரம் கொண்டு நசுக்­கப்­பட்­டன. சதாமின் காலத்தில் குர்தீஸ் கிளர்ச்­சி­களை அடக்­கு­வ­தற்கு சதாமின் இரா­ணுவம் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி கிள­ர்ச்­சி­களை அடக்­கின என்றும் வகை தொகை­யின்றி குர்தீஸ் மக்கள் கொலை செய்­யப்­பட்­டனர் என்றும் மேற்­கு­லக செய்தி நிறு­வ­னங்­களில் செய்­திகள் தோன்­றின. இருப்­பினும் மேற்­கு­லக ஊட­கங்­களின் உரு­வாக்­கங்கள் சந்­தே­கத்­திற்­கி­ட­மா­னவை என்றும் நம்­பப்­ப­டு­கின்­றது. ஏனெனில் அமெ­ரிக்கா வியட்நாமில், கம்­போ­டி­யாவில், ஆப்­கா­னிஸ்­தானில், சிரி­யாவில்,ஈராக்கில் நிகழ்த்­திய படு­கொ­லைகள், அத்­து­மீ­றல்கள், சதாம் ஹுசைனைப் பற்றி அல்­லது லிபி­யாவின் கடாபி, கியூபாவின் பிடல் காஸ்ரோ, ஈரானின் அய்த்­துல்லா கொமானி பற்றி மேற்­குலக நாடு­களின் ஊட­கங்கள் பிர­சாரம் செய்த அள­விற்கு அமெ­ரிக்­காவின் ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பா­டுகள் வெளி உல­கத்­திற்கு எடுத்துச் சொல்­லப்­ப­ட­வில்லை. அமெ­ரிக்­காவும் சில மேற்கு நாடு­களும் ஈராக்கில் அயல்­நா­டு­களில் நில­வி­வரும் சியா, சுன்னி முஸ்லிம் பிரி­வி­னை­களை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு ஈராக்கில் உள்­நாட்டுப் பிரச்­ச­ினை­களைக் கூர்­மைப்­ப­டுத்­து­வதில் பிர­தான பங்கு வகிக்­கின்­றன. இந்த தந்­திரம் அமெ­ரிக்­காவால் மட்­டு­மன்றி பிரித்­தா­னிய சாம்­ரா­ஜி­யத்­தி­னாலும் ஏனைய கால­னித்­துவ சக்­தி­க­ளாலும் பிர­யோ­கிக்­கப்­பட்டு ஆசிய ஆபி­ரிக்க நாடு­களில் இன்­னமும் குறிப்­பாக இன­மு­று­கல்­களை உரு­வாக்­கு­வதில் அடிப்­படைக் கார­ணி­க­ளாக இருக்­கின்­றன என்­பது வர­லாறு தந்த பாட­மாகும்.

 

குர்­திஸ்தான் தனி­நாட்டு கோரிக்­கைக்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு புரட்­டாதி மாதம் இரு­பத்­தைந்தாம் திகதி குர்­திஸ்தான் பிர­தே­சங்­களில் இடம் பெற்­றது. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் அமோக ஆத­ரவு கிடைத்­தது. ஈராக் நாட்டில் சகல பிராந்­தி­யங்­களும் சமஷ்டி அமைப்பின் கீழ் அதி­காரம் பெற்­றுள்­ளன. 1970ஆம் ஆண்டு ஈராக்­கிய அரசு குர்­திஸ்தான் பிர­தே­சத்­திற்கு தன்­னாட்சி அதி­காரம் வழங்­கி­யது. அதே அந்­தஸ்து சதா­முக்கு பின்­னைய 2005 இல் அர­சியல் சாச­னத்­திலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. குர்­திஸ்தான் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்­கு­ஈ­ராக்­கி­ய­ரி­ட­மி­ருந்து பெரும் எதிர்ப்பை தோற்­று­வித்­துள்­ளது. ஆனால் குர்­திஸ்தான் மாநி­லத்­திற்கு ஏனைய மாநி­லங்­களை விட ­அ­தி­கா­ரங்கள் அதி­க­மாக வழங்­கப்­பட்­டன,குர்­திஸ்தான் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் பின்னர் மத்­திய ஈராக் அர­சாங்­கத்­துடன் முறு­கல்கள் அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வா­ரத்தின் ஆரம்­பத்தில் ஈராக் படைகள் குர்­திஸ்தான் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த கேர்குக் முசை­ம­ரம நக­ரத்தை தமது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வந்­தன. இதனால் இரா­ணுவ சம­நி­லை­களில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. கேர்குக் நகரம் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. செழிப்­பான எண்ணெய் வளங்கள் அமைந்­துள்ள நக­ர­மென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. நாளொன்­றுக்கு மூன்­றரை இலட்சம் பீப்­பாக்கள் எண்ணெய் உற்­பத்தி நடை­பெ­று­மி­ட­மாகும். கேர்குக் மோதலின் கார­ண­மாக உலக எண்ணெய் விநி­யோ­கத்தில் தளர்வு ஏற்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச எண்ணெய் விலை சற்று அதி­க­ரித்­துள்­ளது. அம்­மோ­தலின் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் குர்­திஸ்­தானின் தலை­ந­க­ர­மான ஏர்பில் பகு­திக்கு அக­தி­க­ளாகச் சென்­றுள்­ளனர். கடந்த 14 வரு­டங்­க­ளாக ஈராக் நாட்டில் ஏற்­பட்ட நெருக்­கடி பல விளை­வு­களை தந்­துள்­ளது. 2003 இல் அமெ­ரிக்­கப் ­ப­டைகள் பிர­வே­சித்­ததும் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி சதாம் கொலை செய்­யப்­பட்­டதும் பழைய செய்­திகள் ஆகும்.

 

 

அமெ­ரிக்­கப்­பி­ர­வேசம் ஈராக்கில் பல தீவி­ர­வாத அமைப்­பு­களை உரு­வாக்­கி­யி­ருந்­தது. இவற்றில் ஐ.எஸ்­. அ­மைப்பு குறிப்­பி­டத்­தக்க இரா­ணுவ வெற்­றி­களை ஈட்­டி­யது,ஈராக் படைகள் அமெ­ரிக்க நேட்டோ படை­களின் ஆத­ர­வுடன் உள்­நாட்டு எதிர்ப்­பு­க­ளுக்கு முகம் கொடுத்­தது. எனினும் 2014ஆம் ஆண்­டில் ஐ.எஸ். அமைப்பு பல இரா­ணுவ வெற்­றி­க­ளைப்­பெற்­றது. ஈராக்கில் பலுஜா, மோசுல் ஆகிய நக­ரங்­களை தமது கட்­டுப்­பாட்டில் கொண்­டு­வந்­தது. கேர்குக் நக­ரமும் ஐ.எஸ். அமைப்பின் கட்­டுப்­பாட்டில் இருந்­தது. ஈராக் படைகள் பல­மு­னை­க­ளிலும் ஐ.எஸ். அமைப்­புக்­களின் சவால்­க­ளுக்­கு­முகம் கொடுக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டது. இந்த குழப்ப நிலை­மையை சாத­க­மாக பயன்­ப­டுத்­திய குர்­திஸ்தான் படைகள் 2014இல் கேர்குக் நக­ரத்தை கைப்­பற்றி ஐ.எஸ்.படை­களை பின்­வாங்­கச்­செய்து முக்­கி­யத்­துவம் வாய்ந்த கேர்­குக்கை குர்­திஸ்­தா­னுடன் இணைத்­தது. கே.ஆர்.ஜி. (Kurdistan Regional Government) குர்­திஸ்தான் மாநி­ல­அ­ரசு ஆட்­சி­யி­லி­ருக்­கி­றது. 2014 இல் ஐ.எஸ். படை­களை வெளியேற்­றி­யதன் பின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நிகழ்த்த திட்­ட­மிட்­டது. ஆனால் பின்னர் அதை ஒத்­தி­வைத்­தது. முன்­னை­ய ­ஈராக் பிர­தமர் மாலி­கி­யு­ட­னான உற­வு­களில் கசப்­புக்கள் உரு­வா­கி­யி­ருந்­தன. பின்னர் அல் அபாடி பிர­த­ம­ரானார். அவரின் வேண்­டு­கோளின் அடிப்­ப­டையில் 2014இல் இடம்­பெ­ற­வி­ருந்த தனி­நாட்­டுக்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை ஒத்தி வைத்­தனர். ஒத்­தி­வைக்­கப்­பட்ட சர்­வ­ஜ­ன­வாக்­கு­ரி­மையே புரட்­டாதி 2017இல் நிகழ்ந்­தது.

 

குர்­திஸ்தான் கே.ஆர்.ஜி. ஆட்­சி­யி­னரின் பிரிந்­து­போகும் தீர்­மானம் ஈராக் இனத்­த­வ­ரி­டையே பெரும் சீற்­றத்தை உரு­வாக்­கி­யது .புரட்­டாதி மாதத்தில் நடை­பெ­ற­வி­ருந்த சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­து­வதை அமெ­ரிக்கா மூலம் தடை­செய்ய ஈராக் முயற்­சித்­தது. ஆனால் அமெ­ரிக்­க ­ஈராக், குர்­திஸ்தான் தலைமை பீடங்­களை பகைத்­துக்­கொள்ள விரும்­ப­வில்லை. கேர்குக் பிர­தே­சத்தை குர்­திஸ்தான் படை­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்ற இடம்­பெற்ற போரில் அமெ­ரிக்க ஆயு­தங்­களே பயன்­ப­டுத்­தப்­பட்­டன என்றும் அமெ­ரிக்­காவின் ஆயத விற்­ப­னவு அமோ­க­மாக நடக்­கி­றது என ஒரு பத்­தி­ரிகை கிண்­ட­லாக கூறி­யி­ருந்­தது. குர்­திஸ்தான் மாநில அரசை அத­னையே சுருக்­க­மாக கே.ஆர்.ஜி. (KRG) என ஊட­கங்கள் குறிப்­பி­டு­கின்­றன. மாநில KRG அர­சாங்­கத்தின் வரு­மா­னத்தில் பெரும் வரு­மானம் கேர்குக் எண்ணெய் ஏற்­று­ம­தி­யி­லேயே கிடைக்­கின்­றது. KRG அர­சாங்க கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சங்­களில் அரை­வா­சிக்கு மேற்­பட்ட வரு­மானம் கேர்குக் எண்ணெய் வயல்­க­ளி­லி­ருந்தே கிடைக்­கின்­றது. ஈராக்­கிய படை­யினர் சென்ற திங்கள் (16.10.2017) கேர்குக் நகரை கைப்­பற்றி குர்திஸ் கொடியை இறக்­கி­விட்டு ஈராக் கொடியை ஏற்­றி­யுள்­ளனர். கேர்குக் பிர­தே­சத்தில் Turkmen ரேக்மன் என்னும் இனத்­தவர் வாழ்­கின்­றனர். ஈராக்­கிய படைகள் கேர்குக் நகரை கைப்­பற்­றி­யதைக் கொண்­டாடி மகிழ்ந்­தனர். ஈராக்­கிய குர்திஸ் ஆட்­சிப்­ப­கு­தியின் பிர­தான நக­ரங்­களில் ஏர்பில், சுல­மா­னியா, டியர் பகீர் பிர­தா­ன­மா­னவை. ஈராக் அர­சாங்கம் கேர்குக் பகுதி KRG பிராந்­தி­யத்­துக்கு உரி­யது என்­பதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஆனால் KRG கேர்குக் பகு­திக்கும் உரிமை கோரு­கின்­றது. இது இவ்­வா­றி­ருக்க குர்­திஸ்தான் பற்­றிய மேல­திக தக­வல்கள் வாச­கர்­க­ளுக்கு அவ­சி­ய­மா­னவை. ஈராக்கில் வாழும் பிர­தான இனங்கள் அரா­பி­யர்­களும் குர்­திஸ்­களும் ஆவர். இஸ்­லா­மிய மதத்தைச் சேர்ந்­த­வர்கள் சுன்னி சியா எனும் இஸ்­லா­மிய மதப்­பி­ரி­வுகள் ஈராக்கில் மட்­டு­மல்ல முழு அரா­பிய உல­கத்­திலும் முஸ்லிம் மக்கள் வாழும் நாடு­க­ளிலும் உண்டு.

 

குர்திஸ் இன மக்கள் ஈராக்­கிலும் அதன் அயல் நாடு­க­ளான சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடு­க­ளிலும் வாழ்­கின்­றார்கள். ஐரோப்­பிய கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளினால் நிர்­ண­யிக்­கப்­பட்­டவை தான் இந்த புதிய நாடு­களின் எல்­லைகள் என்­பது அறி­யப்­பட வேண்­டிய விட­ய­மாகும். குர்திஸ் மக்கள் வாழும் நான்கு பிர­தே­சங்­களை உள்­ள­டக்­கிய அகண்ட குர்­திஸ்­தான் குர்­திஸ்தான் பிரி­வி­னை­வா­தி­களின் கன­வாகும். எந்த நாடு­களும் (சிரியா, துருக்கி, ஈராக், ஈரான்) அகண்ட குர்­திஸ்தான் கன­வு­க­ளுக்கு இணங்­கப்­போ­வ­தில்லை என்­பது தெரிந்த விட­ய­மாகும். தமி­ழ­கத்தில் திரா­வி­டக்­கட்சி ஐம்­ப­து­களில் பெரும் திரா­விட நாடு பற்றி பேசி­யமை தமிழ் வாச­கர்­கட்கு ஞாபகம் இருக்­கலாம். தமிழ்­நாடு, கேரளா, கன்­னடா, ஆந்­திரா ஆகிய மாநி­லங்­களே திரா­விடக் கட்­சி­யினர் கண்ட கன­வாகும். அது நிற்க தற்­போது தனி நாடாக சர்­வ­ஜன வாக்­கு­ரிமை நடை­பெற்­ற­து. ­ஈ­ராக்­கிய குர்­திஸ்தான் பிர­தே­சத்தில் என்­பது விளங்­கிக்­கொள்ள வேண்­டிய விட­ய­மாகும். ஈராக் அரசு சர்­வ­சன வாக்­கு­ரிமை சட்­ட­வி­ரோ­த­மா­னது என நிரா­க­ரித்­துள்­ளது. தற்­போது நடை­மு­றை­யி­லி­ருக்கும் ஈராக்­கிய அர­சி­ய­ல­மைப்பு 2005ஆம் ஆண்­டி­லி­ருந்து நடை­மு­றைக்கு வந்­தது. சதாமின் ஆட்­சிக்குப் பின்னர் அமெ­ரிக்க ஆசீர்­வா­தத்­துடன் நிறை­வேற்­றப்­பட்ட அர­சியல் சாச­ன­மாகும். குர்­திஸ்தான் சுயாட்சி கூடிய அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய மாநிலம் எனவும் குர்திஸ் மொழி ­ஈ­ராக்­கிய அர­சி­ய­ல­மைப்பில் ஆட்சி மொழி­யா­கவும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சியல் சாசன அடிப்­ப­டையில் ஆராயும் போது குர்­திஸ்தான் தனி­நாட்டு முயற்சி சட்­ட­விரோ­த­மா­னதே.

முன்னாள் ஜனா­தி­பதி சதாம் ஹுசைன் இரும்­புப்­பிடி ஆட்சி நடத்­திய போது ஈரா­னிய யுத்தம் மற்றும் குவைத் படை­யெ­டுப்பு, அதைத்­தொடர்ந்து வளை­குடா யுத்தம் பின்னர் ஐ.நா. சபையின் தலை­யீடு, ஐ.நா. பாது­காப்­புச்­ச­பையின் பொரு­ளா­தாரத் தடை, வானில் பறப்­ப­தற்­கான தடை, குவைத்தில் மேற்­கொண்ட அநி­யா­யங்­க­ளுக்கும், குவைத்தின் பொரு­ளா­தார இழப்­பிற்கும் ஈராக் செலுத்த வேண்­டிய நட்ட ஈடு, அதனைத் தொடர்ந்து ஐ.நா.ச­பையின் உண­விற்­கான எண்ணெய் விநி­யோகத் திட்டம், நாச­கார ஆயு­தங்கள் ஈராக்கில் இருப்­ப­தாக சந்­தே­கப்­பட்டு அவற்றின் உண்­மைத்­தன்­மையைக் கண்­ட­றி­வ­தற்­காக ஐ.நா. சபையின் கண்­கா­ணிப்பு இவ்­வா­றான பல சவால்­க­ளுக்கு சதாம் ஹுசைனின் காலத்தில் ஈராக் முகங்­கொ­டுத்த பிரச்­ச­ினைகள் ஆகும். ஐ.நா. சபையின் பொரு­ளா­தா­ரத்­த­டையின் கார­ண­மாக ஈராக்கின் பொரு­ளா­தார பிரச்­சி­னைகள் அதி­க­ரித்­தன. சமூக மட்­டத்தில் சிசு ­ம­ரண வீதம் போசாக்­கின்மை அதி­க­ரித்­தது. வேலை­யில்லாத் திண்­டாட்டம், வறுமை அதி­க­ரித்­தது. எனினும் சதாம் ஹுசைன் விட்­டுக்­கொ­டுப்பு மனப்­பான்மை ஏது­மின்றி கடு­மை­யான அமெ­ரிக்க விரோத போக்கைக் கடைப்­பி­டித்தார்.

 

அமெ­ரிக்­கா ­நீண்­ட­கா­ல­மா­க ­ஈராக் தலைவர் சதாம் ­ஹுசைனின் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கு ­காய்­க­ளை ­ந­கர்த்­தி ­வந்­தது. சதாம் ஹுசைனின் ஆட்­சியைக் கவிழ்க்­க­வேண்­டு­மெ­ன­ சி­ல ­ஈ­ராக்­கிய­ அ­ர­சியல் பிர­மு­கர்கள் மேற்­கு­நா­டு­களில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­தனர். அவர்கள் மூல­மா­க­வே­ அ­மெ­ரிக்­கா­ ஈராக் நிகழ்ச்­சித்­திட்­டத்­தை­ அ­ரங்­கேற்­றி­யது. ஈராக் ஈரான் யுத்தம் பெரும் பொருட்­சே­தத்­தையும் உயிர்ச்­சே­தத்­தையும் ஈராக்­கிற்­கு ­மட்­டு­மல்­ல ­ஈ­ரா­னுக்­கும்­ ஏற்­ப­டுத்­தி­யது. அமெ­ரிக்­கா­விற்கு இரண்­டு­மே­ ஆ­றுதல் அளித்­த­ வி­ட­யங்­க­ளாகும். ஒரே கல்லில் இரண்டு மாங்­காய்­களை வீழ்த்­தி­யது போன்றே ஈரான் ஈராக் யுத்தம் அமெ­ரிக்­கா­வுக்கு அமைந்­தது. மன்னர் ஈரான் அதி­ப­ரா­க­ வந்­த­ பின்னர் இஸ்­லா­மி­ய ­புரட்­சியால் ஆட்­சி­ க­விழ்க்­கப்­படும் வரை­ ஈரான் அமெ­ரிக்­காவின் உற்­ற ­நண்பன் அயோத்­துல்­லா­கோ­மெ­னியின் இஸ்­லா­மி­ய­ பு­ரட்­சி­ அ­ர­சாங்கம் பத­வி­யேற்­றபின் அமெ­ரிக்கா எதி­ரி­ நா­டா­க­ மா­றி­யது. அர­சி­யலில் நிரந்­தர ­நட்­பு ­நா­டு ­ப­கை­நா­டு­ எ­ன­ எ­துவும் கிடை­யாது. அதே­கா­லப்­ப­கு­தியில் மன்­ன­ராட்சி­ ந­டை­பெ­று­கின்­ற­ ச­வூதி ­அ­ரே­பி­யாவும் ஏனைய மன்­ன­ராட்­சி­ நா­டு­களும் இஸ்­லா­மி­ய­ பு­ரட்­சித்­தீயைக் கண்­டு­ அஞ்­சினர். ஈராக் குடி­ய­ர­சு­ நா­டாகும். அங்­கு ­நி­ல­மைகள் வேறாக இருந்­தன. அதிலும் சதாம் ­ஹு­சைனின் ஆட்­சியில் இஸ்­ரே­லை ­மு­த­லா­வ­து­ எ­தி­ரி­ நா­டா­க­ சதாம் பிர­க­டனம் செய்தார்.

 

பாலஸ்­தீன ராஜ்யம் உரு­வா­க ­ஈராக் கைகோர்த்­து­ செ­யற்­படும் என ­மு­ழங்­கினார். மத்­தி­ய­ கி­ழக்­குப்­ ப­கு­தியில் ஈராக்­கின்­ ஆட்­சி­ கு­றிப்­பாக சதாம் ­ஹு­சைனின் ஆட்­சி ­க­விழ்க்­கப்­ப­ட­ வேண்டும் என்­பதும் அமெ­ரிக்­காவின் வெளிநாட்­டுக் ­கொள்­கையில் பிர­தான முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்­ட ­வி­ட­ய­மா­கும். ­பின்னர் சதாம் ­ஹுசைன் சின்­னஞ்­சி­றிய அயல் நாடா­ன­ குவைத் மீது­ ஆக்­கி­ர­மிப்பு­ நி­கழ்த்­தி ­அ­மெ­ரிக்­கா­வின்­ வ­லைக்குள் வீழ்ந்தார். சதாம் ­ஹு­சைனின் பாத் கட்சி இட­து­சா­ரிக்­கொள்­கையைக் கடைப்­பி­டித்­தது, சதாம் குவைத் ஆக்­கி­ர­மிப்பு அமெ­ரிக்­காவின் தலை­மையில் கூட்­டணி படை­களால் பின்னர் முறி­ய­டிக்­கப்­பட்­டது.1991ஆம் ஆண்டு ஈராக் படைகள் சின்­னா­பின்னப் படுத்­தப்­பட்­டன. இந்­நேரத்தில் சியாப்­ பி­ரி­வி­னரும் குர்தீஸ் கட்­சி­யி­னரும் சதாம் ஆட்­சிக்கு எதி­ராக கிளர்ச்சி தொடுத்­தனர். ஆனால் சதாம் கிளர்ச்­சி­களை அடக்­கினார். இர­சா­யன ஆயு­தங்­களை ஈராக்­கிய படைகள் பயன்­ப­டுத்­தின என்ற குற்றச்சாட்­டுக்கள் உள்­ளன. அத­னுடன் ஆரம்­பித்த அமெ­ரிக்கா, ஐ.நா.தாபனம் ஆகி­ய­வற்றின் நாச­கா­ர­ ஆ­யுத இர­சா­ய­ன­ ஆ­யு­தங்கள் பற்­றி­ய­குற்­றச்­சாட்டு,ஈராக் மீதா­ன­ பொ­ரு­ளா­தா­ரத்­ த­டையை இறுக்­கி­ ச­தாம் ­ஹு­சை­னின்­ ஆட்­சியின் முடி­வுக்­கு ­வ­ழி­கோ­லி­யது. 2003 வைகா­சி­ மாதம் அமெ­ரிக்­க­ ப­டைகள் நேட்­டோ ­ப­டை­களின் கூட்­ட­ணி­யோ­டு­ ஈ­ராக்கில் பிர­வே­சித்­தது. ஈராக்­கிற்குள் நுழை­வ­தற்­கு ­திட்­ட­மிடல் ஆயத்­த­ வே­லை­களைக் கையாள்­வ­தற்­கு­ ஈ­ராக்கின் வட­ப­கு­தி­யா­கி­ய­ KRG­ பி­ராந்­தியம் பூர­ண­ ஆ­த­ர­வை ­வ­ழங்­கி­யது. அதன்பின் நிகழ்ந்தவை வரலாற்றுப் பதிவு ஆகும்.

 

இப்பின்னணியில் எவ்வாறு கேர்குக் பிரச்சினையில் அமெரிக்கா குர்திஸ்தானுக்கு எதிராக செயற்படும் என்பது புரியாத புதிர் அல்ல. அதேநேரம் தாமே அமைத்த சதாமுக்கு பின்னரான ஈராக் அரசாங்கங்களையும் அமெரிக்காவால் கைவிட முடியாது. அமெரிக்க அதிபர் ட்ரம் அண்மையில் டுவிட்டரில் பின்வருமாறு கூறினார்: அமெரிக்கா வழங்கிய டாங்கிகளை எமது கூட்டணியினரான குர்திஸ்குக்கு எதிராக பாவிக்க அனுமதிக்க மாட்டேன். ஈரான் ஆதரவுடன் ஈராக்கின் படைகள் கேர்குக் நகரை கைப்பற்றியதை அமெரிக்கா விரும்பவில்லை.

 

அராபிய பிரதேசங்களில் நீண்ட காலமாக வாய்மொழியாக பேசப்படுகின்ற பழமொழி ஒன்று உண்டு. நூல்களை எழுதுவது எகிப்தில், அச்சடிப்பது லெபனானில் வாசிப்பது ஈராக்கில் - இதுவே அந்த பழமொழி. அறிவு, அச்சேற்றல்களை எவ்வளவு தூரம் இந்த நாடுகளில் உயர்வாக இருந்தது என்பதை இப்பழமொழி விளக்குகின்றது. ஈராக் சர்வதேச ரீதியாக சரித்திர காலத்திற்கு முன்னரே புகழ்பெற்றதோடு ஐ.நா.வில் ஆரம்பகால உறுப்பு நாடுகளில் ஒன்றாகும். அரபிய சபை (Arab league) அணிசேரா இயக்கம் ஆகியவற்றிலும் பிரதான பங்கேற்ற நாடாகும். நாகரிகத்தின் தொட்டில் எனவும் இரு நதிகளின் (யுப்பிரதீஸ், ரைகிரீஸ்) நாடு எனவும் வர்ணிக்கப்படுகிறது. முடியாட்சியிலிருந்து குடியரசாக மாறி ஈராக்கிய மக்கள் கல்வி சுகாதாரம் பல அறிவுத் துறைகளில் முன்னேறியவர்களாக திகழ்ந்தனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாடுகள் விசேடமாக ஈராக் தொடர்ச்சியான பிரச்சினைகளை முகங்கொடுப்பது, தீர்வுகள் எட்டப்படாமையும், நாட்டில் பல உள்நாட்டு தீவிரவாதக் குழுக்கள் சில பிரதேசங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், வெளி நாட்டுச் சக்திகள் தலையிடுவதுமாக ஈராக்கின் தற்போதைய நிலைமை கேள்விக் குறியாகவுள்ளது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.