Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'2ஜி' ஸ்பெக்ட்ரம்..குற்றவாளிகள் யார்?..

Featured Replies

 
 
 
 '2ஜி', ஸ்பெக்ட்ரம் ,ஊழல், வழக்கில் ,இன்று ,தீர்ப்பு ,தேதி அறிவிப்பு!

புதுடில்லி:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதியை,
டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி இன்று வெளியிடுகிறார்.

 

 '2ஜி', ஸ்பெக்ட்ரம் ,ஊழல், வழக்கில் ,இன்று ,தீர்ப்பு ,தேதி அறிவிப்பு!

கடந்த, 10 ஆண்டுகளாக பரபரப்பு ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு தேதி வெளியாவதால், அரசியல் திருப்பம் நிகழும் என, தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2007 முதல், 2009 வரை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.

அப்போது, செல்போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப் பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து

வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது.

இந்த வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. அதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக அதிக அளவுஆவணங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளதால், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்துக்கு முடிவு ஏற்பட உள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் பல்வேறு பரபரப்பு அரசியல் காட்சிகள் நிகழ்ந்து வரும் நிலையில்,
'2ஜி' வழக்கின் தீர்ப்பால், பல அரசியல் திருப்பம் நிகழும் என்பதால், தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
 

குற்றவாளிகள் யார்?:

'2ஜி' ஸ்பெக்ட்ரம்

 

ஊழல் வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, கனிமொழி ஆகியோரை குற்றவாளிகளாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.

மேலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பகுரா, ராஜாவின் முன்னாள் உதவியாளர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் - அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளான, கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், 'டிவி'க்கு அளித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. அதில், ராஜா, கனிமொழியுடன், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1881565

  • தொடங்கியவர்
 
 
 
 
 
2ஜி வழக்கு, தீர்ப்பு தேதி
 

நவ.,7 க்கு 2ஜி தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு

 

புதுடில்லி : 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு தேதி தொடர்பான அறிவிப்பை நவம்பர் 7 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார். கூடுதல் ஆவணங்கள் சேர்க்க வேண்டி உள்ளதால் வழக்கின் தீர்ப்பு தேதி தாமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதி 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1882088

  • தொடங்கியவர்
2ஜி, வழக்கு, தீர்ப்பு தேதி, டில்லி,சிபிஐ கோர்ட், சைனி, ராஜா, கனிமொழி

புதுடில்லி:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி நவம்பர் 7 ம் தேதி வெளியிடப்படும் என டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்,

 

2ஜி, வழக்கு, தீர்ப்பு தேதி, டில்லி,சிபிஐ கோர்ட், சைனி, ராஜா, கனிமொழி

கடந்த, 10 ஆண்டுகளாக பரபரப்பு ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு தேதி வெளியாவதால், அரசியல் திருப்பம் நிகழும் என, தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2007 முதல், 2009 வரை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.

அப்போது, செல்போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப் பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி

குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது.

இந்த வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. அதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக அதிக அளவுஆவணங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஒத்திவைப்பு


இதனையடுத்து ராஜா, கனிமொழி ஆகியோர் ஆஜராகினர். ஆனால், தீர்ப்பில் பல ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளதால், தீர்ப்பு வழங்கப்படுவது தாமதமாகிறது. தீர்ப்பு இன்னும் முழுமை பெறவில்லை. நவம்பர் 7 ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். அன்று ராஜா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவது ஒத்திவைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளதால், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

 

குற்றவாளிகள் யார்?:

'2ஜி' ஸ்பெக்ட்ரம்ஊழல் வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, கனிமொழி ஆகியோரை குற்றவாளிகளாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.
மேலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பகுரா, ராஜாவின் முன்னாள் உதவியாளர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் - அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளான, கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், 'டிவி'க்கு அளித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. அதில், ராஜா, கனிமொழியுடன், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1881565

  • தொடங்கியவர்
பலமுறை தள்ளி போகும் தீர்ப்பு தேதி
எதிர்பார்ப்பை எகிற வைக்கும், '2ஜி' வழக்கு
 

 

தீர்ப்பு இன்னும் முழுமையாக எழுதி முடிக்கப் படாததால், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பை, 3-வது முறையாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், ஒத்திவைத்துள்ளது.

 

பலமுறை, தள்ளி போகும் ,தீர்ப்பு தேதி, எதிர்பார்ப்பை எகிற வைக்கும், '2ஜி' வழக்கு

கடந்த, 10 ஆண்டுகளாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு, அரசியல் ரீதியிலான முக்கியத்துவத்தை சிறிதும் இழக்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு, தி.மு.க.,வின் அரசியல் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த லாம் என்றும், அதன்மூலம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தின் முகம் மாறலாம் என்றும், யூகங்கள் நிலவி வருகின்றன.

தி.மு.க., மட்டுமல்லாது, தேசிய அரசியலில் காங்கிரசுக்கும் இந்த தீர்ப்பினால், அரசியல் ரீதியாக சாதக பாதகங்கள் ஏற்படுமென்றும், அதன் மூலம், 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போக்கு தீர்மானிக்கப்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

தவிர, குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு இடையிலான இந்த யுத்தத்தில்,
ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு, உடனடியாக, பெரும் விளைவு களை ஏற்படுத்தலாம் என, கூறப்படுகிறது. தி.மு.க.,வின் தெரிந்த முகங்களான, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, எம்.பி., கனிமொழி ஆகிய இருவரது அரசியல் எதிர்காலம் தாண்டி, இந்த தீர்ப்பின் வழக்கு, பல்வேறு கோணங்களில் விஸ்வரூபம் எடுத்து, தமிழகம் மற்றும்தேசிய அரசியலின் ஆட்டங்களை, திணறடிக்க
காத்திருக்கிறது.

கடந்த ஏப்ரலில் இறுதி விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின், பல முறை தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது, நவ., 7ம் தேதி, தீர்ப்பு தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், கூறியதாவது:

ஸ்பெக்ட்ரம் குறித்த, ஆறு வழக்குகள், நீதிபதி, சைனி முன், விசாரணைக்கு வந்தன. இதில், 'ஏர்செல் மேக்சிஸ்' உட்பட 3 வழக்குகளில், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ளது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் கலைஞர், 'டிவி'க்கு வந்த பணம் குறித்த வழக்குகள்.
இவ்வழக்கில் ஆரம்பம் முதலே, உறுதி குலை யாமல் நிற்கிறார், ராஜா. காரணம்,

 

இவ் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள்.ராஜா மீதான முக்கியகுற்றச்சாட்டே, தன்னிச்சையாக முடிவெடுத்தார், என்பது தான்.

தான் மட்டுமல்ல, தனது துறையின் முக்கிய அதிகாரிகள் மட்டுமல்லாது, நிதியமைச்சரில் துவங்கி பிரதமர் வரையில் ஒப்புதல் பெற்றே முடிவெடுத்தாக கூறி, அது குறித்த முக்கிய ஆவணங்களை, நீதிபதி முன் மலைபோல கொட்டி இருக்கிறார், ராஜா.தனக்காக, நீதிபதி முன், ராஜா வாதாடிய ஒவ்வொரு முறையும், அவரது வாதங்களில் அனல் பறந்தது. சி.பி.ஐ., தரப்பிடம், 'கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முரணாக ஆவணங்கள் உள்ளனவே' என, பலமுறை, நீதிபதியே கடிந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்தன.

இந்த வழக்கில், தீர்ப்பின் ஒவ்வொரு அம்சமும், கச்சிதமாக இருக்க வேண்டுமென, மிகுந்த கவனத்துடன், நீதிபதி செயல்பட்டு வருகிறார். அதன் வெளிப்பாடே, கூடுதல் கால அவகாசம் எனத் தெரிகிறது.சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தின் ஆயுட்காலம், நவ.,30ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இதற்கு மேலும், இந்த தீர்ப்பு தாமதம் ஆக வாய்ப்பில்லை.

நவ., 7ல் தேதி அறிவிக்கப்பட்டு, அதிலிருந்து, ஒரு வாரத்திற்குள், தீர்ப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள், தெரிவித்தன.இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப் பட்ட அனைவரும், நவ., 7ம் தேதி ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1882155

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

'சஸ்பென்ஸ்!' 2ஜி தீர்ப்புத் தேதி நாளை அறிவிப்பு

ட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்று  நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சி.பி.ஐ. நீதிமன்றம் நாளை அந்தத் தேதியை அறிவிக்கவுள்ளது. 

அ.தி.மு.க-வின் எதிர்காலத்துடன் தொடர்புடைய ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைப் போன்று, தி.மு.க-வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக 2ஜி வழக்கின் தீர்ப்பு அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

2ஜி வழக்கு - ஆ.ராசா

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கருதும் இவ்வேளையில், தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்லாது இதர அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையேயும் 2ஜி வழக்கின் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. அந்தத் தேர்தலில் நாடு முழுவதும் நரேந்திர மோடி தலைமையில் பி.ஜே.பி. மகத்தான வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. எனினும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் இரு கட்சிகளும் ஓரிடத்தில்கூட வெற்றிபெற முடியாமல் போனது. அதற்குக் காரணம், 2ஜி ஊழல் வழக்குதான் என்று பரவலான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. 

அப்போது ஜெயலலிதா தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க, தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு (2016) நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலிலும், அ.தி.மு.க-வே வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களில், அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனினும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அரசு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு, தமிழக அரசை இயக்கி வருவதாகவும், பிரதமர் மோடிக்கு அடிபணிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது 2ஜி வழக்கில் தி.மு.க-வுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால், 'தமிழகத்தில் திராவிடக்கட்சிகள் இல்லாத ஆட்சியை அமைப்போம்' என்று தொடர்ந்து கூறிவரும் பி.ஜே.பி. உள்ளிட்ட இதரக் கட்சிகள் உற்சாகம் அடையக்கூடும். 2ஜி வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டு வரும் 2ஜி வழக்கின் தீர்ப்பு என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; அதற்கு முன் எப்போது தீர்ப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) வெளியாகிறது. இதன் முன்னோட்டமாகவோ, என்னவோ, சென்னைக்கு ஒருநாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரின் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். 

 

இந்நிலையில், தற்போது 2ஜி வழக்கின் தீர்ப்புத் தேதி வெளியான பின்னரே, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/india/106983-when-will-be-the-judgement-for-2g-case-cbi-court-to-announce-date-on-nov7th.html

  • தொடங்கியவர்
2ஜி,வழக்கு,இன்று,தீர்ப்பு,தேதி

புதுடில்லி: காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி, இன்று அறிவிக்கப்பட உள்ளது.

'இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த விசாரணையின்போது ஆஜராகாத, கரீம் மொரானி, சஞ்சய் சந்திரா மற்றும், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் உட்பட, அனைவரும் இன்று ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், ஊழல் செய்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 

ரூ1.76 லட்சம் கோடி இழப்பு


மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2009 வரை, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப் பட்டது.
இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏறபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது. இந்த

வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. வழக்கு தொடர்பாக அதிக ஆவணங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால், தீர்ப்பு தேதி ஒத்திவைக் கப்படுவதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார்.
இதையடுத்து, கடந்த மாத இறுதியில் நடந்த விசாரணையின்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் ஆஜராயினர். ஆனால், தீர்ப்பில் பல ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டி இருந்ததால், தீர்ப்பு வழங்குவது தாமதம் ஆனது.

அதனால், நவ., 7ல், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்றும், ராஜா, கனிமொழி, சிறையில் உள்ள சஞ்சய் சந்திரா, கரீம் மொரானி உள்ளிட்ட, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளதால், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு, தங்கள் அரசியல் எதிர்காலத்தை கடுமையாகபாதிக்கும் என்ற அச்சத்தில் , சம்பந்தப்பட்ட

 

பிரபலங்கள் உறைந்து போய் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 

சிக்கியவர்கள் யார்?


'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, கனிமொழி ஆகியோரை குற்றவாளிகளாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.
மேலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பகுரா, ராஜாவின் முன்னாள் உதவியாளர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் - அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளான, கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீதும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.200 கோடி லஞ்சம்



'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், 'டிவி'க்கு அளித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. அதில், ராஜா, கனிமொழியுடன், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி, தயாளு உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1890846

  • தொடங்கியவர்

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு!

http://www.vikatan.com/latest-news

  • தொடங்கியவர்
ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு தேதி தள்ளி வைப்பு
தாமதமாவதன் பின்னணி என்ன
 

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு எப்போது அறிவிக்கப்படும் என்ற தேதி, மீண்டும் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதன் பின்னணியில் தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், ராஜாவின் வாதங்களும் அவர் தரப்பில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஸ்பெக்ட்ரம்,தீர்ப்பு, தேதி, தள்ளி வைப்பு, தாமதமாவதன், பின்னணி என்ன

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை ஏப்ரல் மாதமே முடிந்துவிட்டது. இது கிரிமினல் வழக்கு. 
இதுபோன்ற வழக்குகளில் சிறு சந்தேகம் இருந்தாலும் அதை குற்றவாளிக்கு சாதகமாக அளிக்க வேண்டும்.மாணவி, ஆருஷி கொலை வழக்கில்கூட குற்றத்தை, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியதாலேயே அந்த சந்தேகத்தின் பலன் ஆருஷியின் பெற்றோருக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா, சந்தேகத்தின் பலனைக் கூட கேட்கவில்லை. 'குற்றப்பத்திரிகையே தவறு' என கூறி, வழக்கின் அடிப்படையையே கேள்விக்கு ஆளாக்கியுள்ளார். ஒரு கொலை நடந்து, 'அதை நான் செய்யவில்லை' என்பது ஒருவகை. 'அப்படியொரு கொலையே நடக்கவில்லை; இதோ உயிருடன் அவர் உள்ளார்' என, 

வாதிடுவது மற்றொரு வகை; இதில், ராஜா விவகாரம் இரண்டாவது வகை.

நிர்வாக ரீதியிலானது என்றாலும் பெருமளவு தொழில்நுட்ப ரீதியில் அமைந்த நுட்பமானது தான் இந்தஸ்பெக்ட்ரம் வழக்கு. மத்திய தணிக்கைக் குழுவான, சி.ஏ.ஜி., அளித்த அறிக்கைதான், இந்த வழக்கிற்கு அடிப்படையே. ஆனால் அந்த சி.ஏ.ஜி., அறிக்கையே தவறு என்பது தான் ராஜாவின் பிரதான வாதம். 

இதற்கு காரணம், 2010ல், தொலைத்தொடர்பு அமைச்சகம், சி.ஏ.ஜி.,க்கு எழுதிய பதில்கள்.
அதில் சி.ஏ.ஜி.,யின் குற்றசாட்டு ஒவ்வொன்றையும் கடுமையாகசாடியதுடன் 'ஸ்பெக்ட்ரம் குறித்த போதுமான சட்டப்புரிதலோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாமல் தயாரிக்கப்பட்ட அறிக்கை. போதிய விஷய ஞானமே இல்லாத இந்த அறிக்கை துாக்கியெறியப்படவேண்டியது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதிய உயர் அதிகாரி தான் சி.பி.ஐ., தரப்பின் பிரதான சாட்சிகளில், ஒருவர்; இவர், சாட்சியளிக்க கூண்டில் நின்றபோது, அவரிடம், ராஜாவே குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, 'சி.ஏ.ஜி.,க்கு எழுதியுள்ள பதில்கள் உண்மையே. பிரதமர் அலுவலகம் நிதியமைச்சகம் என அனைத்து தரப்போடும் ஆலோசித்து, கூட்டுமுடிவே எடுக்கப் பட்டது' என, அந்த அதிகாரி ஒப்புக் கொண்டார்.

சி.ஏ.ஜி.,க்கும், தொலைத் தொடர்புத் துறைக்கும் இடையிலான இதுபோன்ற முக்கிய கடித போக்குவரத்துக்கள் இருக்கும் விபரங்களை, சி.பி.ஐ., காவலில் இருந்தபோதுகூட ராஜா, தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்.இந்த ஆவணங்களை கைப்பற்றாமலேயே ஊடகங்கள், சுப்ரீம் கோர்ட் போன்றவற்றின் அழுத்தங்கள் காரணமாக, சி.பி.ஐ.,

 

அவசரகதியில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் விசாரணை ஆரம்பித்த பிறகு, நீதிபதிமுன்பாக, ஆவணங்களை ஒவ்வொன்றாக ராஜா வெளியில் விட ஆரம்பித்த போதுதான், இத்தகைய ஆவணங்கள் இருப்பதே, மற்றவர் களுக்கு தெரிந்தது.தேதியை மாற்றியது, முதலில் வருபவருக்கே முன்னுரிமை இரட்டை தொழில்நுட்பம் என, சி.பி.ஐ.,யின் குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும், தொலைத் தொடர்புத் துறை, பிரதமர் மற்றும் நிதியமைச்சக ஆவணங்களே எதிராக உள்ளன. ராஜா கூறியோ, கட்டாயப்படுத்தியோ, முடிவுகள் எடுக்பட்டதாக எந்தவொரு இடத்திலும் இல்லை.

வழக்கை கையில் எடுத்த பின்பாவது, 'அமைச்சரின் நிர்ப்பந்தம் காரணமாகவே, இந்த கடிங்களை எழுத நேரிட்டது' என, வாக்கு மூலம் வாங்கியிருக்கலாம்; அதையும், சி.பி.ஐ., செய்யவில்லை.இந்த பின்னணியில்தான், ஆவணங்களை சரிபார்த்து, தரப்போகும் தீர்ப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நியாயப்படுத்தி, 10 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக தீர்ப்பு விபரங்கள் தயாராவதே, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவது தாமதமாவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

டிசம்பர் 5க்கு ஒத்திவைப்பு


தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. மேலும் மூன்று வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தீர்ப்பு தேதி குறித்த அடுத்த கட்ட விசாரணை டிசம்பர், 5க்கு ஒத்தி வைக்கப் படுகிறது.
-ஓ.பி.சைனி,
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி, டில்லி

http://www.dinamalar.com/news_detail.asp?id=1891743

  • கருத்துக்கள உறவுகள்

மோடி மஸ்த்தான் கருணாவை சந்திக்க செல்லும்போதே நீதி புதைக்கப்பட போவுது என்று தெரியும் நடத்துங்க நாடகத்தை இந்த 2g ஊழல் இதை வைச்சே மே 18ல்  காங்கிரஸ் எம்மை பழிவாங்கியது தலிவர் தன் குடும்பம் வாழனும் என்று நினைத்தபடியால் ஒரு லட்சத்துக்கு அதிகமான உயிரை நாம் இழந்தோம் .

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

2ஜி வழக்கு தீர்ப்பு டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்படுகிறது! - டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு

https://www.vikatan.com/latest-news

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
நாட்டையே உலுக்கிய, '2ஜி' ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு!

புதுடில்லி: தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, அந்த கட்சியின் ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு வெளியாகிறது. இதன் மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த மோசடி தொடர்பான வழக்கு முடிவுக்கு வருகிறது. தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, ராஜா உட்பட பலர் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் வீடு, கலைஞர், 'டிவி' வட்டாரங்களில் பீதி நிலவுகிறது.

 

நாட்டையே உலுக்கிய, '2ஜி' ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு!


முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஊழல் நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.
 

ரூ.1.76 லட்சம் கோடி


இந்த ஊழல் காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அதில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ.,

இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் தொடர்ந்து உள்ளது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்கு, கைமாறாக, தி.மு.க.,வுக்கு சொந்தமான, கலைஞர், 'டிவி'க்கு, டி.பி., குரூப் நிறுவனம், 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கும், இதில் அடக்கம்.

இந்த வழக்குகளை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வருகிறார். சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளில், முதல் வழக்கில், ராஜா, கனிமொழி, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பெஹுரா, ராஜாவின் முன்னாள் தனிச் செயலர், ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட, 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
 

குற்றப்பத்திரிகை


ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஒயர்லெஸ் நிறுவனம் ஆகியவையும், வழக்கை சந்தித்துள்ளன. '2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமங்களை, 122 பேருக்கு, ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு, 30 ஆயிரத்து, 984 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணை, ஏப்., 26ல், முடிவுக்கு வந்தது. இந்நிலையில், 21ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என, நீதிபதி, ஓ.பி.சைனி,

 

இம்மாத துவக்கத்தில் அறிவித்தார். அதன்படி, '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு வெளியாகிறது.இதன்மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த, மோசடி தொடர்பான வழக்கு முடிவுக்கு வருகிறது.

தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, ராஜா உட்பட பலர் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் வீடு மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள, கலைஞர், 'டிவி' வட்டாரங்களில் பீதி நிலவுகிறது.
 

தி.மு.க.,வுக்கு பாதிப்பா?


'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் அதே நாளில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜாவுக்கு எதிராக தீர்ப்பு அமைந்தால், அது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 

500 பேர் டில்லியில் முகாம்


வழக்கின் தீர்ப்பு, முன்னாள் அமைச்சர், ராஜா மற்றும் கனிமொழி, எம்.பி., ஆகியோருக்கு எதிராக அமைந்தால், டில்லியில் போராட்டம் நடத்தவும், தீர்ப்பு சாதகமாக அமைந்தால், பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடவும், தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் டில்லிக்கு சென்று தங்கியுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1922136

  • தொடங்கியவர்

நாளை தீர்ப்பு வெளியாகும் 2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை

2ஜி வழக்கு: கடந்து வந்த பாதைபடத்தின் காப்புரிமைCHANDAN KHANNA

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு, அந்த விவகாரத்தில் சில தனியார் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனையை சட்டவிரோதம் எனக் கூறி மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு ஆகியவற்றின் தீர்ப்பை நாளை (டிசம்பர் 21) டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அளிக்கவுள்ளது.

2007-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் முக்கிய நாட்களை விவரிக்கும் சுருக்கம் இது.

2007

மே 16 - தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்பு

ஆகஸ்ட் - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறை தொடங்கியது.

செப்டம்பர் 25 - உரிமத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 1 என அறிவிப்பு

அக்டோபர் 1 - 46 நிறுவனங்களிடம் இருந்து 575 விண்ணப்பங்கள் வருகை

நவம்பர் 2 - வெளிப்படையாக உரிமம் ஒதுக்குமாறு ஆ.ராசாவுக்கு பிரதமர் கடிதம்

2008

ஜனவரி 10 - முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் உரிமம் வழங்க முடிவு

ஜனவரி 10 - விண்ணப்ப கடைசி நாளை செப்டம்பர் 25-ஆக இறுதி செய்தது தொலைத்தொடர்புத் துறை

செப்டம்பர் 22 - ஸ்வான் டெலிகாம், யூனிடெக், டாடா டெலிசர்வீசஸ் அவற்றின் பங்குகளை எடிசலாட், டெலிநார், டோகோமோ நிறுவனங்களுக்கு முறையே அதிக விலையில் விற்றன.

2ஜி வழக்கு: கடந்து வந்த பாதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

2009

மே 4 - வாட்ச்டாக் என்ற என்ஜிஓ மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) புகார் மனு

ஜூலை 1 - விண்ணப்ப கடைசி நாள் முன்கூட்டியே நிர்ணயித்ததை நிறுத்தி வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்

அக்டோபர் 12 - சிபிஐ விசாரிக்க சிவிசி பரிந்துரை

அக்டோபர் 21 - பெயர் குறிப்பிடாத தொலைத்தொடர்புத் துறை, தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு

அக்டோபர் 22 - மத்திய தொலைத்தொடர்புத் துறை அலுவலகங்களில் சிபிஐ சோதனை

நவம்பர் 16 - 2ஜி உரிமம் வழங்கியதில் இடைத்தரகர் நீரா ராடியா உள்ளிட்டோருக்கு இருக்கும் தொடர்புகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வருமான வரித்துறைக்கு சிபிஐ கடிதம்

நவம்பர் 20 - நீரா ராடியாவும் ஆ.ராசாவும் முக்கிய கொள்கை விவகாரங்களை விவாதித்தது வருமான வரித் துறை பதிவு செய்த தொலைபேசி உரையாடலில் அம்பலம்.

2010

மே 6 - ஆ.ராசாவுக்கும் நீரா ராடியாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் கசிவு

செப்டம்பர் 24 - ராசாவுக்கு எதிராக வழக்கு தொடர பிரதமருக்கு உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு

நவம்பர் 14 - அமைச்சர் பதவியில் இருந்து ஆ. ராசா ராஜிநாமா

நவம்பர் 16 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை

2ஜி வழக்கு: கடந்து வந்த பாதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

2011

பிப்ரவரி 2 - ஆ.ராசா, அவரது தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. சந்தோலியா, அவரது பதவிக்காலத்தில் தொலைத்தொடர்புத் துறை செயலாளராக இருந்த சித்தார்த் பெஹுரா கைது

பிப்ரவரி 17 - ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல்

மார்ச் 14 - 2ஜி வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏப்ரல் 2 - ராசா, சந்தோலியா, சித்தார்த் பெஹுரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி, துணைத் தலைவர் ஹரி நாயர், குழும தலைவர் சுரேந்திர பிபாரா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்ப்பு

ஏப்ரல் 25 - திமுக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, அவரது தாயார் தயாளு அம்மாள், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட நால்வர் பெயர் துணை குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு

அக்டோபர் 24 - குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு

நவம்பர் 11 - சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது

நவம்பர் 23 - கார்பரேட் நிர்வாகிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா ஆகியோரை பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நவம்பர் 28 - கனிமொழி, சரத் குமார், கரீம் மொரானி, ஆசிஃப் பால்வா, ராஜிவ் அகர்வால் ஆகியோரை பிணையில் விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

நவம்பர் 29 - ஷாஹித் பால்வாவை பிணையில் விடுவிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 1 - சந்தோலியாவை பிணையில் விடுவிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 12 - சிபிஐ தாக்கல் செய்த மற்றொரு குற்றப்பத்திரிகையில், எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் அன்ஷுமன் ருய்யா, ரவி ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி. கெய்தான், லூப் டெலிகாம், லூப் மொபைல் இந்தியா, எஸ்ஸார் டெலி ஹோல்டிங் பெயர்கள் சேர்ப்பு

2012

பிப்ரவரி 2 - 2ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

பிப்ரவரி 2 - ப.சிதம்பரத்தை விசாரிக்க மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி விடுத்த கோரிக்கை மீது சிபிஐ நீதிமன்றமே முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் யோசனை

பிப்ரவரி 4 - ப.சிதம்பரத்தை குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்க சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சிபிஐ நீதிமன்றம்

பிப்ரவரி 23 - சிபிஐ நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி, சிபிஐஎல் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு

மே 12 - ராசா பிணையில் விடுதலை

ஆகஸ்ட் 24 - 2ஜி வழக்கில் சிதம்பரத்தை சேர்க்க விடுத்த கோரிக்கையில் முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

2ஜி வழக்கு: கடந்து வந்த பாதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

2013

டிசம்பர் 9 - மக்களவையில் 2ஜி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை தாக்கல்

2014

ஏப்ரல் 25 - ராசா, கனிமொழி உள்ளிட்ட 10 பேர், 9 தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

மே 5 - நீதிமன்றத்தில் ராசாவின் சாட்சியம் பதிவு

அக்டோபர் 31 - அமலாக்கத் துறை வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு

நவம்பர் 10 - இறுதி விசாரணை டிசம்பர் 19 முதல் தொடங்கும் என்றது சிபிஐ நீதிமன்றம்

2015

நவம்பர் 3 - குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய கனிமொழி மனு நிராகரிப்பு

2017

ஏப்ரல் 19 - வழக்கு விசாரணை முடிந்து வாதங்கள் நிறைவு

டிசம்பர் 5 - வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 21 வெளியிடுவதாக சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு

http://www.bbc.com/tamil/india-42415097

  • தொடங்கியவர்

 

2ஜி முறைகேடு வழக்கு: இறுதி முடிவில் சிக்கப்போகிறதா தி.மு.க ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.