Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமி­ழீ­ழ­த்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை நிறுத்துங்கள்

Featured Replies

தமி­ழீ­ழ­த்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை நிறுத்துங்கள்

p5-99783144d2cdf3398a71f5ce67f00ac4abf3bad6.jpg

 

 பெல்­லன்­வில விம­ல­ரத்ன அநு­நா­யக்க தேரர் கோரிக்கை  
(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கை அர­சி­ய­ல­மைப்­பிற்குள் இந்­தியா பல­வந்­த­மாக திணித்த 13ஆவது திருத்­தத்தை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் யோசனைகள் முன்­வைக்­

கப்­பட்­டுள்­ளன. தமி­ழீ­ழத்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்க நல்­லாட்சி அர­சாங்கம் முற்­பட்டால் மகா­சங்­கத்­தி­னரின் கடு­மை­யான எதிர்ப்­பு­களை சந்­திக்க நேரிடும் என

ஸ்ரீகல்­யாணி சாம­கி­ரி­தம்ம சங்க சபையின் அநு­நா­யக்க பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் எச்­ச­ரித்­துள்ளார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான அனைத்து நட­வ­டிக்­கை­களும் உடன் நிறுத்­தப்­பட வேண்டும். இதனை வலி­யு­றுத்தி மூன்று பிர­தான பௌத்த பீடங்­களும் விரைவில் கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட உள்­ளன . அதே போன்று அர­சாங்­கத்தின் அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கை­களை கண்­டித்து ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு மகஜர் கைய­ளித்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அகில இலங்கை பௌத்த சம்­மே­ள­னத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்துக் கொண்டு உரை­யாற்றும் போதே பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்­கான அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் மற்றும் முன்­னெ­டுப்­புகள் தொடர்பில் மஹா சங்­கத்­தினர் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். அனைத்து இன மக்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்கி பிரி­வி­னை­வா­தத்தின் பொறிக்குள் சிக்க வைக்கும் வகை­யி­லேயே தற்­போ­தைய அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான யோச­னை­களும் முன்­னெ­டுப்­பு­களும் காணப்­ப­டு­கின்­றன.

பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரங்­களை குறைக்கும் சரத்­துக்கள் , ஆளுநர் ஊடாக மாகாண சபை­களை கட்­டுப்­ப­டுத்தி ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை இரத்து செய்யும் வகை­யி­லான பரிந்­து­ரைகள் , வடக்கு மற்றும் கிழக்கை மீளி­ணைக்கும் யோசனை மற்றும் ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான திருத்­தங்கள் என்­பன வெளிப்­ப­டை­யா­கவே காணப்­ப­டு­கின்­றன. பரஸ்­பர விரோத அர்த்­தங்­களை தர கூடிய சொற்கள் தமிழ் , சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி சொற்கள் பல காணப்­ப­டு­கின்­றன.

மறு­புறம் சாதா­ரண மக்­க­ளுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று தேவை­யில்லை. இலங்­கையில் வாழும் மொத்த தமி­ழர்­களில் வெறும் 32 வீத­மான தமி­ழர்கள் மாத்­தி­ரமே வடக்கில் வாழ்­கின்­றனர். இவர்­க­ளிலும் சிறிய தொகை­யி­னரே பல்­வேறு உள்­நோக்­கங்­க­ளுடன் செயற்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து பேசு­கின்­றனர்.

உள் நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் வாழும் பிரி­வி­னை­வாத சக்­திகள் இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு சூழ்ச்­சி­களை செய்து வரு­கின்­றன. எனவே மீண்டும் சர்­வ­தே­சத்­திற்கு அடி­ப­ணியும் நிலைமை ஏற்­பட்டு விட கூடாது . புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற போர்­வையில் நாட்­டிற்குள் கொண்டு வரு­வது என்ன ? என்­பதை அனை­வரும் அறிந்­துள்­ளனர். தற்­போ­தைய புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான முன்­னெ­டுப்­புகள் அனைத்தும் சமஷ்­டியை நோக்­கியே செல்­கின்­றன.

பல விட­யங்­களை அர­சாங்கம் மறைத்­துள்­ளது. எனவே எந்­த­வ­கை­யிலும் தற்­போ­தைய புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு அனு­மதி வழங்க முடி­யாது. அர­சாங்கம் உட­ன­டி­யாக தீர்­மா­னத்தை மாற்­றிக்­கொள்ள வேண்டும் . அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மாநா­யக்க தேரர்கள் மிகவும் தெளி­வாக இதனை குறிப்­பிட்­டுள்­ளனர். அதே போன்று இலங்­கையின் அதி உச்ச பௌத்த பீடங்­க­ளான சியாம் , அம­ர­புர மற்றும் ராமஞ்ஞ பீடங்­களின் மஹா­நா­யக்க தேரர்கள் கூட்டு அறிக்கை வெளி­யிட உள்­ளனர்.

அதன் பின்னர் அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து பேச முடி­யாது. பௌத்த சாச­னத்தை மீறி செயற்­பட நினைத்தால் நிலைமை மோச­ம­டையும் . அனைத்து பிக்­கு­களும் பல்­வேறு வழி­களில் அரச எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடுப்­ப­டு­வார்கள். இதனால் ஆட்­சியை விட்டு செல்ல வேண்­டிய நிலையே நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஏற்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை நிறை­வேற்ற பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை போதாது.

நிச்­சயம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும். அப்­போது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை தோல்­வி­ய­டைய செய்வோம். தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக அர­சி­ய­ல­மைப்பை யாருக்கும் உரு­வாக்க இட­ம­ளிக்க முடி­யாது. மாகாண சபை முறைமையை 13 திருத்தம் ஊடாக இந்தியா பலவந்தமாகவே இலங்கை அரசியலமைப்பிற்குள் திணித்தது. தமிழீழ கோரிக்கையின் ஒரு பகுதியே அதுவாகும் .

எனவே சட்டபூர்வமாக தமிழீழம் உருவாக்கப்படும் நிலைமையே புதிய அரசியலமைப்பில் காணப்படுகின்றது. இதனை கண்டித்து புதிய அரசியலமைப்பு ஒன்றின் அநாவசிய தன்மையை குறிப்பிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மகஜரை அனுப்பு வைத்துள்ளோம் என தெரிவித்தார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.