Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழக்ைக மாற்றும் வரை போராட்டம் தொடரும் என கைதிகள் அறிவிப்பு

Featured Replies

வழக்ைக மாற்றும் வரை போராட்டம் தொடரும் என கைதிகள் அறிவிப்பு

 
34_25102017_SSK_CMY.jpg

சிவாஜிலிங்கம், உறவினர்கள் நேற்று நேரில் சந்திப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் மூன்று அரசியல் கைதிகளை வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு நேற்றுப் புதன்கிழமை (25) காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளது.

இந்தக் குழுவில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் உண்ணாவிரதமிருந்து வரும் திருவருளின் மனைவி, அவரது மகன், சுலக்சனுடைய தங்கை, தர்சனுடைய தாயார் மற்றும் ரெலோ அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம், சட்டத்தரணி ஆகிய எட்டுப் பேர் இடம்பெற்றுள்ளனர்.

குறித்த சந்திப்புத் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

மூன்று அரசியல் கைதிகளும் செவ்வாய்க்கிழமை அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதியக்கப்பட்டுச் சிகிச்சையும் வழங்கப்பட்டிருந்தது. வைத்தியசாலையில் கட்டில்களில் சங்கிலி பிணைக்கப்பட்டே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த மூன்று அரசியல் கைதிகளும் நேற்று (25) சிறைச்சாலை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு மீளவும் சிறைச்சாலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை அத்தியட்சகருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையிலேயே கைதிகளைச் சந்தித்துப் பேசுவதற்கான விசேட அனுமதி எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. நானும், அரசியல் கைதிகளின் உறவினர்களும் மிக அருகிலிருந்து அவர்களது உடல் நிலை தொடர்பில் தெரிந்து கொண்டதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தங்கள் வழக்குகள் மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதன் பின்னரே தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் உண்ணாவிரதமிருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளும் உறுதியாகவுள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்த பின்னர் தான் உங்கள் போராட்டத்தை நிறைவிற்குக் கொண்டு வர வேண்டுமென நாங்களும் அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம் என்றார். 

http://www.thinakaran.lk/2017/10/26/உள்நாடு/20758/வழக்ைக-மாற்றும்-வரை-போராட்டம்-தொடரும்-என-கைதிகள்-அறிவிப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.