Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விராட் கோலி புதிய சாதனை!

Featured Replies

விராட் கோலி புதிய சாதனை!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்தார். 

kohli_16119.jpg

 

Photo Credit: BCCI

கான்பூரில் நடந்துவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த போட்டியில் 83 ரன்களைக் குவித்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களை எட்டினார். 194ஆவது இன்னிங்ஸில் 9,000 ரன்களைக் கடந்த விராட் கோலி, 205 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் டிவிலியர்ஸின் சாதனையை முறியடித்தார். இந்த பட்டியலில் 228 இன்னிங்ஸ்கள், 235 இன்னிங்ஸ்களுடன் முறையே கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் 3, 4-வது இடங்களைப் பிடித்துள்ளனர். 

 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இதனால், இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும். போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் தவான் விரைவில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், இரண்டாவது விக்கெட்டுக்கு ரோகித் ஷர்மாவுடன், கைகோர்த்த கேப்டன் கோலி விரைவாக ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 147 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கான்பூர் மைதானத்தில் ஒரு ஜோடி குவிக்கும் அதிகபட்ச ரன் இதுவாகும். 44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்துள்ளது. 96 பந்துகளில் சதமடித்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 32ஆவது சதத்தைப் பதிவு செய்தார். 

http://www.vikatan.com/news/sports/106259-virar-kohli-achieves-new-feat-in-nz-odi.html

  • தொடங்கியவர்

32-வது சதம், 9 ஆயிரம் ரன்கள், ஒரு வருடத்தில் அதிக ரன்: விராட் கோலி அசத்தல்

கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த கோலி, 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

 
32-வது சதம், 9 ஆயிரம் ரன்கள், ஒரு வருடத்தில் அதிக ரன்: விராட் கோலி அசத்தல்
 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்பின் முதலில் களம் இறங்கிய இந்தியா 6.1 ஓவரில் 29 ரன் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. தவான் 20 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

201710291633357059_1_4ViratKohli001-s._L_styvpf.jpg

அடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்து விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 37-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 83 ரன்னைத் தொட்டார். அப்போது விராட் கோலி 202 போட்டியில் 194 இன்னிங்சில் 9 ஆயிரம் ரன்கள் எடுத்து, விரைவாக 9 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

201710291633357059_2_4ViratKohli003-s._L_styvpf.jpg

தொடர்ந்து விளையாடிய விராட் கோலி, 96 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 32-வது சதத்தை பதிவு செய்தார்.

201710291633357059_3_4ViratKohli005-s._L_styvpf.jpg

அத்துடன் கேப்டனாக ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையையும் தன்வசமாக்கினார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் ஒரே வருடத்தில் 1424 ரன்களும், மிஸ்பா உல் ஹக் 1373 ரன்களும் சேர்த்திருந்தனர். தற்போது அதை விராட் கோலி முறியடித்துள்ளார்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/29163332/1125748/INDvNZ-Kohli-32-century-fastest-9000-runs.vpf

  • தொடங்கியவர்

ஒரே போட்டியில் இரு உலக சாதனைகளைப் படைத்த கோஹ்லி

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக சாதனைகளுக்கு மேல் சாதனைகளை படைத்து வருகின்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் உலகின் முன்னணி நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான 3ஆவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் 2 புதிய சாதனைகளை நிலைநாட்டினார்.

இதில் அணித் தலைவராக ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, 1,460 ஓட்டங்கள் பெற்று ஒரு ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்கின் (1,424 ஓட்டங்கள்) சாதனையை முறிடியத்தார்.

இந்த வரிசையில் 1,373 ஓட்டங்களுடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும், 1,268 ஓட்டங்களுடன் இந்தியாவின் அசாரூதீனும், 1,244 ஓட்டங்களுடன், இலங்கையின் அஞ்செலோ மெதிவ்சும் உள்ளனர்.

வீரர்கள் போட்டிகள் இன்னிங்ஸ் சதம் அரைச்சதம் வருடம்
விராட் கோஹ்லி 26 26 6 7 2017
ரிக்கி பொண்டிங் 27 24 5 8 2007
மிஸ்பா உல் ஹக் 34 32 0 15 2013
மொஹமட் அசாருடீன் 37 33 3 8 1998
அஞ்செலோ மெதிவ்ஸ் 32 31 1 9 2014

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு சதங்கள் உள்ளடங்கலாக 263 ஓட்டங்களைக் குவித்த கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் அதிவேகமாக 9,000 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்ததுடன், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் . பிடி. வில்லியர்ஸின் சாதனையையும் முறியடித்தார்.   

இதுவரை இச்சாதனையை 205 இன்னிங்ஸ்களில் கடந்த தென்னாபிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் வசமிருந்தது. குறித்த சாதனையை தனது 194ஆவது இன்னிங்ஸில்(202ஆவது போட்டி) கோஹ்லி கடந்திருந்தார்.

கிராண்ட்ஹோம் வீசிய 37ஆவது ஓவரில் பௌண்டரி விளாசியபோது இந்த சாதனை மைல்கல்லை அவர் எட்டினார். சச்சின், கங்குலி, டிராவிட், அசாருதீன், டோனி ஆகியோரை தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் 9,000 ஓட்டங்களைக் குவித்த 6ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றுக்கொண்டதுடன், உலக அளவில் 19ஆவது வீரராகவும் இடம் பிடித்தார்.

இந்நிலையில், ஒரு நாள் போட்டிகளில் கோஹ்லி தனது 32ஆவது சதத்தை பதிவு செய்தார். 31ஆவது சதம் அடித்தபோது அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்கை பின்தள்ளி 2ஆவது இடம் பிடித்தார். எனினும் அதிக சதங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையையும் (49 சதம்) இன்னும் சில ஆண்டுகளில் அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அத்துடன், இந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 2,000 ஓட்டங்கள் எனும் மைல்கல்லை எட்டிய முதல் வீரராகவும், ஒரு நாள் அரங்கில் இந்த ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களைக் பெற்றவராகவும் முன்னணியில் கோஹ்லி திகழ்கிறார். தென்னாபிரிக்காவின் ஹஷிம் அம்லா 1,988 ஓட்டங்களை விளாசி 2ஆவது இடத்தில் உள்ளார்.

எனினும், 2,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை 2012, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளிலும் கோஹ்லி எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2000 ஓட்டங்களை தொடர்ச்சியாக பெற்ற 2ஆவது இந்திய வீரராகவும் மாறினார். முன்னதாக 1996, 1997 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர் பெற்றிருந்தார்.

அத்துடன் சச்சின் மற்றும் சங்கக்கார ஆகிய வீரர்கள் 6 தடவைகள் இவ்வாறு 2,000 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், மஹேல ஜயவர்தன, மெத்யூ ஹெய்டன் மற்றும் ஜெக் கலிஸ் ஆகிய வீரர்கள் 3 தடவைகள் இம்மைல்கல்லை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீரர்கள் காலப்பகுதி
சச்சின் டெண்டுல்கர் 1996 – 1998
மெத்யூ ஹெய்டன் 2002 – 2004
மைக் ஹஸ்ஸி 2009 – 2010
மஹேல ஜயவர்தன 2006 – 2007
ரிக்க பொண்டிங் 2005 – 2006
குமார் சங்கக்கார 2011 – 2012
ஸ்டீவ் ஸ்மித் 2015 – 2016
விராத் கோஹ்லி 2016 – 2017

இதேவேளை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 7 ஒரு நாள் தொடர்களைக் கைப்பற்றி இந்திய அணி புதிய சாதனையும் படைத்தது. முன்னதாக 2007 – 2009 காலப்பகுதியில் தொடர்ச்சியாக 6 தொடர்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

’ரன் எந்திரன்’... விராட் கோலி எப்படி இப்படிச் சாதிக்கிறார்?!

 

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா ஆறு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்குத் தெரியும், விராட் கோலியின் இன்னிங்ஸ், ரோஹித் சதம் அடிக்க எவ்வளவு உதவியது என்று. இது மட்டுமன்றி சதம் அடித்த கோலி, ஒரே போட்டியில் பாண்டிங், கங்குலி, சச்சின் சாதனைகளைக் காலி செய்தார். கோலி விளையாடினால், குறைந்தது ஒரு சாதனையாவது முறியடிக்கப்படும் எனும் அளவுக்கு நீள்கிறது அவரது சாதனைப் பட்டியல்.

கோலி

 

கடைசிப் போட்டியில் கோலி உடைத்த சாதனைகளின் பட்டியல் இதோ...

ஓர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த கேப்டன்.

2017-ம் ஆண்டு மட்டும் 1,460 ரன் குவித்துள்ளார். இதற்கு முன் ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங், 2007-ம் ஆண்டு 1,424 ரன்கள் குவித்ததே அதிகமாக இருந்தது.

அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்த வீரர். உலக அளவில் டி வில்லியர்ஸையும் இந்திய அளவில் கங்குலியையும் வீழ்த்தி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். 

2017-ம் ஆண்டு எல்லா சர்வதேசப் போட்டிகளையும் சேர்த்து 40 போட்டிகளில் ஆடி, முதல் வீரராக 2,000 ரன்னைக் குவித்துள்ளார். 

ஒரு வருடத்தில் அதிக சதம் (6) அடித்த கேப்டன்கள் வரிசையில்  கங்குலி (2000), பாண்டிங் (2003, 2007), கிரீம் ஸ்மித் (2005), டி வில்லியர்ஸ் (2015)  ஆகியோரை முந்தியுள்ளார் கோலி. 

 இரு நாடுகளுக்கிடையேயான ஒருநாள் தொடரை (Bilateral Series) தொடர்ந்து ஏழு முறை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

இவ்வளவு சாதனைகளையும் ஒரே போட்டியில் அடித்து நொறுக்கும் விராட்டின் சாதனைகளுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்கள் ஏராளம்.

மிஸ்டர் ஃபிட்னெஸ்:

கோலியை, `உலக கிரிக்கெட்டின் மிஸ்டர் ஃபிட்னெஸ்' என்று அழைக்கலாம். தனது ஃபிட்னெஸை அவர் சிறப்பாக வைத்திருப்பதுதான் அவரது பலம். அதனால்தான் அவர் அடிக்கும் அரை சதங்களை எளிதாக சதங்களாக மாற்ற முடிகிறது. மூன்றாவது வீரராகக் களமிறங்கி கிட்டத்தட்ட 45 ஓவர் வரை அவரால் பேட்டிங் செய்ய முடிகிறது. ஓய்வே இல்லாமல் இந்திய அணியில் ஆடிவரும் ஒரே வீரர் கோலிதான். 2015-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை அதிரடி ஆட்டம் ஆடிவருகிறார். இந்தக் காலத்தில் அணியோடு 1.1 லட்சம் கி.மீ பயணித்துள்ளார். காயம் காரணமாக அவர் எடுத்துக்கொண்ட ஓய்வு, ஒரே ஒரு டெஸ்ட் போட்டிதான். அவரது ஃபிட்னெஸ்தான் அவரது சாதனைகளுக்கான முதல் காரணம்.

கோலி

சிறந்த அணி:

கோலி தற்போது வழிநடத்தும் அணி ஒரு சிறந்த அணி. இதில் இளம் வீரர்கள் ஏராளம். அதனால் வீரர்களைக் கையாள்வதில் கேப்டனுக்குப்  பெரிய சிரமம் இருந்ததில்லை. தவான், ரோஹித் தொடக்கம், டெப்த் ஓவர்களில் பும்ரா, புவி, டெஸ்ட் போட்டிகளில் உமேஷ், ஷமி, ஸ்பின்னர்கள் எனக் கூறினால் சரியாக இருக்காது `ஸ்பின் படை' என விராட்டுக்கு எல்லாமே பக்காவாக செட்டாகி இருக்கிறது. உலகின் டாப்-2 பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா மட்டுமல்லாது குல்தீப், சாஹல், அக்‌ஷர், ஜாதவ், ஜெயந்த யாதவ் என ஸ்பின் ஆப்ஷன்கள் ஏராளம். ராகுல், ரஹானே, தோனி, மணிஷ்  பாண்டே, தினேஷ் கார்த்திக், பாண்ட்யா,  ஜாதவ், ஜடேஜா என மிடில் ஆர்டரில் ஒரு பட்டாளமே இருக்கிறது. இதில் யாரைத் தேர்வு செய்வது, யாரை நிரந்தரமாக ஒரே இடத்தில் களமிறக்குவது என்பதில் குழப்பம் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இவ்வளவு ஆப்ஷன்கள் இருப்பது ஒருவகையில் கோலிக்குப் பிளஸ். இப்படியான ஆப்ஷன்தான் கேப்டனின் சுமையைக் குறைக்கிறது. கங்குலி சிறந்த அணியை உருவாக்கும் செயலில் ஈடுபட்டார். தோனி இளம் மற்றும் அனுபவ வீரர்களை பேலன்ஸ் செய்தார். ஆனால், கோலிக்குக் கிடைத்திருக்கும் அணி ஒரு கஸ்டமைஸ்டு அணி. இந்த அணிதான் கோலியை அவரது ஃபார்ம் குறையாமல் ஆடவைக்கிறது.

விராட்

செயல் தலைவர் விராட் கோலி:

ஒரு கேப்டனாக கோலி சிறப்பாகச் செயல்படுகிறார் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்  நெருக்கடியான நேரங்களில் ஸ்மார்ட்டாக முடிவெடுக்கவேண்டியது அவசியம். அதில் சற்று தடுமாறும் கோலிக்கு பக்க பலம் தோனிதான். இதை கோலியே பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமையாகக் கூறியுள்ளார். பந்துவீசும்போது ரிவ்யூ கேட்பது, ஃபீல்டிங் செட் செய்வது, பந்துவீச்சாளர்களுக்கு பேட்ஸ்மேனின் நகர்வைச் சரியாகத் தெரிவிப்பது என தோனி கேப்டனாகவே தொடர்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தோனியை `நிரந்தர கேப்டன்' என வர்ணிக்கும் கோலி, செயல் தலைவராகவே அணியில் இருக்கிறார். கோலி உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமெனில், அதற்கு துருப்புச்சீட்டு தோனிதான் என்பதை அவர் கட்டாயம் அறிவார்.

`கடைசிப் போட்டியில் இந்தியா வெல்ல கோலி, ரோஹித், பும்ரா காரணம்' எனக் கூறுபவர்கள் கட்டாயம் இந்த லிஸ்ட்டில் தோனியின் பெயரையும் சேர்க்க வேண்டும். காரணம், நேற்று நியூஸிலாந்து இன்னிங்ஸில் 40-வது ஓவருக்குப் பிறகு `கோலி கேப்டனா... தோனி கேப்டனா?' எனும் அளவுக்குத் தோனியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

விராட்

உள்ளூர் மேஜிக்:

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. கோலி தலைமையிலான இந்தியாவின் பெரும்பாலான வெற்றிகள்  இந்தியத் துணைக்கண்டத்தில் வந்தவை. கோலியின் ஃபார்மும் கேப்டன்ஸியும் இந்தியாவில் மெர்சல் ரகம்தான். இதுவும் கோலியின் சாதனைகளுக்கு முக்கியக் காரணம். வெளிநாட்டில் ஜெயிக்கட்டும் என்பவர்களுக்கும், கோலி & கோ விரைவில் பதில் தரும் என எதிர்பார்க்கலாம். 

கோலி, தனிநபராக தினசரி சாதனைகளைக் குவித்துவருவது அவரது பலம். அதற்கு இந்த விஷயங்கள் உறுதுணையாக இருக்கின்றன. `இந்தியாவின் அடுத்த சச்சின்' என ரசிகர்களால் புகழப்படும் கோலி, சச்சினை வேகமாக நெருங்குகிறார். இதே ஃபார்ம் தொடர்ந்தால் தற்போது ஆடும் வீரர்களில் ஒருநாள் போட்டிகளில் 50 சதம் என்ற சாதனையைச் செய்ய தகுதியான ஒரே நபர் கோலி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அடுத்த போட்டியில் எத்தனை சாதனைகளைத் தகர்ப்பார் என ஒவ்வொரு போட்டியிலும் வர்ணனையாளர்களை ஹோம்வொர்க் செய்யவைக்கிறார்.

 

`சச்சின்... சச்சின்' என முழங்கிய மைதானங்கள், இப்போது `கோலி... கோலி' என முழங்குகின்றன. வெல்டன் கோலி!

http://www.vikatan.com/news/sports/106333-reason-behind-virat-kohlis-amazing-form.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.