Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் 40 000 பொதுமக்கள் 48 மணிநேரத்தில் இடப்பெயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனி 10-03-2007 01:38 மணி தமிழீழம் [மயூரன்]

மட்டக்களப்பில் 40 000 பொதுமக்கள் 48 மணிநேரத்தில் இடப்பெயர்வு

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான படுவான்கரைப் பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட அகோர பலகுழல் எறிகணைத் தாக்குதலில் 40 000 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை மற்றும் அயல்கிராமங்களில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள மக்களால் பெரும் மற்றொரு மனிதஅவலம் சர்வதேச சழூகத்துக்கு தெரியாமல் இடம்பெறபோவதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறீலாங்கா இராணுவத்தால் திறக்கப்பட்ட மூன்றாவது களமுனை புல்லுமலைப் பகுதியில் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா இராணுவத்தால் மட்டக்களப்பு நகரம், வவுணதீவு, செங்கலடி, மொறக்கட்டாஞ்சேனை, கிரண் ஆகியபகுதிகளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் பெரும் இடப்பெயர்வு இடம்பெற்றுள்ளது. எறிகணை தாக்குதல் பெரும் உடமைச்சேதாரங்களும் வயல்களும் சேதமடைந்துள்ளது.

நன்றி பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனி 10-03-2007 01:30 மணி தமிழீழம் [தாயகன்]

மட்டக்களப்பு இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் இல்லை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மட்டக்களப்பில் இடம்பெயரும் மக்களுக்கு உரிய நிவாரணங்களும், தங்குமிட வசதிகளும் வழங்கப்படவில்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்கள், மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக மட்டக்களப்பில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தொடர் இடப்பெயர்வைச் சந்தித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிகளை நோக்கி சிறீலங்காப் படையினர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவதால், விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிகளுக்கு உள்ளேயும், மட்டக்களப்பு நகர் நோக்கியும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு மட்டக்களப்பு நகர் நோக்கி இடம்பெயர சிறீலங்காப் படையினரால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய தங்குமிட வசதிகளோ, உணவுகளோ வழங்கப்படவில்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்கள் இடம்பெயர்வதை பிரசாரப்படுத்தும் சிறீலங்கா அரசு, அந்த மக்களுக்குரிய நிவாரண உதவிகளைச் செய்ய மறுப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

நன்றி பதிவு

கிழக்கு மாகாண மக்களின் அவலங்களுக்கு ஒரு முடிவே இல்லையா? பட்ட காலே படும் என்பது போல் அவலங்கள் தொடர்கிறது. எங்கே சமாதானம் பேசும் உலக நாடுகள்?

தமிழ்மக்கள் அழிவிற்கு உலகம் அனுமதி கொடுத்துள்ளது இனவெறி அரசிற்கு. இனி சாமாதனத்திற்கு கொடுத்த விலை போதும். தாமதிற்கும் ஒவ்வொறு கணமும் தமிழ்மக்களின் அழிவுதான் மிச்சப்போகிறது. அவங்களுக்கு புரியும் ஒரே ஒரு மொழி யுத்தம்.தாமதத்தை பலவீனமாக எடுக்கிறான். சீனா,பாக்கிஸ்தான் ஆயுதங்கள் வந்து குவிந்துவிட்டது. வளைக்குள் தங்காது.தாமதித்து இழக்க ஒன்றுமில்லால் போகப்போகுது. எதிரியின் ஆட்டிலறி தளங்கள் நொருக்கபடவேண்டும். மக்களுக்கு

நிம்மதி உண்டாக்கவேண்டும். ஒரு கட்டத்தில் மக்கள் வெள்ளமாக போரில் இணைவது

நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

பண உதவி,முடியுமான பங்களிப்பை ஒவ்வொரு தமிழ் மகனு(ளு)ம் உணர்ந்து செய்யும் போது வெற்றிக்கனி வெகு தூரத்தில் இல்லை.

பணங்கள் முடிந்தளவு குடுத்துக் கொண்டுதான் இருக்கிறம். எவ்வளவு குடுக்கிறம் எண்டது முக்கியமில்லை எப்படியான மனத்தோடு அதைக் குடுக்கிறம் என்பது தான் முக்கியம். நாங்கள் 100 பவுண்ஸ் குடுத்தாலும் அதை ஒரு நல்ல மனத்தோடு பாசமாக குடுக்கிறதன் விளைவுகளை விளங்க ஒரு நல்ல மனம் வேணும் ஆழமான அரசியல் படைத்துறை ஞானம் வேணும்.

வெற்றிகள் என்றுமே தூரவாக இருந்தது இல்லை. நாங்கள் எப்பவும் பலமாகத்தான் இருந்தனாங்கள். ஒரு பிஸ்டலோடை தொடங்கி இண்டைக்கு ஆட்டிலறி அடிக்கிறம் வாட்டஜெட்டில் ஒலிகன் அடிக்கிறம் வாவியில் கொக்குச்சுடுற மாதிரி கிபிர் சுடுறம். ஆனா சிங்களவன் அப்பிடி இல்லை இப்பவும் முந்தினமாரித்தான் மோட்டுச் சிங்களவங்கள். மானங் கொட்டவங்கள் சூடு சுறணையில்லாதவங்கள். இப்ப பாருங்கோ மணலாறா மன்னாரா முகமாலையா என்று தெரியாமல் எல்லாஇடத்திலை படைகளை தளபாடங்களையும் குவித்து வைத்துப்போட்டு பீச்சல் பயத்தில ஆட்டிலறி அடிச்சுக் கொண்டிருக்கிறாங்கள். உப்பிடி உவங்கள் பதட்டத்தில செய்யிறதுகளாலேயே பொருளாதாரம் சீரழிஞ்சு துண்டைக் காணோம் துணியக் காணோம் என்று ஓடப்போறாங்கள்.

உவங்கள் மோட்டுச் சிங்களவரும் சம அளவில பலமாக இருந்தால் தானே சுவார்சியமாக சண்டை பிடிக்கலாம். அவங்கள் எல்லாத்துக்கும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வெளிக்கிடுறாங்கள்.

ஆகவே உலகத் தமிழனம் எல்லாருக்கும் சொல்ல விரும்புவது எங்களுக்கு தரவேண்டியதை தாங்கோ இல்லாட்டி நீர்மூழ்கிக் கப்பல்களாலை சுத்தி வளைச்சு அடிக்கத் தொடங்கினா முந்தினமாதிரி ஓடுறதுக்கும் இடமிருக்காது. முழுத் தீவும் தாண்டுபோகும்.

சிங்களவங்கள் முடிஞ்சா தொட்டுப் பாக்கட்டும் நிலமையை தலைகீழ மாற்றப்படும்.

தமிழ்மக்களின் பொழுதுபோக்கே இடப்பேர்வுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் என்று சொல்லடா...இடம்பெயர்ந்து செல்லடா...

என்ன இருந்தாலும் மாந்தோப்பை விட்டுப் போகலாமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 12-03-2007 01:07 மணி தமிழீழம் [தாயகன்]

மட்டக்களப்பில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் இடப்பெயர்வு

விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசமான படுவான்கரை நோக்கி கடந்த எட்டாம் திகதி முதல் சிறீலங்காப் படையினர் மிகக் கடுமையான எறிகணைத் தாக்குதலுடன், பல்வேறு முனைகளில் முன்னேற்ற நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தனர்.

சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் காரணமாக, இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத் தொகையில் 30 வீதமான மக்கள், கடந்த இரண்டு நாட்களில் பாரிய இடப்பெயர்வைச் சந்தித்துள்ளதாக, மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு நகருக்கு இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிட வசதிகள் இன்றி வீதியோரங்களிலும், மர நிழல்களிலும் தங்கியிருக்கின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக, மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிகளுக்குள்ளும் கணிசமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

pathivu.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடப்பெயர்வோடே சனம் செத்துப்போடும்

சிங்களவனத்தான் தமிழ்ஈழத்தில குடி அமர்த்தவேணும்

மொத்தத்தில விதச்சவன் அறுவடை செய்ய மாட்டான் வேடிக்கை பார்த்தவன் வயிறு நிறைக்கப்போறான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.