Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாடு குறித்த அறிவிப்பு : கூட்டமைப்பு சந்தேகம்

Featured Replies

ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாடு குறித்த அறிவிப்பு : கூட்டமைப்பு சந்தேகம்

2-53e82304bc32c95bfa6600b2b18905af341789e2.jpg

 

சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்க நேரிடும்; மாவை எம்.பி.எச்சரிக்கை
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முன் மொழி­வுகள் தொடர்­பாக காணப்­படும் தவ­றான அபிப்­பி­ரா­யங்­களை போக்கும் பொருட்டு சர்­வ­கட்சி மாநாடு உள்­ளிட்ட மூன்று படி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள அறி­விப்­பா­னது புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி அதன் மூலம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வினை வழங்கும் செயற்­பாட்­டினை இழுத்­த­டிக்கும் ஒரு செயலா என்ற கேள்­வி­யையும் பலத்த சந்­தே­கத்­தையும் எழுப்­பி­யுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா

­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ரசுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் தமிழ் மக்­க­ளுக்கு அளித்­துள்ள வாக்­கு­று­தி­க­ளுக்கு அமை­வா­கவும், ஐக்­கிய நாடுகள்

மனித உரிமை பேர­வையில் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு இணங்­கவும் செயற்­ப­டாது கால இழுத்­த­டிப்புச் செய்யும் பட்­சத்தில் சர்­வ­தே­சத்தின் நன்­ம­திப்­பினை இழந்து பாரிய நெருக்­க­டி­களை எதிர்­நோக்க வேண்­டிய நிலைமை ஏற்­படும் எனவும் மாவை.எம்.பி எச்­ச­ரிக்கை விடுத்தார்.

தமி­ழர்­களின் தயாக பூமி­யான வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட்டு சமஷ்டி அடிப்­ப­டையில் உள்­ளக சுய­நிர்­ண­யத்­து­ட­னான அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­பட்டு நியா­ய­மான தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும். இதன்­போது முஸ்­லிம்­களும் தமி­ழர்­க­ளுடன் சகோ­த­ரர்­க­ளாக வாழும் வகை­யி­லான அவர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றக்­கூ­டி­ய­வா­றான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­வ­தற்கும் தயார் எனவும் மாவை.எம்.பி உறு­தி­ப­டத்­தெ­ரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று செவ்­வாய்­கி­ழமை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாய­ணக்­கார இந்த சபையில் பல கருத்­துக்­களை முன்­வைத்தார். அதி­கா­ரப்­ப­கிர்­வு­தொ­டர்­பாக ஐயங்­களை வெ ளியிட்டார். உண்­மை­யி­லேயே அவ­ரு­டைய கருத்­துக்­களை பார்க்கும் போது கடந்த கால விட­யங்­களை நினைவு படுத்­த­வேண்டும் என்ற நிலைமை ஏற்­ப­டு­கின்­றது.

சந்­தி­ரிக்­காவின் தீர்­வு­திட்­டமும்

தற்­போ­தைய ஜி.எல்.பீரிஸும்

அவ்­வா­றான நிலையில், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­ந­யாக்­கவின் காலத்தில் கலா­நிதி நீலன் திருச்­செல்­வமும், பேரா­சி­ரியர் ஜி.எல் பீரிஸும் இணைந்து தீர்­வுத்­திட்­ட­மொன்றை முன்­வைத்­தி­ருந்­தனர். அத்­தீர்­வுத்­திட்­டத்தில் பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் என்ற கரு­வொன்று முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்ற கோரிக்­கையும் மையப்­ப­டுத்­தப்­பட்­டது. அவ்­வாறு வடக்கு, கிழக்கு இணையும் பட்­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யா­ன­தொரு அல­கொன்றை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் காணப்­பட்­டன. அதற்­கான இணக்­கப்­பா­டுகள் அன்­றைய தலை­வர்­க­ளி­டத்தில் எட்­டப்­ப­டி­ருந்­தன. துர­திஸ்­ட­வ­ச­மாக அந்த தீர்­வுத்­திட்­டத்­தினை அமுல்­ப­டுத்த முடி­யாது போயுள்­ளது.

அத்­த­கைய யோச­னையை வரைந்த பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் தற்­போது எங்­கி­ருக்­கின்றார். இன­வா­தி­க­ளுடன் இணைந்து கொள்­கை­யற்­ற­வ­ராக பத­வி­க­ளுக்­காக போராடும் ஒரு சாதா­ரண அர­சி­யல்­வா­தி­யாக காணப்­ப­டு­கின்றார். அவர் கற்­றுத்­தேர்ந்­தவர் என்று நாம் கரு­தினோம். ஆனால் அவர் அந்த நன்­ம­திப்­பினை இழக்கும் வகையில் அவரின் செயற்­பா­டுகள் அமை­கின்­றன. இன­வா­தி­களின் தூண்­ட­லுக்குள் சிக்­கி­யுள்ளார். அவர் அவ்­வா­றி­ருக்­கின்­ற­மையை நினைத்து நாம் கவ­லை­ய­டை­வ­துடன் வெட்­கமும் அடை­கின்றோம்.

ஆட்சி மாற்­றமும் வாக்­கு­று­தி­களும்

ஊழல்கள் நிறைந்த, இரா­ணுவ ஆதிக்கம் நிறைந்த, குடும்ப ஆதிக்கம் நிறைந்த ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மான ஆட்­சி­யொன்றை சிறு­பான்மை தேசிய இன­மக்கள் வெறுத்­தி­ருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்­தது. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்போம், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வொன்றை வழங்­குவோம், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ர­மான தீர்­வொன்றை வழங்­குவோம் உள்­ளிட்ட பல வாக்­கு­று­தி­களை தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு வழங்­கி­னார்கள். அதற்­க­மைய எமது மக்கள் தீர்க்­க­மான முடி­வொன்றை வௌிப்­ப­டுத்­தி­னார்கள்.

இதற்கு அடுத்­து­ப­டி­யாக அதே­யாண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திக­தியும் மீண்டும் ஒரு மக்கள் ஆணை வௌிப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் கார­ண­மாக வர­லாற்றின் ஒரு முதற் சந்­தர்ப்பம் ஏற்­பட்­டது. இத்­தனை காலமும் ஒரு கட்சி முயற்­சி­யொன்றை மேற்­கொள்ளும் போது மற்­றக்­கட்சி அதனை எதிர்க்கும் நிலை­மையே இருந்­தது. அவ்­வாறு அணு­கப்­பட்ட நாட்டுப் பிரச்­சி­னை­யா­னது 2015இற்குப் பின்னர் தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்று ஆட்­சிக்கு வந்த ஐக்­கிய தேசியக் கட்­சியும், சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­க­மாக ஆட்­சியில் அமர்ந்­ததன் விளைவால் பல மாற்­றங்கள் ஏற்­பட்­டன. சர்­வ­தேச நாடுகள் இந்த ஆட்­சி­மாற்­றத்தின் பின்­ன­ணியில் நின்று நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த பாடு­பட்­டார்கள். அதன் கார­ண­மாக இந்த அர­சாங்­கத்­திற்கு சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்­புக்­களும் கிடைக்­கப்­பெ­ற­லா­யின.

இடைக்­கால அறிக்­கையும் தவ­றான பிர­சா­ரமும்

அத­ன­டிப்­ப­டையில் அர­சாங்கம் புதிய அர­சி­ய­மைப்­புக்­கான செயற்­பாட்­டினை முன்­னெ­டுத்து தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்றை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது­வெ­று­மனே இடைக்­கால அறிக்­கை­யாகும். இந்த அறிக்கை பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இந்த அறிக்­கையில் பல விட­யங்­களில் அர­சியல் கட்­சிகள் இணங்­களை எட்­டி­யுள்­ளன. சில விட­யங்­களில் இணக்­கங்கள் ஏற்­ப­ட­வில்லை.

அவ்­வா­றான நிலையில் இந்த அறிக்கை தொடர்­பாக எவ்­வி­த­மான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. முன்னாள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான குழு­வினர் இடைக்­கால அறிக்­கையில் சமஷ்டி வழங்­கப்­பட்டு விட்­டது. நாடு பிள­வ­டை­யப்­போ­கின்­றது என்­றெல்லாம் பிர­சாரம் செய்­கின்­றார்கள். இதில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை.

சமஷ்டி கோரிக்கை பிரி­வினை அல்ல

இந்த நாட்டில் தமிழ் மக்கள் சமஷ்டிக் கோரிக்­கையை முன்­வைத்­த­தாக கூறு­கின்­றார்கள். அது தவ­றா­ன­தாகும். டொனமூர் ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் இலங்­கையை மூன்று பிராந்­தி­யங்­க­ளாக வகுத்து சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான பரிந்­து­ரை­களை கண்­டியத் தலை­வர்கள் செய்­தனர்.

அதன் பின்னர் 1926ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க சமஷ்டி குறித்து நான்கு கட்­டு­ரை­களை எழு­தி­யுள்ளார். அவ்­வாறு தென்­னி­லங்கை தலை­வர்­களே சமஷ்­டிக்­கோ­ரிக்­கை­யினை முன்­மொ­ழிந்­தார்கள்.

அவ்­வா­றி­ருக்­கையில் இந்­தப்­பா­ரா­ளு­மன்­றத்தில் தற்­போது சமஷ்­டிக்­கோ­ரிக்­கையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சிங்­கள மக்கள் விரும்­ப­வில்லை. சிங்­கள மக்கள் அச்­ச­ம­டை­கின்­றார்கள் என்று கூறு­கின்­றார்கள். உண்­மை­யி­லேயே சமஷ்டி பிரி­வினை அல்ல. சமஷ்டி வழங்­கப்­பட்டால் நாடு பிள­வ­டைந்து விடாது. இதற்கு எமது நாட்டில் நிகழ்ந்­த­வொரு விட­யத்­தினை உதா­ர­ண­மாக கூறு­கின்றேன்.

சமஷ்­டியை ஏற்ற நீதி­மன்றத் தீர்ப்பு

2014ஆம் ஆண்டு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டது. இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி சமஷ்­டிக்­கட்சி. அது நாட்டை பிளக்கும் கொள்­கையைக் கொண்­டது. அதனை தடை­செய்­ய­வேண்டும் என்று கோரி அப்­போ­தைய செய­லாளர் என்ற அடிப்­ப­டையில் என்­னையும் பிர­தி­வா­தி­யாக குறிப்­பிட்டு வழக்கு தொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்த வழக்கில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான கன­கேஸ்­வரன், சுமந்­திரன் ஆகியோர் தலை­மை­யி­லான சட்­டத்­த­ரணி குழு­வினர் சர்­வ­தேச நாடு­களின் உதா­ர­ணங்­களை காட்டி நீண்­ட­கா­ல­மாக வாதிட்டு வந்­த­ததன் அடிப்­ப­டையில் கடந்த ஆகஸ்ட் நான்காம் திகதி தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

அந்த தீர்ப்பில் மிக­த­தெ­ளி­வாக சமஷ்டி பிரி­வினை அல்ல என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த தீர்ப்­பா­னது இந்த நாட்டின் நீதித்­து­றை­யினால் வழங்­கப்­பட்­ட­தாகும். ஆகவே அத்­த­கைய தீர்ப்­பொன்றை நீதி­மன்றம் வழங்­கு­கையில் சமஷ்டி பிரி­வி­னைக்கு இட்­டுச்­செல்லும் என்று பிர­சாரம் செய்­வ­தா­னது கேவ­ல­மான செய­லாகும்.

பிர­சா­ரத்­திற்கு காரணம் இதுதான்

இடைக்­கால அறிக்­கையில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள விட­யங்­களை மையப்­ப­டத்­தியும் சமஷ்­டியை வழங்­கினால் நாடு பிள­வ­டையும் என்றும் பிர­சாரம் செய்யும் குழு­வி­னரின் உண்­மை­யான நிலை என்ன? அவர்­களை மக்கள் நிரா­க­ரித்து விட்­டர்கள். தற்­போது அவர்­களின் ஆட்­சியில் நடை­பெற்ற போர்க்­குற்­றங்கள், ஊழல்­மோ­ச­டிகள் உள்­ளிட்ட அனைத்­தையும் மறைப்­ப­தற்­கா­கவே இத்­த­கைய பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள்.

இந்த பிர­சா­ரங்­க­ளினை நம்பி சில பௌத்த மதத்­த­லை­வர்கள் கருத்­து­ரைப்­பது எமக்கு கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது. ஆகவே தமது தவ­றுகை மூடி­ம­றைப்­ப­தற்கு முனையும் தரப்­பி­னரே இத்­த­கைய பிர­சா­ரத்­தினை முன்­னெ­டுக்­கின்­றார்கள். உண்­மை­யி­லேயே சமஷ்டி கோரும் நாங்கள் நாட்­டினை பிள­வு­ப­டுத்­துவோம் எனக்­கூறி அவர்­களே நாட்­டினை பிள­வ­டையும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றார்கள் என்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நழு­வ­வி­டப்­பட்ட சந்­தர்ப்­பங்கள்

70ஆண்­டு­க­ளாக தீர்க்­கப்­ப­டா­தி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வை­வ­ழங்­கு­வ­தற்கு தற்­போது ஒரு சந்­தர்ப்பம் ஏற்­பட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் போது அதனை குழப்­பு­வ­தற்கு கடும் முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. அதனை தொடர்ந்தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

முஸ்­லிம்­க­ளுக்கு அழைப்பு

இவ்­வா­றான நிலையில் நாம் இணைந்த வட­கி­ழக்கில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்ட சமஷ்டி முறை­மை­யை­கோ­ரு­கின்­ற­போது தற்­போது முஸ்லிம் சகோ­த­ரர்கள் சிலர் அதனை எதிர்க்­கின்ற நிலை­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. கடந்த காலத்தில் பெருந்­த­லைவர் அஷ்­ரப்­புடன் மேற்­கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வின் படி வட­கி­ழக்கின் பூர்­வீக சகோ­தர இனத்­த­வர்­க­ளான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இணைந்தே அதி­கா­ரங்­களை பகிர்ந்து கொள்­வ­தெ­னவும் விசே­ட­மாக வடக்கு கிழக்கு இணை­கின்­ற­போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­வ­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம். அது­கு­றித்து நாம் தற்­போ­தைய தலை­மை­க­ளு­டனும் பேசு­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

கிழக்கு மாகாண சபையில் நாம் கூட்­டணி ஆட்­சியை முன்­னெ­டுத்­துள்ளோம். முஸ்லிம் பிர­தி­நி­தியை முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்க அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்ளோம். ஆகவே முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு நாம் அநீதி இழைக்­கப்­போ­வ­தில்லை. இணைந்த வடக்­கி­ழக்கில் தமிழ் தமிழ் மக்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை பகிர்­கின்­ற­போது முஸ்­லிம்­களின் விட­யத்­தி­னையும் நாம் கருத்­தில்­கொள்வோம். ஆகவே அதற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை இதய சுத்­தி­யுடன் முன்­னெ­டுப்­ப­தற்கு அழைப்பு விடு­கின்றோம்.

தலை­வர்­களை இழப்பு

முப்­பது வருட யுத்­தத்தின் கார­ணத்தால் நாம் ஆயி­ரக்­க­ணக்­கான எமது மக்­களை இழந்­துள்ளோம். நீலன், அமிர்­த­லிங்கம், என எமது சிறந்த தலை­வர்­களை இழந்­துள்ளோம். மேலும் எத்­த­னையோ இழப்­புக்­களைச் சந்­தித்­துள்ளோம். சிங்­க­ளத்­த­லை­வர்­களும் உயி­ரி­ழந்­துள்­ளார்கள். ஆகவே மீண்டும் அத்­த­கை­ய­தொரு நிலை­மைக்கு நாட்­டினை கொண்டு செல்ல முடி­யாது. எதிர்­கா­லத்­தினை சிந்­தித்து செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

ஐ.நாவுக்­கான பொறுப்­புக்­கூறல்

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இனப்­பி­ரச்­ச­னைக்­கான தீர்­மா­னத்­தினை கொண்டு வந்­தார்கள். 2015ஆம் ஆண்டு ஐ.நா தீமா­னத்­திற்கு இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ள­தோடு 47நாடு­களும் ஆத­ர­வ­ளித்­தன. இது இலங்­கைக்கு சர்­வ­தேச நாடுகள் வழங்­கிய நல்ல சந்­தர்ப்பம். அந்த தீர்­மா­னத்­தினை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்ற பொறுப்­பினை அர­சாங்கம் கொண்­டி­ருக்­கின்­றது. ஆகவே அதி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் வில­கிச்­செ­யற்­பட முடி­யாது.

ஜனா­தி­ப­தியின் கூற்றால் சந்­தேகம்

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கயைில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக காணப்­படும் சில தவ­றான அபிப்­பி­ரா­யங்­களை நீக்கும் பொருட்டு எதிர்­கா­லத்தில் சர்வ கட்சி மாநாடு உட்­பட மூன்று படி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்த எதிர்­பார்ப்­ப­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்­தக்­கூற்­றா­னது எமக்கு பலத்த சந்­தே­க­சத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்­புச்­செ­யற்­பா­டு­களை வலு­வி­ழக்­கச்­செய்யும் வகை­யி­லான இழுத்­த­டிப்பை மேற்­கொள்­வ­தற்­கான ஒரு நட­வ­டிக்­கையா இது என்ற கேள்­வியும் எழுக்­கின்­றது. அப்­ப­டி­யில்­லாது விட்டால் ஜனா­தி­பதி ஏன் இவ்­வா­றான திடீர் அறி­விப்­பினைச் செய்ய வேண்டும் என்­பதே எமது கேள்­வி­யா­கின்­றது.

காணி அதி­கார கருத்தால் கவலை

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை இரு கட்­சி­களும் புறக்­க­ணித்­துள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொண்­டுளள் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல ஒரு முன்­மா­தி­ரி­யான அர­சி­யல்­வா­தி­யாக இருக்­கின்­ற­போதும் அவர் காணி அதி­காரம் குறித்து தெரி­வித்த கருத்து எமக்கு கவலை அளிக்­கின்­றது.

காணி அதி­காரம் காணி ஆணைக்­கு­ழு­விற்கே என்று கூறி­யுள்ளார். இதனை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. காணி அதி­காரம் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். தேசிய கொள்­கை­களை மத்­திய அர­சாங்கம் கொண்­டி­ருந்­தாலும் காணி அதி­கா­ரங்கள் மாகாண சபை­க­ளுக்கே வழங்­கப்­பட வேண்டும். அதுவே நியா­ய­மா­ன­தாகும். 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் காணி அதி­கா­ரங்கள் இது­வ­ரையில் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கா­துள்ள நிலையில் மீண்டும் அந்த அதி­கா­ரங்­களை மத்திய அரசுக்கு கீழ் கொண்டு வருதென்பது பொருத்தமற்ற செயற்பாடாகும்.

சமஷ்டிக்கான வலியுறுத்தலும் எச்சரிக்கையும்

தற்போது வௌிவந்துள்ள இடைக்கால அறிக்கையானது முழுமையான தீர்வுத்திட்டமாக இல்லாது விட்டாலும் அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாம் ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்படுகின்றோம்.

வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் உள்ளக சுயாட்சி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு தீர்வளிக்கப்படவேண்டும் என்ற ஆணையையே எமது மக்கள் வழங்கியுள்ளார்கள்.

ஆகவே மேலும் கட்டியெழுப்பப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் சமஷ்டி என்ற சொற்பதம் இடம்பெறவேண்டும். அவ்வாறு இடம்பெறாதிருப்பது எமக்கு திருப்தி தராது விட்டலும் சமஷ்டிக் கட்டமைப்பையொன்றியதாக அது அமையவேண்டும். அந்த எதிர்ப்பார்ப்புடன் மேலதிகமான செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும். நாம் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கவில்லை. இந்த அறிக்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் ஐயங்களை போக்குவதற்கு நீங்களும் தென்னிலங்கையில் பிரசாரங்களை செய்ய வேண்டும். நாமும் எமது தாயக பிரதேசங்களில் பிரசாரங்களைச் செய்யவுள்ளோம்.

 புதிய அரசியலமைப்புக்கான பூரணமான ஒத்துழைப்பினை இதயசுத்தியுடன் வழங்கிய அரசியல் தீர்வோன்று நிரந்தரமாக எட்டப்பட வேண்டும். தொடர்ந்தும் காலம் தாமதித்துச் செல்ல முடியாது. தற்போதைய அரசாங்கமானது இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றத் தவறினால், தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மதிக்காது அரசியல் தீர்வை வழங்குவதிலிருந்து விலகிச் செயற்பட்டால் தமிழ் மக்களினதும், சர்வதேசத்தினதும் நம்பிக்கையை இழக்க நேரிடும். இதனால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றார். 

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.