Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசுடன் கூட்டமைப்பு இணையவேண்டும்

Featured Replies

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசுடன் கூட்டமைப்பு இணையவேண்டும்

333-faf880f61a198b419f0894bc1bc23ec51e155140.jpg

 

(ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்)

வடக்கு மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்க வேண்­டு­மாயின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தில் இணைய வேண்டும். வர­லாற்றை மறந்து விட்டு  புதிய அர­சியல் நீரோட்­டத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­வே­சிக்க வேண்டும். அரச நிர்­வாக கட்­ட­மைப்பில் இணை­வதன் மூலம் வடக்கு மக்­க­ளின பிரச்­சி­னையை தீர்க்க முடியும் என மாந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.  

அத்­துடன் வடக்கு மாகா­ணத்­திற்கு அதி­கா­ரத்தை பகிர்­வதன் மூலம் தமி­ழர்­களின் பிரச்­சினை தீர்க்க முடி­யாது. மேலும் பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்­தாமல் அதி­கா­ரத்தை பகிர்­வ­தனால் நாட்­டுக்கு பாதிப்பு ஏற்­படும். ஆகவே குறிப்­பிட்ட அதி­கா­ரங்­க­ளுடன் ஜனா­தி­பதி முறைமை தக்­க­வைத்து கொள்­ளப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று புதன்­கி­ழமை இடைக்­கால அறிக்கை மீதான மூன்­றாம நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்கும் முன்னர் அதன் உள்­ள­டக்கம் தொடர்பில் பொது இணக்­கப்­பாடு இருக்க வேண்டும். இணக்­கப்­பாடு இருந்தால் மாத்­தி­ரமே இதனை வெற்­றி­க­ர­மாக கொண்டு செல்ல முடியும். அத்­துடன் இந்த காரி­யத்தின் போது பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளான சிங்­க­ள­வர்­களின் இணக்கம் மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.

அத்­துடன் தற்­போது அதி­கார பகிர்வு தொடர்பில் பேசப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகா­ணத்­திற்கு மாத்­திரம் அதி­கா­ரத்தை பகிர்­வதன் மூலம் உண்­மையில் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாது. இந்த அதி­கார பகிர்வு மக்­க­ளுக்கு சென்­ற­டை­யாது. அதற்கு மாறாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட வேண்டும். ஏனெனில் மக்­க­ளுடன் நெருக்­க­மான நிர்­வாக கட்­ட­மைப்பு அது­வாகும்.

மேலும் வடக்கை பொறுத்­த­வரை தமி­ழர்­களில் 20 சத­வீ­த­மா­னோரே வடக்கில் உள்­ளனர். எனினும் பெரும்­பான்மை இனத்­த­வர்கள் நாட்டின் தெற்­கி­லேயே உள்­ளனர். குறிப்­பாக வடக்கில் இருந்து தெற்கில் வந்து குடி­யே­றி­ய­வர்கள் பலர் உள்­ளனர். ஆகவே இந்த தர­வு­களை பார்க்கும் போது வடக்கு மாகா­ணத்­திற்கு மாத்­திரம் அதி­கா­ரத்தை பகிர்­வதன் மூலம் நாட்டில் வாழும் தமி­ழர்­களின் ஒட்டு மொத்­த­மான பிரச்­சி­னையை தீர்க்க முடி­யாது. இதுதான் உண்­மை­யாகும்.

இதே­வேளை ஆரம்ப காலப்­ப­கு­தியில் செல்­வ­நா­யகம் நாட்டை பிள­வுப்­ப­டுத்தும் சமிஷ்டி கோரிய போது செள­மி­ய­மூர்த்தி தொண்­டமான் அதற்கு இணங்­காமல் அர­சாங்­கத்­துடன் இணைந்து அமைச்சு பத­வி­களை பெற்று அரச நிர்­வாக கட்­ட­மைப்பில் இணைந்து மலை­யக மக்­க­ளுக்கு சேவை செய்தார். அதே கொள்­கையை தொடர்ந்து கடைப்­பி­டித்து தற்­போ­தைய மலை­யக தலை­வர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

ஆகையால் செள­மிய மூர்த்தி தொண்­ட­மானை போன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தில் இணைந்து வடக்கு மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்க வேண்டும். ஆகவே வர­லாற்றை மறந்து விட்டு புதிய அர­சியல் நீரோட்­டத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­வே­சிக்க வேண்டும். இதன்­போதே வடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னையை தீர்க்க முடியும். எனவே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இது குறித்து சிந்­திக்கும் நேரம் வந்­துள்­ளது.

அத்­துடன் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்க வேண்டும் கோரப்­பட்­டாலும் தற்­போ­தைக்கு அதி­கா­ரத்தை பகிர்­வ­தாயின் நிச்­சி­ய­மாக ஜனா­தி­பதி முறை­மையில் உள்ள குறிப்­பிட்ட அதி­கா­ரத்தை கொண்டு ஜனாதிபதி ‍முறைமையை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள வேண்டும். இல்லையேல் நாடு அராஜகத்திற்கு தள்ளப்பட்டு விடும். அதிகாரத்தை பகிராவிடினும் ஜனாதிபதி முறைமை நீக்கினால் அதனால் நிர்வாக கட்டமைப்பு சீர்குலைந்து விடும்.

இல்லையேல் பாராளுமன்றம் மேலும் வலுவூட்ட வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.