Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு சமா­தானம் உடன் அவ­சியம்...சம்­பந்தன் வலி­யு­றுத்து: பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது விட்டால் சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரிக்கும் எனவும் எச்­ச­ரிக்கை

Featured Replies

நிலை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு சமா­தானம் உடன் அவ­சியம்

4-b8dcecdb9683b169858a1dae4585fb7ede0e8056.jpg

 

சம்­பந்தன் வலி­யு­றுத்து: பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது விட்டால் சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரிக்கும் எனவும் எச்­ச­ரிக்கை

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கும் மக்­க­ளுக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வகையில் இந்த நாட்  டில் நிலை­யான சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்தும் வகையில் நிலை­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான அதி­கா­ரப்­ப­கிர்வு மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என எதிர்க்­கட்சித் தலை வர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார். 

நாட்டில் உயர் ஜன­நா­யகம் பேணப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கவே அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்புச் செய்­வ­தா­கவும், பிரச்­சி­னை­களை உள்­நாட்டில்

 தீர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு விரும்­பு­வ­தா­கவும் அவ்­வாறு தீர்த்­துக்­கொள்­ளப்­படும் பட்­சத்­தி­லேயே சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­ப­ட­மு­டியும் எனவும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று புதன்­கி­ழமை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

1972 மற்றும் 1978ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்கள் ஆட்­சி­யி­லி­ருந்த கட்­சி­களின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்­ட­வை­யாகும். தற்­போது இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­பட்டு 40 வரு­டங்­களின் பின்னர் தயா­ரிக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பு முற்­றிலும் வித்­தி­யா­ச­மான சுழ்­நி­லையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்கும் செயற்­பா­டா­னது பாரா­ளு­மன்ற பிரே­ர­ணையின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. முழு பாரா­ளு­மன்­றமும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு, சகல தரப்­பி­ன­ரு­டைய கருத்­துக்­களும் பெறப்­பட்டு தயா­ரிப்பு பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. நாட்டின் உயர்ந்த சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மா­னது நாட்டு மக்­களின் ஒத்­து­ழைப்­புடன் தயா­ரிக்­கப்­பட வேண்டும். சக­ல­ரி­னதும் உரி­மை­க­ளையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அந்த அர­சி­ய­ல­மைப்பு இருக்க வேண்டும்.

பிளவு படா­மைக்கு அடித்­தளம்

மக்­களின் இறை­மை­யா­னது முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக இருக்க வேண்டும். அதில் சகல தரப்­பி­னரும் உள்­வாங்­கப்­பட வேண்டும். வர­லாற்றில் முதற் தட­வை­யாக அத்­த­கை­ய­தொரு செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. நாட்டின் உயர்ந்த சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்­பா­னது பிரிக்­கப்­ப­டாத நாடு சக­ல­ருக்கும் உரித்­தா­னது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்க வேண்டும். நாடு அபி­வி­ருத்­தியை நோக்கிச் செல்லக் கூடி­ய­தா­கவும், நாட்­டினை நிலை­யான அமை­தி­யா­ன­தாக பேணக்­கூ­டி­ய­தா­கவும் இருக்க வேண்டும்.

இலங்­கை­யா­னது சமத்­துவம் மற்றும் நீதியை நிலை­நாட்­டு­வதில் ஒற்­று­மை­யான நாடா­க­வுள்­ளது என்ற அடிப்­ப­டையில் உலகத் தரத்தைப் பேணு­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அத்­த­கைய முயற்­சி­களை எவ­ரா­வது குழப்­பு­வார்­க­ளாயின் அது நாட்­டுக்குப் பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருக்கும். அவ்­வா­றா­ன­வர்கள் தேசிய நல­னுக்­காக குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­த­வில்லை. அவர்கள் தமது தனிப்­பட்ட எதிர்­கால அர­சியல் நோக்­கத்­துக்­கா­கவே இச்­செ­யற்­பா­டு­களை குழப்­பு­ப­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள்.

இலங்­கை­யா­னது பல்­லின சமூ­கத்தைக் கொண்ட நாடாகும். இவ்­வா­றான சுழ்­நி­லையில் முன்­வைக்­கப்­படும் பரிந்­து­ரைகள் பிரிக்­கப்­ப­டாத நாட்­டுக்குள் ஜன­நா­யகம், உரிமை, சக­வாழ்வு மற்றும் ஒற்­றுமை ஏற்­ப­வற்றை பலப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கின்­றன. ஜன­நா­யகம் மற்றும் பன்­மைத்­துவம் என்­பன ஒன்­றுடன் ஒன்று பின்­னிப்­பி­ணைந்­துள்ள விட­யங்­க­ளாகும். ஆகவே அந்த விட­யங்­களை ஒன்­றுடன் பலப்­ப­டுத்தும் வகையில் ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும். சமத்­துவம் மற்றும் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கு மேற்­கு­றித்த இரண்டு விடங்­க­ளையும் பலப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மா­ன­தாகும். இவற்றின் ஊடா­கவே பிரிக்­கப்­ப­டாத நாட்டை உறு­திப்­ப­டுத்த முடியும். இதுவே சகல செயற்­பாட்­டி­னதும் அடித்­த­ள­மாகும்.

அதி­கா­ரப்­ப­கிர்வு கடந்த காலமும்

அதி­காரப் பகிர்வின் கீழ் மூன்று மட்­டங்கள் உள்­ளன. முத­லா­வது தேசிய மட்டம், இரண்­டா­வது மாகாண மட்டம் மூன்­றா­வது உளுா­ராட்சி மட்டம். இந்த மூன்று மட்­டங்­க­ளிலும் அதி­கா­ரங்கள் எவ்­வாறு பகி­ரப்­பட வேண்டும் என்­பது தௌிவாக குறிப்­பி­டப்­பட வேண்டும். நிறை­வேற்று அதி­காரம் மற்றும் சட்­ட­வாக்கம் என்­பன ஈடு­செய்யக் கூடிய வகையில் பகி­ரக்­கூ­டி­ய­தாக இருக்­க­வேண்டும். அதி­காரப் பகிர்வு என்­பது எந்­த­வொரு கார­ணத்­துக்­கா­கவும் குறைத்­து­ம­திப்­பி­டவோ அல்­லது மீண்டும் மீளப்­பெ­றக்­கூ­டி­ய­தா­கவோ இருக்கக் கூடாது. ஏதா­வது விசேட கார­ணங்­க­ளுக்­காக குறிப்­பிட்ட அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்டால் மாத்­திரம் மாற்­றங்கள் செய்­வ­தாக இருக்க வேண்டும். அதி­காரப் பகிர்வு என்­பது நீண்­ட­காலம் நிலைத்­தி­ருக்கக் கூடி­ய­தையும், உண்­மை­யா­னது என்­ப­தையும் உறு­திப்­ப­டுத்தும். அவ்­வா­றான ஏற்­பா­டுகள் நாடு முழு­வதும் இருக்க வேண்டும்.

தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட 13ஆவது திருத்­த­மா­னது அதி­காரப் பர­வ­லாக்­கலின் முத­லா­வது கட்­ட­மாகும். 1987 ஆண்டு நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டை­யி­லேயே 13ஆவது திருத்­தச்­சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அன்று நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டலில் அர­சாங்கக் குழுவில் இடம்­பெற்­ற­வர்­களில் தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இருந்தார். தமிழர் விடு­தலைக் கூட்­டணி சார்­பி­லான குழுவில் நான் பங்கு பற்­றி­யி­ருந்தேன். இந்தப் பேச்­சு­வார்த்­தை­களில் கலந்­து­கொண்­ட­வர்­களில் அர­சாங்­கத்தின் சார்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும், ரொனி.டிம­லுமே தற்­போது இருக்­கின்­றனர். தமிழர் விடு­தலைக் கூட்­டணி சார்பில் கலந்­து­கொண்­ட­வர்­களில் நானும், ஆனந்­த­சங்­க­ரியும் உயி­ருடன் இருக்­கின்றோம்.

அதே­நேரம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் மங்­கள முன­சிங்க அறிக்கை மற்றும் 2000ஆம் ஆண்டு முன்­வைக்­கப்­பட்ட அர­சியல் தீர்வுப் பொதி போன்­றன அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை வழங்­கு­வ­தற்கு முன்­வைக்­கப்­பட்­டன. சந்­தி­ரிகா தலை­மை­யி­லான அப்­போ­தைய அமைச்­ச­ர­வையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும், தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அங்கம் வகித்­தி­ருந்­தனர் என்­ப­தையும் சுட்­டிக்­கட்­ட­கின்றேன்.

இவ்­வா­றான நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்?ஷ ஆட்­சிக்கு வந்த பின்னர் 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி சர்­வ­கட்சிக் குழுவை அங்­கு­ரார்ப்­பணம் செய்து சிறந்­த­தொரு பேச்சை நிகழ்த்­தி­யி­ருந்தார். இந்தக் குழு­வுக்கு திஸ்ஸ வித்­தா­ரண தலை­மை­வ­கித்­தி­ருந்தார். அதன் பின்னர் சகல இனத்­த­வர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­டுத்­திய நிபு­ணர்கள் குழு­வொன்றும் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவால் அமைக்­கப்­பட்­டது. அந்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சர்­வ­கட்சிக் குழுவின் அறிக்கை ஆகி­ய­ன­வற்றின் பிரா­கரம் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு இணங்­கிய விட­யங்­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தன. இவை 13ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கும் அப்பால் சென்­றி­ருந்­தது. பல்­வேறு அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்தின் நிலைப்­பா­டு­களை இந்த அறிக்­கைகள் பிர­தி­ப­லித்­தி­ருந்­தன. இவை அனைத்தும் உள்­நாட்டில் உரு­வான தீர்வு யோச­னைகள். உள்ளூர் நிலை­மைகள் மற்றும் அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து பெறப்­பட்­ட­வை­யாக இருக்­கின்­றன.

மகிந்த தொடர்­பி­லான நிலைப்­பாடு

இத்­த­கைய கால­கட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்­பாடு எவ்­வாறு இருந்­தது என்­பதை தௌிவு­ப­டுத்த வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ, ஒருமை, ஆட்­புல ஒரு­மைப்­பாடு மற்றும் இறைமை என்­பன பாது­காக்­கப்­பட வேண்டும். இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு களம் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. இதற்­கான எமது அர்ப்­ப­ணிப்­பா­னது சர்­வ­தேச சமூ­கத்தை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் குறிப்­பாக இந்­தியா மற்றும் இணை­த­லைமை நாடு­களின் பங்­க­ளிப்­பு­ட­னா­ன­தாக இருக்கும். எந்­த­வொரு பிளவும் ஏற்­ப­டாது. பிரிக்­கப்­ப­டாத நாட்­டுக்குள் தீர்­வொன்­றுக்குச் செயல்­வதே எமது நோக்­க­மாகும்" என அவர் முதலில் கூறினார்.

அத்­துடன் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண்­ப­தற்கு ஒவ்­வொரு அர­சியல் பிர­தி­நி­தி­களும் யோச­னை­களைக் கொண்­டி­ருந்­தனர். கடந்­த­கால முயற்­சி­க­ளி­லி­ருந்து பெற்ற அனு­பங்­களைக் கொண்டு தீர்­வொன்­றுக்குச் செல்ல வேண்டும். நான் நாட்­டுக்கு தீர்­வொன்றை முன்­வைக்கப் போவ­தில்லை. நீங்கள் உங்கள் கலந்­து­ரை­யா­டல்கள் ஊடாக தீர்­வொன்­றுக்கு வாருங்கள். தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக உங்கள் முடி­வுகள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறி­யி­ருந்தார். மக்­க­ளி­ட­மி­ருந்து மக்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்றும் மகிந்த ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதி­காரப் பகிர்­வா­னது அடை­யாளம், பாது­காப்பு, சமூக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்க வேண்டும் என்றும் அவர் அப்­போது கூறி­யி­ருந்தார். பிராந்­திய சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னைகள் பற்­றியும் கவனம் செலுத்­தப்­பட வேண்டும். இவ்­வா­றான யோச­னை­யொன்­றி­லேயே நாம் தற்­பொ­ழுது ஈடு­பட்­டுள்ளோம். இறை­மையை பாதிக்­கா­த­வாறு முன்­வைக்­கப்­படும் எந்­த­வொரு தீர்வும் அதி­யுச்ச அதி­காரப் பகிர்­வொன்றைக் கொண்­ட­தாக இருக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜ­பக்ஷ சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். இவ்­வா­றான நிலைப்­பாட்டில் இருந்த மகிந்த ராஜ­ப­க்ஷவின் நிலைப்­பா­டுகள் அனைத்தும் தற்­போது தலை­கீ­ழாக மாறி­யுள்­ளன.

விடு­தலைப் புலி­க­ளுடன் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களில் அர­சாங்கத் தரப்­புக்குத் தலைமை தாங்­கி­யவர் முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ். ஒஸ்லோ இணைந்த அறிக்­கையில் சுய­நிர்­ணய உரி­மைக்கு இணக்கம் காணப்­பட்­டி­ருந்­தது. இந்த இணக்­கப்­பாடு காணப்­பட்ட பின்னர் அதனை ஜி.எல்.பீரிஸ் ஊட­கங்­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்தார். அத்­த­கைய அறி­விப்­பினை விடுத்து கருத்­துக்­களை முன்­வைத்த பீரிஸ் தற்­பொ­ழுது முற்­றிலும் மாறு­பட்­ட­வ­ராகச் செயற்­ப­டு­கின்றார்.

சமஷ்டி அடிப்­ப­டையில் உள்­ளக சுய­நிர்­ணய உரி­மைக்கு இணங்­கி­யி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்?ஷ மற்றும் அவ­ரு­டைய பேச்­சா­ள­ரா­க­வி­ருந்த முன்னாள் அமைச்சர் பீரிஸ் ஆகியோர் அதி­கா­ரத்தில் இருந்த நிலைப்­பாட்­டுக்கும் தற்­பொ­ழுது இருக்கும் நிலைப்­பாட்­டுக்கும் இடை­யி­லான வித்­தி­யா­சங்கள் எனக்கு ஆச்­சரி­ய­ம­ளிப்­ப­தாக இருக்­கின்­றன.

தற்­போ­தைய நிலைமை

தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் ஆட்சிக் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான தயா­ரிப்புப் பணிகள், முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜபக்?ஷ ஆகி­யோரின் ஆட்சிக் காலத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட செயற்­பா­டு­களின் தொடர்ச்­சி­யா­கவே பார்க்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

25வரு­டங்­க­ளாக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போதும் இரு பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டையில் தேசிய பிரச்­சினை விட­யத்தில் இணக்­கப்­பாடு ஏற்­ப­டா­மையால் இழு­ப­றிகள் காணப்­பட்டு வந்­தன. யுத்தம் என்ற பாரிய தடை நீங்­கி­யுள்ள சுழலில் தற்­பொ­ழுது இருக்­கின்றோம். யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் புர்த்­தி­ய­டைந்த நிலையில் இருப்­ப­துடன், யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணங்கள் இன்­னமும் நிவர்த்­தி­செய்­யப்­ப­ட­வில்லை.

யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் நேர்­மை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த முடி­யா­ம­லி­ருப்­பது துர­திஷ்­ட­வ­ச­மா­னது. மூன்று ஜனா­தி­ப­தி­களால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைகள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாது யுத்தம் தொடர்ந்­தமை சோக­மா­னது. தேசிய பிரச்­சி­னைக்குத் தீர்வு வேண்டி யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில், இன்­னமும் அவை தீர்க்­கப்­ப­டா­தி­ருப்­பது துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும்.

இந்­தி­யாவும் சர்­வ­தே­சமும்

அதி­காரப் பகிர்வு மற்றும் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு தொடர்பில் இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் மன்­மோகன் சிங் மற்றும் தற்­போ­தைய பிர­தமர் நரேந்­திர மோடி ஆகியோர் கூறிய கருத்­துக்­களும் முக்­கி­ய­மா­ன­வை­யா­கின்­றன. அயல்­நாட்டு பிர­த­மர்கள் மாத்­தி­ர­மன்றி உலகத் தலை­வர்கள் பலரும் இலங்கை விவ­காரம் தொடர்பில் தமது நிலைப்­பா­டு­களைத் தெரி­வித்­துள்­ளனர். எமது நாடு எப்­படி இருக்கப் போகின்­றது என்­பதை நாம் யோசிக்க வேண்டும். சகல தரப்­பி­னரும் அபி­லா­ஷைக­ளையும் உள்­ள­டக்­கி­னாலும் தனிப்­பட்­ட­தாக இருக்க வேண்டும் என இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கூறி­யி­ருந்தார்.

இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடியின் கருத்தில் முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டிய விடயம் என்­ன­வெனில் எமது நட­வ­டிக்­கைகள் சர்­வ­தே­சத்­தினால் அவ­தா­னிக்­கப்­பட்டு வரு­கின்­றன என்­பதை உணர்ந்­து­கொள்ள வேண்டும். தென்­னா­பி­ரிக்கா மற்றும் பர்­மாவில் இரா­ணுவ ஆட்­சியை நடத்­தி­ய­வர்கள் தாம் நினைத்­ததைச் செய்ய முடியும் என கரு­தி­யி­ருந்­தனர். எனினும், அவர்­களால் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­க­வேண்டி ஏற்­பட்­டது. குறிப்­பாக சர்­வ­தே­சத்தின் நட­வ­டிக்­கை­களால் நிதி அழுத்­தங்­க­ளுக்கு முகங்­கொடு வேண்டும்.

எதிர்­பார்ப்பும் எச்­ச­ரிக்­கையும்

ஜன­நா­யகம் என்­பது நாட்டில் உயர்­வா­ன­தாக இருக்க வேண்டும். நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்கள் அதற்கு ஏற்ற வகையில் அமைக்­கப்­பட வேண்டும். நாட்­டி­லுள்ள சக­ல­ரு­டைய ஜன­நா­ய­கமும் மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் இந்த அர­சாங்­கத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்றோம். எமது நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என நாம் விரும்புகின்றோம். எமது பிரச்சினைகள் உள்நாட்டில் தீர்க்கப்பட வேண்டும் என விரும்புகின்றோம். பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால் சர்வதேச அழுத்தம் மோசமடையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அழுத்தங்கள் அதிகரிக்குமானால் நாட்டின் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும். என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாயின் பொதுவான விடயங்களில் தேசிய இணக்கப்பாடு அவசியமாகின்றது. அதிகபட்ச சாத்தியமான ஒருமித்த கருத்துக்களுடன் புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த இணக்கப்பாட்டில் பொது மக்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் அதியுச்ச அதிகாரங்களைப் பகிரக்கூடிய தீர்வொன்றை எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வொன்றை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் பெடரல் கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனை வடக்கு, கிழக்கு மக்களால் 1956ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் வன்முறைகள் அதிகரித்தன. விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்புப் பெறப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதை தற்போதைய அரசாங்கமே சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறியிருந்தது. எனவே நியாயமான தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது கட்டாயமாகும். சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.