Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய யுக்தி பயனளிக்குமா?

Featured Replies

புதிய யுக்தி பயனளிக்குமா?

 

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காண்­ப­தற்­கு­ரிய இறு­திச்­சந்­தர்ப்பம் இது  மட்­டு­மன்றி இறுதி  அர­சாங்­கமும், ஆட்­சியும் இது­வா­கத்தான் இருக்­க மு­டி­யு­மென்­பது  உண­ரப்­ப­டு­முண்மை. காரணம் இலங்­கை­யி­லுள்ள இரு பெரும்­பான்மைக்  கட்­சிகள் ஒன்­று­கூடி, ஆட்சி அமைக்­கக்­கூ­டிய  இன்­னு­மொரு சந்­தர்ப்பம் இலங்கை அர­சி­யலில்  உரு­வா­குமா? என்­பது  எதிர்­பார்க்­கக்­கூ­டிய  விட­ய­மல்ல. 

 

புதிய அர­சியல் சாச­னத்தின் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காண்­ப­தற்கு புதிய யுக்­தியைக் கையா­ளப்­போ­வ­தாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்­ளார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக காணப்­படும் சில தவ­றான அபிப்­பி­ர­ாயங்­களை இல்­லாமல் ஆக்கும் பொருட்டு எதிர்­கா­லத்தில் மூன்று படி­மு­றை­களை மேற்­கொள்­ள­வி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­கட்சி மா­நாடு, சர்­வ­மத மா­நாடு, கல்வி மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளி­னது மா­நாடு ஆகி­ய­வற்றை நடத்­த­வுள்ளேன் என்றும் தெரி­வித்­துள்ளார்.

அர­சியல் சாச­னத்தை வரை­வ­தற்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவாதம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் சம­யத்­தி­லேயே ஜனா­தி­ப­தியின் இவ்­வா­லோ­சனை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இடைக்­கால அறிக்கை தொடர்பில் கூட்டு எதி­ர­ணி­யினர், பௌத்த பீடங்கள், விஹா­ரா­தி­ப­திகள் புத்­தி­ஜீ­விகள் பல்­வேறு கருத்­துக்­க­ளையும் அபிப்­பி­ ர­ா­யங்­க­ளையும் கூறிக்கொண்­டி­ருக்கும் நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை கைவி­டுங்கள், உட­ன­டி­யாக நிறுத்­துங்கள், முன்­னெ­டுக்­கா­தீர்கள் என கடும்­போக்­கா­ளர்கள் எச்­ச­ரிக்கை விடுத்துக்கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இவ்­வெச்­ச­ரிக்­கைகள் ஜனா­தி­ப­தியால் குறித்­து­ரைக்­கப்­பட்ட, கட்­சி­க­ளாலும் விடுக்­கப்­ப­டு­கி­ன்றன. மத பீடங்­க­ளாலும் முன்­வைக்­கப்­ப­டு­கி­ன்றன. மறு­புறம் கல்­வி­மான்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­களால் கூட மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

சர்­வ­தே­சத்­துக்கும், உலக நாடு­க­ளுக்கும் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அப்பால் நீண்­ட­கா­ல­மாக புரை­யோடிப் போயி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு காண்பேன் என்ற வாக்­கு­று­தி­களை மீற முடி­யாத நிலையில் தானும் தனது அர­சாங்­கமும் இருந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற கார­ணத்­தி­னா­லேயே புதிய அர­சியல் சாசன முயற்­சி­களை ஜனா­தி­பதி முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கிறார் என்­பதே உண்மை.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காண்­ப­தற்­கு­ரிய இறு­திச்­சந்­தர்ப்பம் இது மட்­டு­மன்றி இறுதி அர­சாங்­கமும், ஆட்­சியும் இது­வா­கத்தான் இருக்­க­மு­டி­யு­மென்­பது உண­ரப்­ப­டு­முண்மை. காரணம் இலங்­கை­யி­லுள்ள இரு பெரும்­பான்மைக் கட்­சிகள் ஒன்­று­கூடி, ஆட்சி அமைக்­கக்­கூ­டிய இன்­னு­மொரு சந்­தர்ப்பம் இலங்கை அர­சி­யலில் உரு­வா­குமா? என்­பது எதிர்­பார்க்­கக்­கூ­டிய விட­ய­மல்ல.

சர்­வ­தேச அளவில் இறுகி வரும் நிலைகள் இலங்கை அரசின் மீது அவ­நம்­பிக்­கை­க­ளையும் நம்­பிக்­கை­யீ­னங்­க­ளையும் உரு­வாக்கி வரு­கி­றது என்­ப­தற்கு அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த ஐ.நா.வின் விஷேட அறிக்­கை­யாளர் பப்­லோவின் காட்­ட­மான அறிக்கை, கடந்த செப்­டெம்பர் மாத­ம­ளவில் நியூ­யோர்க்கில் வைத்து ஜனா­தி­ப­தியை சந்­தித்த ஐ.நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன், ஜனா­தி­ப­திக்கு வழங்­கிய ஆலோ­சனை, போர்க்­குற்றம் தொடர்பில் ஏற்­பட்­டு­வரும் மாற்­றங்கள் போன்ற பல்­வேறு கார­ணி­களின் பின்­ன­ணியில் பார்க்­கின்ற போது அர­சியல் தீர்வு என்­பது அவ­சி­யப்­பட்­டது என்­பது தவிர்க்­கப்­பட முடி­யா­த­வொன்றே!

இவ்­வா­றான நெருக்­க­டி­யான சூழ்­நி­லையில் அர­சியல் தீர்­வொன்றை கொண்டு வரு­வ­தற்கு ஜனா­தி­ப­தி­ய­வர்கள் இதய சுத்­தி­யோடு செயற்­பட முற்­பட்­டாலும் இருக்­கின்ற சூழ்­நி­லை­களும் ஏற்­பட்­டு­வரும் சவால்­களும் அதி­க­மாகிக்கொண்டே செல்­கி­ன்றன. இவற்றை முறி­ய­டிப்­ப­திலும் வெற்றி கொள்­வ­தி­லு­முள்ள சங்­க­டங்கள் எளி­மை­யா­ன­வை­யல்ல.

தமிழர் இனப்­பி­ரச்­சினை தொடர்பில் பல்­வேறு காலங்­களில் பல்­வேறு சர்­வ­கட்சி மா­நா­டுகள், வட்­ட­மேசை மா­நா­டுகள், அனைத்து கட்சி மா­நா­டுகள் நடத்­து­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவை­யெல்லாம் அவ்­வவ்­கா­லங்­களில் பேசப்­பட்­ட­போதும் அவை குறைப் பிர­ச­வங்­க­ளா­கவே ஆகிப்­போ­யின என்­பது மறுக்­கப்­ப­ட­மு­டி­யாத உண்மை.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்சி செய்த காலங்­க­ளிலும் அதுபோல் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பத­வி­யி­லி­ருந்த காலங்­க­ளிலும் சர்­வ­கட்சி மா­நாடு, வட்­ட­மேசை சந்­திப்­புக்கள் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் இடம் பெற்­றி­ருக்­கின்­றன.

2009 ஆம் ஆண்­டுக்குப் பின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அர­சியல் தீர்வு விவ­கா­ரங்­களில் முடிவு காணப்­பட வேண்­டு­மாயின் சர்­வ­கட்சி மா­நாடு நடத்­தப்­பட வேண்­டு­மென்ற தனது தட்டிக்கழிப்­புக்­களை செய்து வந்­துள்ளார். ஆனால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கை­யி­லுள்ள கட்­சிகள் எவற்­றையும் ஒன்றுகூட்டி தமிழ் மக்­களின் அர­சியல் தேவை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்­டு­மென்ற முயற்­சி­களை அவர் விசு­வாச உணர்­வோடு மேற்­கொண்­ட­தில்லை.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கத்­துக்­கு­மி­டையில் 16 க்கு மேற்­பட்ட சுற்­று­வட்டப் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றி­ருந்த போதிலும் அவை­யெல்லாம் புஸ்­வா­ண­மாகிப் போயின. கூட்­ட­மைப்­புக்கும் மஹிந்த அர­சுக்­கு­மி­டை­யி­லான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு இந்­தியா மற்றும் சர்­வ­தேச அழுத்தம் பல­முறை பிர­யோ­கிக்­கப்­பட்­ட­போதும் இறு­தியில் சர்­வ­கட்சி மா­நாடு கூட்­டப்­ப­ட­வேண்டும். அதில் தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென அவர் தட்­டிக்­க­ழித்­ததை யாரும் மறந்து விட முடி­யாது.

இத்­த­கைய அனு­ப­வங்­கள் ஏலவே இருக்­கின்ற நிலையில் சர்­வ­கட்சி மா­நாட்டைக் கூட்டி, அர­சியல் சாசன உரு­வாக்கம் தொடர்பில் ஏற்­பட்­டுள்ள தவ­றான அபிப்­பி­ர­ா­யங்­களை நீக்­கப்­போ­வ­தா­கவும் அவர்­களின் ஆத­ரவைக் கோரப்­போ­வ­தா­கவும் ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். இதில் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­துவம் பெறு­கின்ற கட்­சி­களை அழைத்து பேசப்­போ­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

1989 ஆம் ஆண்டு, முன்னாள் ஜனா­தி ­பதி ஆர்.பிரேம­தாஸ சர்­வ­கட்சி மா­நா­டொன்றை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்வதேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடத்­தி­யி­ருந்தார். இந்த மா­நாட்டில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் சார்பில் யோக­ரட்ணம் யோகி தலை­மையில் குழுவினர் குழுவினர் பங்குபற்­றி­யி­ருந்­தார்கள். அதனைத் தொடர்ந்து ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற சர்­வ­கட்சி மா­நா­டு­களில் அக்­குழு தொடர்ந்து பங்­கு­பற்­றி­யி­ருந்­தது.

இதே­போன்றே யுத்தம் முடி­வுற்­ற­துடன் முன்னாள் ஜனா­தி­பதி அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­திகள் குழுவை பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தலை­மையில் நிய­மித்­தி­ருந்தார். இதே நிலை ஏலவே 1991, காலத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இவற்றின் முடி­வுகள் எவ்­வாறு இருந்­தன என்­பது யாவரும் அறிந்த விட­ய­மாகும். பாரா­ளு­மன்றம் அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டதன் பின்னர் அர­சியல் சாசன வரை­புக்­கான கலந்­து­ரை­யா­டல்கள் எதுவும் நடத்­தாமல் இப்­பொ­ழுது சர்­வ­கட்சி மா­நாடு நடத்­தப்­படும் என்று கூறு­வது மீண்டும் எல்­லா­வற்­றையும் ஆரம்ப புள்­ளிக்கு கொண்டு செல்லும் நட­வ­டிக்­கை­யா­கவே எண்ணத் தோன்­று­கி­றது. ஜனா­தி­ப­தியின் இந்த அறி­வித்தல் மீண்டும் நாட்டில் ஒரு குழப்ப நிலையை உரு­வாக்கி விடுமோ என்ற சந்­தே­கத்­தையே தமிழ் மக்கள் மத்­தியில் உண்­டாக்­கி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. அர­சியல் நிர்­ணய சபை நிய­மிக்­கப்­பட்டு இன்னும் சில மாதங்­களில் இரு வயது பூர்த்தி ஆகப் போகிற நிலையில் பழை­ய­படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை­யாக மாறி­வி­டுமோ என்ற சந்­தே­கமே தற்­பொ­ழுது வலுத்துக் கொண்டு வரு­கி­றது.

ஜனா­தி­ப­தியின் அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் இன்­னொரு விடயம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்­சி­களை அழைத்து சர்­வ­கட்சி மா­நாட்டை நடத்தப்போவ­தாக அண்­மையில் தேர்தல் ஆணை­யா­ளரின் அறி­வித்­தலின்படி பதிவு செய்­யப்­பட்ட கட்­சிகள் இலங்­கையில் 70 கட்­சிகள் இருப்­ப­தாக அறி­வித்­துள்ளார். இவ்­வாறு பார்க்­கின்­ற­போது மேற்­படி கட்­சிகள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் பாரா­ளு­மன்றை பிர­தி­நி­தித்­துவப்படுத்தும் கட்­சிகள் ஆறே­யுள்­ளன.

அவற்றில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு, இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி, ஜே.வி.பி., ஈ.பி.டி.பி., முஸ்லிம் காங்­கிரஸ் ஆகி­ய­ன­வாகும். இத்­த­லை­மைக்­கட்­சி­க­ளுக்குள் பல கூட்டுக் கட்­சிகள் உள்­ளன. உதா­ர­ண­மாக ஸ்ரீ.மு.காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், மலை­ய­கத்தை பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்தும் மூன்று கட்­சிகள் என இணைக்­கப்­பட்­டுள்­ளன. இதே­போன்றே இ. தமி­ழ­ரசுக் கட்சி சின்­னத்தில் ஏனைய மூன்று கட்­சிகள் போட்­டி­யிட்­டுள்­ளன. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பாரா­ளு­மன்றை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தாத சுமார் 55க்கு மேற்­பட்ட கட்­சிகள் உள்­ளன. இவை பிர­தேச ரீதி­யா­கவும் இன ரீதி­யான, மத ரீதி­யாக பல கட்­சிகள் நாட்டில் இயங்­கி­வ­ரு­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களைக் கொண்ட மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட சர்வ கட்சி மா­நாடு என்­பது எந்­த­ள­வுக்கு சாத­க­மான சூழ்­நி­லையை உரு­வாக்க முடி­யு­மென்­பது எதிர்­பார்க்க முடி­யாத விட­ய­மாகும்.

அது­வு­மின்றி இன்­றைய கள நிலை­மை­களைப் பொறுத்­த­வரை பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற கட்­சி­களை விட வெளி­யே­யுள்ள சிறு சிறு கட்­சிகள், சிறு­பான்மைக் கட்­சிகள், உள்ளூர் மட்­டங்­க­ளிலும் பிராந்­திய மட்­டங்­க­ளிலும் மக்கள் செல்­வாக்­கு­களைப் பெற்ற கட்­சி­க­ளாக அவை விளங்­கு­மாயின் அவை மக்கள் மத்­தியில் ஊடு­ருவி நிலை­மை­களை வேறு திசை­க­ளுக்கு திருப்பும் சந்­தர்ப்­பங்­களும் உண்­டாக வாய்ப்­பி­ருக்­கி­றது. எல்­லா­வற்­றுக்கும் அப்பால் பாரா­ளு­மன்றை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­று­வ­தற்கு முன்போ அல்­லது இடைக்­கால அறிக்­கை­களின் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு முன்போ இக்­கைங்­க­ரி­யத்தை அர­சாங்­கமோ அல்­லது ஜனா­தி­ப­தியோ செய்­தி­ருப்­பார்­க­ளாயின் நிலை­மை­களை ஓர­ளவு சம­நி­லைப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும்.

ஜனா­தி­பதி அடுத்து முன்­னெ­டுக்க விரும்பும் விவ­காரம் சர்­வ­மத மா­நாடு என்னும் யுக்­தி­யாகும். இலங்­கையில் பல மதங்­களின் வழி­பா­டுகள் இருந்து வரு­கின்­ற­போதும், பிர­தான மதங்­க­ளாக போற்­றப்­ப­டு­பவை பௌத்தம், சைவம், இஸ்லாம், கிறிஸ்­தவம் ஆகிய மதங்­க­ளாகும். 1972 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட யாப்பில் பௌத்த மதத்­துக்கு தேசிய முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்ற அதே­வேளை, வரை­யப்­ப­டு­கின்ற புதிய யாப்பில் பௌத்­தத்­துக்கு முதன்மைத் தானம் இல்­லை­யாயின் அவ்­வகை அர­சி­யலை, தூக்கி எறிந்து விடு­வோ­மென பௌத்த பீடங்­களும் மா­நா­யக்­கர்­களும் கண்­டிப்­பாக கூறி வரு­கின்­றார்கள். அது­வு­மின்றி அர­சியல் தலை­வர்கள் இதுபற்றி கடும் போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றார்கள்.

இவ்­வா­றான கள நிலையில் அர­சியல் தீர்வு, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் முடி­வு­காணும் சக்தி பௌத்த தரப்­பி­னரிடமே உள்ளது. இலங்கை வர­லாற்றைப் பொறுத்­த­வரை பௌத்தம் தவிர்ந்த ஏனைய எந்த மதங்­களும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விவ­கா­ரத்­திலோ அல்­லது புதிய அர­சியல் யாப்பு தொடர்­பா­கவோ தங்கள் எதிர்ப்பை இது­வரை வெளி­யி­ட­வில்லை. அர­சியல் விவ­கா­ரங்­களில் அவர்கள் அதி­க­ளவு நாட்டம் காட்­டி­ய­தா­கவும் தெரி­ய­வில்லை. இவ்­வாறு இருக்­கும்­போது பௌத்தம் தவிர்ந்த ஏனைய மதங்கள் எந்­த­வித இணக்­கப்­பாட்­டுக்கும் வர வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இதில் விட்­டுக்­கொ­டுக்க வேண்­டிய அல்­லது உடன்­பாட்­டுக்கு வர வேண்­டிய மதத்­தி­ன­ராக பௌத்த மதத்­தி­னரே இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு இருக்கும் நிலையில் பௌத்த மதத்­தி­ன­ரையும் ஏனைய மதத்­தி­ன­ரையும் ஒரு மேசையில் இருத்தி உடன்­பாடு காண வேண்­டிய தேவை எந்­த­ள­வுக்கு பொருத்­தப்­பாடு உடை­யது என்­பது தர்க்க ரீதி­யாக வர­வேற்க முடி­யாத ஒரு விவ­கா­ர­மாகும்.

ஏலவே அர­சி­ய­ல­மைப்பு முயற்­சி­களை உட­ன­டி­யாக கைவி­டுங்கள் என அர­சாங்­கத்­துக்கு அஸ்­கி­ரிய, மல்­வத்த பீடங்கள் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருப்­பதை இவ்­வி­டத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

அர­சாங்­கத்தின் இன்­னொரு முயற்­சி­யாக இப்­பொ­ழுது பேசப்­பட்டுக்கொண்­டி­ருப்­பது கல்வி மற்றும் புத்திஜீவிகளினது மாநாடு என்ற முன்னெடுப்பாகவும் இலங்கையைப் பொறுத்தவரை தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு புத்திஜீவிகள் அமைப்போ கல்வி மான்களுடைய குழுவோ குறிப்பிட்டு கூறக்கூடிய அளவுக்கு இல்லையாயினும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த புத்திஜீவிகளும் கல்விமான்களும் இவ்விவகாரத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டிய அவசரமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது என்பது உண்மையே.

தேசிய அளவில் சகல இனங்களையும் இணைத்து புத்திஜீவிகள் அமைப்பொன்றை உருவாக்கி, இனப்பிரச்சினைக்கான தாற்பரியம், மற்றும் அரசியல் தீர்வுக்கான அரசியல் சாசனம் என்ற விவகாரங்களை மக்கள் மயப்படுத்துவதுடன் விழிப்புணர்வை ஊட்டக்கூடிய கைங்கரியத்தை செய்ய வேண்டியது புத்திஜீவிகளின் இன்றைய தார்மீகக் கடமையாகும்.

இந்தக் கடமைகள் வெறுமனே சிங்கள புத்திஜீவிகளை மட்டும் சார்ந்ததல்ல. நாட்டிலுள்ள அனைத்து இன புத்திஜீவிகளும் ஒன்றுபட்டு கைகோர்த்து செயற்பட வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எது எவ்வாறு இருந்தபோதிலும் ஜனாதிபதியின் இவ்வறிவித்தலானது தமிழ் மக்கள் மத்தியில் பூரண திருப்தியையோ நம்பிக்கையையோ தரவில்லையென்ற உண்மையே வெளிப்பட்டு நிற்கின்றது. புதிய அரசியல் அமைப்பு முன்னெடுப்புத் தொடர்பில் சர்வகட்சி மற்றும் சர்வமத தலைவர்கள் மாநாடுகளை நடத்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருப்பதானது, காலத்தை இழுத்தடிக்கும் செயலாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அதிருப்தியை தெரிவித்திருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

திரு­மலை நவம்

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.