Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் முதன்முதலாக மும்மொழிகளிலும் அமைந்த பத்திரிகை வெளியீடு!

Featured Replies

இலங்கையில் முதன்முதலாக மும்மொழிகளிலும் அமைந்த பத்திரிகை வெளியீடு!

 

இலங்கையில் முதன்முறையாக மும்மொழிகளிலும் அமைந்த பத்திரிகை ஒன்று நேற்று முந்தினம் கொழும்பிலுள்ள ஜேர்மன் நிறுவனமான Geothe Institut இல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முதலாக மும்மொழிகளிலும் அமைந்த பத்திரிகை வெளியீடு!

அதன்படி ஒரே செய்திக்கதை ஒரே பத்திரிகையில் தமிழ் சிங்களம் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் இடம்பெறுவதாக The Catamaran/கட்டுமரம்/කැටමරාන් பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தமிழ் சிங்கள ஆங்கில ஊடகங்களில் பணிபுரியும் பல்வேறு ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து நாட்டில் பல பாகங்களிலும் நிகழக்கூடிய வித்தியாசமான கதைக்கருக்களைக் கொண்ட செய்திக் கதைகளை மூன்று மொழிகளிலும் அமைவதாக கட்டுமரம் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

Image may contain: 2 people, people standing

கட்டுமரம் என்கிற செயற்திட்டம், ஜெர்மன் தலைநகர் பேர்லினைத் தளமாகக் கொண்டியங்கும் ’ஒத்துழைப்பு மற்றும் மாற்றுதலில் ஊடகம்’ (MiCT) என்கிற அமைப்பினால் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் என்பவற்றுடன் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்படுத்தப்பட்டுவந்துள்ளது.

Image may contain: 2 people, people smiling, people standing

இதற்கான நிதி ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஜெர்மன் கூட்டரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சினாலும் வழங்கப்படுகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்திட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரும் இணைந்து பல செய்திக்கதைகளை கட்டுமரம் இணையத்தளம் வாயிலாக வெளியிட்டு வந்துள்ளனர்.

Image may contain: 1 person

இதன் தொடர்ச்சியாகவே முக்கியமான மொழிசார் பிரச்சினைகளை மையமாக வைத்து கட்டுமரம் பத்திரிகை இலங்கை வரலாற்றில் முதன்முதலாக மூன்று மொழிகளிலும் அமைந்த பத்திரிகையாக வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்-வினிதா தம்பதியினரின் காதல் கதையும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவரால் எழுதப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.quicknewstamil.com/2017/11/07/இலங்கையில்-முதன்முதலாக-ம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.