Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கை இணைத்தால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்

Featured Replies

வடக்கு கிழக்கை இணைத்தால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்

 

இனங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை துண்டுகளாகப் பிரிக்க முற்பட்டால் நாட்டில் மீண்டுமொரு பேரழிவு ஏற்படும் என உத்தேச அரசியல் யாப்பிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் முக்கிய பௌத்த பிக்குகளில் ஒருவரான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பௌத்த பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை சிப்பிகுளம் பகுதியில் உள்ள முகம்மதியா இஸ்லாமிய அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

நாட்டில் வாழும் அனைத்து இன மற்றும் மதங்களை மதித்து அவர்களுக்கான தனித்துவத்தை அங்கீகரித்து நடந்துகொள்வோமானால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது என குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கை இணைத்தால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்

அதேவேளை தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் தான் உட்பட ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் சாதி மற்றும் குல ரீதியாக பிரிந்துசெயற்படுவதாகவும் விமர்சித்த பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வடக்கு கிழக்கு இணைப்பிற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

எமது நாட்டிற்கான சுதந்திரத்தை சிங்களத்தலைவர்கள் மாத்திரமன்றி தமிழ் தலைவர்கள், முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கத் தலைவர்கள் அனைவரும் இணைந்து போராடியே வென்று கொடுத்தனர்.

இதன்போது வெள்ளைக்காரன் தனித்தனியோ ஆட்சிகளைப் பிரித்துக்கொடுக்க கதைத்த போது சுதந்திரத்திற்காக போராடிய எமது தலைவர்கள் அதனை நிராகரித்ததுடன் தங்களிடமிருந்து பறித்த போது நாடு எவ்வாறு இருந்ததே அதே போல் ஒரு நாட்டை திருப்பிக்கொடுக்குமாறு கேட்டனர்.

ஆனால் ஒருபோதும் நாட்டைத் துண்டாடித் தருமாறு எந்தவொரு தலைவர்களும் வெள்ளையனிடம் கேட்கவில்லை.

அதற்கமையத்தான் ஒரே நாடாக எமக்கு சுதந்திரம் கிடைத்தது. அப்போது அநுராதபுரத்திற்கும் கடல் இருந்தது. இந்தத் தகவல் உங்களுக்குத் தெரியுமோ தெரியாது.

ஆனால் இன்று வடக்கு கிழக்கை இணைத்து நாட்டை பிரிக்க கேட்கின்றனர். இதற்கமைய அநுராதபுரம் அரச மரத்தடி வரை அவர்கள் தமிழீழத்தை பிரித்துத் தருமாறு கோருகின்றனர்.

நாட்டை பல துண்டுகளாகப் பிரித்து ஒருபோதும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அதனால் இன விகிதாசார அடிப்படையில் நாட்டைத் துண்டாடி நாட்டில் நல்லிணக்கத்தையோ நிரந்தர அமைதியையோ ஏற்படுத்த முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால் மனித சடலக் குவியல்களையே நாம் மீண்டும் காண நேரிடும். தற்போது நுவரெலியா – மஸ்கெலியா பிரதேசம் இன விகிதாசார அடிப்படையில் பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஸ்ரீபாத புனித ஸ்தலம் அமைந்துள்ள பகுதியும் இனமொன்றை அடிப்படையாகக் கொண்டு தனிப் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது.

இது மகா தவறு. ஒருபோதும் இந்த நாட்டை இன அடிப்படையில் பிரிக்கக் கூடாது.

அனைத்துஇனங்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய வகையிலேயே நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்றார்.

https://news.ibctamil.com/ta/politics/North-East-connects--blood-flow-again

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துறவி எப்பிடி கதைக்குது. எங்கட ஒண்டு சொல்லுது தெற்கை விட நம்மவர்கள் தானாம் வரிந்து கட்டிக்கொண்டு நிக்கிறோமாம். இவ்வளவுக்கும் இணைந்த வடகிழக்கை பிரித்தவன் அவன். அதை இருந்தபடி இருக்க விடுங்கள் என்றால் இரத்த ஆறு ஓடுமாம். அவன் பிரிகேக்கை இவர் தடுக்கவுமில்லை, இப்ப விட்டுகுடுக்கினமாம். தலை சொல்லுது பொறுமைக்கும்,விட்டுகொடுப்புக்கும் இனி இடமில்லை எண்டு. வால் சொல்லுது பேச்சின்போது விட்டுகுடுப்பது அவசியமாம். அறுபது வருடமாய் பேசுறோம், பேசுறோம் எண்டு உள்ளதெல்லாத்தையும் விட்டுகுடுத்ததுதான் மிச்சம். ஏன் அவன் ஏதாவது தந்தானா? இவை பெரிய கொடை வள்ளல் பரம்பரை கொடுத்துக்கொண்டே இருக்கினம். பிழைக்க வழியில்லாட்டி உப்பிடியே ஊரை ஏமாத்துறது. பிச்சை எடுத்து சீவிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.