Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளும் ஜே.வி.பியினரும் யுத்தம் செய்யவில்லை. கிளர்ச்சியே செய்தனர். – சி.வி.

Featured Replies

புலிகளும் ஜே.வி.பியினரும் யுத்தம் செய்யவில்லை. கிளர்ச்சியே செய்தனர். – சி.வி.

 

vikkineswaran.jpg

விடுதலைப் புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல. ஆகவே கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவந்ததும் இராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் மட்டும் வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் இது பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோநிலையைக் கைபிடித்துப் பார்க்கும் ஒரு கைங்கரியம் என்றும் சிலரால் கூறப்படுகின்றதே. உங்கள் கருத்தென்ன? எனும் கேள்விக்கே அவ்வாறு பதிலளித்தார்.

இது ஒரு யூகந்தான். ஆனால் இக் கூற்றில் உண்மையிருக்கவுங் கூடும். அரசாங்கம் சிங்களப் பிரதேசங்களில் தேர்தலை நடாத்தப் பின்நிற்கின்றது. எங்கே தமது பொருளாதாரக் கொள்கைகளும் தமிழர் சம்பந்தமான உத்தேச அரசியல் தீர்வுகளும் சிங்கள மக்களிடையே தமக்கெதிரான ஒரு அலையை உண்டுபண்ணி விடுவோமோ என்று பயப்படுகின்றனர். எனவே முதலில் தமிழ் மக்களின் கருத்தை அறியப்பார்க்கும் ஒரு நிகழ்வாக இந்த உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறலாம்.

அதாவது பௌத்தத்திற்கு முதலிடம், சமஸ்டி தேவையில்லை, ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற கொள்கையுடைய தற்போதைய தமிழ்த் தலைமைத்துவத்தின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்பார்களானால் சிங்கள மக்களுக்கு அதை எடுத்துக்காட்டி புதிய அரசியல் யாப்பைத் தாம் நினைக்கும் வண்ணம் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்யலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கக்கூடும்.

ஆகவே தற்போதைய தமிழ்த் தலைமைகளின் கருத்துக்களைத் தமிழ் மக்கள் உள்ளுராட்சித் தேர்தல்களில் ஏற்றுக் கொண்டு பெருவாரியாக அக் கருத்துக்களை ஆதரித்தாரானால் மிகக் குறைவான தீர்வை நாம் விரைவாகப் பெற இடமிருக்கின்றது. ஆனால் வருங்காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன ஆகும் என்பதைத் தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் ஆய்ந்துணர வேண்டும். கிழக்கைப் போல் வடக்கை ஆக்குவதற்கு அரசாங்கத்திற்கு பல வருடங்கள் அப்பொழுது தேவையில்லை.

சில கட்சிகளும் தமிழ் மக்களின் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பேசுவதை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இவர்கள் பிளவை ஏற்படுத்தப்பார்க்கின்றார்கள் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று ஆராய்வோம்.

தமிழ் மக்களின் கொள்கைகளில், நோக்கில், முன்னேற்பாடுகளில் ஒரு புரிந்துணர்வும் ஸ்திரத் தன்மையும் இருக்க வேண்டும் என்றுதான் தந்தை செல்வா காலத்திலேயே சில அடிப்படைகள் வலியுறுத்தப்பட்டன. அவையாவன தாயகம், தன்னாட்சி, தமிழர் தரையிணைப்பு என்பன. இதற்கு உகந்த தீர்வு சமஸ்டியே என்று வலியுறுத்தப்பட்டது.

இதனை 1949ம் ஆண்டு தொடக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தி வந்துள்ளது. தற்போதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இவற்றை வலியுறுத்துகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நீண்ட கால உறுப்பினர்களும் ஒருமித்து 1949ம் ஆண்டு தொடக்கம் வலியுறுத்தப்பட்ட கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் அவற்றில் இருந்து பிறழ்வது தாம் இருந்த காலத்தில் கட்சிக்காகத் தமது காணி பூமிகளை விற்று வறுமையில் மறைந்த முன்னைய தமிழ்த் தலைவர்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து உடலை வருத்திப் போராடிய எமது இளைஞர் சமுதாயத்திற்கும், போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கும் நாம் செய்யும் துரோகமாக முடியும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த வகையில் தவறு ஏற்பட்டுள்ளமை எங்கு என்று பார்த்தால் 2009ம் ஆண்டின் பின்னர் “போரில் நாங்கள் தோற்றுவிட்டோம்; நாம் கோருவது கிடைக்காது; யதார்த்த அடிப்படையில் ஏதோ சில சலுகைகளையே நாம் பெற்றுக் கொள்ள முடியும்” என்ற மனோபாவம் எம் தலைவர்கள் சிலரிடையே புகுந்தமையே இதற்கான காரணம் என்று அடையாளம் காண முடியும்.

ஆகவே “போரில் தமிழர்கள் தோற்றுவிட்டார்கள்; இனி மேல் முன் போல் எமது கோரிக்கைகளை முன்வைக்க முடியாது” என்ற ஒரு தோல்வி மனப்பான்மையே இச் சிந்தனைக்கான அடிப்படைக் காரணமாகத் தோன்றுகின்றது.

இந்த வகையில்த்தான் இராணுவத்தினரதும் சில சிங்களத் தலைவர்களினதும் எண்ணங்களும் இருந்து வருவதை நாம் காணலாம். “போரில் நாம் தமிழர்களை வென்று விட்டோம். ஆகவே அவர்களிடம் நாம் பறித்த காணிகள் யாவும் எமக்குச் சொந்தம். இனித் தமிழர்கள் கோரும் எந்தக் கோரிக்கைகளுக்கும் நாம் செவிசாய்க்கத் தேவையில்லை. நாமாக மனமுவந்து தருவதையே அவர்கள் ஏற்க வேண்டும்” என்று சிலர் கூறுவதைக் கேட்டுள்ளோம்.

ஓரிரு விடயங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆயுதமேந்தியோர் மத்திய அரசைப் பிடிக்க எத்தனிக்கவில்லை. தாம் வாழ்ந்த இடங்களில் அரசை நிறுவவே முயன்றனர். போர் நடந்த காலத்தில் மத்திய அரசாங்க அதிகாரம் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் கோலோச்சியமை யாவர்க்கும் நினைவிருக்கலாம்.

அரச அலுவலர்கள் மத்திய அரசாங்கத்தாலேயே சம்பளம் கொடுக்கப்பட்டார்கள். மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலையே நடைமுறைப்படுத்தினார்கள். ஆகவே போர் என்று கூறியது இரு இனங்களுக்கிடையேயான போர் அல்ல. அது அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற ஒன்று. முன்னர் பழைய ஜே.வீ.பி காலத்திலும் அப்படித்தான். அரசாங்கத்திற்கும் ஜே.வி.பி க்கும் இடையிலேயே போர் நடைபெற்றது.

எனவே விடுதலைப் புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல.

அரசாங்கத்தின் அதிகாரம் தொடர்ந்து வடக்கிலும் தெற்கிலும் அந்தந்தக் காலத்தில் தொடர்ந்து இருந்ததால் கிளர்ச்சிகளை யுத்தம் என்று அடையாளப்படுத்த முடியாது. ஆகவே கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவந்ததும் இராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிட வேண்டும். அவர்கள் கையேற்ற காணிகள் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் அவர்களால் அன்றி சிவில் அரசாங்க அதிகாரிகள் மூலமாகக் சேர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் சட்டத்தின் எதிர்பார்ப்பு.

போர்க் காலத்தில் கையகப்படுத்திய காணிகளை தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு வைத்துக் கொண்டுவிட்டு அவை எம்முடையவை என்று கூற இராணுவத்தினருக்கு சட்டத்தில் இடமில்லை.

“ஆகவே இராணுவத்தினர் போரில் வென்றார்கள்; எனவே எமக்கு எமது சட்ட ரீதியான நியாயமான கோரிக்கைகளை அதன் பொருட்டு அரசாங்கத்திடம் முன்வைக்க எந்தவித உரித்தும் இல்லை” என்று எம்மவர் நினைத்தால் அது முற்றிலுந் தவறான சிந்தனையாகும். தமிழ் மக்கள் போரில் தோல்வி அடையவில்லை. அவர்கள் அன்றும் இன்றும் இந்த நாட்டின் ஒரு அங்கமே. அவர்களின் சட்ட ரீதியான உரிமைகளைத் திருப்பிக் கேட்க எத்தருணத்திலும் அவர்களுக்கு உரித்துண்டு.

இன்றைய தமிழ்த் தலைமைத்துவம் தோற்றுவிட்டோம் என்ற மனப்பாங்கில் பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்க நாம் தயார்; ஒற்றையாட்சியின் கீழ் சிங்களப் பேரின வாதத்துக்கு தொடர்ந்து இடம் கொடுக்க நாம் தயார்; வட கிழக்கை இணைக்காது விட நாம் தயார்; தன்னாட்சி, தாயகம் போன்ற கோரிக்கைகளைக் கைவிடத் தயார்; சம~;டி முறை சாத்தியம் இல்லை என்று கூறி ஒரு சில சலுகைகளை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்வதால்த்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்படப் பார்க்கின்றது.

அதாவது நாமாகவே வலிந்து தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தை தான்தோன்றித்தனமாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்தமையே பிளவு ஏற்பட ஏதுவாக இருக்கின்றது.

பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டிய கருத்தையே தாம் கொண்டுள்ளனர். ஆகவே அந்தக் கொள்கைகளில் மாற்றமேதும் இல்லை என்று தமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலுவான ஒரு அரசியல்க்கட்சியாக முன்னேற முடியும். அவ்வாறில்லாமல் குறைந்ததைப் பெறுவதே உசிதம் என்று எமது தொடர் அடிப்படைக் கருத்துக்களை உதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது.

ஆனால் அவ்வாறான குறைந்த பட்ச தீர்வுகளுக்கு இவ்வளவு தியாகங்களின் பின்னரும் எம்மவர்கள் உள்ளுராட்சித் தேர்தல்களின் போது சம்மதம் தெரிவிப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறு சில சலுகைகளை எம் மீது திணித்துவிட்டு எமது நீண்டகால அரசியல் பிரச்சனையை மழுங்கடிக்க அது அனுசரணையாக அமையும். அத்துடன் வடமாகாணமும் கிழக்கு மாகாணம் போல் பறிபோய்விடும்.

உண்மையில் இவ்வாறான உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வட கிழக்கில் மட்டும் வைக்க அரசாங்கம் முன்வருமானால் அது தமிழ் மக்களின் நாடி பிடித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். எனவே மக்கள் விழிப்பாக இருத்தல் அவசியம். என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/49716

  • கருத்துக்கள உறவுகள்

சரி கிளர்ச்சின்னே வைச்சுக்குவம்..

ஜே வி பி - சிங்கள மக்களால்.. சிங்கள அரசுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி.

புலிகள் - தமிழ் மக்களால்.. இன விடுதலை.. நில விடுதலைக்காக.. சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கிளர்ச்சி.

இதில்.. புலிகளின் கிளர்ச்சி.. அதிக நியாயங்களைக் கொண்டது.. ஜே வி பியை விட.

ஆனால்.. ஜே வி பிக்கு சொறீலங்காவில் தடை இல்லை. புலிகளுக்கு தடை  ஏன்...??!

சிங்களத்தின் இந்த மன நிலை தான்.. புலிகளின் உருவாக்கத்துக்கே காரணம். 

  • தொடங்கியவர்

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் என்ன? விளக்குகிறார் விக்கி

 

 

நாமே தயா­ரித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக  கைவி­டு­வ­தற்கு  எமது தலை­மைகள்  முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட  கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வரன்   தெரி­வித்­துள்ளார். 

இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள். எனவே எமக்கு  எமது சட்­ட­ரீ­தி­யான  நியா­ய­மா­ன­கோ­ரிக்­கை­களை  அதன்­பொ­ருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்த உரித்தும் இல்லை என்று  எம்­மவர்  நினைத்தால் அது முற்­றிலும் தவ­றா­ன­தாகும். 

தமிழ் மக்கள் போரில் தோல்­வி­ய­டை­ய­வில்லை.    இன்­றைய தமிழ் தலை­மைத்­துவம்  நாம் தோற்­று­விட்டோம் என்ற மனப்­பாங்கில் பௌத்­தத்­திற்கு முத­லிடம் கொடுக்­கவும் ஒற்­றை­யாட்­சியின் கீழ்  சிங்­கள பேரி­ன­வா­தத்­திற்கு   இடம் கொடுக்­கவும்   வடக்கு, கிழக்கை இணைக்­காது  விடு­வ­தற்கு தயார் என்றும்  தன்­னாட்சி தாயகம்  போன்ற கோரிக்­கை­களை கைவிட்டு  சமஷ்டி சாத்­தி­ய­மில்லை என்று கூறி  ஒரு­சில சலு­கை­களை மட்டும் பெறும் வகையில்   செயற்­ப­டு­வ­த­னால்தான்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில்  பிளவு ஏற்­ப­டப்­பார்க்­கி­றது என்றும்  அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

உள்­ளூ­ராட்சி தேர்தலை தமிழ் பிரதேசங் களில் மட்டும் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் இது சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோ நிலையை அறியும் ஒரு கைங்கரியம் என சிலரால் கூறப்படுகின்றதே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே   முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­தார். 

இது ­கு­றித்து  அவர் மேலும் கூறி­ய­தா­வது:-

அர­சாங்கம் சிங்­களப் பிர­தே­சங்­களில் தேர்­தலை நடாத்தப் பின் நிற்­கின்­றது. எங்­கே­த­மது பொரு­ளா­தாரக் கொள்­கை­களும் தமிழர் சம்­பந்­த­மான உத்­தேச அர­சியல் தீர்­வு­களும் சிங்­க­ள­மக்­க­ளி­டையே தமக்­கெ­தி­ரான ஒரு அலையை உண்டு பண்ணி விடு­மோ என்று பயப்­ப­டு­கின்­றது.  என­வே­மு­தலில் தமிழ் மக்­களின் கருத்­தை­அ­றி­யப்­பார்க்கும் ஒரு­நி­கழ்­வாக இந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடை­பெ­றலாம். அதா­வது பௌத்­தத்­திற்கு முத­லிடம்,சமஷ்டி தேவை­யில்லை,ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­காரப் பர­வ­லாக்கம் என்­ற­கொள்­கை­யு­டைய தற்­போ­தைய தமிழ்த் தலை­மைத்­து­வத்தின் கருத்­தை­தமிழ் மக்கள் வர­வேற்­பார்­க­ளானால் சிங்­கள மக்­க­ளுக்­கு­அ­தை­எ­டுத்­துக்­காட்டி புதி­ய­அ­ர­சியல் யாப்பைத் தாம் நினைக்கும் வண்ணம் பாரா­ளு­மன்­றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்­யலாம் என்று அவர்கள் எதிர்­பார்க்­கக்­கூடும். ஆகவே தற்­போ­தைய தமிழ்த் தலை­மை­களின் கருத்­துக்­களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்­டு­ பெ­ரு­வா­ரி­யா­க அக் கருத்­துக்­க­ளை­ ஆ­த­ரித்­தால் மிகக் குறை­வா­ன­தீர்­வைநாம் விரை­வாகப் பெற இட­மி­ருக்­கின்­றது. 

ஆனால் வருங்­கா­லத்தில் தமிழ் மக்­க­ளுக்­கு­என்­ன­ஆகும் என்­பதைத் தமிழ்த் தலை­மை­களும் தமிழ் மக்­களும் ஆய்ந்­து­ண­ர­வேண்டும். கிழக்கைப் போல் வடக்­கை­ஆக்­கு­வ­தற்­கு­அ­ர­சாங்­கத்­திற்­கு­ப­ல­வ­ரு­டங்கள் அப்­பொ­ழு­து­தே­வை­யில்லை. 

சில­கட்­சி­களும் தமிழ் மக்­களின் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களும் பேசு­வ­தை­வைத்­து­த­மிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இவர்கள் பிள­வை­ஏற்­ப­டுத்­தப்­பார்க்­கின்­றார்கள் என்­ற­ஒ­ரு­க­ருத்­து­முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது எந்­த­அ­ள­வுக்­கு­உண்­மை­என்­று­ஆ­ராய்வோம். 

தமிழ் மக்­களின் கொள்­கை­களில், நோக்கில்,முன்­னேற்­பா­டு­க­ளில்­ஒ­ரு­பு­ரிந்­து­ணர்வும் ஸ்திரத் தன்­மையும் இருக்­க­ வேண்டும் என்­றுதான் தந்­தை­செல்­வா­கா­லத்­தி­லே­யே­சி­ல­அ­டிப்­ப­டைகள் வலி­யு­றுத்­தப்­பட்­டன. அவை­யா­வ­ன­தா­யகம்,தன்­னாட்சி,தமிழர் தரை­யி­ணைப்­பு­என்­பன. இதற்­கு­ உ­கந்­த­தீர்­வு­ ச­மஷ்டி­யே­ என்­று­ வ­லி­யு­றுத்­தப்­பட்­டது. இதனை 1949ஆம் ஆண்­டு­ தொ­டக்கம் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­வ­லி­யு­றுத்­தி­ வந்­துள்­ளது. தற்­போதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் இற்­றை­வ­லி­யு­றுத்­து­கின்­றன. தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பல­கட்­சி­களும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் நீண்­ட­கா­ல­உ­றுப்­பி­னர்­களும் ஒரு­மித்து 1949ஆம் ஆண்­டு­தொ­டக்கம் வலி­யு­றுத்­தப்­பட்­ட­கொள்­கை­க­ளை­யே­பின்­பற்­ற­வேண்டும் என்றும் அவற்றில் இருந்­து­பி­றழ்­வ­துதாம் இருந்­த­கா­லத்தில் கட்­சிக்­காகத் தம­து­ கா­ணி­ பூமி­க­ளை ­விற்­று­ வ­று­மையில் மறைந்­த­ முன்­னை­ய­ தமிழ்த் தலை­வர்­க­ளுக்கும் உயிரைப் பணயம் வைத்­து­உ­ட­லை­வ­ருத்­திப்­போ­ரா­டி­ய­எ­மது இளைஞர் சமு­தா­யத்­திற்கும்,போரினால் பாதிக்­கப்­பட்­ட ­எ­ம­து­ மக்­க­ளுக்கும்  நாம் செய்யும் துரோ­க­மா­க­ முடியும் என்­று­க­ருத்துத் தெரி­வித்­துள்­ளார் கள்.

இந்­த­வ­கையில் தவ­று­ஏற்­பட்­டுள்­ள­மை­எங்­கு­என்­று­பார்த்தால் 2009ஆம் ஆண்டின் பின்னர் போரில் நாங்கள் தோற்­று­விட்டோம் நாம் கோரு­வ­து­கி­டைக்­கா­து்­ய­தார்த்­த­அ­டிப்­ப­டையில் ஏதோ­சி­ல­ச­லு­கை­க­ளை­யேநாம் பெற்றுக் கொள்­ள­மு­டி­யும்­என்­ற­ம­னோ­பாவம் எம் தலை­வர்கள் சில­ரி­டை­யே­பு­குந்­த­மையே இதற்­கா­ன­கா­ரணம் என்­று­அ­டை­யாளம் காண­மு­டியும். ஆக­வே­போரில் தமி­ழர்கள் தோற்­று­விட்­டார்கள் இனிமேல் முன் போல் எம­து­கோ­ரிக்­கை­க­ளை­முன்­வைக்­க­மு­டி­யா­து­என்­ற­ஒ­ரு­தோல்­வி­ம­னப்­பான்­மை­யே இச் சிந்­த­னைக்­கா­ன­அ­டிப்­படைக் கார­ண­மாகத் தோன்­று­கின்­றது. 

இந்­த­வ­கை­யில்த்தான் இரா­ணு­வத்­தி­ன­ரதும் சில­சிங்­களத் தலை­வர்­க­ளி­னதும் எண்­ணங்­களும் இருந்­து­வ­ரு­வ­தைநாம் காணலாம். போரில் நாம் தமி­ழர்­க­ளை­வென்­று­விட்டோம். ஆக­வே­அ­வர்­க­ளிடம் நாம் பறித்­த­கா­ணிகள் யாவும் எமக்குச் சொந்தம். இனித் தமி­ழர்கள் கோரும் எந்தக் கோரிக்­கை­க­ளுக்கும் நாம் செவி­சாய்க்கத் தேவை­யில்லை. நாமா­க­ம­ன­மு­வந்­து­த­ரு­வ­தை­யே­அ­வர்கள் ஏற்­க­வேண்­டும்­என்­று­சிலர் கூறு­வதைக் கேட்­டுள்ளோம். 

ஓரி­ரு­வி­ட­யங்­க­ளை நாம் மனதில் வைத்துக் கொள்­ள­வேண்டும். ஆயு­த­மேந்­தியோர் மத்­தி­ய­ அ­ரசைப் பிடிக்­க­ எத்­த­னிக்­க­வில்லை. தாம் வாழ்ந்த இடங்­களில் அர­சை­ நி­று­வ­வே­ மு­யன்­றனர். போர் நடந்­த­கா­லத்தில் மத்­தி­ய­அ­ர­சாங்­க ­அ­தி­காரம் தொடர்ந்­து வ­டக்குக் கிழக்கில் கோலோச்­சி­ய­மை­யா­வர்க்கும் நினை­வி­ருக்­கலாம். அர­ச­அ­லு­வ­லர்கள் மத்­தி­ய­அ­ர­சாங்­கத்­தா­லே­யே­சம்­பளம் கொடுக்­கப்­பட்­டார்கள். மத்­தி­ய­அ­ரசின் நிகழ்ச்சி நிர­லையே நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார்கள். ஆக­வேபோர் என்று கூறி­யது இரு இனங்­க­ளுக்­கி­டை­யே­யான போர் அல்ல. அது அர­சாங்­கத்­திற்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற ஒன்று. முன்னர் பழைய ஜே.வி.பி காலத்­திலும் அப்­ப­டித்தான். அர­சாங்­கத்­திற்கும் ஜே.வி.பி க்கும் இடை­யி­லே­யேபோர் நடை­பெற்­றது. 

எனவே விடு­தலைப் புலி­களின் வன்­மு­றையும் ஜே.வி.பியின் வன்­மு­றையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்­சி­க­ளே­யொ­ழி­ய­யுத்தம் அல்ல. அர­சாங்­கத்தின் அதி­காரம் தொடர்ந்து வடக்­கிலும் தெற்­கிலும் அந்­தந்தக் காலத்தில் தொடர்ந்து இருந்­ததால் கிளர்ச்­சி­க­ளை ­யுத்தம் என்­று­அ­டை­யா­ளப்­ப­டுத்­த­மு­டி­யாது. ஆக­வே­கி­ளர்ச்­சி­மு­டி­வுக்குக் கொண்­டு­வந்­ததும் இரா­ணுவம் தமது முகாம்­க­ளுக்குச் சென்­று­விட வேண்டும். அவர்­கள்­கை­யேற்ற காணிகள் உரி­ய­வர்­க­ளிடம் சேர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதுவும் அவர்­களால் அன்­றி­சிவில் அர­சாங்­க­அ­தி­கா­ரிகள் மூல­மாகக் சேர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதுதான் சட்­டத்தின் எதிர்­பார்ப்பு.போர்க் காலத்தில் கைய­கப்­ப­டுத்­திய காணி­க­ளை­தொ­டர்ந்து எட்டு வரு­டங்­க­ளுக்கு வைத்துக் கொண்­டு­விட்­டு­அ­வை­எம்­மு­டை­ய­வை­என்று கூற இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சட்­டத்தில் இட­மில்லை. 

ஆகவே இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள் என­வே­எ­மக்கு எம­து­சட்­ட­ரீ­தி­யான நியா­ய­மான கோரிக்­கை­களை அதன் பொருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்­த­வி­த­உ­ரித்தும் இல்­லை­என்று எம்­மவர் நினைத்தால் அது­முற்­றி­லுந்­த­வ­றான சிந்­த­னை­யாகும். தமிழ் மக்கள் போரில் தோல்வி அடை­ய­வில்லை. அவர்கள் அன்றும் இன்றும் இந்­த­நாட்டின் ஒரு­அங்­கமே. அவர்­களின் சட்­ட­ரீ­தி­யான உரி­மை­களைத் திருப்பிக் கேட்க எத்­த­ரு­ணத்­திலும் அவர்­க­ளுக்கு உரித்­துண்டு.

இன்­றைய தமிழ்த் தலை­மைத்­துவம் தோற்று விட்டோம் என்ற மனப்­பாங்கில் பௌத்­தத்­துக்கு முத­லிடம் கொடுக்­கநாம் தயார், ஒற்­றை­யாட்­சியின் கீழ் சிங்­களப் பேரி­ன­வா­தத்­துக்கு தொடர்ந்து இடம் கொடுக்­க 

நாம் தயார், ­வ­ட­கி­ழக்கை இணைக்­காது விடநாம் தயார் தன்­னாட்சி, தாயகம் போன்­ற­கோ­ரிக்­கை­களைக் கைவிடத் தயார், சமஷ்டி முறை சாத்­தியம் இல்லை என்று கூறி ஒரு­சில சலு­கை­களை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்­வ­தால்த்தான் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் பிளவு ஏற்­படப் பார்க்­கின்­றது. அதா­வது நாமா­கவே வலிந்­து­ த­யா­ரித்த தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்­றித்­த­ன­மாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்தமையே பிளவுஏற்பட ஏதுவாக இருக்கின்றது. 

பெரும்பான்மையான தமிழ்க்கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டிய கருத்தையேதாம் கொண்டுள்ளன. ஆகவே அந்தக் கொள்கைகளில் மாற்றமேதும் இல்லைஎன்றுதமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு தொடர்ந்தும் வலுவான ஒரு அரசியல் கட்சியாகமுன்னேற முடியும். அவ்வாறில் லாமல் குறைந்ததைப் பெறு வதே உசிதம் என்றுஎமது தொடர் அடிப் படைக் கருத்துக்களை உதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறான குறைந்தபட்ச தீர்வுக ளுக்கு இவ்வளவு தியாகங்களின் பின்னரும் எம்மவர்கள் உள்ளூராட்சித் தேர்தல்களின் போதுசம்மதம் தெரிவிப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறு சிலசலுகை 

களைஎம் மீது திணித்துவிட்டு எமதுநீண்ட கால அரசியல் பிரச்சினையை மழுங்கடிக்க அது அனுசரணையாக அமையும். அத்துடன் வட மாகாணமும் கிழக்குமாகாணம் போல் பறிபோய்விடும்.

உண்மையில் இவ்வாறான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வடகிழக்கில் மட்டும் வைக்க அரசாங்கம் முன்வருமானால் அது தமிழ் மக்களின் நாடி பிடித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். எனவே மக்கள் விழிப்பாக இருத்தல் அவசியம். 

http://www.virakesari.lk/article/27064

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.