Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடா­நாட்டை அதி­ர­வைக்­கும் வாள் வெட்­டுக்­கள்

Featured Replies

 
குடா­நாட்டை அதி­ர­வைக்­கும்  வாள் வெட்­டுக்­கள்
 
 

குடா­நாட்டை அதி­ர­வைக்­கும் வாள் வெட்­டுக்­கள்

 

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில நாள்­க­ளாக மீண்­டும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இரண்டு பொலி­ஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டை அடுத்து பொலி­ஸார் வாள் வெட்­டுக் குழுக்­க­ளுக்கு எதி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை எடுத்­த­னர்.

இதனை அடுத்து அடங்­கி­யி­ருந்த வாள்­வெட்­டுக் குழுக்­கள் மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ளன. கடந்த 4 நாள்­க­ளில் மட்­டும் 7 இடங்­க­ளில் நடந்த 8 வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் 12 பேர் படு­கா­ய­ம­டைந்தனர்.

நேற்­றி­ரவு மட்­டும் மூன்று இடங்­க­ளில் வாள்­வெட்­டுக் குழு­வி­னர் அட்­ட­கா­சம் புரிந்­த­னர். வெவ்­வேறு சம்­ப­வங்­க­ளில் இடம்­பெற்ற இந்த வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் அறு­வர் காய­ம­டைந்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

கோண்­டா­வி­லில் கடை ஒன்­றும் அடித்து நொருக்­கப்­பட்­டது. கடை உரி­மை­யா­ளர் கடந்த சனிக்கிழமை இரவு குரு­ந­க­ரில் வைத்து வாளால் வெட்­டப்­பட்­டி­ருந்­தார்.
கோண்­டா­வில், மானிப்­பாய், ஆறு­கால்­ம­டம் பகு­தி­க­ளில் நேற்­றைய வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றன.

கோண்­டா­வில் டிப்­போச் சந்­திக்கு அண்­மை­யில் உள்ள உண­வ­கம் ஒன்­றுக்கு நேற்று இரவு 8.30 மணி­ய­ள­வில் வந்த வாள்­வெட்­டுக் குழு­வி­னர் அந்­தக் கடையை அடித்து உடைத்­துச் சேத­மாக்­கி­னர்.

உணவு உண்­ப­தற்கு கடைக்­குச் சென்­ற­வர்­கள் அவர்­க­ளால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­னர். கைக் கோடரி, மற்­றும் வாள்­க­ளு­டன் கடை­யி­னுள் சென்ற கும்­பல் அங்கு பணி­யில் இருந்த ஒரு­வரை வாளால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­றது.

இதில் புத்­தூ­ரைச் சேர்ந்த செல்­லத்­துரை மணி­வண்­ணன் (36 வயது) என்­ப­வர் படு­கா­ய­ம­டைந்­தார். இதன் பின்­னர் அங்கு பதற்ற நிலை ஏற்­பட்­டது. பொலி­ஸார் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர் விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன.

இந்­தக் கடை­யின் உரி­மை­யா­ள­ரான சுண்­டுக்­குழி, ஈச்­ச­மோட்­டை­யைச் சேர்ந்த அரு­ளா­னந்­தம் சுஜீ­வன் (வயது 35) கடந்த சனிக்­கி­ழமை இரவு இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளால் வாளால் வெட்­டப்­பட்­டார்.

அவ­ரது வீட்­டி­னுள் புகுந்த நபர்­கள் அவ­ரைத் துரத்­தித் துரத்தி வெட்­டி­னர் என்று உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர். வீட்­டில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த ஆட்­டோ­வை­யும் அவர்­கள் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர். எனி­னும் கோயில் வீதி­யில் செல்­லும்­போது அது கவிழ்ந்­ததை அடுத்து அதைக் கைவிட்­டுத் தப்­பிச் சென்­ற­னர் என்று பொலி­ஸார் கூறி­னர்.

நேற்று அவ­ரது கடை தாக்­கப்­பட்டு அங்கு பணி­யாற்­றி­ய­வர் வெட்­டப்­பட்­டார். சுஜீ­வனை வெளி­யே ­விடு என்று கத்­தி­ய­ப­டியே வந்­த­வர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­னர் என்று நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர்.

மானிப்­பாய்ப் பகு­தி­யில் நேற்று நடந்த மற்­றொரு சம்­ப­வத்­தில் முச்­சக்­கர வண்­டி­யில் சென்ற ஒரு­வரை துரத்­தித்­து­ரத்தி வாளால் வெட்­டி­யுள்­ள­னர். அவர் அங்­குள்ள வீடு ஒன்­றில் அடைக்­க­லம் புகுந்­துள்­ளார். அந்த வீட்­டி­னுள் புகுந்த வாள்­வெட்­டுக் கும்­பல் அங்­கி­ருந்­த­வர்­க­ளை­யும் வெட்­டி­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இதில் சார­தி­யான ஆனந்­த­ராசா ஜெனிஸ்­க­ரன் ( வயது 35), ராச­துரை ரவி­சங்­கர் (வயது –40 ) அவ­ரது மக­னான ரவி­சங்­கர் பகி­ர­தன்( வயது –17) மற்­றும் பால­சுப்­பி­ர­ம­ணி­யம் சிவ­கு­ரு­நா­தன் (வயது 54) ஆகி­யோர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

இதே­போன்று ஆறு­கால்­ம­டம் பகு­தி­யில் இடம்­பெற்ற வாள்­வெட்­டில் குண­சிங்­கம் குண­பி­ர­தீ­பன் (வயது –35) என்­வர் காய­ம­டைந்­தார். வீதி­யால் சென்­ற­போது அவரை வாளால் வெட்­டி­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இரவு 9 மணி­ய­ள­வில் நல்­லூர் முட­மா­வ­டி­யில் உள்ள வீடு ஒன்­றி­னுள் புகுந்த வாள்­வெட்­டுக் குழு­வி­னர் அங்­கி­ருந்த பொருள்­களை அடித்து நொருக்கி வீட்­டி­லி­ருந்­த­வர்­களை அச்­சு­றுத்­தி­விட்­டுச் சென்­றுள்­ள­னர்.

சம்­ப­வங்­க­ளில் காய­ம­டைந்த அறு­வ­ரும் நேற்று இரவு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். சம்­ப­வங்­கள் தொடர்­பா­கப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

கடந்த நான்கு நாள்­க­ளில் யாழ். குடா­நாட்­டில் இது­போன்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் 8 நிகழ்ந்­துள்­ளன. சனிக்­கி­ழமை இரவு ஈச்­ச­மோட்­டை­யி­லும் ஞாயிற்­றுக்கிழமை இரவு குரு­ந­க­ரி­லும் திங்­கட்­கி­ழமை இரவு மானிப்­பாய் மற்­றும் கோப்­பா­யி­லும் நேற்­றி­ரவு மானிப்­பாய், கோண்­டா­வில், ஆறு­கால்­ம­டம், முட­மா­வடி ஆகிய இடங்­க­ளி­லும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

வாள் வெட்­டுக் கும்­பல்­க­ளின் அட்­ட­கா­சத்­தைக் கட்­டுப்­ப­டுத்­த­வெ­னப் பொலி­ஸா­ரின் சுற்­றுக் காவல் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லும் அவர்­க­ளுக்­குச் சவால்­வி­டும் வகை­யில் இந்­தத் தாக்­கு­தல்­கள் அடுத்­த­டுத்து நடத்­தப்­பட்­டுள்­ள­து­டன், நேற்று ஒரே நாளில் 4 இடங்­க­ளி­லும் நடத்­தப்­பட்­டுள்­ளது.

முடமாவடியில் தாக்குதல் நடத்திய அதே கும்பலே கோண்டவிலிலும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மறைகாணொலியில் பதிவான ஈரூறுளி ஒன்றை வைத்தே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

IMG-e18c512ccbd7c7715ac3c17fa828f981-V-7IMG-668684dfbf1345f82d682d9ea7179c5b-V-7IMG-986ddcc5ff78cef58a540522e379e8f1-V.jIMG-713a6691f1c0db15371fe98c1293e365-V-7IMG-43c1b63ad381e24a578f986e26900803-V-7IMG-16cc179cb1f9b08bdef7111c14af1eed-V-7

http://newuthayan.com/story/46849.html

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், எட்டு பேர் படுகாயம்

 

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு  இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், எட்டு பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நான்கு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், எட்டு பேர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோண்டாவில், அறுகால்மடம், நல்லூரடி மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில், நேற்று இரவு இரண்டு மணித்தியாலங்களுக்குள் இச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் சங்குவேலி பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, சாரதி தப்பிச் சென்று அருகிலுள்ள வீடொன்றில் அடைக்கலம் புகுந்துள்ளார். எனினும், அவரை துரத்திச் சென்ற வாள்வெட்டுக் குழு, வீட்டில் இருந்தவர்கள் மீதும் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், முச்சக்கர வண்டி சாரதியான மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா ஜெனீஸ்கரன் (வயது – 35), இராசதுரை ரவிசங்கர் (வயது – 40), ரவிசங்கர் பகீரதன் (வயது – 15) மற்றும் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் (வயது- 54) ஆகிய நால்வர் படுகாயமடைந்தனர்.
அத்தோடு, ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளதோடு, தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர். இதில், குலசிங்கம் குலபிரதீபன் (வயது – 35) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இதேவேளை கோண்டாவில் டிப்போவிற்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றினுள் உட்புகுந்த கும்பல், உணவகத்தில் உணவருந்திக்கொண்டு இருந்தவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்திவிட்டு உணவகத்தில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளது. அதன் பின்னர், குறித்த கடையில் பணியாற்றி வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் (வயது – 27) என்பவரை வாளினால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
மேலும், நல்லூர் முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு, வீட்டில் இருந்த ராஜன் மற்றும் லக்ஷ்மன் ஆகிய இருவரை வெட்டிக்காயப்படுத்தியுள்ளது. அத்தோடு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இவ்வாறு வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.(15)

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-நேற்றிர/

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு 4 இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கிளல் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுமக்களுக்கு அரசியல்வாதிகளாலும் விடிவில்லை.
அதிரடி கும்பல்களாலும் நிம்மதியில்லை.

2009க்கு பின் சுதந்திரம் என குதுகாலித்தவர்களையும் காணவில்லை.
ஒரு வேளை அதுதான் இதுவோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.