Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் சுனாமி : மக்கள் பெரும் பதற்றம் ; காலநிலை அவதான நிலையம் மறுப்பு

Featured Replies

மட்டக்களப்பில் சுனாமி : மக்கள் பெரும் பதற்றம் ; காலநிலை அவதான நிலையம் மறுப்பு

 

 

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் சுனாமி பீதியால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

 

களுவாஞ்சிக்குடியிலுள்ள 50 திட்டத்திலுள்ள கிணறுகளிலுள்ள நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி பீதியேற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டகளப்பு, நவலடி பகுதியிலுள்ள  பாடசாலை மூடப்பட்டு அங்கிருந்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மணவர்கள் ஆகியோர் வெளிறேறிவருவதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பை அண்டிண பகுதியிலுள்ள கடற்பகுதி சீற்றமாக காணப்படுவதாகவும் களுவாஞ்சிக்குடி 50 வீட்டத்திட்டத்திலுள்ள கிணறுகளில் நீர் திடீரென வற்றியதால் சுனாமி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இது தொடர்பில் வீரகேசரி இணையத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் தொடர்புகொண்ட கேட்டபோது, சுனாமி தொடர்பான எவ்விதமான எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லையெனவும். மக்கள் பீதியால் இவ்வாறு பதற்றமடைந்துள்ளதாகவும் எனவே மக்கள் எவ்விதமான அச்சமடையத் தேவையில்லையெனவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/27069

 
 
அம்பாறையில் சுனாமி பதற்றம்; கரையோர மக்கள் இடம்பெயர்வு
 

image_7711b80741.jpg-ரீ.கே.றஹ்மத்துல்லா,  எஸ் .எல். அப்துல் அஸீஸ்

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் ஏற்பட்டுள்ள சுனாமி பதற்றம் காரணமாக, கரையோர மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கடல் நீர் உள்வாங்கியமையாலும் கிணறுகளிலுள்ள நீர்மட்டம் திடீரெனக் குறைந்தமையாலும் இந்தப் பதற்ற நிலையேற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்புப் பகுதிகளில் காலை 10.30 மணியிலிருந்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கரையோரப் பாடசாலைகள் சில மூடப்பட்டதுடன், அலுவலகங்கள், நிறுவனங்கள் சிலவும் மூடப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், தொழில்நுட்ப ரீதியில் தாம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பிரகாரம், சுனாமி அபாயமே அல்லது வேறு அனர்த்தங்களோ அம்பாறையில் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லையென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

http://www.tamilmirror.lk/அம்பாறை/அம்பாறையில்-சுனாமி-பதற்றம்-கரையோர-மக்கள்-இடம்பெயர்வு/74-207214

  • கருத்துக்கள உறவுகள்

பயத்தை காட்டிட்டாங்களே சபா  என்ன ஓட்டம் சனம் இன்று கடும் பனி மூட்டம் வேற அதிகாலை  8 மணியாகியது சரியாக கண்ணூக்கு இடங்கள் தெரியவர இதனால் காலையிலே எதோ நடக்க போகிறாதாக அச்சம் கடல் நீரோட்டம் வேற அதிகரித்து காணப்படுவதால் கிணறின் நீர் மட்டமும் குறைந்திருந்தது இதனால் வதந்திபரவ ஒட்டு மொத்த கிழக்கு மாகானமே இன்று  திண்டாடியது  வீட்டில சமைக்கல அது வேற பிரச்சினை எல்லாம் முன்னர் பட்ட அனுபவம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.