Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருவேறு கோணங்கள்

Featured Replies

இருவேறு கோணங்கள்

 

இரண்டு வகை­யான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். நாளாந்த வாழ்க்­கையில் எழுந்­துள்ள பிரச்­சி­னைகள், புரை­யோ­டிய நிலையில் நீண்ட நாட்­க­ளாகத் தீர்வு காணப்­ப­டாமல் உள்ள இனப்­பி­ரச்­சினை ஆகிய இரண்டு பிரச்­சினை­க­ளுமே அவர்­களை வாட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றன. 

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. அது உட­ன­டி­யாகச் செய்­யக்­கூ­டிய காரி­யமும் அல்ல என்­பதை அவர்கள் நன்­க­றி­வார்கள். ஆயினும் நாளாந்த வாழ்க்கைப் பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற அவர்­க­ளு­டைய ஆர்­வமும் அக்­க­றையும் தவிப்­பாக மாறி­யி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­டாமல் இருக்­கின்­றதே, எனவே, தீர்வு கிடைக்­கா­மலே போய்­வி­டுமோ என்ற ஆதங்­கமும் அவர்­களை ஆட்­டிப்­ப­டைக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. 

இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள காணி­களின் விடு­விப்பு, அர­சியல் கைதி­களின் விடு­தலை, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது, அவர்கள் உயி­ரோடு இருக்­கின்­றார்­களா இல்­லையா என்­பதைத் தெரிந்து கொள்­வ­தற்­கான அவ­சியம், பட்­ட­தா­ரி­க­ளுக்­கான வேலை வாய்ப்பு, வித­வைகள் மற்றும், பெண்­களைத் தலை­மை­யாகக் கொண்­டுள்ள குடும்­பங்கள், போரினால் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள மாற்­றுத்­தி­ற­னா­ளிகள், வறு­மையின் பிடியில் சிக்­கி­யுள்ள முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான அர்த்­த­முள்ள வாழ்­வா­தாரம், வீட்டுத் திட்டம் போன்ற பல பிரச்­சி­னைகள் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளாக மக்­களை அழுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு அவ­சி­ய­மான தீர்வை அவ­ச­ர­மாக அர­சாங்கம் காண வேண்டும் என்று அவர்கள் ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

காணிப்­பி­ரச்­சினை

யுத்த மோதல்கள் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்­க­ளா­கி­விட்­டன. ஆனால், யுத்­த­காலத் தேவைக்­காக இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட பொது­மக்­க­ளு­டைய காணிகள் பல இன்னும் அவ­ர்க­ளிடம் திருப்பி கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மாக, அவர்கள் வாழ்க்கை நடத்­து­வ­தற்­காக வழங்­கப்­பட்ட காணி­களை, நிரந்­த­ர­மா­கவே தக்க வைத்துக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் இரா­ணுவம் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், நியா­ய­மாக உரி­மை­யா­ள­ர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய காணி­களை விடு­விக்க விருப்­ப­மற்ற நிலை­யி­லேயே அர­சாங்கம் காணப்­ப­டு­கின்­றது. 

அர­சாங்கம் தமது காணி­களைத் திருப்பித் தர­வேண்டும் எனக் கோரி மக்கள் வீதி­களில் இறங்கி மாதக்­க­ணக்கில் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்தப் போராட்­டங்கள் அர­சாங்­கத்­திற்குப் போதிய அழுத்­தத்தைக் கொடுக்­க­வில்லை அல்­லது அவ்­வாறு அமை­ய­வில்லை என்­ப­தையே, இந்த விட­யத்தில் அர­சாங்கம் போதிய அக்­க­றை­யற்ற போக்கு காட்­டு­கின்­றது. 

பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் பலர் தமது சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேறி வாழ முடி­யாமல் கஷ்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். யுத்தம் முடிந்­தது. மீள்­கு­டி­யேற்றம் நடத்­தப்­பட்­டது. இடம்­பெ­யர்ந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குப் புனர்­வாழ்வு அளிக்­கப்­ப­டு­கின்­றது என்­பது ஓர் அரை­குறை நிலை­யி­லான நட­வ­டிக்­கை­க­ளா­கவே இன்னும் காணப்­ப­டு­கின்­றன.

மீள்­கு­டி­யேற்­றப்­ப­டா­த­வர்­களின் பிரச்­சினை இவ்­வா­றி­ருக்க, மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட மக்­க­ளுக்­கான நிரந்­தர வீடுகள், நிரந்­தர வரு­மா­னத்­திற்­கு­ரிய வாழ்­வா­தாரம், தொழில்­வாய்ப்பு என அவர்­க­ளு­டைய பல பிரச்­சி­னை­க­ளுக்கும் உரிய முறையில் இன்னும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. 

அர­சியல் கைதி­களின் விடு­தலை

சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பது புரை­யோ­டிப்­போ­யுள்ள முக்­கிய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக மாறி­யி­ருக்­கின்­றது. அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்ற கோரிக்கை யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலந்­தொட்டே முன்­வைக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. 

மனி­தா­பி­மானம் சார்ந்த சட்­ட­ரீ­தி­யாக அல்­லது அர­சியல் ரீதி­யாக தங்­களை விரை­வாக விடு­தலை செய்ய வேண்டும் என தொடர்ச்­சி­யாகக் கோரி வரு­கின்­றார்கள். சிறைச்­சா­லை­களின் உள்­ளேயும் வெளி­யிலும் அதற்­காக பல போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. பல பேச்­சு­வார்த்­தை­களும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. 

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்­ற­தை­ய­டுத்து, தமி­ழர்கள் விட­யங்­களில் மென்­போக்­கு­டை­ய­வ­ராகக் காணப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி அர­சியல் கைதி­களை பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்ய வேண்டும் எனக் கோரி யாழ்ப்­பா­ணத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் ரயில் முன்னால் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்ட கோர­மான, துயர சம்­ப­வத்தின் பின்­னரும், அர­சாங்கம் இது விட­யத்தில் கல்­லுளி மங்­க­னா­கவே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. 

இதே­போன்று வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய பிரச்­சி­னையும் இழு­பறி நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்­டி­யது அர­சாங்­கத்தின்  கட்­டா­ய­மான கட­மை­யாகும். ஐ.நா. மனித உரிமை பேர­வையும், சர்­வ­தேச நாடு­களும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் அழுத்தம் கொடுத்­தும்­கூட, உரிய பல­ன­ளிக்­க­வில்லை என்றே கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது. சர்­வ­தே­சத்­திற்கு அளித்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமை­வாக காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் அர­சாங்கம் மந்­த­க­தி­யி­லேயே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

இவ்­வாறு யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தங்­களை ஆறுதல் படுத்தி தமது துன்ப துய­ரங்­களைத் துடைத்து, சீரா­ன­தொரு மறு­வாழ்க்கை வாழ்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் அர­சாங்­கமும் அர­சி­யல்­வா­தி­களும் கடந்த எட்டு வரு­டங்­க­ளாக  போதிய அளவில் அக்­கறை காட்­ட­வில்லை என்ற மன­நி­லையே தமிழ் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது.

தமிழ்த்­த­ரப்பு அர­சியல்

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையே தங்­க­ளுக்­கு­ரிய அர­சியல் தலை­மை­யாக கடந்த எட்டு வரு­டங்­க­ளாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், கூட்­ட­மைப்பின் அர­சியல் செயற்­பா­டு­களும் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய முறையில் தீர்வு காண்­ப­தற்கு ஏற்ற வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்ற மனக்­கு­றையே அவர்­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றது. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தங்­க­ளுக்­காகக் குரல் கொடுப்­பார்கள், உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பார்கள் என்ற எதிர்­பார்ப்பு இன்னும் நிலையைக் கடந்து அடுத்த கட்­டத்­திற்கு நக­ர­வில்லை என்றே கரு­தப்­ப­டு­கின்­றது. இதனால் தமது அர­சியல் தலை­மைகள் மீது நம்­பிக்கை இழக்­கின்ற நிலை­மைக்கு அவர்கள் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள காணி­களை விடு­விக்க வேண்டும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாகப் பொறுப்பு கூற வேண்டும், அர­சியல் கைதி­க­ளான தங்­களை மேலும் தாம­த­மின்றி விடு­தலை செய்ய வேண்டும், தங்­க­ளு­டைய வழக்­கு­களை தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் உள்ள நீதி­மன்­றங்­க­ளி­லேயே விசா­ரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்து, பாதிக்­கப்­பட்ட மக்­களே போராடி வரு­கின்­றார்கள். 

வீதி­க­ளிலும், இரா­ணுவ முகாம்­க­ளுக்கு எதி­ரிலும், சிறைச்­சா­லைக்­குள்­ளேயும், நாட்­க­ணக்கைக் கடந்து மாதக்­க­ணக்கில் இடம்­பெற்று வரு­கின்ற இந்தப் போராட்­டங்கள் முடி­வுக்கு வரு­வ­தற்­கான அறி­கு­றி­களைக் காண முடி­ய­வில்லை. சட்ட ரீதி­யா­கவோ அல்­லது மனி­தா­பி­மா­னத்தின் அடிப்­ப­டை­யிலோ அல்­லது அர­சியல் ரீதி­யா­கவோ, இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. 

அர­சாங்­கத்தின் முற்­போக்­கான செயற்­பா­டு­க­ளுக்கே, ஆத­ரவு வழங்கி வரு­வ­தாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை கூறு­கின்­றது. ஆனால், நிபந்­த­னை­யற்ற முறையில், அர­சாங்­கத்தின் பல்­வேறு செயற்­பா­டு­க­ளை­யும் ஆத­ரித்து வரு­கின்ற அந்தத் தலைமை தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை அரசாங்கத்­திடம் சரி­யான முறையில் எடுத்­துக்­கூறி உரிய அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து அவற்­றுக்குத் தீர்வு காண­வில்லை என்ற மனக்­கு­றையே மக்­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றது. 

திட்­ட­மிட்ட செயற்­பாடும் காய்­ந­கர்த்­தல்­களும் 

தமது பிர­தி­நி­திகள் தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தி­லேயே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்­பார்ப்பே மக்கள் மனங்­களில் மேலோங்­கி­யி­ருக்­கின்­றது. ஆனால் தங்­க­ளு­டைய மன­நி­லையைப் புரிந்து கொண்டு அதற்­கேற்ற வகையில் தமது அர­சியல் பிர­தி­நி­திகள் செயற்­ப­ட­வில்­லையே என்ற ஆதங்­கத்­தி­னா­லேயே மக்கள் தமது பிரச்­சி­னை­களைத் தங்­க­ளு­டைய கைகளில் எடுத்துக் கொண்டு வீதி­களில் இறங்­கி­யி­ருக்­கின்­றார்கள். தொடர்ச்­சி­யான போராட்­டங்­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். அர­சியல் தலை­மைகள் மீது அவர்கள் நம்­பிக்கை இழந்­தி­ருப்­ப­தையே இது காட்­டு­கின்­றது. 

தமது பிரச்­சி­னை­க­ளுக்கே முன்­னு­ரிமை அளிக்க வேண்டும். அவற்­றையே முதன்­மைப்­ப­டுத்தி தமது அர­சி­யல்­வா­திகள் செயற்­பட வேண்டும் என்­பதே பாதிக்­கப்­பட்ட மக்­களின் அர­சியல் ரீதி­யான ஆவ­லாக உள்­ளது. ஆனால், அர­சியல் கட்­சிகள் மக்­க­ளு­டைய அவ­ச­ர­மான பிரச்­சி­னை­களைக் கடந்து, இடைக்­கால அறிக்­கையை ஆத­ரிப்­பதா புறக்­க­ணிப்­பதா என்ற அர­சியல் ரீதி­யான பட்­டி­மன்ற விவா­தத்தில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

அடுத்த ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டமும், உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலும் இன்­றைய அர­சியல் களத்தில் முன்­ன­ணியில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய விட­யங்­களை முன்­வைத்து வரவு செலவுத் திட்­டத்தில் அவற்­றுக்­கான நிதி ஒதுக்­கீ­டு­களை முடிந்த அளவில் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய அர­சியல் தலை­வர்கள் கண்ணும் கருத்­து­மாகச் செயற்­பட வேண்­டி­யது அவ­சியம். 

இது­கு­றித்து முற்­கூட்­டியே திட்­ட­மிட்டு அதற்­கேற்ற வகையில் காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் அத்­த­கைய முன்­னேற்­பாட்டு நட­வ­டிக்­கை­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும், அதன் தலை­மையும் ஈடு­பட்­டி­ருந்­த­தாகத் தெரி­ய­வில்லை. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிர­தி­நி­திகள் என்ற வகையில், அந்த மக்­க­ளு­டைய தேவைகள், பிரச்­சி­னைகள் குறித்து, முன்­னு­ரிமைக் கிர­மத்தில் தெளி­வான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்க வேண்டும். 

மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­திலும், அவர்­க­ளு­டைய பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காண்­ப­திலும் வரவு செலவுத் திட்டம் மிக முக்­கி­ய­மான பங்கைக் கொண்­டி­ருக்­கின்­றது. அத்­த­கைய முக்­கி­யத்­துவம் மிக்க விட­யத்தைத் தமது தலை­வர்கள் சரி­யான முறையில் கையாள்­கின்­றார்­களா என்ற சந்­தே­கமும் மக்கள் மனங்­களில் தலை­தூக்­கி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

அர­சுக்கே ஆத­ரவு.....

வர­வு­செ­லவுத் திட்­டத்தின் வாசிப்பு மீதான வாக்­க­ளிப்பில் என்ன செய்­வது என்­பதில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே கருத்­தொற்­று­மையை உரு­வாக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. இது­வி­ட­யத்தில் கூட்­ட­மைப்பின் தலைமை தள்­ளாட வேண்­டி­யேற்­பட்­டி­ருந்­தது. வரவு செல­வுத்­திட்டம் குறித்து முற்­கூட்­டிய ஆயத்த நிலைமை இல்­லாமல் இருப்­பதே இதற்குக் கார­ண­மாகும்.

அத்­துடன், அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில், மக்­களின் நலன்­களை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­திலும் பார்க்க,  வரவு செலவுத் திட்­டத்தில் அர­சுக்கு ஒத்­து­ழைக்க வேண் டும் என்ற நிலைப்­பாடே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யிடம் மேலோங்­கி­யுள்­ளது என்­ப­தையும், இந்தத் தள்­ளாட்டம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்றே கருத வேண்டும். 

யுத்தம் முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்பே, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வித­வைகள், பெண் தலை­மைத்­து­வத்தைக் கொண்ட குடும்­பங்கள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் குறிப்­பாக மாற்­றுத்­தி­ற­னாளிப் பெண்கள், ஆத­ர­வற்ற சிறு­வர்கள், ஆத­ர­வற்ற முதி­ய­வர்கள் போன்­றோ­ரு­டைய பிரச்­ சி­னைகள் முக்­கிய பிரச்­சி­னை­க­ளாக வெளிப்­பட்­டி­ருந்­தன.  

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் இயல்­பாக எழு­கின்ற ஏனைய பிரச்­சி­னை­க­ளுடன் இந்தப் பிரச்­சி­னை­களும் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருந்­தன. பொரு­ளா­தார ரீதியில் தீர்வு

காண வேண்­டிய இந்தப் பிரச்­சி­னை­க­ளுக் குத் தீர்வு காண்­ப­தற்­கான  திட்­டங்கள் தயார் செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். அத்­த­கைய தயா­ரிப்­புக்கள் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­துவம் பெற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளி­டமும், கூட்­ட­மைப்பின் தலை­மை­யி­டமும் அல்­லது கூட்­ட­மைப்பின் பங்­காளி கட்­சி­க­ளி­டமும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.  

அது மட்­டு­மல்­லாமல், யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களின் உள்­ளூ­ராட்­சிக்குப் பொறுப்­பான வடக்கு கிழக்கு மாகாண சபை­க­ளினால் இத்­த­கைய திட்­டங்கள் தயா­ரிக்­கப்­பட்டு வரவு செலவுத் திட்­டத்தின் போது தமது அர­சியல் தலை­மை­யா­கிய கூட்­ட­மைப்பின் ஊடாக முன்­வைப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­தா­கவும் தெரி­ய­வில்லை. 

முற்­கூட்­டிய தயார்ப்­ப­டுத்­தல்­களும் திட்­ட­மி­டு­தலும் அவ­சியம்

யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்­களின் பின்னர், அதுவும் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு செலவுத் திட்­டத்­தில்தான், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னாளி பெண்­க­ளுக்­கான இல்­லத்­திற்கு 2.7 மில்­லியன் நிதி­யொ­துக்­கீடு செய்ய முடிந்­தி­ருக்­கின்­றது. அவர்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரத்­துக்கு நிதி­யொ­துக்­கீடு செய்­வ­தற்கு சிந்­திக்க முடிந்­தி­ருக்­கின்­றது. அத்­துடன், முன்னாள் போரா­ளி­க­ளுக்­கு­ரிய வாழ்­வா­தா­ரத்­திற்­கென 25 மில்­லியன் நிதி­யொ­துக்­கீடு செய்­யவும் முடிந்­தி­ருக்­கின்­றது. 

இந்த நிதி­யொ­துக்­கீ­டு­களை மேற்­கொள்­வதில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னு­டைய பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­னது என கூறப்­ப­டு­ கின்­றது. அதே­போன்று வடக்கு கிழக்கு பிர­தேச நல்­லி­ணக்­கத்­துக்­கான பாரா­ளு­மன்ற மேற்­ பார்­வைக்­கு­ழுவின் தலை­வ­ரா­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சேனா­தி­ரா­ஜாவும் இந்த விட­யத்தில் நிதி அமைச்­ச­ருடன் தொடர்பு கொண்டு பேசி­யி­ருந்தார் என்றும், கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் ஆகி­யோரும் வரவு செலவுத் திட்டத் தயா­ரிப்­பின்­போது பல முன்­மொ­ழி­வு­களை நிதி அமைச்­ச­ரிடம் முன்­வைத்­த­தா­கவும், அவற்றில் அநே­க­மான விட­யங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நட­வ­டிக்­கைகள் பாராட்­டுக்­கு­ரி­யவை.  

இருப்­பினும், மாற்­றுத்­தி­ற­னாளிப் பெண்­க­ளுக்­கான இல்லம் மற்றும் அவர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு, போன்ற விட­யங்கள் தொடர் பில் மாற்­றுத்­தி­ற­னாளிப் பெண்கள் அமைப்பின் இரண்டு பிர­தி­நி­திகள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்­கான தேசிய செய­ல­கத்தைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வ­ருடன் பாராளு­மன்ற உறுப்­ பினர் சுமந்­தி­ரனை நேர­டி­யாகச் சந்­தித்து மாற்­று த்­தி­ற­னாளிப் பெண்­களின் வாழ்க்கை நிலை­மைகள், அவர்­களின் வாழ்க்­கைக்கு அவ­சி­ய­மான அவ­சரத் தேவைகள், வாழ்­வா­தாரத் தேவை கள் என்­பன குறித்து நீண்­ட­நேரம் எடுத்­து­ரைத்­தி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் பல­னா கவே வரவு செல­வுத்­திட்­டத்தில் அவர்­க­ளுக்­கு­ரிய வேலைத்­திட்­டங்­க­ளுக்­கான நிதி­யொ­துக்­கீடு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு, தாங்­களே தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுக்­கின்ற போராட்டச் செயற்­பா­டு­களின் வழியில் மற்­று­மொரு வித்­தி­யா­ச­மான செயற்­பா­டா­கவே மாற்­றுத்­ தி­ற­னாளிப் பெண்களின் இந்த முயற்சி வெளிப் பட்டிருக்கின்றது.   

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­காண்­ப­தற்கு இது­போன்ற முக்­கிய விட­யங்கள் மக்கள் தலை­வர்­க­ளினால் முற்­கூட்­டியே தயார் செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். இன்னும் எத்­த­னையோ விட­யங்கள் தயார் செய் யப்­பட்டு அவற்­றுக்­கான நிதி­யொ­துக்­கீ­டு­களைப் பெறவும், அவற்றை நிறை­வேற்­றவும் அவ­சி­ய­மான பணிகள் நிறை­யவே இருக்­கின்­றன.  

இத்­த­கைய விட­யங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் அர­சியல் தலை­வர்­களும், ஏனைய துறை­சார்ந்த வல்­லு­நர்­களும் எந்த அள­வுக்குக் கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்­றார்கள், எந்த அள­வுக்குக் கவனம் செலுத்தி வரு­கின்­றார்கள் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

இந்த விட­யங்­களில் வட­மா­காண சபையும், அழுத்தக் குழு­வாக மேலெ­ழுந்­துள்ள தமிழ் மக்கள் பேர­வையும் எந்த அள­வுக்கு இந்த விட­யங்­ களில் சிரத்­தை­யுடன் கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்­றன என்­பதும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் மலை­போல குவிந்­து­கி­டக்­கின்­றன. ஆனால், அர­சி­யல்­வா­தி­களும், அர­சியல் தலை­வர்­களும் இடைக்­கால அறிக்கை சரி­யா­ன­தென்றும், அது சரி­யா­ன­தல்ல என்றும் பகி­ரங்க அர­சியல் விவா­த த்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. அது மட்­டு­மல்­லாமல், ஐக்­கி­யத்­துடன் கூடிய ஒன்­றி­ணைந்த செயற்­பாட்டை முன்­னெ­டுக்க வேண்­டிய சந்­தர்ப்­பத்தில் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­ டு­வ­தற்­கான நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் இறுக்­க­மான ஒன்­றி­ணைந்த செயற்­பாட்­டிற்கு அவ­சி­ய­மான நிர்­வாகத் திறனும், தந்திரோபாய அரசியல் ரீதியிலான சகிப்புத்தன்மையுடன் கூடிய இரு தரப்பு விட்டுக்கொடுப்பும் இல்லாத காரணத் தினாலேயே இந்த நிலைமை உருவாகி யிருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர்.  

மக்கள் ஒருபக்கமும், அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் வேறுபட்டு, வேறு ஒரு பக்கமும் அரசியல் ரீதியாகப் பிரிந்திருக்கின்ற இன்றைய நிலைமை அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல்தீர்வொன்றை எட்டுவதற்கும் எந்த வகையிலும் உதவப்போவ தில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுடைய தவிப்பைப் போக்குவ தற்கும் இந்த நிலைமை வழிகாட்டப் போவ தில்லை.

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-11-18#page-1

  • தொடங்கியவர்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­விடம் சம்­பந்தன் விடுத்­துள்ள கோரிக்கை

 

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். இது அவ­ரது அடிப்­படைக் கட­மை­யாகும். அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான வழி­யாக அர­சி­ய­ல­மைப்பை பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் முன்னாள் ஜனா­தி­ப­தியும் பொது எதி­ர­ணியின் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவிடம் நேர­டி­யாக கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற வர­வு­செ­லவுத் திட்டம் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு சம்­பந்தன் உரை­யாற்­றினார். இந்தத் தரு­ணத்தில் சபையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

இதன்­போது கருத்து தெரி­வித்த இரா. சம்­பந்தன் அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரான செயற்­பா­டுகள் துர­திர்ஷ்­ட­வ­ச­மான நிலை­மை­யாகும். இவ்­வா­றான கருத்­துக்கள் நாட்டின் எதிர்­கால பொரு­ளா­தா­ரத்­துக்கு சாத­க­மாக அமை­யாது என்­பதை எதிர்ப்­ப­வர்கள் உண­ர­வேண்டும். அர­சி­ய­ல­மைப்பின் கடந்­த­கால மற்றும் தற்­கால அனு­ப­வங்கள் குறித்து நாட்­டி­லுள்ள சகல மக்­க­ளுக்கும் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்சி தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்கு வெளி­யேயும் எடுத்­துள்ள நிலைப்­பா­டா­னது சமூ­கங்­க­ளி­டையில் குரோ­தத்­துக்கே வழி­வ­குத்­துள்­ளது. அவர் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­துடன் அதி­கா­ரங்கள் கொழும்பில் மாத்­திரம் இருக்­க­வேண்­டு­மென்று கூறி வரு­கின்றார். 18ஆவது திருத்­தத்­தி­னூ­டாக இதனை அவர் நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சித்­தி­ருந்தார். இவ்­வா­றான செயற்­பா­டுகள் அதி­கா­ரத்தில் இருக்கும் தரப்­பி­ன­ருக்கே நன்மை பயப்­ப­தாக இருக்கும். அதனால் மக்­க­ளுக்கு எந்­த­வித நன்­மையும் ஏற்­ப­டாது. அதி­கா­ரத்தில் நேர­டி­யாக பங்­கெ­டுப்­ப­தாயின் அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

நாட்டைப் பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­வ­தாக மஹிந்த ராஜபக் ஷ கூறி வரு­கின்றார். அவ­ரு­டய இந்தக் கருத்து பிழை­யா­ன­தாகும். பிரிக்­கப்­ப­டாத ஒற்­று­மை­யான நாட்டை உறு­திப்­ப­டுத்தும் வகையில் அர­சி­ய­ல­மைப்பு அமையும் என்று முன் வைக்­கப்­பட்ட யோச­னை­களில் தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பிழை­யான வழியில் மீண்டும் இந்த நாட்­டி­லுள்ள மக்­களை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு அவர் முயற்­சிக்­கக்­கூ­டாது. சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­யான அவ­ரி­ட­மி­ருந்து நாம் இதனை எதிர்­பார்க்­க­வில்லை. மக்­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்க ஒரு­வ­ரு­டத்­துக்குள் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்­தி­ருந்தார். அவ்­வா­றா­ன­தொரு அர­சி­ய­ல­மைப்பு பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டு­மென்றும் அவர் உறுதி வழங்­கி­யி­ருந்தார். தற்­போது அதே செயற்­பாட்­டையே நாம் மேற்­கொண்­டுள்ளோம். இந்­த­வே­ளையில் இதனை அவர் எதிர்ப்­ப­தற்­கான கார­ண­மென்ன? தற்­போது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அந்தத் தேர்­தலில் நீங்கள் வெற்­றி­பெற்று அர­சாங்­கத்தை தோற்­க­டிக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. அது உங்­க­ளது அர­சியல் செயற்­பாடு என்ற வகையில் அது­பற்றி யாரும் குறை­கூ­ற­மு­டி­யாது. எனினும் அதனை அடை­வ­தற்­காக நீங்கள் இந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் முயற்­சி­யா­னது நாட்டை பிள­வு ­ப­டுத்தும் என்று கூறி இன­ ரீ­தி­யான பதற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றீர்கள். இதுதான் உங்­க­ளது நிலைப்­பா­டாக இருக்­கு­மென்றால் அர­சி­ய­ல­மைப்பு சபை தொடர்­பான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­போது நீங்கள் அதனை எதிர்த்­தி­ருக்க வேண்டும். இன்­றைய நிலையில் உங்­க­ளது ஒத்­து­ழைப்பு எமக்குத் தேவை. நீங்கள் இந்த நாட்­டி­லுள்ள சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­களில் ஒருவர். இந்த நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் மதிப்பை நீங்கள் கொண்­டி­ருக்­கி­றீர்கள். புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை இயற்­று­வதில் நீங்கள் பங்­க­ளிப்புச் செய்ய வேண்டும். உங்­க­ளிடம் இதற்­கான ஒத்­து­ழைப்பைக் கோரு­கின்றேன் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.

எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனின் உரையை செவி­ம­டுத்­துக்­கொண்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அதன் பின் உரை­யாற்­று­கையில், சம்­பந்­தனின் உரை­யா­னது உணர்­வு­பூர்­வ­மா­னது. அவ­ரது உணர்வை தான் புரிந்­து­கொள்­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சி­யினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்­றனர். இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான அதி­காரப் பகிர்­வா­னது நாட்டை பிள­வு­ப­டுத்தும் என்று அவர்கள் குற்றம் சாட்டி வரு­கின்­றனர். அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அண்­மையில் அறிக்­கை­யொன்றை விடுத்­தி­ருந்தார். இந்த அறிக்­கையில் மறை­மு­க­மாக சமஷ்­டியை பெறு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முயல்­வ­தாக அவர் குற்றம் சாட்­டி­யி­ருந்தார். இத்­த­கைய அதி­காரப் பகிர்வு முயற்­சி­யினை உட­ன­டி­யாக கைவிட வேண்­டு­மென்றும் அவர் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இத­னை­விட அதி­காரப் பகிர்வு மூல­மான அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தற்­காக புதிய அமைப்­பொன்­றையும் பொது எதி­ரணி ஆரம்­பித்­தி­ருந்­தது. முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தலை­மையில் எலிய என்ற அமைப்பு ஆரம்­பிக்­கப்­பட்டு கொழும்­பிலும் கண்­டி­யிலும் இந்த அமைப்பு கூட்­டங்­களை நடத்­தி­யுள்­ளது.

தற்­போ­தைய நிலையில் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இந்த தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் புதிய அர­சியல் யாப்பு முயற்­சிக்கு எதி­ராக பெரும் பரப்­பு­ரை­களை பொது எதி­ரணி மேற்­கொள்­ளு­மென்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. பெரும்­பான்மை இன மக்­களின் மனங்­களை மாற்றி அவர்­களின் வாக்­கு­களை பெறும் வகையில் அர­சியல் யாப்பு முயற்­சிக்கு எதி­ராக பொது எதி­ரணி பிர­சாரம் செய்யும் நிலை காணப்­ப­டு­கின்­றது. இந்­த­நி­லை­யில்தான் புதிய அர­சியல் யாப்பு முயற்­சிக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறும் நாட்டை இரு­ளுக்குள் தள்ளி விட­வேண்­டா­மென்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் நேரில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்­திலேயே யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான நல்ல சந்­தர்ப்­பங்கள் அமைந்­தி­ருந்­தன. ஆனால் அன்­றைய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு எத்­த­கைய முயற்­சி­க­ளையும் எடுத்­தி­ருக்­க­வில்லை.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கூறி­யதைப் போன்று 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான விஞ்­ஞா­ப­னத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தான் மீண்டும் பத­விக்கு வந்தால் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­குவேன் என்று உறு­தி­மொழி அளித்­தி­ருந்தார். அவ்­வாறு உறு­தி­மொழி அளித்­தி­ருந்­தவர் தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அர­சியல் யாப்­புக்­கான முயற்­சிக்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­மை­யா­னது அர­சியல் நோக்கைக் கொண்­ட­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கீழ் அதி­காரப் பகிர்வை ஏற்­ப­டுத்தி அர­சியல் தீர்வை காண முடி­யு­மென்று நம்­பிக்­கை­யுடன் எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. இதற்­காக சம்பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்­பினர் பல விட்­டுக்­கொ­டுப்­பு­களை மேற்கொண்டு கலந்­து­ரை­யா­டல்­களை மேற்கொண்டு வரு­கின்­றனர்.

அர­சியல் யாப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவில் ஏனைய கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் சுமுக உறவைப் பேணி இடைக்­கால அறிக்­கை­யினை சமர்ப்­பிக்கும் வகையில் இவர்கள் செயற்­பட்­டுள்­ளனர். தொடர்ந்தும் நம்­பிக்­கை­யுடன் பய­ணிப்­ப­தற்கு கூட­ட­மைப்பு எண்­ணி­யுள்­ளது. தற்­போ­தைய நிலையில் அர­சியல் தீர்வை கண்­டு­வி­ட­வேண்டும் என்­பதில் தீவிர ஈடு­பா­டோடு செயற்­பட்­டு­வரும் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் விடுத்­துள்ள ஒத்­து­ழைப்­புக்­கான கோரிக்கை தற்போதைய நிலையில் அவசியமானதொன்றாகவே காணப்படுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சம்பந்தன் எம்.பி. சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியிருந்தார். தற்போதைய சந்தர்ப்பத்தில் தீர்வைக் காண்பதற்கு பொது எதிரணி ஒத்துழைக்கவேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பின்னரே இடைக்கால அறிக்கை வெளியாகியிருந்தது. ஆனால் சம்பந்தனின் கோரிக்கையை செவிமடுக்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இடைக்கால அறிக்கைக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.

 இதனையடுத்தே தற்போது பாராளுமன்றத்தில் பகிரங்கமாக முன்னாள் ஜனாதிபதியிடம் ஒத்துழைப்புக்கான கோரிக்கையினை சம்பந்தன் விடுத்துள்ளார். உண்மையிலேயே கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை குழப்பாது தீர்வு காணப்படவேண்டுமானால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். அந்தவகையில் சம்பந்தனின் கோரிக்கை தொடர்பில் அரசியல் சுயநலன்களை மறந்து பொது எதிரணி தீர்மானம் எடுக்கவேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-18#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.