Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதி இளவரசர் முஹமட் பின் சல்மான் எங்கே போகிறார்

Featured Replies

சவூதி இளவரசர் முஹமட் பின் சல்மான் எங்கே போகிறார்

 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

மத்­திய கிழக்கு அல்­லது மேற்கு ஆசியா எனப் பேசும் போது அர-பு–இஸ்ரேல் பிரச்­சி­னையும், பலஸ்­தீன மக்­களின் துன்­பங்­களும் ஞாப­கத்­திற்கு வரும். 2011 இல் மத்­திய கிழக்கு நாடு­களில் அரபு வசந்தம் எனும் பொது­மக்­களின் போராட்டம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டது. அரபு வசந்­தத்தின் தாக்கம் பல நாடு­க­ளுக்கும் பர­வி­யது. இதற்­கி­டையில் ஈராக்கின் முன்­னைய இரும்புத் தலைவர் சதாம் ஹுசைனின் ஆட்­சியில் நாச­கார ஆயு­தங்கள் இருப்­ப­தா­கவும் அதன் இருப்பு மானி­டத்­திற்கு பெரும் தீங்­கா­னது என்றும் அமெ­ரிக்­காவும் நேச நாடு­களும் ஐ.நாவின் பாது­காப்புச் சபைத் தீர்­மா­னங்கள் எனும் போரா­யு­தத்­துடன் 2003இல் ஈராக்­கிற்குள் புகுந்­த­மையும் அதனால் ஏற்­பட்ட விளை­வு­களும் இன்­றை­வரை நீடிக்­கின்­றன. பின்னர் அமெ­ரிக்கப் படை­களை வெளியேற்ற வேண்டும் என்ற ஆக்­ரோ­சத்­துடன் பல தீவி­ர­வாத அமைப்­புக்கள் உத­ய­மா­கின. இவற்றுள் ஐ.எஸ்.ஐஎஸ் எனும் அமைப்பு பிர­ப­ல­மா­னது. இதனால் 2011 இல் சிரிய நெருக்­கடி,உத­ய­மா­கி­யது. லிபி­யாவில் முன்­னைய தலைவர் கேர்ணல் கடாபி ஒழித்­துக்­கட்­ட­ப்பட்டார். தற்­போது ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் ஈராக்­கிலும் சிரி­யா­விலும் புற­மு­துகு காட்டும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. மத்­திய கிழக்கு அரபு - இஸ்ரேல் பிரச்­சினை­க­ளுடன் வேறு பல பிரச்­ச­ினை­க­ளுக்கும் தாய­க­மா­கி­விட்­டது.

இன்று பர­வ­லாக விவா­திக்­கப்­படும் விடயம் மிகவும் சுவா­ர­ஸ்­ய­மா­னது. தொன்­று­தொட்டு மன்­ன­ராட்­சிக்கும், வம்ச ஆட்­சிக்கும் பெயர்­பெற்ற சவூதி அரே­பி­யாவின் ஆட்­சி­யா­ளர்கள் ஊழ­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையில் பன்­னி­ரெண்டு அர­ச­வம்ச இள­வ­ர­சர்­க­ளுடன் இன்னும் பலரை சிறை­யி­ல­டைத்­தமை என்­பது தான் உலகை வலம்­வரும் சுவை­யான செய்­தி­யாகும். நாட்டு வளங்­களை மனம்­போன போக்கில் அரச வம்­சங்கள் தம்­மிஷ்டம் போல அனு­ப­வித்­து­வரும் நாட்டில் ஊழ­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதா?என்­பது பல­ரையும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. சவூதி அரே­பியா என்­பது ஆங்­கி­லத்தில் Saudi Arabia என்று அறி­யப்­ப­டு­கின்­றது. ஒட்­டோமன் சாம்­ராஜ்­ஜியத்தின் ஆதிக்­கத்தின் பின்னர் அரே­பியா பிர­தே­சத்தின் ஒரு பகு­தியைக் சேக் சவூட் கைப்­பற்றி அப்­ப­கு­தியை ஆட்­சி­செ­லுத்­தினார். அப்­ப­குதி சவூதி அரே­பி­யா­என அவர் பெய­ருடன் நிலை­பெற்­றது. சவூதி அரே­பி­யா­என்ற நிலை­யான நாடு உரு­வா­கி­யது. சவூட் மன்­னரின் வம்­சமே அர­ச­கட்டில் ஏறி சவூதி அரே­பி­யாவில் ஆட்சி நடத்­து­கின்­றது. அவரின் வம்­சமோ மிகவும் நீண்­டது. ஏரா­ள­மான மகா­ரா­ணி­களைத் திரு­மணம் புரிந்­து ­நூற்­றுக்­க­ணக்­கான பிள்­ளைகள், பேரப்­பிள்­ளைகள் என வம்சம் நீடிக்­கின்­றது. அந்த வகையில் சக்­க­ர­வர்த்தி சல்மான் தற்­போது சவூ­தியின் மன்­ன­ராவார். 2011, 2012களில் முன்­னைய முடிக்­கு­ரிய வாரி­சுகள் இறந்­த­மையால் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் சல்மான் மன்­ன­னானார். அவரின் மகாரா­ணிகள் -இள­வ­ர­சர்கள் அரச வம்­சத்தில் மிகவும் சக்­தி­வாய்ந்­த­­வர்கள் எனக் கூறப்­ப­டு­கின்­ற­து. இன்­றை­ய­ மு­டிக்­கு­ரி­ய -­இ­ள­வ­ர­சர் முகமட் பின் சல்மான் சவூதி அரசில் மிகவும் ஆதிக்கம் செலுத்­து­கின்றார். இவரைச் சுருக்­க­மாக எம்.பி.எஸ். என அர­சியல் வட்­டா­ரங்­களில் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. சக்­க­ர­வர்த்தி இவ்­வ­ருட முடி­வுக்குள் முடிக்­கு­ரிய இள­வ­ர­ச­ரிடம் முறைப்­ப­டி­அ­ர­ச­ப­த­வியை கைய­ளிப்பார் என நம்­பப்­ப­டு­கின்­றது. அர­சரும் எண்­பது வயதைத் தாண்­டி­விட்டார். அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட பெரு­மெ­டுப்­பி­லான கைதுகள் இள­வ­ர­சர்கள், கோடீஸ்­வ­ரர்கள், பெரும் பத­விகள் வகித்­தோரை உள்­ள­டக்­கி­யது. எம்.பி.எஸ் என அழைக்­கப்­படும் முஹமட் பின் சல்மான் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முன்­னைய மன்­னர்கள் ராஜப் பிர­தி­நி­திகள் போலல்­லாமல் சவூதி அரே­பி­யாவின் சில அடிப்­படை மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற எண்­ணத்­துடன் செயலாற்­று­ப­வ­ராக தன்னைக் காட்­டிக்­கொள்­கிறார். அர­சியல் ரீதி­யான அடிப்­படை மாற்­றங்கள் ஏதும் இல்­லா­வி­டினும் சவூதி அரே­பி­யாவின் பொரு­ளா­தார அடிப்­ப­டையில் அதா­வது எண்ணெய் வளத்தில் மட்டும் தங்­கி­யி­ராமல் பொரு­ளா­தா­ரத்தை பல்­வேறு வகைப்­ப­டுத்த எண்­ணு­கின்றார். உதா­ர­ண­மாக UAE என அழைக்­கப்­படும் ஐக்­கிய அரபுக் குடி­ய­ரசு போன்று பல­வி­த­மான பொரு­ளா­தா­ர­மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த அவா­வு­று­கிறார். அண்­மையில் சவூதிப் பெண்கள் வாகனம் ஓட்­டலாம் என்ற மாற்­றத்தை இவரே அமுல்­ப­டுத்­தினார். பெண்­க­ளுக்கு ஓர­ளவு உரிமை. சுதந்­திரம் வழங்கல், பொரு­ளா­தார நவீ­னத்­துவம் போன்­றவை இவரின் முன்­னு­ரி­மை­க­ளாகும் இவரின் திட்­டங்­க­ளுக்கு சவூதி இளைய தலை­மு­றை­யினரின் ஆத­ரவு கிடைப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அரச குடும்­பத்தில் சவூதி­யி­லேயே ஆரம்பக் கல்வி, உயர் கல்­வியைப் பெற்று சட்­ட­மா­ணி­யாக உயர்ந்தார். இவ­ரிடம் காணப்­படும் வேகத்­தினால், முதலில் தனது ஆட்­சியைத் தக்­க­வைப்­பதில் வெற்­றி­கண்­டுள்ளார். 1000 கோடி டொலருக்கு மேல் ஊழல் புரிந்­துள்­ள­தாக கைது­செய்­யப்­பட்­ட­வர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. நாட்டு வளங்­களை இஷ்டம் போல் அனு­ப­வித்த மன்னர் பரம்­ப­ரையில் ஊழ­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் என்­பது ஒரு நகைச்சுவையாக தெரி­கின்­றது. எம்.பி.எஸ். முடிக்­கு­ரிய இள­வ­ரசன் அர­ச­னாக பத­வி­யேற்க முன்­னரே பாதை­களை செப்­ப­னிட்டு துப்­ப­ுரவு செய்­கிறார்.இக்­கை­து­க­ளுக்கு முன்னர் பிர­ப­ல­மான இள­வ­ரசர் ஒருவர் விமான விபத்தில் கொல்­லப்­பட்­டதாக அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் சர்­வ­தேச ஊட­கங்கள் அவ்­வா­றாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. பத­விக்கு வரக்­கூ­டி­ய­வர்­களை களை எடுத்­த­தா­கவே சந்­தே­கப்­ப­டு­கின்­றனர். இதிலே அமெ­ரிக்­காவில் கரமும் சம்­பந்­தப்­ப­டு­வ­தாக தெரி­கின்­றது. அமெ­ரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளின் கணவர் இக்­கை­துகள் நடை­பெ­று­வ­தற்கு முன்னர் றியாத்தில் இருந்­துள்ளார். கைது செய்­யப்­பட்ட இள­வ­ர­சர்­களில் அல்­வாலிட் பின் தலால் என்ற இள­வ­ரசர் முக்­கி­ய­மா­ன­வொ­ருவர். அமெ­ரிக்க அதிபர் தேர்தல் நடை­பெ­ற­ுவ­தற்கு முன்னர் இவர் கூறி­ய­தான கூற்று அமெ­ரிக்க அதிபர் ட்ரம்பைச் சீற்­றத்­திற்­குள்­ளாக்­கி­யது. ட்ரம்ப் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட தகு­தி­யில்­லா­தவர் எனவும் அவர் போட்­டி­யி­லி­ருந்து விலக வேண்டும் எனவும் பின் தலால் கூறி­யி­ருந்தார். இதற்குப் பழி­வாங்கும் பட­லமே அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் மரு­ம­கனின் றியாத்­திற்­கான பயணம், தொடர் நட­வ­டிக்­கைகள் என சில நம்­ப­க­மான ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

பிராந்­திய அர­சியல் இரா­ணுவ சூழ்­நி­லைகள் பற்றி தெரிந்­து­கொண்­டால்­ ச­வூதி அரே­பி­யாவில் நிகழும் விட­யங்­களை ஓர­ள­வுக்குப் புரிந்­து­கொள்ள முடியும். பிராந்­தி­யத்தில் சவு­தியும் ஈரானும் ஆதிக்­கத்தை நிலை­நாட்ட போட்­டி­போ­டு­கின்­றன. சவூதி அரே­பியா - அமெ­ரிக்க,இஸ்ரேல் கூட்டு என்ற மறை­முக அணி உரு­வா­கி­றது. அண்­மையில் கடந்த ஆனி மாதம் சவூதியின் தலை­மையில் ஐக்­கிய அர­புக்­கு­டி­ய­ரசு, பாஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகள் திடு­தி­டுப்­பென்று கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களைத் துண்­டித்து கடல், வான், தரை­எல்­லை­களை மூடி­யது மட்­டு­மல்ல உற­வுகள் சகஜ நிலைக்கு திரும்­பு­வ­தற்கு பல நிபந்­த­னை­க­ளையும் முன்­வைத்­தன. சவூதியின் அயல்­நா­டான யேமனில் தொடர்ச்­சி­யாக நடை­பெற்­று­வரும் உள்­நாட்டுப் போரில் சவூதி ஒரு தரப்­பி­ன­ருக்கு ஆயுத, நிதி உத­வி­களை வழங்­கி­வ­ரு­கின்­றது. ஈரானின் ஆத­ரவு பெற்ற ஹிஸ்­புல்லா இயக்­கத்­தி­ன­ருக்கு எதி­ரான அணி­யி­ன­ருக்கு சவூதி உத­வி­களை வழங்­கு­கி­றது.இச்­சம்­ப­வங்­க­ளுடன் சேர்த்துப் பார்க்க வேண்­டிய இன்­னொரு விடயம் உண்டு. லெபனான் நாட்டுப் பிர­தமர் றியாத்­துக்கு வருகை தந்தார். அங்­கி­ருந்து கொண்டு பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­வ­தாக அறி­வித்தார். சவூ­தியின் பல­வந்­தத்தின் கார­ண­மா­கவே இரா­ஜி­னாமா இடம்­பெற்­ற­தாக நியா­ய­மான சந்­தே­கங்கள் கிளம்­பி­யுள்­ளன. அர­சியல் ஸ்திரம் இல்­லாத லெப­னானில் சவூதி சித்து விளை­யாட்­டுக்­களை விளை­யா­டு­கின்­றது. பலஸ்­தீன விவ­கா­ரத்தில் ஹமாஸ், ஹிஸ்­புல்லா அணிகள் மோது­கி­ற­நி­லையில் சவூதி ஹமா­ஸிற்கும் ஈரான், கட்டார் ஆகி­யன ஹிஸ்­புல்­லா­வுக்கும் ஆத­ரவு வழங்­கு­கின்­றன. அண்­மையில் சிரியா,ஈராக் பிர­தே­சங்­களில் ஐ.எஸ். இயக்­கத்தின் கட்­டுப்­பாட்­டிற்குள் இருந்த பகு­தி­களை சிரிய,ஈராக் படைகள் மீண்டும் தம்தம் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்­துள்­ளன. ஐ.எஸ். கட்­டுப்­பா­ட்டுப் பிர­தே­சங்கள் சுருங்­கி­விட்­டன. இப்­போர்­க­ளிலும் ஈரான் ஆத­ரவுப் படைகள் பெரும் பங்­காற்­றி­யுள்­ளன. இவ்­வா­றாக சவூதி அரே­பியா ஈரான் படைகள் நேர­டி­யாக மோதா­விட்­டாலும் அவர்­களின் ஆத­ரவுப் படைகள் போரி­டு­கின்­றன. சென்ற வாரத்தில் ஈரான் ஏவு­க­னை­களை தமது நாட்­டுக்குள் ஏவி­ய­தாக சவூதி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. அண்­மையில் யேம­னில்­இ­ருந்து ஈரான் ஆத­ரவுப் படை­களே ஏவு­க­ணை­க­ளை­ஏ­வி­ய­தாக சில தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவ்­வாறு சோவி­யத்­யூ­னியன் - அமெ­ரிக்கா உலக வல்­ல­ரசுப் போட்டி நடை­பெறும் போது அவர்­களின் ஆத­ரவு பெற்ற படைகள் ஒன்­றுடன் ஒன்று போர்­பு­ரிந்த நிலை­மை­யினை வர­லாற்­றா­சி­ரி­யர்­கள்­ ப­னிப்போர் என வகைப்­ப­டுத்­தினர். இப்­போது மத்­திய கிழக்குப் பிராந்­தி­யத்தில் நடை­பெறும் மோதல்­களை ஒரு புதிய வடி­வத்­தி­லான பனிப்போர் எனக் குறிப்­பி­டலாம்.

அமெ­ரிக்க ஆட்­சியில் எக்­கட்சி ஜனா­தி­ப­தி­யாக வரினும் சவூதி அரே­பியா ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் மிக மிக நெருக்­க­மாவார்கள். இதன் கார­ண­மா­கத்தான் சவூதி கட்­டா­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை அறி­வித்­த­வுடன் ட்ரம்ப் அரசு பூரண ஆத­ரவு வழங்­கி­யது மட்­டு­மல்ல கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு துணை போகின்­றது அதனை நிறுத்த வேண்டும் எனவும் குறிப்­பிட்டார். அமெ­ரிக்க, பிரித்­தா­னிய ஆட்­சி­யா­ளர்கள் சவூதி அரச குடும்­பங்­க­ளுக்குள் ஊடு­ருவி அரச குடும்­பங்­க­ளுக்குள் சிக்­கலை உரு­வாக்­கக்­கூடும் என்ற சந்­தேகம் எம்.பி.எஸ். அவர்­க­ளுக்கு உண்டு. அதன் கார­ண­மாக அமெ­ரிக்க ஆட்­சி­யா­ளர்கள் எவரும் தமது அனு­ம­தி­யின்றி நேர­டி­யாக முன்னர் போல அரச குடும்­பத்­தி­ன­ருடன் தொடர்­பு­கொள்­ளக்­கூ­டாது என்­கின்ற தடை­யுத்­த­ர­வு­க­ளையும் அமு­லாக்­கி­யுள்ளார்.

தனது ஆட்­சிக்கு சவால் விடக்­கூ­டிய வல்­ல­மை­யுள்­ள­வர்­களை ஒரேய­டியில் அடித்து வீழ்த்­தி­யதே இந்த ஊழல் ஒழிப்பு கைது நாட­கம்­ என பல­மான கருத்­துக்கள் வலம் வரு­கின்­றன. இரா­ணுவம், பொலிஸ், உள்­நாட்டுப் பாது­காப்பு என சகல பிர­தான பகு­தி­க­ளையும் எம்.பி.எஸ். தனது கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்­து­விட்டார். அரச பத­விக்கு இனிமேல் சவா­லில்லை. ஆனால் சகல அரச குடும்­பங்­களும் செழிப்­பாக வாழ்­வ­தற்கு அவ­ர­வர்க்­கு­ரிய வரு­மா­னங்கள் போய்ச் சேரு­வதால் எந்தத் தடை­களும் கிடை­யாது.

உலகை உய்­விக்க தோன்­றிய தீர்க்க தரி­சி­யான முஹமது என அழைக்­கப்­படும் நபி பெரு­மானார் தமது காலத்தில் அரே­பிய பகு­தியில் இடம்­பெற்ற யுத்­தங்­களின் கொடு­மை­க­ளுக்கு முடி­வு­கட்­டினார். வம்சக் குழுக்­க­ளுக்குள் நடை­பெற்ற மோதல்கள், சண்­டை­களை நிறுத்­தினார். அவரின் மறை­வுக்குப் பின்னர் மீண்டும் வம்ச மோதல்கள் ஆரம்­பித்­தன. இன்­று­வரை நீடிக்­கின்­றன. பெரு­மா­னாரின் போத­னைகள் பின்­பற்­றப்­ப­டாமை வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும். அது­மட்­டு­மல்ல சுனி, சியா என்ற இஸ்லாம் மார்க்க பிரி­வி­னை­களும் பயங்­க­ர­வா­தத்தை ஆயு­த­மாக பயன்­ப­டுத்தும் பல அர­சியல் நோக்­க­மு­டைய பல குழுக்­களும் களங்­களில் நின்று போரா­டு­வதும் தங்­க­ளுக்கு அக­தி­க­ளாக புக­லிடம் வழங்­கிய மேற்கு ஐரோப்­பிய, அமெ­ரிக்க நாடு­களில் பயங்­க­ர­வாதச் செயல்­களில் ஈடு­ப­டு­வதும் வேத­னைப்­ப­டக்­கூ­டிய கார­ணங்­க­ளாக அமையும்.

பத்­தி­ரி­கை­யா­ளர்கள் அமெ­ரிக்­காவின் வெளிநாட்டுக் கொள்­கைகள் பற்றி கருத்­து­ரைகள் வழங்கும் போது அக் கொள்­கைகள் இரட்டை வேட­மா­னது என விமர்­சிப்­பது சவூதி விட­யத்தில் தெளிவா­கி­றது. மிகவும் அடக்­கு­மு­றை­யான மன்­ன­ராட்சி நடை­பெறும் சவூ­தியில் மனித உரி­மைகள், சட்­ட­வாட்சி. ஜன­நா­யக விழு­மி­யங்கள், சுதந்­தி­ர­மான ஊடகம், சுதந்­தி­ர­மான நீதித்­துறை என்­பது மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போடு­வ­தற்குச் சம­னாகும்.

வர­லாற்று ரீதி­யாக பாலஸ்­தீன மக்­களை அவர்­களின் பிறந்த மண்­ணி­லி­ருந்து வெளியேற்றி அங்கு இஸ்ரேல் எனும் நாட்டை உரு­வாக்­கிய அமெ­ரிக்க,பிரித்­தா­னிய ஆதிக்க நாடுகள் ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானங்களை பலமிழக்கச் செய்வதும்,இன்று பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கின்ற கட்டத்தில் இஸ்ரேல் என்கின்ற நாடும்,பாலஸ்தீன அதிகார சபை சமாந்தரமாக நாடுகளாக இயங்கவேண்டும் என்ற தீர்மானத்திற்கு அராபிய நாடுகளும் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் பலமிழந்து இறங்கி வந்துள்ளமையும் அராபிய நாடுகளில் நிலவும் ஒன்றுமையின்மைக்கும் வல்லரசுகளின் சித்து விளையாட்டுகளுக்கும் உதாரணங்கள் ஆகும். இருப்பினும் இஸ்ரேல் - பலஸ்தீனம் ஆகிய இருநாட்டுத் தீர்வுக்கு சில நாடுகள் குறிப்பாக ஈரான், கட்டார் ஆகியவை வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. மத்திய கிழக்கில் ஒரு பலம் ள் நிறைந்த சவூதி அரேபியா இஸ்ரேலுடன் மறைமுகமான தொடர்புகளை ஏற்படுத்துவது பாலஸ்தீன பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. இப்பின்னணியில் முடிக்குரிய இளவர சர் முகமட் பின் சல்மானின் ஆட்சியை எச்ச வாலும் இல்லாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற பேரவா தவிர்க்க முடியாமல் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுடன் இணைந்து செயலாற்றுகின்றது. இப் போக்கு சவூதி அரேபிய நாட்டிற்குள் ஆட்சிக்கு எதிரான சில எதிர்ப்புக்களை உருவாக்கக்கூடும் என ஊடக அபிப்பிராயங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் சல்மான் சவூதி அரேபி யாவை நவீனத்துவப் பாதையில் எடுத் துச் செல்வாராயின் சவூதி மக்களுக்கு பெரும் பேறாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-11-18#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.