Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இடம்பெறும் கட்சி தாவல்கள் - ஈ.பி.ஆர்.எல்.எவ் இருந்து சிலர் வெளியேற்றம்!

Featured Replies

வடக்கில் இடம்பெறும் கட்சி தாவல்கள் - ஈ.பி.ஆர்.எல்.எவ் இருந்து சிலர் வெளியேற்றம்!

 

வடக்கில் இடம்பெறும் கட்சி தாவல்கள் - ஈ.பி.ஆர்.எல்.எவ் இருந்து சிலர் வெளியேற்றம்!

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் இணையவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் நேற்று தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட உறுப்பினர் எஸ்.தியாகராசா, எஸ்.இந்திரராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் தமிழரசுக்கட்சியில் இணையவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து, புதிய கட்சியாக செயற்படவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த கட்சித்தாவுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Some-people-have-been-evicted-from-EPRLF

  • தொடங்கியவர்
ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை தமிழரசுக் கட்சி தன்வசம் இழுத்தது?
 

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், நேற்று (19) அவர் அக்கட்சியில் இணைந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண சபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர் துரைராசா ரவிகரன், இதுவரை சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து, மாற்றுத் தலைமை கோரி வரும் சுரேஸ் பிரேமச்சந்திரன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளதோடு, க.குமாருடன் இணைந்து புதிய முன்னணியை உருவாக்கியே போட்டியிடப்போவதாகவும் பகிரங்கமாக தெரிவித்து, புதிய முன்னணியின் உருவாக்கத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.

இந்நிலையில், அவரது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை, தமிழரசுக் கட்சி தன் பக்கம் இழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உறுப்பினர், ஒரு நெருக்கடியான கட்டத்தில் தமிழரசுக் கட்சியின்பால் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (19) தமிழரசுக் கட்சியின் தெல்லிப்பளைத் தொகுதி அலுவலகத்தில் வைத்து கட்சியின் தலைவரிடத்தில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து, முறைப்படி தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஈ-பி-ஆர்-எல்-எப்-உறுப்பினரை-தமிழரசுக்-கட்சி-தன்வசம்-இழுத்தது/71-207575

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.