Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிந்­தோட்டை வன்­முறை அர­சின் பெரும் தோல்வி

Featured Replies

 
 

கிந்­தோட்டை வன்­முறை அர­சின் பெரும் தோல்வி

 

போர் முடி­வ­டைந்து 8 ஆண்­டு­க­ளின் பின்­ன­ரும் அதி­லும் தற்­போ­தைய கூட்டு அரசு பத­வி­யேற்று இரண்­டரை வரு­டங்­கள் கடந்­து­விட்­ட­போ­தும் இலங்­கை­யில் இனங்­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­கள் மேம்­ப­ட­வில்லை, அந்த விட­யத்­தில் கொழும்பு அர­சு­கள் வெற்­றி­பெ­ற­வே­யில்லை என்­பதை காலி, கிந்­தோட்டை வன் மு­றை­கள் மீண்­டும் நிரூ­பித்­தி­ருக்கின்றன.

இனங்­க­ளுக்கு இடை­யி­லான அமைதி, சகிப்­புத்­தன்மை, நல்­லி­ணக்­கம் என்­பன இன்­னும் அடி­மட்ட நிலை­யி­லேயே உள்­ளன என்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

நல்­லி­ணக்­கம், நல்­லி­ணக்­கம் என்று அர­சி­யல் தலை­வர்­கள் வார்த்­தைக்கு வார்த்தை பேசி­னா­லும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் அவர்­கள் தோற்­றி­ருக்­கி­றார்­கள்.

எப்­போ­தும் தீப்­பற்றி வெடிக்­கக் கூடிய நிலை­யி­லேயே இனங்­க­ளுக்கு இடை­யி­லான உறவு இன்­னும் இருந்­து­கொண்­டி­ருக்­கி­றது.

கிந்­தோட்­டை­யில் ஒரு சிறு விபத்­துச் சம்­ப­வம் வன்­மு­றை­யாக மாறி முஸ்­லிம் மக்­கள் மீதான கல­வ­ர­மாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

மிகக் குறு­கிய நேரத்­தில் பல வீடு­கள், கடை­கள், வாக­னங்­கள், பள்­ளி­வா­சல்­கள் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன, உடைத்­துச் சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன, எரித்­துச் சாம் பராக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இது ஒரு தனிப்­பட்ட பகை­மை­யின் விரிவு என்று நிச்­ச­யம் புற­மொ­துக்­கி­விட முடி­யா­தது. சொற்ப நேரத்­திற்­குள் பலர் அணி­தி­ரண்டு ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட வன்­முறை ஒன்றை நிகழ்த்­தி­யி­ருக்­கி­றார்­கள் என்­றால் அதற்கு முன்­ன­ரான திட்­ட­மி­ட­லும் காத்­தி­ருப்­பும் அவர்­க­ளி­டம் இருந்­தி­ருக்­கி­றது என்­பது மிகத் தெளிவு.

போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் சிங்­க­ள­வர்­க­ளால் முஸ்­லிம்­கள் தொடர்ந்து இலக்கு வைக்­கப்­பட்­டு­வ­ரும் நிலை­யில் கிந்­தோட்­டைச் சம்­ப­வம் ஒரு காத்­தி­ருப்­பின் பின்­ன­ரான தாக்­கு­தல் எனக் கொள்­வ­தில் தவ­றில்லை.

இதற்கு முன்­னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­தப்­பட்ட வன்­மு­றை­க­ளில் ஈடு­பட்­ட­வர்­கள் மீதும் அதற்­கான சூத்­தி­ர­தா­ரி­கள் மீதும் இறுக்­க­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு இன­வா­தி­க­ளுக்கு ஓர் தெளி­வான சமிக்­ஞையை அரசு வழங்­கி­யி­ருந்­தால் இன்­றைய வன்­மு­றை­க­ளைத் தவிர்த்­தி­ருக்க முடி­யும்.

ஆனால், மாற்­றங்­க­ளை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் ஓர் இர­வில் ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது என்று வரு­டக்­க­ணக்­கில் சாட்­டுப்­போக்­கு­களை அர­சி­யல் தலை­வர்­கள் சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும் இலங்­கை­யில் அவர்­க­ளால் உண்­மை­யான நல்­லி­ணக்­கத்­தையோ நிரந்­த­ர­மான அமை­தி­யையோ ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது.

இனப் பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­தர அர­சி­யல் தீர்வை ஏற் படுத்தி, அதி­கா­ரங்­கள் அனைத்து இனங்­க­ளுக்­கும் பகி­ரப் படும்­போது மட்­டுமே இந்­தப் பிரச்­சி­னைக்கு உறு­தி­யான ஒரு தீர்வை அர­சால் காண­மு­டி­யும்.

ஆனால், புதிய அர­ச­மைப்பு ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கே பௌத்­தம்­தான் இந்த நாட்­டின் முன்­னு­ரி­மைக்­கு­ரிய மதம் என்று சிங்­கள அர­சி­யல் தலை­வர்­க­ளும் சேர்ந்து நின்று வாதா­டும்­போது மற்­றைய மதத்­த­வர்­க­ளை­விட பௌத்த சிங்­க­ள­வர்­களே மேலா­ன­வர்­கள் என்­கிற மனோ­நி­லை­யை­யும் அதன்­வ­ழியே மற்­றைய இனத்­த­வர் மீதும் மதத்­த­வர் மீதும் வெறுப்­பு­ணர்வு வளர்­வ­தும் தடுக்­கப்­ப­ட­மு­டி­யா­தது.

சிங்­கள அர­சி­யல் தலை­வர்­கள் சிங்­கள மக்­க­ளின் இந்த மனோ­பா­வத்­திற்கு மீண்­டும் மீண்­டும் தீனி­போட்டு வாக்கு வேட்­டை­யா­டக் காத்­துக்­கொண்­டி­ருக்­கும் வரை­யில் இது­போன்ற இனங்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை, எதிர்க் கட்­சித் தலை­வர் இரா. சம்­பந்­தன் சொல்­லி­யி­ருப்­ப­தைப் போன்று “அரு­வ­ருக்­கத்­தக்க செயல்­களை” தவிர்க்­கவே முடி­யாது.

மாற்­றம் என்ற கோசத்­தோ­டும், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு மற்­றும் நல்­லி­ணக்­கம் என்­கிற முழக்­கங்­க­ளோ­டும் பத­விக்கு வந்த மைத்­திரி ரணில் கூட்டு அரசே கிந்­தோட்டை வன்முறை­க­ளுக்கு முழுப் பொறுப்­பை­யும் ஏற்­க­வேண்­டும்.

இந்த வன்­மு­றை­க­ளில் ஈடு­பட்­ட­வர்­கள் மீதும் அவர்­க­ளைத் தூண்­டி­விட்­டுப் பின்­ன­ணி­யில் இருந்­த­வர் மீதும் கடும் சட்ட நட­வ­டிக்கை எடுத்­துத் தண்­டிக்­க­வேண்­டும்.

அத்­தோடு வன்­மு­றை­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளி­டம் இருந்­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்­பீ­டு­களை வழங்­க­வும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

எல்­லா­வற்­றுக்­கும் மேலாக இனப்­பி­ரச்­சி­னைக்கு விரைந்து நேர்­மை­யான தீர்­வைக் காண­வேண்­டும். அதன் மூலமே இது­போன்ற நிகழ்­வு­கள் மீண்­டும் நிக­ழா­மல் தடுக்க முடி­யும்.

http://newuthayan.com/story/48584.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.