Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனி­வாவில் 177 பரிந்­து­ரை­களை ஏற்றுக் கொண்­டது அர­சாங்கம்....53 விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­து­வ­தாக அறி­விப்பு

Featured Replies

ஜெனி­வாவில் 177 பரிந்­து­ரை­களை ஏற்றுக் கொண்­டது அர­சாங்கம்

1-6555b40a2e9b5439b5dc00635ae5df0ff3758889.jpg

 

53 விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­து­வ­தாக அறி­விப்பு
(ரொபட் அன்­டனி)
ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் இலங்கை தொடர்­பான பூகோள காலக்­கி­ரம மீளாய்வு அமர்வின் இறு­தியில் நிறை­வேற்­றப்­பட்ட 230 பரிந்­து­ரை­களில் இலங்கை அர­சாங்கம் 177 பரிந்­து­ரை­களை ஏற்றுக் கொண்­டுள்­ளது. ஏனைய 53 பரிந்­து­ரைகள் குறித்து கவனம் செலுத்­தப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது. அது­மட்­டு­மன்றி அர­சாங்கம் 12 வாக்­கு­று­தி­களை ஐ.நா.வுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றது.  

இது தொடர்பில் பரிந்­து­ரைகள் அடங்­கிய யோசனை நிறை­வேற்­றப்­பட்­ட­போது ஜெனி­வாவில் உரை­யாற்­றிய பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஒரு­சில விட­யங்­களில் அர­சாங்கம் தனி த்து விடயம் எடுக்க முடி­யாது என்றும் பாரா­ளு­மன்­றமும் நீதித்­து­றையும் சில விட­யங்­களில் தீர்­மானம் எடுக்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் இலங்­கை­யா­னது தொடர்ந்தும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யுடன் ஈடு­பாட்­டுடன் செயற்­படும் என்றும் அர­சாங்­கத்தின் சார்பில் பிர­தி­ய­மைச்சர் அறி­வித்­தி­ருக்­கிறார்.

அனைத்து பரிந்­து­ரை­க­ளையும் நாங்கள் ஆழ­மான ரீதியில் பார்க்­கிறோம். சில பரிந்­து­ரைகள் தற்­போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் செயற்­பா­டு­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. சில விட­யங்கள் அர­சாங்­கத்­தினால் மட்டும் தீர்­மா­னிக்­கப்­பட முடி­யா­தவை. பாரா­ளு­மன்றம் மற்றும் நீதித்­து­றையும் இதில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. எனவே 177 பரிந்­து­ரை­களை ஏற்றுக் கொண்­டுள்ள நாங்கள் ஏனைய 53 பரிந்­து­ரைகள் தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தாக அறி­விக்­கின்றோம்.

இந்த பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபையும் உறுப்பு நாடு­களும் உதவ வேண்டும் என்றும் பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா சுட்­டிக்­கட்­டி­யுள்ளார். இதே­வேளை கடந்த வெள்ளிக்­கி­ழமை இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட யோச­னை­களில் பல முக்­ கிய விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக வெளி நாட்டு நீதி­ப­திகள் மற்றும் வழக்­க­றி ­ஞர்­களை கொண்டு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை உரு­வாக்­க­வேண்டும். அத்­துடன் வடக்கு, கிழக்கில் பொதுமக்­களின் காணி­களை விடு­வி க்க நட­வ­டிக்கை எடுக்­க­ வேண்டும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­துடன் ஐ.நா. பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­ வேண் டும் போன்ற பரிந்­து­ரை­களும் முன்­வைக்­கப்­பட்­ டுள்­ளன.

அத்­துடன் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக இயங்கும் நிலைக்கு கொண்­டு­ வ­ரு­வ­துடன் காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு சுயாதீன ஆணையாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் இதற்கு முன்னர் காணாமல் போன வர்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக் குழுக்களின் அறிக்கைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் எனவும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-21#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.