Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம் : வர்த்தமானிக்கு இடைக்கால தடை

Featured Replies

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம் : வர்த்தமானிக்கு இடைக்கால தடை

22-4446fa7aa74285bd38c340fd640a20fa2aee5f4b.jpg

 

மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு;அமைச்சருக்கும் அழைப்பாணை
(எம்.எப்.எம்.பஸீர்)

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை, அதன் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் நிர்­ணயம் செய்து, உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் வெளி­யி­டப்­பட்ட 2006/44 எனும் அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­கால தடை விதித்து மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று  உத்­தர­விட்­டது.  

குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலை ரத்து செய்­யு­மாறு கோரி வாக்­கா­ளர்கள் ஆறுபேரினால் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில்

தாக்கல் செய்­யப்பட்­டுள்ள ரீட் இலக்கம் 373/2017 எனும் மனுவை நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டபோதே மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான எல்.டி.பீ. தெஹி­தெ­னிய, குமு­தினி விக்­ர­ம­சிங்க மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் இந்த இடைக்­கால தடை உத்­தரவைப் பிறப்­பித்­தது.

அத்­துடன் இந்த இடைக்­கால தடைஉத்­தர­வா­னது எதிர்­வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை அமுலில் இ­ருக்கும் என சுட்­டிக்­காட்­டிய நீதி­மன்றம், அது­வரை அந்த வர்த்­த­மா­னியை மைய­ப்படுத்தி எந்த நட­வ­டிக்­கை­களும் செய்ய முடி­யாது எனவும், அன்றைய தினம் இந்த வழக்கின் பிர­தி­வா­தி­க­ளான உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் குறித்த அமைச்சின் செய­லாளர் எச்.டி.கமல் பத்­ம­சி­றி­ ஆ­கியோர் மன்றில் நேர­டி­யாக ஆஜ­ரா­க வேண்டும் என்றும் அறி­வித்தல் விடுத்­தது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை, உறுப்­பி­னர்­களின் நிர்­ணயம் தொடர்பில் அண்­மையில் வெளியி­டப்­பட்ட, வர்த்­த­மானி அறி­வித்­தலை செல்­லு­ப­டி­யற்­ற­தாக, அறி­விக்கக் கோரி, சட்­டத்­த­ரணி மலிக சுசந்தி அல்­ல­பிட்­டவின் ஆலோ­ச­னைக்கு அமைய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சஹீட்­டினால் கடந்த 15 ஆம் திகதி ரீட் மனு­வொன்று வாக்­கா­ளர்கள் அறுவர் சார்பில் தாக்கல் செய்­யப்பட்­டது. வில்­லியம் கொபல்­லாவ மாவத்த, கண்­டியைச் சேர்ந்த வரு­ச­மன டேவகே கெதர விஜே­ரத்ன அல்­லது வடு­கெ­தர விஜே­ரத்ன, கொழும்பு - கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த தொட்­டகே சிறி­சேன பெர்­ணான்டோ, ஹல்­மில்­லா­வெ­வவைச் சேர்ந்த ராஜ­பக்ஷ கீர்த்தி மஹிந்த கரு­ணா­தி­லக குமார, பண்­டா­ர­வ­ளையைச் சேர்ந்த டிலந்த கனிஷ்க ஆரி­ய­ரத்ன, உட­வ­ளவையைச் சேர்ந்த ஜனக குமார ராஜ­பக்ஷ சேனா­தீர மற்றும் தெனி­யா­யவைச் சேர்ந்த பில­துவ ஹேவகே யொஹான் தனுஷ்க ஆகியோர் சார்­பி­லேயே இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

குறித்த மனுவில், கண்டி நகர சபை, கொழும்பு மாந­கர சபை, மாத்­தறை மாந­கர சபை, பண்­டுவஸ்நுவர பிர­தேச சபை, எம்­பி­லி­பிட்­டிய பிர­தேச சபை மற்றும் ஹாலிஎல பிர­தேச சபை ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு உட்­பட்ட வாக்­கா­ளர்­களே தாங்கள் என சுட்­டிக்­க­ட்டப்பட்­டி­ருந்­தது. இந் நிலையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் வெளி­யி­டப்­பட்ட 2006/44 எனும் வர்த்­த­மானி அறி­வித்தல், எல்லை நிர்­ணயம் மற்றும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் வெளி­யி­டப்பட்­டுள்­ள­துடன் இதன் போது அமைச்சர் தனது அதி­கா­ரத்­துக்கு அப்பால் சென்று செயற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்பட்­டுள்­ளது. இதன்­போது தொகு­தி­வாரி உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை அமைச்சர் விகி­தா­சார உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை என மாற்­றி­யுள்­ள­தாக மனு­தா­ரர்கள் மனுவில் குறிப்­பிட்­டுள்­ளனர்.

விகி­தா­சார உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை தொகு­தி­வாரி உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யா­கவும் தொகு­தி­வாரி உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை விகி­தா­சார உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யா­கவும் அமைச்சர் பைசர் மாற்­றி­யுள்­ள­தா­கவும் அது சட்­டத்­துக்கு புறம்­பா­னது எனவும் மனு­தா­ரர்கள் தமது மனுவில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

அதனால் குறித்த அதி விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலை ரத்து செய்து உத்­தரவிட வேண்டும் எனவும் வழக்கு நிறை­வுறும் வரை அந்த வர்த்­த­மா­னிக்கு இடைக்­கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனு­தா­ரர்கள் சார்பில் மேன் முறை­யீட்டு மன்றில் முன்­வைக்­கப்பட்­டுள்ள மனு­வூ­டாக கோராப்பட்டுள்ளது.

 இந் நிலையில் இந்த மனு­வா­னது கடந்த 16 ஆம் திகதி மேன் முறை­யீட்டு நீதி­மன்­றினால் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த மனு­தாரர் தரப்பு சட்­டத்­த­ரணி என்.எம்.சஹீட், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணயம் தொடர்பில் நிய­மிக்­கப்­பட்ட உப குழுவின் பரிந்­து­ரை­களை புறந்­தள்ளி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் குறித்த வர்த்­த­மானி வெளியி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், எனினும், இது­போன்று செயற்­பட அவ­ருக்கு அதி­காரம் இல்லை எனவும், அது சட்ட விரோ­த­மா­னது எனவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். . எனவே, இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலை செல்­லு­ப­டி­யற்­ற­தாக அறி­விக்­கு­மாறும், அவர் கோரி­யி­ருந்தார்.

இதன்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் குறித்த அமைச்சின் செய­லாளர் எச்.டி.கமல் பத்­ம­சி­றி­ ஆ­கியோர் சார்பில் மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அர்­ஜுன ஒபே­சே­கர,

குறித்த மனு­வா­னது பூர­ண­மற்ற ஒரு மனு என சுட்­டிக்­காட்­டினார். குறிப்­பாக வழக்கில் தேர்­தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் உள்­ளிட்ட உறுப்­பி­னர்­களும், எல்லை நிர்­ணய குழுவின் உறுப்­பி­னர்­களும் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பாக பெய­ரி­டப்­ப­டாமை தொடர்பில் சுட்­டிக்­காட்­டிய பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அர்­ஜுன ஒபே­சே­கர, மனுவில் திரி­வு­ப­டுத்­தப்பட்ட பல தக­வல்கள் இருப்­பதால் விசா­ர­ணைக்கு ஏற்­காமல் அதனை நிரா­க­ரிக்க வேண்டும் என கோரினார்.

அத்­துடன் இவ்­வ­ழக்கில், தலை­யீடு செய்ய அனு­மதி கோரி ஐ.தே.க., ஜே.வி.பி., பொது ஜன பெர­முன, கெபே அமைப்பு, பெப்ரல் அமைப்பு உள்­ளிட்ட பல அமைப்புக்களின் சார்பில் அனு­மதி கோரி வாதங்­கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்­போது, வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மா­னிக்கு தற்­போது தடை உத்­தரவு கோரு­வ­தா­னது, நடத்­தப்­பட உத்­தே­சிக்­கப்பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களை பிற்­போ­டு­வ­தற்­கான நோக்­கத்தை மட்­டுமே கொண்­டுள்­ள­தாக குறித்த கட்­சிகள் மற்றும் அமைப்­புக்­களின் சட்­டத்­த­ர­ணிகள் மன்றில் சுட்­டிக்­காட்­டினர்.

இந்த நிலையில் அனைத்து வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் செவி­ம­டுத்த நீதி­யரசர்கள், இவை தொடர்­பி­லான எழுத்து மூல சமர்ப்­ப­ணங்கள் இருப்பின் அவற்றை கடந்த 20 ஆம் திகதி திங்கட் கிழ­மைக்குள் சமர்­பிக்க உத்­தர­விட்­ட­துடன் அவற்றை ஆராய்ந்த பின்னர் நேற்று புதன் கிழமை இந்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வதா அல்­லது நிரா­க­ரிப்­பதா என தீர்ப்­ப­றி­விப்­ப­தாக அறி­வித்­தனர்.

அதன்­படி நேற்று இந்த வழக்­கா­னது விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்பட்­டது. இதன்­போது அனைத்து எழுத்து மூல வாத­ங்களையும் கருத்தில் கொண்­டி­ருந்த நீதி­யரசர்கள் குழு இந்த மனுவை தொடர்ந்து விசா­ரணை செய்ய தீர்­ம­ானித்துள்ளதாக அறி­வித்­தது. அமைச்சர் பைசர் முஸ்­தபா தனது அதி­கா­ரத்­துக்கு அப்பால் சென்று செயற்­பட்­டுள்­ளாரா இல்­லையா என்­பதை தீர்­ம­ானிக்க இந்த வழக்கை விசா­ரணை செய்ய வேண்டும் என்­பதால் விசா­ர­ணை­களை தொடர தீர்­ம­ானித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், வழக்கின் பிர­தி­வா­தி­க­ளான அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கும் அமைச்சின் செய­ல­ாளர் கமல் பத்­ம­சி­றி­யிற்கும் அறி­வித்தல் அனுப்­பவும் தீர்­ம­ானித்­தது.

அதன்­படி குறித்த சர்ச்­சைக்­கு­ரிய வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­காரம் செயற்­பட தற்­கா­லிக தடை உத்­தர­வொன்­றினை பிறப்­பித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், வழக்கை மீள டிசம்பர் 4 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்­கவும், அது­வரை இந்த இடைக்­கால தடை நீடிக்கும் எனவும் சுட்­டிக்­காட்­டி­ய­துடன், அன்­றைய தினம் பிர­தி­வா­தி­க­ளான அமைச்சர் பைசர் மற்றும் செய­லாளர் கமல் பத்­ம­சிறி ஆகி­யோரை மன்றில் ஆஜ­ரா­கவும் அறி­வித்தல் விடுத்­தது.

இத­னி­டையே இந்த வழக்கில் தலை­யீடு செய்ய ஐக்­கிய தேசிய கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, கபே, பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட 6 அமைப்புக்கள் செய்த விண்ணப்பம் தொடர்பில் டிசம்பர் 4 ஆம் திகதி ஆராய்வதாக அறிவித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், அன்றைைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு அது தொடர்பில் ஆராய்வதாக அறிவித்தது.

நேற்றைய விசாரணைகளின் போது மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சஹீட் ஆஜரானதுடன், பிரதிவாதிகளான அமைச்சர், செயலர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி அர்ஜுன ஒபேசேகர ஆஜரானார்.

 இதனைவிட இடையீடு செய்யும் தரப்புக்களான பொது ஜன பெரமுன சார்பில் அதன் செயலாளர் சாகல காரியவசமும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சட்டத்தரணி யசஸ் டி அல்விஸ், நவீன் ஆகியோரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சட்டத்தரணி வட்டவலவும், பெப்ரல் அமைப்பு சார்பில் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியும் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.