Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய தேசங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்

Featured Replies

ஐரோப்பிய தேசங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளைப் பற்றி குறள்பாட் சிவா எழுதி அனுப்பியது.
 
1) ஏன் அமெரிக்காவை விட்டுவிட்டு ஐரோப்பாவில் வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?
 
அ) பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பாவில் புதிது புதிகாக தொடங்கப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே அந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான திறன்மிகு தொழிலாளர்கள்(Skilled workforce) கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
ஆ) தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கான‌ நுழைவு இசவு (விசா) அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பாவில் பெறுவது எளிது. டொனால்ட் ட்ரம்ப் வந்த பிறகு செய்யப்பட்டிருக்கும் விசா கெடுபிடிகள் ஐரோப்பிய நாடுகளில் இல்லை.
 
இ) உள்ளே நுழைந்துவிட்டால் மருத்துவம், கல்வி ஐரோப்பா முழுதும் இலவசம். ஜெர்மனி போன்ற நாடுகளில் கல்லூரியில் கூட கட்டணம் இல்லை. (அமெரிக்காவில் பள்ளி கல்வி இலவசம் ஆயினும் மருத்துவத்திற்கு நாம் செலவழிக்க வேண்டும்)
 
ஈ) பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 4-5 வருடங்களுக்குள்ளாக நிரந்தரக் குடியுரிமை வாங்க வாய்ப்புள்ளது
 
உ) பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்கும் பொருந்தும். பெரும்பாலும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தவிர நீங்கள் வேலை பார்க்க வேண்டி இருக்காது. மாலை முழுவதும் உங்களுக்கு தான். சரியான work-life balance என்பதை ஐரோப்பிய நாடுகளில் வாழலாம்.
 
ஊ) முக்கியமாக ஐரோப்பாவில் துப்பாக்கிகள் எளிதில் வாங்க முடியாது. (இதைச் சொல்வதற்காக அமெரிக்க வாழ் மக்களெல்லாம் சண்டைக்கு வராதீர்கள். எல்லா இடங்களிலும் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு. மேலே குறிப்பிட்ட விஷயங்கள் ஐரோப்பாவிலும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக கூறப்பட்டது)
 
கொசுறு: இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கான பயண நேரம் அமெரிக்காவைக் காட்டிலும் குறைவு.
 
2) ஐரோப்பாவில் எந்தெந்த நாடுகளில் வேலை கிடைக்கும்?
 
எப்படி நம் நாட்டில் பெங்களூரு, சென்னை, புனே, குர்கான் என சில நகரங்கள் தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கு பெயர் பெற்றிருக்கின்றனவோ அதே போல ஐரோப்பாவில் பின்வரும் நகரங்கள் பெயர் பெற்றவை (அதற்காக மற்ற நகரங்களில் வேலை வாய்ப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது, ஆனால் பின்வரும் நகரங்களில் நீங்கள் முயற்சி செய்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்)
 
லண்டன் - இங்கிலாந்து
பெர்லின் - ஜெர்மனி
ஆம்ஸ்டர்டேம் - நெதர்லாந்து
லிஸ்பன் - போர்த்துகல்
வியன்னா - ஆஸ்திரியா
டப்ளின் - அயர்லாந்து
 
3) என்ன தகுதிகள் இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது?
 
ஏற்கனவே குறிப்பிட்டது போல, இது தகவல் தொழில்நுட்ப பணிகளை மட்டுமே பற்றியது, மற்ற பணிகளில் வேலை தேடுவோருக்கான தகவல் என்னிடம் இல்லை.
 
தகவல் தொழில்நுட்பத் துறையில் குறைந்தது 3-10 ஆண்டுகள் இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதிக வருடங்கள் அனுபவம் இருந்தால் மிக நல்லது. டெவெலப்பராக (அல்லது டெஸ்டிங்கில் ஆட்டோமேஷன் டெவெலப்பராக) இருக்கும்பட்த்தில் வாய்ப்புகள் மிகப் பிரகாசம். டெஸ்டிங் அல்லது மேனேஜர் போன்ற பணிகளுக்கு விசா பெறுவது மிக கடினம். (இது என் அனுபவத்தில் சொல்வது, டெஸ்டிங் அல்லது மேனேஜர் போன்ற பணிகளுக்கு யாரேனும் விசா பெற்றிருந்தால் அதைப் பற்றி பகிரவும்)
 
4) சம்பளம், செலவுகள் பற்றி கூற முடியமா?
 
தற்போது ஐரோப்பாவில் தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கான சம்பளம் நன்றாக உள்ளது. லண்டன், ஆம்ஸ்டர்டேம் தவிர பிற நகரங்களில் வாழ்க்கை செலவு மிகக் குறைவு தான். ஒரு சிறிய உதாரணம் பார்க்கலாம்
 
பெர்லினில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவருக்கு குறைந்தபட்சம் 5000 யூரோக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. (கவனிக்க, இது குறைந்தபட்சம் தான்). வரி போக கையில் மாசம் 2800 யூரோக்கள் கிடைக்கும். இதில் வீட்டு வாடகை, மற்ற செலவுகளெல்லாம் போக 1400 யூரோக்கள் சேமிக்க‌ வாய்ப்புள்ளது. 1400 யூரோக்கள் என்பது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 1 லட்சம் ரூபாய் சேமிப்பு. மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூறுகிறேன், இது ஒரு உதாரணம் மட்டுமே, நகரத்திற்கு நகரம் சம்பளம் மாறுபடும், செலவுகளும் மாறுபடும். ஆனால் என்னுடைய கணிப்பபின்படி குறைந்தது 5 ஆண்டுகள் டெவெலப்பராக இருக்கும் ஒருவர் மாதம் 1 லட்சம் ரூபாய் சேமிக்க அதிக வாய்ப்புள்ளது (லண்டன், ஆம்ஸட்ர்டாம் தவிர்த்து)
 
5) இவ்வளவு நல்ல வாய்ப்புகள் இருந்தாலும் ஏன் எல்லாரும் இதற்கு முயற்சி செய்வதில்லை?
 
நிறையப் பேருக்கு ஐரோப்பிய வாய்ப்புகள் பற்றித் தெரிவதில்லை. மேலும் ஏற்கனவே குறிப்பிட்டது போல டெவெலப்பர்களுக்கும், ஆர்க்கிடெக்ட்டுகளுக்குமே வாய்ப்புகள் அதிகம், அதுவும் குறைந்தது 3 ஆண்டுகளாவது பணி அனுபவம் வேண்டும். அதிலும் தற்போதைய தொழில்நுட்பங்களில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்படி பல வடிகட்டிகள் இருப்பதால் எல்லாருக்கும் வேலை கிடைப்பது எளிதல்ல. ஆனால் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தருமல்லவா, அதைப் போல முயன்றால் வேலை கிடைக்கும். அதற்கு எவ்வாறு தயார் ஆவது என்பதைப் பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன். 
 
6) உள்ளூர் மொழிகளைப் பேசிப் பழக வேண்டிய அவசியம் உண்டா?
 
கட்டாயத் தேவை என்று சொல்ல வேண்டியதில்லை. பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிந்து வைத்திருந்தால் வேலையைத் தேடுவதற்கும் விசா சுலபமாக வாங்குவதற்கும் மிகுந்த உதவியாக இருக்கும்.
 
7) இந்தியாவில் வேலை தேடுவதற்கு Naukri, monster, Timesjobs மாதிரியான தளங்கள் இருக்கின்றன. ஐரோப்பாவில் எப்படி வேலை தேடுவது?
 
ஐரோப்பாவில் வேலை தேடுவதற்கும் நிறைய இணையத்தளங்கள் இருக்கின்றன. Y-axis மாதிரியான தரமான வேலை பெற்றுத் தரும் நிறுவனங்களும் இருக்கின்றன. போலிகளிடம் ஏமாறாமல் தப்பிப்பதும் அவசியம்.
 
இது ஒரு தொடக்கப்புள்ளிதான். இங்கேயும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதற்காக எழுதியிருக்கிறேன்.  ஆர்வமிருந்து சற்று கூடுதலாக நேரம் ஒதுக்கி இணையத்தில் தேடினால் போதுமானது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஒதுக்கினாலே அட்டகாசப்படுத்திவிடலாம். நாம் தேடுவதில்தான் இருக்கிறது.

வேறு கேள்விகள் இருப்பின் என்னுடைய சிற்றறிவுக்கும், சிற்றனுபவத்திற்கும் எட்டிய வரையில் பதிலளிக்கிறேன். 
 
வாழ்த்துக்கள்.

-- சிவ சுப்பிரமணியம்
 
ஐரோப்பாவில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து எழுதப்பட்ட நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது. இத்தகைய பதிவுகளின் நோக்கம் நூறு சதவீதம் துல்லியமான தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்பதைவிடவும் இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற திறப்புகளைக் காட்டுவதற்காக மட்டும்தான். பாதைகளைக் காட்டினால் தேடுகிறவர்கள் தேடிக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையுண்டு.
                                                                       ****
 
1) எந்தத் தளங்களில் ஐரோப்பாவில் உள்ள வேலைகளைத் தேடலாம் என்பதை தெளிவுபடுத்த முடியுமா?
 
ஏஜெண்டுகளை நம்புவதை விட தன் கையே தனக்கு உதவி என்று களத்தில் குதித்து விடலாம். பின்வரும் தளங்களில் விசா கொடுத்து வேலைக்கு எடுக்கும் வேலைகள் இருக்கின்றன. இங்கு சென்று பார்த்து எந்தெந்த மாதிரியான தொழில்நுட்பங்களுக்கு வேலை கிடைக்கின்றன எனப்பார்த்து அதற்கேற்ப நம்மை தயார் செய்து கொள்ளலாம்
 
 
இதுவும் ஒரு துளி தான். இதே போல பல தளங்கள் இருக்கின்றன.
 
2) எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது?
 
அ) முதலில் எந்தெந்த தொழில்நுட்பங்களுக்கு தேவை அதிகம் இருக்கிறது என மேலே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக  JavaScript, Python, Go Lang, Java போன்ற மொழிகளுக்கு தேவை அதிகம். 
 
ஆ) மேலே குறிப்பிட்டுள்ள நுட்பங்களில் உங்களுக்கு அனுபவம் இல்லை என்றாலும், மனம் தளர வேண்டியதில்லை. தற்போது நீங்கள் இருக்கும் தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமான தேவை இருக்கக்கூடிய மொழி ஒன்றை நீங்களாகவே கற்றுக்கொள்ளலாம். டெவெலப்பராக இருக்கும்பட்சத்தில் Github தளத்தில் உங்களுக்கான பயனர் பக்கம் (profile) இருப்பது அவசியம். Github என்பது ஓப்பன் சோர்ஸ் டெவெலப்பர்கள் தாங்கள் உருவாக்கும் செயலிகளை பொது பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் வைக்கும் ஒரு தளம். Github தளத்தில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் ப்ரோகிராமில் சிறு சிறு ப்ராஜெக்டுகள் செய்து அதை பார்வைக்கு வைக்கவும். விசா கொடுக்கக் கூடிய நிறுவனங்கள் நிச்சயமாக இவற்றை எதிர்பார்ப்பார்கள்.
 
இ) Github தளத்தில் உங்கள் ப்ராஜெக்டுகள் மட்டும் அல்லாமல், மற்ற ஓப்பன் சோர்ஸ் டெவெலப்பர்கள் செய்து கொண்டிருக்கும் ப்ராஜெக்டுகளில் நீங்கள் கலந்து அவர்களுக்கு உதவி செய்யலாம். இதற்கும் நிறுவனங்கள் மத்தியில் மிகுந்த மரியாதை உண்டு.
 
ஈ) நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி தெரிந்து வைத்திருத்தல் அவசியம். அதற்கு https://medium.com/ போன்ற தளங்கள் உதவி செய்யும்
 
உ) தொடர்ச்சியாக நீங்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். தோல்விகளை கண்டு துவளக்கூடாது. சுய முன்னேற்ற புத்தகங்கள் போல பேசுகிறேன் என எண்ண வேண்டாம். வேலை தேட ஆரம்பித்து, நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என கண்டு பிடித்து அதற்கேற்ப என்னை தயார் செய்து வேலை கிடைக்க எனக்கு கிட்டதட்ட 6 மாதங்கள் ஆயிற்று. (அது வரைக்கும் முழு நேர வேலையில் தான் இருந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயார் செய்து கொண்டிருந்தேன்) கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிராகரித்தன. ஆனால் ஒவ்வொரு நிறுவனம் நிராகரிக்கும் போது ஏன் என்று யோசித்து அதற்கேற்ப அடுத்த நிறுவனத்தின் வேலை விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது.
 
எ) அதே போல ஒரே ரெஸ்யூமை எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்பி விட்டு காக்க வேண்டாம். பயனில்லை. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவர்களுடைய வியாபாரம் அல்லது செயலி எதைப் பற்றியது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் ரெஸ்யூமை மாற்றம் செய்து அனுப்ப வேண்டும். மேலும் பல நிறுவனங்கள் வேலைக்கான விண்ணப்பத்தோடு Cover letter யும் எதிர்பார்ப்பார்கள். இதுவும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஏற்றது போல Tailor-made ஆக இருக்க வேண்டும். இதெல்லாம் ரொம்ப கடினம் என்று யோசிப்பவர்கள் வேலை தேடும் படலத்தை விட்டு விடலாம். மெய் வருத்த தான் கூலி கிடைக்கும்.
 
மேலே குறிப்பிட்டுள்ளவை ஒரு Guideline மட்டுமே. நீங்களே களத்தில் இறங்கும் போது நிறைய கற்றுக்கொள்வீர்கள்.
 
3) IELTS தேர்வு எழுத வேண்டுமா?
 
பெரும்பாலான நிறுவனங்கள் இதை எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் ஆங்கில வழியில் பொறியியல் படித்திருந்து ஆங்கிலம் சரளமாக பேச எழுத தெரிந்திருந்தால் போதும். பொறியியல் இல்லை என்றால் பட்ட மேற்படிப்பு படித்திருந்தால் நல்லது. 
 
4) UK இல் வேலை கிடைப்பது கடினமா?
 
Brexit க்குப் பிறகு அங்கு மிகுந்த குழப்பமான சூழல் நிலவுகிறது. ஆனால் Brexit ஆல் இந்தியர்களுக்கு வருங்காலத்தில் ஆதாயம் கிடைக்கும். அது வரை நீங்கள் ஐரோப்பாவின் மற்ற நாடுகளில் முயற்சி செய்யுங்கள். மற்ற ஐரோப்பிய நாடுகளில் வேலை கிடைத்த பிறகு அங்கிருந்து UK செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இப்போது தான் வேலை தேட ஆரம்பிக்கிறீர்கள் என்றால் என்னுடைய பரிந்துரை ஜெர்மனி, நெதர்லாந்து, போர்த்துகலாக இருக்கும்.
 
5) சாதகங்கள் மட்டுமே சொல்கிறீர்களே, பாதகங்களே இல்லையா?
 
அமெரிக்காவை விட ஐரோப்பாவில் இந்தியர்களும் தமிழர்களும் குறைவு. எனவே நீங்கள் தனிமையை உணர வாய்ப்புள்ளது.
 
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி. அனைவரும் ஆங்கிலம் பேச மாட்டார்கள். மருத்துவமனைக்கோ பல்பொருள் அங்காடிக்கோ சென்றால் நீங்கள் அங்குள்ள மொழியில் தான் பேச வேண்டும். அங்கு உங்களுக்கு ஆங்கிலம் உதவாது.
 
ஐரோப்பாவில் உங்கள் துணை வேலை செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதிப்பவர் என்றால் நிரந்தரக் குடியுரிமை பெறும் வரை பெரிய சேமிப்பு இருக்காது. பெரும்பாலான நாடுகளில் நீங்கள் சம்பாதிப்பதில் 30-40 சதவீதம் வரை நீங்கள் வரி கட்ட வேண்டும்.
 
நன்றி,?
 
 

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.