Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறிக்கோளில் முற்றுமுழுதாக தோல்வி கண்டுவரும் கூட்டு அரசு

Featured Replies

 
குறிக்கோளில்  முற்றுமுழுதாக  தோல்வி  கண்டுவரும்  கூட்டு அரசு
 
 

குறிக்கோளில் முற்றுமுழுதாக தோல்வி கண்டுவரும் கூட்டு அரசு

பிரிட்டன் ஏகா­தி­பத்­தி­யத்­தி­ட­மி­ருந்து 1948 ஆம் ஆண்­டில் இலங்கை சுதந்­தி­ரம் பெற்­ற­தி­லி­ருந்து தற்­போது 69ஆண்­டு­கள் நிறை­வ­டைந்துள்­ளன. எமக்­குப் பின்­னர் சுதந்­தி­ரம்­பெற்ற பல ஆசி­யப் பிராந்­திய நாடு­கள் இன்று உல­கின் அபி­வி­ருத்தி அடைந்த நாடு­க­ளின் பட்­டி­யல் இடம்
பி­டித்­துள்­ளன.

ஆனால் இலங்­கையோ தற்­போ­தும் அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­க­ளின் பட்­டி­ய­லி­லேயே வைத்­துக் கணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. தற்­போ­தைய நிலை­யில் தொடர்ந்து பய­ணிக்க நேரு­மா­னால், இன்­ன­மும் 50ஆண்­டு­கள் கழிந்­தா­லும் இலங்கை பொரு­ளா­தார ரீதி­யில் அபி­வி­ருத்தி காண வாய்ப்­ப­மை­யும் என நம்ப இய­லா­துள்­ளது.

ஏனெனில் அபி­வி­ருத்தி என்­பது ஒன்­று­ட­னொன்று தொடர்­பு­டை­யது என்­ப­தால் உல­கத்து ஏனைய நாடு­கள் பல இலங்­கையை விட அதி வேகத்­தில் அபி­வி­ருத்தி கண்டு வரு­வ­தால் இலங்­கை­யின் அபிவி ருத்தி வேகம் பின்­தங்­கி­ யுள்­ளது. அவற்­றில் ஆபி­ரிக்க நாடுகள் சில­வும் அடங்­கி­யுள்­ளன.

வரவு– செலவுத் திட்டங்களின் பற்றாக்குறை கடன் மூலமேநிவர்த்தி செய்யப்பட்டது

நாடு சுதந்­தி­ர­ம­டைந்­த­தன் பின்­ன­ரான 1954 மற்­றும் 1955 ஆம் ஆண்டுகளை நோக்­கும்­போது, இவ்விரு ஆண்டுகளிலும் எமது நாட்­டின் வரவு– செல­வுத் திட்ட பற்­றாக்­குறை நேர­டித் தாக்­கம் செலுத்தி வந்­தது. தேசிய மற்­றும் வெளி­நாட்டு மட்­டத்­தில் கடன்­பெற்றே அது நிவர்த்தி செய்­யப்­பட்­டது.

2005ஆம் ஆண்­டில் மகிந்த தலை­மை­யி­லான அரசு பத­வி­யேற்ற வேளை நாட்­டில் மொத்த கடன் சுமை 2ஆயிரத்து 222 பில்­லி­யன் ரூபா­வா­கக் காணப்­பட்­டது.

மகிந்த அரசின் நிர்வாகத்தில் செலவின உயர்வு

அதே­வேளை 2014ஆம் ஆண்­டின் இறு­தி­யில் மகிந்த அரசு பதவி வில­கிய வேளை அந்­தக் கடன்­சுமை 7ஆயிரத்து 399 பில்­லி­யன் ரூபா­வரை உயர்ந்­தி­ருந்­தது. இது வரு­ட­மொன்­றுக்கு சரா­ச­ரி­யாக 575 பில்­லி­யன் ரூபா என்ற வகை­யில் இடைப்­பட்ட அந்த ஒன்­பது ஆண்டு­கள் காலத்­தி­லும் 5 ஆயிரத்து 169 பில்­லி­யன் ரூபா கடன் சுமை அதி­க­ரித்­தி­ருந்­தது.

இடைப்­பட்ட இந்த 9 ஆண்டு­கள் காலத்­தி­லும் இத்­த­கைய பெரும் நிதித்­தொகை அர­சால் எவ்­வி­தம் கையா­ளப்­பட்­டது என்­ப­தை் தெரிந்­து­கொள்ள வேண்­டு­மா­னால், குறித்த கால இடை­வெ­ளி­யில் இடம்­பெற்ற நட­வ­டிக்­கை­கள் எவை­யென சிந்­தித்­துச் சீர்­தூக்­கிப் பார்த்தல் அவ­சி­ய­மா­கி­றது.

30 ஆண்­டு­கள் கால­மாக நாட்­டில் தொடர்ந்து நில­விய பயங்­க­ர­வாத செயற்­பா­டு­கள் நாட்­டுக்­குப் பெரும் சுமை­யாக அமைந்­ததை இவ்­வி­டத்­தில் சுட்டிக் காட்­டி­யாக வேண்­டும்.

 

குறிப்­பிட்ட இந்­தக் கால இடை­வெ­ளி­யில் நாட்­டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­க­ளுக்கான செலவினம் 20 பில்­லி­யன் அமெ­ரிக்க டொல­ரி­லி­ருந்து அதன் நான்கு மடங்­கான 80 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­வரை அதி­க­ரித்­தி­ருந்­தது.

நாட்­டின் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளுக்­கான செல­வீ­னம் 20 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் வரை உயர்­வ­டை­வ­தற்கு 57 ஆ்ண்டுகள் காலம் ஆகி­யி­ருந்த அதே­வேளை, அது நான்கு மடங்கு தொகை­யான 80 பில்­லி­யன் அமெ­ரிக்க டொல­ராக ஆவ­தற்கு வெறும் 9 ஆண்­டு­கள் காலமே தேவைப்­பட்­டி­ருந்­தது.அதே­வேளை பண­வீக்­கம் 8.3 வீதத்­தி­லி­ருந்து 3.3 வீத­மா­க குறை­வ­டைந்­தது.

வேலை­வாய்ப்­பின்மை 8.3 வீதத்­தி­லி­ருந்து 4.3 வீத­மா­கக் குறை­வ­டைந்­தது. வறுமை­நிலை 15 வீதத்­தி­லி­ருந்து 8 வீத­மா­கக் குறை­வ­டைந்­தது. அதே­வேளை குடி­யி­ருப்­புக்­க­ ளுக்­கான மின்­சார வசதி 73 வீதத்­தி­லி­ருந்து 98 வீதம் வரை அதி­க­ரித்­தி­ருந்­தது.

சுத்­த­மான குடி­தண்­ணீர் வசதி கொண்ட குடி­யி­ருப்­பு­க­ளது தொகை 72 வீதத்­தி­லி­ருந்து 90 வீதம் வரை அதி­க­ரித்­தி­ருந்­தது. தொலை­பே­சிப் பாவனை 37 வீதத்­தி­லி­ருந்து 120 வீதம் வரை அதி­க­ரித்­தி­ருந்­தது.

வரவு– செல­வுத் திட்ட பற்­றாக்­குறை 7.5 வீதத்­தி­
லி­ருந்து 5.7 வீதம் வரை குறை­வ­டைந்­தது. அரச கடன் சுமை, மொத்த தேசிய உற்­பத்தி வீதம் என்ற வகை­யில் 102.5 வீதத்­தி­லி­ருந்து 70.3 வீத­மா­கக் குறை­வ­டைந்­தது.

அதே­வேளை கொழும்பு நக­ரம் ஆசி­யா­வி­லேயே வேக­மாக முன்­னேற்­றம் கண்டு வரும் நக­ர­மாக, சீனா­வைப் பின்­தள்ளி 2014 ஆம் ஆண்டுக்­கான விரு­தைத் தட்­டிக் கொண்­டது. கடந்த மகிந்த தலை­மை­யி­லான அர­சின் கடைசிச் சில ஆண்டு­கள் கால நிர்­வாக வேளை­யில், நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்­றம் வரு­ட­டத்­துக்கு 7 வீதம் என்ற வகை­யில் உயர்­வே­கத்­தில் அபி­வி­ருத்தி கண்­டது.

இதற்­கான உதா­ர­ணத்­துக்­குப் பெரும் பட்­டி­ய­லொன்­றையே சமர்ப்­பிக்க இய­லும். ஆயி­னும் முக்­கி­யத்து­வம்­மிக்க அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­க­ளைக் குறிப்­பி­டு­வ­தன் மூலம் அபி­வி­ருத்­தி­யின் தரம் குறித்து விளக்க இய­லு­மென நம்­பு­கி­றேன்.

மாகம்­புர, ஒலு­வில், கொழும்பு தெற்­குத் துறை­மு­கங்­க­ளின் அபி­வி­ருத்தி, மத்­தள மற்­றும் இர­ணை­மடு விமான நிலை­ யங்­க­ளது நிர்­மா­ணம் மற்­றும் அபி­வி­ருத்தி, கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சாலை, கொழும்பு– மாத்­தறை அதி­வேக நெடுஞ்­சாலை மற்­றும் நாட்­டின் சகல மாவட்­டங்­க­ளி­ன­தும் வீதி­கள் புன­ர­மைப்பு மற்­றும் நிர்­மா­ணம், நாட்­டின் பல்­வேறு மாகா­ணங்­க­ளி­லும் அபி­வி­ருத்தி மற்­றும் புன­ரமைப் புக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யி­ருந்த குளங்­கள், வாவி­கள் மற்­றும் அணைக்­கட்­டுக்­கள் பல­வற்­றின் அபி­வி­ருத்­திப் பணி­கள், நுரைச்­சோலை அனல்­மின் நி­லைய மற்­றும் நீர்­மின் உற்­பத்தி நிலை­யங்­கள் சில­வற்­றின் நிர்­மா­ணம் மற்­றும் அபி­வி­ருத்­திப் பணி­கள், இலங்­கை­யி­லேயே மிக நீள­மான பால­மான கிண்­ணியா பாலம் மற்­றும் நகர்ப்­பு­றங்­க­ளில் நெடுஞ்­சா­லை­க­ளுக்­குக் குறுக்­கான மேம்­பா­லங்­கள் என்­ப­வற்­றின் நிர்­மா­ணம், வடக்கு– கிழக்குப் பகு­தி­க­ளில் போரி­ னால் சேத­ம­டைந்த பல பாட­சா­லை­க­ளின் புனர்­நிர்­மா­ணம், ஊவா வெல்­லஸ்ஸ பல்­க­லைக்­க­ழக நிர்­மா­ணம் போன்ற கல்­வித்­துறை சார் அபி­வி­ருத்­தி­கள், கொழும்­பின் புற­ந­கர் பகு­தி­க­ளில் சேரி­க­ளில் வாழ்ந்து வந்த பொது­மக்­க­ளுக்­கான தொடர்­மா­டிக் குடி­யி­ருப்­புக்­களை நிறுவி வழங்­கி­யமை, தாம­ரைத் தடாக கலா­சார நிலை­யக் கட்­டட நிர்­மா­ணம் மற்­றும் கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்­டத்­தின் கீழான நிர்­மா­ணப் பணி­கள் போன்­றவை போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­ன­ரான கால­கட்­டத்­தில் மகிந்த ராஜ­பக்­ச­வின் தலை­மை­யி­லான அர­சால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­திச் செயற்­பா­டுக­ளில் குறிப்­பிட்­டுச் சொல்­லக் கூடிய ஒரு சில­வா­கும்.

 

இவற்­றை­விட இங்கு குறிப்­பி ­டப்­ப­டாத பல்­வேறு சிறு­சிறு அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை மகிந்­த­வின் அரசு குறு­கிய கால இடை­வெ­ளி­யில் நாட்­டின் பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் துரி­த­மாக முன்­னெ­டுத்து நிறை­வேற்றி வைத்­த­தென்­பதை எம்­மில் பெரும்­பா­லா­னோர் நன்­க­றி­வர்.

ஆனா­லும் இலங்­கை­யின் வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளில் பெரும்­பா­லோர் இவற்­றா­லெல்­லாம் திருப்­தி­ய­டைந்­து­வி­ட­வில்லை. அவர்­க­ளுக்கு அர­சி­யல் மாற்­ற­மொன்று தேவைப்­பட்­டது. அந்த வகை­யில் 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தில் நாட்­டின் நிர்­வா­கத்தை மற்­றொரு புதிய தரப்­பி­னர்­க­ளி­டம் நாட்டு மக்­கள் கைய­ளித்­த­னர்.

நாட்­டுக்­குச் சிறந்த அபி­வி­ருத்­தி­யை­யும் எதிர்­கா­லச் சுபீட்­சத்­தை­யும் ஏற்­ப­டுத்­தித் தரு­வார்­கள் என்ற நம்­பிக்­கை­யி­லேயே அத்­த­கைய ஆட்­சி­மாற்­றத்தை நாட்டு மக்­கள் ஏற்­ப­டுத்தி வைத்­த­னர்.

அபிவிருத்தித் திட்ட யோசனை எவற்றையும்
கூட்டு அரசு கொண்டிருக்கவில்லை

அத்­த­கைய ஆட்சி மாற்­றம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு தற்­போது மூன்று ஆண்­டு­கள் முடி­வுக்கு வந்து கொண்­டி­ருக்­கி­றது. புதிய அரசு பத­விக்கு வந்­த­போது எந்­த­வொரு அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ ளையோ, முன் ஏற்­பாட்­டுத் திட்­டங்­களை கொண்­டி­ருக்­க­வில்லை.

மூன்று நான்கு மாதங்­க­ளுக்கு ஒருமுறை அர­சின் திட்­டங்­க­ளில் மாற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தன் மூலம் மேற்­கு­றிப்­பிட்ட உண்மை உறு­தி­யா­யிற்று. திட்­டங்­கள் சரி­யாக வகுக்­கப்­ப­டா­மை­யால் நிதி விர­ யத்­து­டன் கால விர­ய­மும் ஏற்­பட்­டது.

 

நிர்­வா­கத் தரப்­பி­ன­ரது இய­லாத்­த­னத்தை, திற­மை­யீ­னத்தை ஒரு சிறிய கால இடை­வெ­ளிக்­குள்­ளேயே நாட்டு மக்­க­ளால் தெளி­வாக உணர முடிந்­தது.
இன்­றைய கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தில் பொரு­ளா­தார வளர்ச்சி வேகம் முடங்கியுள்ளது.

அதே­போன்று நாட்­டின் பொரு­ளா­தா­ரம் தொடர்­பான சகல துறை­ க­ளி­லும் முன்­னைய அர­சின் காலத்­தை­வி­டத் தற்­போ­தைய அர­சின் நிர்­வா­கத்­தில் பாதிப்­புக்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தைத் தெளி­வாக உணர முடி­கி­றது.

பன்னாட்டுச் சமூகங்கள் மத்தியில் இலங்கையின் செல்வாக்கு மங்குகிறது

உல­கப் பிர­பல்­யம் வாய்ந்த ‘பிலும்­பேர்க் நிறு­வ­னம்’ இலங்கை வெளி­நா­டு­க­ளது முத­லீ­டு­க­ளுக்கு ஆபத்­தா­ன­தொரு நாடாக ஆகி­யுள்­ள­தாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடந்த மூன்று ஆண்­டுகள் காலத்­தில் 1.6 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்­குக் கூடிய பெறு­ம­தி­கொண்ட வெளி­நாட்டு முத­லீ­டு­கள் இலங்­கை­யி­லி­ருந்து திரும்­பப் பெறப்­பட்­டுள்­ளன.அதே­ச­ம­யம் இன்­றைய மைத்­திரி– ரணில் கூட்டு ஆட்சி, அரசு தொடர்ந்து வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து புதி­தா­கக் கடன்­க­ளைப் பெற்று வரு­கின்­றது. 2014ஆம் ஆண்­டில் 7,391 பில்­லி­யன் ரூபாய்­க­ளாக இருந்த வெளி­நாட்­டுக் கடன் சுமை இவ்­வாண்டு ஜூன் மாதத்­தில் 10ஆயி­ரத்து 163 பில்­லி­யன் ரூபாய்­க­ளாக உயர்­வ­டைந்­துள்­ளது.

நாட்­டின் எதிர்­கா­லப் பரம்­ப­ரை­யி­ன­ருக்­காக நாம் சேமித்து வைக்க வேண்­டிய சொத்­துக்­க­ளை­யெல்­லாம் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு விற்ற அரசு, பன்­னாட்­டுச் சமூ­கம் எமது நாட்­டின் அபி­வி­ருத்­திக்கு உத­வ­வுள்­ளதாகக் கூறி நாட்டு மக்­களை ஏமாற்­றும் குருட்டு நம்­பிக்­கை­யு­டன் காலத்தை போக்­கு­வதை உணர முடி­கி­ற­ தே­யன்றி வேறு எந்­த­வித பொரு­ளா­தார முன்னேற்றத்துக்கான அறி­கு­றியை இன்று அவ­தா­னிக்க முடி­ய­வில்லை.

மகிந்த அரசின் தவறுகளை தோண்டித் துருவி அம்பலப்படுத்தும் அரச தரப்பு

நாட்டு மக்­கள் ஆட்சி அதி­கா­ரத்­தைப் புதிய தரப்­பி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தமை, நாட்டை பொரு­ளா­தார ரீதி­யில் முன்­னேற்­றும் எதிர்­பார்ப்­பு­ட­னே­யே­யன்றி, மகிந்­த­வின் தலை­மை­யி­லான முன்­னைய அரசு மேற்­கொண்ட தவ­று­க­ளைத் தோண்­டித் துருவி வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வல்ல.

ஆனால் இன்­றைய அரசு அதைத் தவிர நாட்­டின் நல­னுக்­காக, நாட்டு மக்­க­ளது நல­னுக்­காக வேறெ ­த­னை­யும் மேற்­கொள்­ள­வில்லை என்தே இன்­றைய யதார்த்த உண்மை.

http://newuthayan.com/story/49693.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.