Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்­திய திட்­டங்­களை விரை­வு­ப­டுத்­துங்கள்...பிரதமர் ரணிலிடம் நரேந்­தி­ர­ மோடி வலி­யு­றுத்தல்

Featured Replies

இந்­திய திட்­டங்­களை விரை­வு­ப­டுத்­துங்கள்

1-5290703e5fc51ab6f0138bed5dc7f34820e8c3cd.jpg

 

பிரதமர் ரணிலிடம் நரேந்­தி­ர­ மோடி வலி­யு­றுத்தல்

நெருக்­க­டி­களை தீர்க்க முடியும்  என ரணில்   நம்­பிக்கை  

(நமது விசேட நிருபர்)

இலங்­கையும் இந்­தி­யாவும் இணைந்து முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னு­ரிமை அளித்து அது­தொ­டர்­பாக தீவிர கவனம் செலுத்தி திட்­டங்­களை விரை­வாக ஆரம்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.  

 இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இலங்­கையும் இந்­தி­யாவும் இணைந்து முன்­னெ­டுக்கும் திட்­டங்­களை விரை­வு­ப­டுத்த அனைத்து முயற்­சி­களை எடுப்­ப­தா­கவும், தற்­போது காணப்­படும் சில நெருக்­க­டி­க­ளுக்கு விரைவில் தீர்­வு­கா­ண­மு­டியும் என நம்­பு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.  

உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இந்­தியா சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுத்­த­போதே இந்­தியப் பிர­தமர் மோடி இந்த விட­யங்­களை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

இதன்­போது இலங்­கையில் இந்­தி­யா­வினால் முன்­னெ­டுக்­கப்­படும் பங்­கு­டமை திட்­டங்கள் பற்றி விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. புது­டில்­லியில் அமைந்­துள்ள ஐத­ராபாத் இல்­லத்தில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் இரு­த­ரப்பு உறவை மேலும் பலப்­ப­டுத்தும் வகையில் பல்­வேறு விட­யங்கள் இரண்டு தரப்­புக்­கு­மி­டையில் பரி­மா­றப்­பட்­டுள்­ளன.

 மேலும் இலங்­கையின் 70 ஆவது சுதந்­திரத் தினத்தை முன்­னிட்டு கல்­வித்­து­றையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள டிஜிட்டல் மறு­சீ­ர­மைப்புத் திட்­டங்­க­ளுக்கு இந்­தியா முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என்று இந்­தியப் பிர­தமர் இலங்கைப் பிர­த­ம­ரிடம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

அத்­துடன் மாண­வர்­க­ளுக்கு டெப் வழங்­கு­வ­தற்­கான திட்­டத்தை முன்­னெ­டுக்­கவும் அதில் சிங்­கள மற்றும் தமிழ் மொழி பிர­யோக மென்­பொ­ருளை உரு­வாக்­கு­வ­தற்கும் இந்­திய தொழில்சார் உத­வியை வழங்­கு­வ­தா­கவும் அதற்­காக இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் தகவல் தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு இணக்­கப்­பா­டொன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளவும் இந்­தியா முன்­னின்று உழைக்கும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் இந்­தியப் பிர­தமர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

இதே­வேளை இந்­து­ச­முத்­திரப் பிராந்­தி­யத்தை சமா­தான வலை­ய­மாக நடத்திச் செல்­ல­வேண்­டி­யதன் அவ­சியம் மற்றும் சுதந்­தி­ர­மான கப்பல் போக்­கு­வ­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான தேவை குறித்தும் இலங்கை இந்­தியப் பிர­தமர் சந்­திப்­பின்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய கூட்டு நட­வ­டிக்கை தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதன்­போதே இலங்­கையும் இந்­தி­யாவும் இணைந்து இலங்­கையில் முன்­னெ­டுக்கும் பங்­கு­டமை வேலைத்­திட்­டங்கள் தொடர்­பாக இரு­வரும் ஆராய்ந்­தி­ருக்­கின்­றனர்.

 இதன்­போ­து­க­ருத்து வெளி­யிட்ட இந்­தியப் பிர­தமர் இலங்­கையும் இந்­தி­யாவும் இணைந்து முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னு­ரிமை அளித்து அது­தொ­டர்­பாக தீவிர கவனம் செலுத்தி திட்­டங்­களை விரை­வாக ஆரம்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இந்த அபி­வி­ருத்தித் திட்­டங்கள் ஊடாக இலங்­கைக்கு சிறந்த பொரு­ளா­தார நன்மை கிடைக்கும் என்­பது மட்­டு­மல்­லாமல் தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கக்­கூ­டிய சந்­தர்ப்பம் உரு­வாகும் என்று இந்­தியப் பிர­தமர் மோடி இலங்கைப் பிர­த­ம­ரிடம் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

இந்­தியப் பிர­த­மரின் இந்தக் கூற்­றுக்கு பதி­ல­ளித்த இலங்கைப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இலங்­கையும் இந்­தி­யாவும் இணைந்து பங்­கு­ட­மையில் பங்­கெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­களை விரை­வு­ப­டுத்த அனைத்து முயற்­சி­களை எடுக்க தயா­ராக இருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். தற்­போது ஏற்­பட்­டுள்ள ஒரு­சில நெருக்­க­டி­களை தீர்த்­துக்­கொள்­வ­தற்கு முடியும் என நம்­பு­வ­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இது இவ்­வா­றி­ருக்க இலங்கை இந்­திய தொடர்­பு­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­காக இலங்கைப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னெ­டுக்கும் அர்ப்­ப­ணிப்பு தொடர்பில் இந்­தியப் பிர­தமர் மோடி இந்த சந்­திப்­பின்­போது பாராட்­டி­யி­ருக்­கின்றார். உள்­ளக அர­சியல் அழுத்­தங்­க­ளுக்கு மத்­தி­யிலும் இலங்கைப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இலங்கை இந்­திய நட்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், அதனை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் பாரிய சேவையை ஆற்­றி­வ­ரு­வ­தாக இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி தெரி­வித்­தி­ருக்­கிறார்.

கடந்த மேமாதம் தான் இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது இலங்கை மக்கள் வழங்­கிய அன்பு, மற்றும் கருணை தொடர்பில் நன்றி தெரி­விப்­ப­தா­கவும் இதன்­போது இந்­தியப் பிர­தமர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

அத்துடன் இலங்கை இந்திய மக்களுக்கிடையிலான தொடர்பை மேலும் முன்னேற்றுவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இந்திய வெளியுறவு செயலர் எஸ். ஜெயசங்கர், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் தரஜித் சந்தூ, இந்திய வெளியுறவு அமைச்சின் கூட்டு செயலாளர் சஜ்ஜே பண்டா ஆகியோர் இந்தியத் தரப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய தரப்பில் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க , சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் சித்ராங்கனி வாகிஸ்வர ஆகியோர் பங்கேற்றனர். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.