Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதபாயவை கைது செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை

Featured Replies

கோதபாயவை கைது செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை

gota-b_CI.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு காவல்துறையினர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோதபாயவின் பெற்றோர்களான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதியினரின் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் 90 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முக்கிய பிரபு ஒருவரை கைது செய்யும் போது ஜனாதிபதியின் அனுமதி பெற்றுக் கொள்வது தற்போது வழமையாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினரும், சட்ட மா அதிபர் திணைக்களமும் சுயாதீனமாக இயங்க வேண்டுமென பிரதமரும் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/archives/51271

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

கோத்தாவை கைது செய்தால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்த நேரிடும் – முரத்தட்டுவே ஆனந்த தேரர்

 

muraththetuva-thero.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்தால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்த நேரிடும் என தாய்நாட்டை பாதுகாக்கும் இயக்கத்தின் உறுப்பினர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.  கொழும்பு அபயாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுதைய அரசாங்கம் பாரியளவில் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆட்சி நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளினால் நாடு அழிவுப்பாதை நோக்கி நகர்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜபக்ஸக்களுடன் தொடர்புடைய எவராக இருந்தாலும்  இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகின்றது என  குறிப்பிட்டுள்ள  முரத்தட்டுவே ஆனந்த தேரர் கோதபாய ராஜபக்ஸ எந்த வகையிலும் குற்றவாளி கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/51301

  • கருத்துக்கள உறவுகள்

அரக்கர்களைத் தெய்வம் தண்டிக்க வேண்டுமானால், அந்த அரக்கர்கள் நிறையப் பாவங்கள் செய்து கொடியவர்களாக வேண்டும் என்று புராணங்கள் சொல்கிறது. :shocked:
 

  • தொடங்கியவர்

கோதாபயவை கைதுசெய்வதைத் தடுத்த ஜனாதிபதி மைத்திரிபால

 
 
கோதாபயவை கைதுசெய்வதைத் தடுத்த ஜனாதிபதி மைத்திரிபால
 
 
 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், கோதாபய ராஜபக்சவை கைதுசெய்யவிருந்த முயற்சியை ஜனாதிபதி தடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச விரைவில் கைதுசெய்யப்படுவார் என அண்மைக்காலமாக செய்திகள் வெளிவருகின்றன. எனினும், கோதாபய ராஜபக்சவின் கைது ராஜபக்ச குடும்ப நாடகத்தின் ஓர் அங்கம் என லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

கோதாபய ராஜபக்ச கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவே ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கியுள்ளார். கோதாபய ராஜபக்சவிற்கு நெருக்கமான ஊடகம் ஒன்றுக்கே பொலிஸ்மா அதிபர் முக்கியமாக இந்தத் தகவலை வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் பணத்தைப் பயன்படுத்தி தனது பெற்றோரின் நினைவிடத்தை நிர்மாணித்ததாக குற்றச்சாட்டிலேயே கோதாபய ராஜபக்ச கைதுசெய்யப்படவுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. பொதுமக்களின் பணத்தில் 9 கோடி ரூபாவை செலவிட்டு இந்த நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பல கோடி ரூபா கொள்ளையிட்ட மிக் கொடுக்கல் வாங்கல், கேலிச் சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்நெஹலியகொட காணாமல் போக செய்யப்பட்டமை, வெலிக்கடை சிறைக்கைதிகள் 27 பேரைக் கொலை செய்தமை, இராணுவத்தினரை அனுப்பி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமை, வடக்கில் நூற்றுக்கணக்கானோரை காணாமல் போகச் செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் கோதாபய ராஜபக்ச மீது இருக்கின்றன. எனினும், இவற்றில் ஒன்றை மையப்படுத்தி அவரைக் கைதுசெய்வதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், கோதாபய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மகிந்த அணியையும், தமது அணியையும் இணைப்பதற்கு கோதாபய ராஜபக்ச பயன்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதாக தெரியவருகிறது.

இதனை அறிந்துகொண்ட பொலிஸ்மா அதிபர் ''அச்சப்பட வேண்டாம் சார். நாம் சரியாக இதனைச் செய்வோம். கைதுசெய்வதைவிட துரிதமாக குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கிறோம். அப்போது அனைவரும் இதிலிருந்து வெளிவரலாம்'' என்று கூறியுள்ளார்.

எனவே, ஊடகக் கண்காட்சியொன்றை நடத்துவதற்காக, கோதாபய ராஜபக்சவைக் கைதுசெய்து, பின்னர் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிருபிக்க முடியாது என்ற தோரணையில் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்க பொலிஸ்மா அதிபர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. அரசியல் நாடகம் ஒன்றை நடத்தி தமது அரசியலை முன்னெடுப்பதற்கே அதிகாரத்தில் உள்ளவர்கள் முயற்சிப்பதாக தெரிகிறது.

குற்றவாளிகளையும், மோசடியாளர்களையும் கைதுசெய்வதாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும், தற்போது அரசியல் செய்வதற்காக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது மக்களைத் தொடர்ந்தும் ஏற்றும் வேலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

http://tamil.lankanewsweb.net/news/breaking-news-lnw/item/5166-gothapaya

  • தொடங்கியவர்

கோத்­தாவை கைது செய்தால் கடும் விளை­வு­களை சந்­திக்க நேரிடும்

 

முருத்­தெட்­டுவ ஆனந்த தேரர் எச்­ச­ரிக்கை

(ரமேஷ்காந்த் ஜெய­சீலன்)

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் கடந்த கால அர­சியல் தலை­வர்கள் இழைத்த தவ­று­களை நிகழ்­கால அர­சியல் தலை­வர்கள் இழைக்­கக்­கூ­டாது. கடந்த கால அர­சியல் சம்­ப­வங்­களை நன்­கு­ணர்ந்து இறை­யாண்­மை­யு­டனும் ஜன­நா­ய­கத்­து­டனும் ஆட்சி புரிய அர­சாங்கம் முன் வர வேண்டும். அதனை விடுத்து

 தமக்கு எதி­ரா­ன­வர்­களை கைது செய்­வ­த­னையும் பழி வாங்கும் பட­லத்­தையும் உட­ன­டி­யாக ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறி­சேன நிறுத்த வேண்டும் என்று ஸ்ரீ அபே­ராம விஹா­ரையின் விஹா­ரா­தி­பதி முருத்­தெட்­டுவ ஆனந்த தேரர் தெரி­வித்தார்.  

தாய் நாட்டை பாது­காக்கம் தேரிய அமைப்பு ஏற்­பாடு செய்த ஊட­க­வி­ய­ளாலர் சந்­திப்பு நேற்று வெள்ளிக் கிழமை நாரஹேன் பிட்­டியில் உள்ள ஸ்ரீ அபே­ராம விஹா­ரை­யிலன் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில் நாடும் நாமும் எங்கு சென்ற கொண்­டி­ருக்­கின்றோம் என்ற புரி­யாத புதி­ரா­கவே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். நாட்டில் நிலவும் குறை­பா­டுகள், பிரச்­சி­னை­களை ஒட்டு மொத்­த­மாக முடி­வுக்கு கொண்டு வருவோம் என ஆட்சி பீட­மே­று­கையில் நல்­லாட்சி அரசு வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது. ஆனால் இன்று தான் வழங்­கிய அத்­தனை வாக்­கு­று­தி­க­ளையும் அர­சாங்கம் நிறை­வேற்ற தவறி வரு­வ­தனை நாட்டில் தினமும் நடக்கும் சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன.  

விலை­வாசி ஒரு புறம் வறுமை மறு புறம் என மக்கள் வாழ்­வா­தா­ரத்­தோடு திண்­டா­டு­கின்­றனர். இயற்கை அனர்த்­த­தாலும் பலர் மர­ணிக்கும் நிலையில் நாடு பூரா­கவும் தினமும் இடம்­பெறும் விபத்­துக்­களால் ஏரா­ள­மானோர் மர­ணிக்­கின்­றனர். நாட்டை ஆளும் அர­சியல் வாதிகள் தமக்கு எதி­ரா­ன­வர்­களை பழி­வாங்கும் சம்­ப­வங்­களும் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவை யாவும் இறுதிக் காலத்தில் இடம்­பெறும் என கௌத்­தம புத்த பகவான் எத்­த­னையோ வரு­டங்­க­ளுக்கு முன்னர் தூர நோக்­குடன் கூறி­யி­ருந்தார். இவை யாவும் இன்று இடம்­பெ­று­கின்­றன.

எமது பாரா­ளு­மன்றம் இன்று மனநோய் வைத்­திய சாலைக்கு ஒப்­பான விதத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றது. மக்கள் பிர­தி­நி­திகள் எனக் கூறப்­ப­டு­ப­வர்கள் அங்கு மன நோயா­ளர்­களைப் போன்று செயற்­ப­டு­கின்­றனர். நாடும் அர­சி­யலும் இவர்­க­ளுக்கு பொழுது போக்கு அம்­சங்­க­ளாகி விட்­டன.

மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்சி காலத்தின் போது எமது நாட்டை அபி­வி­ருத்தி பாதையில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு தன்னை அர்ப்­ப­ணித்­த­வரே முன்னாள் முன்னால் பாது­காப்பு செய­ளாலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆவார். அவர் அறி­மு­கப்­ப­முத்­திய அபி­வி­ருத்தி திட்­டங்கள் யாவும் இன்­றைய அரசால் முடக்­கப்­பட்டு சீர்­கு­ழைந்து போயுள்­ளன.

கோத்­த­பாய விரைவில் கைது செய்­யப்­ப­டலாம் என ஊட­கங்கள் மூல­மாக நாம் அறிந்து கொண்டோம். அவர் நிதி மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக அரச அவர் மீது அபாண்­ட­மாக குற்றம் சுமத்­து­கின்­றது. நிதி மோர­டி­களில் ஈடு­பட வேண்­டிய அவ­சியம் அவ­ருக்கு கிடை­யாது. நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உண்மை நில­வ­ரங்­களைத் தேடிப்­பார்க்க வேண்டும். யதார்த்த அர­சி­யலை அவர் நடத்த வேண்டும்.

பத்து ஆண்­டுகள் ஆட்சி புரிந்த மஹிந்த தரப்­பினர் திரு­டர்கள் என மைத்­திரி ரணில் தரப்பு கூறி வரு­கின்­றது. ஆனால் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக இவர்கள் இலஞ்சம் , ஊழல் துஷ்­பி­ர­யோகம் நிதி மோசடி செயற்­பா­டு­களில் ஈடு­ப­ட­வில்­லையா? மத்­திய வங்கி பிணை­முறி மோச­டியில் ஈடு­பட்­ட­வர்கள் மஹிந்த தரப்­பி­னரா? இன்று மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நிலையில் அர­சாங்கம் சொகுசு வாழ்க்கை நடத்தி வரு­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­திரி ஓர் பௌத்தர். அவ­ருக்கு நான் ஒன்றைக் கூறி­கொள்ள விரும்­பு­கின்றேன். நீங்கள் பௌத்த அனுஷ்­டா­னங்­களை உரிய முறையில் கடை­பி­டி­யுங்கள். தம்ம பதத்தை தினமும் வாசி­யுங்கள். பழி வாங்கும் பட­லத்தை நிறுத்­துங்கள். எதி­ரி­களை எதி­ரி­க­ளாகக் கரு­தாமல் அவர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­குங்கள். மைத்­திரி என்ற கரு­ணையை அர்த்­தப்­ப­டுத்தும் உங்கள் பெய­ருக்­கேற்றாற் போல் வாழுங்கள். அர்த்­த­முள்ள நேர்­மை­யான அர­சி­யலை நடத்­துங்கள். அதனை உங்கள் அர­சியல் தோழர்­க­ளுக்கும் கற்றுக் கொடுங்கள். உண்மையான நல்லாட்சியை நாட்டில் நிலை நிறுத்துங்கள்.

யுத்தத்தின் ஊடாக பயங்கர வாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யும் முயற்சியை விட்டுவிடுங்கள். எமது கோரிக்கைகளை ஏற்று நீங்கள் செயற்படாவிட்டால் தேரர்களாகிய நாம் மக்களுடன் இணைந்து உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் எதிராக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.