Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய தேசிய கட்சியினரை எச்சரிக்கும் ஜனாதிபதி மைத்திரி!

Featured Replies

ஐக்கிய தேசிய கட்சியினரை எச்சரிக்கும் ஜனாதிபதி மைத்திரி!

 

ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது அவற்றை எதிர்த்து தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளைத் துறந்து மக்களுடன் இணைந்தவாறு அவற்றிற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிக்கவரட்டிய பிரதேசத்தில் இன்று (24) முற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ளவர்களும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அந்த தவறுகளை செய்வார்களானால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

ஏற்கனவே இருந்த ஊழல் ஆட்சியை மாற்றிய மக்கள், புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தமையானது சரியான ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக சரியான திசையில் பயணிக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பிரிவு இலகுவானது ஆனால் இணைந்திருப்பது கடினமானதென்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் குழந்தைகளாக இல்லாமல் அறிவார்ந்த முதிர்ச்சியான அரசியல்வாதிகளாக பிளவுகளின்றி நாட்டுக்காக முன்னோக்கிச் செல்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அரசியல் அதிகாரம் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படாது நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அரசியல்வாதிகளாக அனைவரும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

யார் எதைச் சொன்னாலும் தனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எப்போதும் தூய்மையான அரசியல் கலாசாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நீண்ட கால அரசியல் பயணத்தில் பல்வேறு அனுபவங்களுக்கு மத்தியில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் செயற்பட்டதாகவும் தான் பயில்வதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தேவையாக இருப்பது விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி இதற்குத் தேவையான அனைத்து அர்ப்பணிப்புகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

19ஆம் அரசியல் அமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 47 ஆசனங்கள் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்திலாகும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 142 வாக்குகளும் அதற்காக வழங்கப்பட்டதை நினைவு படுத்திய ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டியது தேர்தல் வெற்றிக்காக மட்டுமன்றி சிறந்த அரசியல் கலாசாரத்திற்காகவுமாகும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தனது பணிப்புரையின் பேரில் மாதமொன்றிற்கு ஆறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செலவிடுவதாக குறிப்பிட்டார்.

வடமேல் மாகாண மக்களின் கௌரவத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.

வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, இராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா, பிரதி அமைச்சர் தாராநாத் பஸ்நாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் சாந்த பண்டார, வடமேல் மாகாண அமைச்சர் லக்ஷ்மன் வெண்டருவ, ஆனந்த சரத் குமார, ஆனந்த ஜயலத், கமல் இந்திக்க, நிலந்த சுபுன் ராஜபக்ஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதே நேரம் ’அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிக்கவரட்டிய ரஜபிம வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான பீடக் கட்டிடம் இன்று ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, கடந்த 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற ரணவிரு குடும்பத்தைச் சேர்ந்த எம். லசிந்து கசேத் என்ற மாணவனுக்கான பரிசினை வழங்கி வைத்தார்.

கல்லூரி அதிபர் திசாநாயக்கவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.

இதே நேரம் நிக்கவரடிய புதுமுத்தாவ ரஜமகா விகாரைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, விகாராதிபதி சங்கைக்குரிய தொம்பகொல்லே தம்மாராம நாயக்க தேரரை சந்தித்து சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

நிக்கவரடிய சமதராப்பிடிய ஸ்ரீ பாலித்த பிரிவெனாவின் தலைவர் சங்கைக்குரிய கலபிடியாகம விமலதம்ம தேரர், சங்கைக்குரிய தும்புல்லேகம ஸ்ரீ சுமணநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்தனர்.

’அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிக்கவரடிய ஜயந்தி மத்திய மகா வித்தியாலயத்தில் ஒரு கோடி அறுபது இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி நாட்டினார்.

கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இக்கல்லூரியில் கடந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் சாந்த பண்டார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/President-warns-UNP-slams-those-critical-of-him

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.