Jump to content

சிந்துவெளி நாகரிகம்


Recommended Posts

பதியப்பட்டது

சிந்துவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization) எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகளில் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்னும் வாசித்து அறிய முடியவில்லை.

சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் என்பன இக் கூற்றுக்கான சான்றுகளாகும். எனினும் இவை சிறிய நகரங்களாகவும், சுதந்திரமான நிர்வாகம் மற்றும் தன்நிறைவுப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட நகர அரசுகளாகவே இருந்தன.

தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம், முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அக்காலத்து வேறெந்த நாகரிகத்திலும் பார்க்க அளவிற் பெரிதாக சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் (5 இலட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக வளர்ந்திருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இந்த நகரங்கள், குடியேற்றங்களினது ஒரு தன்மைத்தான அமைப்பு இவையனைத்தும் ஒரு உயர் வளர்ச்சி நிலையில் சமூக ஒருங்கிணைப்பு வல்லமை கொண்ட ஒரே நிர்வாகத்திக் கீழ் அமைந்திருந்தமையைக் காட்டுகின்றது.

சிந்துவெளிப் பண்பாட்டின் காலப் பகுப்பு

முறையான ஹரப்பா பண்பாடு கி.மு 2600 இலிருந்து 1900 வரை நிலவியது. இதன் முன் நிலவிய மற்றும் பின் நிலவிய பண்பாடுகளான முந்திய மற்றும் பிந்திய ஹரப்பாப் பண்பாடுகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, இது, கி.மு 33 - 14 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பித்ததாகக் கருதலாம். சிந்துவெளிப் பண்பாட்டின் காலப் பகுப்பு தொடர்பில் இரண்டுவகையான பகுப்புக உள்ளன. ஒன்று சகாப்தங்கள் (Eras) மற்றது கட்டங்கள் (Phases).

கால எல்லை கட்டம் சகாப்தம்

5500-3300 மெஹெர்கர் II-VI Regionalisation Era

3300-2600 முந்திய ஹரப்பன் Regionalisation Era

3300-2800 ஹரப்பா 1 (ரவி கட்டம்) Regionalisation Era

2800-2600 ஹரப்பா 2 (கொட் டிஜி கட்டம், Regionalisation Era

நௌஷாரோ I, மெஹெர்கர் VII)

2600-1900 முதிர் ஹரப்பா ஒருங்கிணைப்புசகாப்தம்

2600-2450 ஹரப்பா 3A (நௌஷாரோ II) ஒருங்கிணைப்புசகாப்தம்

2450-2200 ஹரப்பா 3B ஒருங்கிணைப்புசகாப்தம்

2200-1900 ஹரப்பா 3C ஒருங்கிணைப்புசகாப்தம்

1900-1300 பிந்திய ஹரப்பா (மயானம் H) Localisation சகாப்தம்

1900-1700 ஹரப்பா 4 Localisation சகாப்தம்

1700-1300 ஹரப்பா 5 Localisation சகாப்தம்

மக்களினம்

சிந்து வெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும், ஆய்வாளர்கள் பல்வேறு ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற கருத்துக்களை முன் வைத்து வாதிட்டு வருகின்றனர். சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என ஒரு சாராரும், இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூற வேறு பலர் பலவிதமான கலப்பினக் கொள்கைகளையும் முன் வைத்துள்ளனர்.

சமயம்

சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப் படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்துசமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால இந்து சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது.

மொழி

பசுபதி என இனங்காணப்பட்டுள்ள உருவமும், குறியீடுகளும் பொறிக்கப்பட்ட ஒரு முத்திரை.முதன்மைக் கட்டுரை: சிந்துவெளி நாகரிக மக்களின் மொழி

சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இது வரை வெளிப்படவில்லை. இங்கு பேசப் பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக்களை வாசிக்கும் முயற்சிகளில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையாளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். எனினும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து தான் வருகின்றன. இது இந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களே என நம்பும் ஆய்வாளர்களும், இம்மொழி எந்த மொழியினத்தைச் சார்ந்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வரமுடியாமல் உள்ளனர். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும்பான்மையாகப் பேசப்படுவது இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ-ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இது முண்டா மொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள். சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதனால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன.

நகர அமைப்பும், கட்டிடக்கலையும்

மொஹெஞ்சதாரோ நகரின் ஒரு பகுதியைக் காட்டும், கணனி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தோற்றம்சிந்துவெளி நாகரீகத்தில், சிக்கல் தன்மை வாய்ந்த, உயர்நிலை நகர்சார் பண்பாடு இருந்தது. இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை, சுகாதாரத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கின்ற உள்ளூராட்சி அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந் நாகரீக மக்களிடையே நிலவியமையைக் காட்டுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள், முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தம், துர்நாற்றம், கள்வர் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹரப்பா, மொஹெஞ்சதாரோ, மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கிகர்ஹி ஆகியவற்றில் காணப்படுகின்ற சுகாதார அமைப்பு முறைமைகள், உலகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறைமைகளாகும். நகரங்களில், வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.

பண்டைக்காலச் சிந்து வெளியின் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள், சமகால மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் திறன் மிக்கவையாக இருந்தது மட்டுமன்றித் தற்கால இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள சில பகுதிகளில் காணப்படுபவற்றிலும் சிறந்தவையாகவும் காணப்படன.

சிந்துவெளி நாகரீகக்காலக் கட்டிடக்கலையின் தரம் பற்றி, அங்கே காணப்படுகின்ற இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பெரிய அளவிலான நகர் பாதுகாப்புக் கோட்டைகள், அக்காலத்து மெசொப்பொத்தேமியாவில் காணப்பட்ட பெரும்பாலான ஸிகரெட்டுக்களிலும் பெரியவை.

இவ்வாறான கோட்டைகள் கட்டப்பட்டதற்கான காரணம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. மெசொப்பொத்தேமியா, எகிப்து போன்ற, இப் பண்பாட்டின் சமகாலப் பண்பாடுகளில் காணப்படுவதற்கு முரணாக, இங்கே பிரம்மாண்டமான கட்டுமானச் சின்னங்கள் (monumental structures) எதுவும் காணப்படவில்லை. இங்கே, அரண்மனைகளோ, கோயில்களோ இருந்ததற்கான முடிவான சான்றுகளோ, அரசர், படைகள், சமயக் குருமார் போன்றவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. ஒரு நகரத்தில், பொதுக் குளியல் இடம் எனக் கருதப்படுகின்ற, சிறப்பாகக் கட்டப்பட்ட குளியல் தடாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டைகள் மதிலால் சூழப்பட்டிருந்தபோதும், இவை பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்பட்டவையா என்பதில் தெளிவு இல்லை. இவை வெள்ள நீர் உட்புகாது தடுப்பதற்காகக் கட்டப்பட்டவையாகவும் இருக்கலாம்.

பெரும்பாலான நகரவாசிகள், வணிகராகவும், கைவினைஞராகவும் இருந்ததாகத் தெரிகிறது. முத்திரைகள், மணிகள் (beads) மற்றும் பலவகைப் பொருட்களைச் செய்வதற்காக தொலைதூர இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சில வீடுகள் ஏனையவற்றிலும் பெரியவையாகக் காணப்பட்டபோதிலும், பொதுவாக இவற்றின் அமைப்பு, சிந்துவெளி நகரச் சமுதாயம் பெருமளவுக்கு ஒரு சமத்துவச் சமுதாய அமைப்பைக் கொண்டு விளங்கியமையையே காட்டுகிறது.

[தொகு] சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி

கி.மு 1800 அளவில் இப் பண்பாட்டின் படிப்படியான வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகிறது. கி.மு 1700 இல் பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும்,சிந்துவெளிப் பண்பாடு சடுதியாக மறைந்துவிடவில்லை. இப் பண்பாட்டின் பல கூறுகள் பிற்காலப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. நடப்புத் தொல்லியல் தரவுகள், பிந்திய ஹரப்பாப் பண்பாடு என்று குறிக்கப்படுகின்ற பொருள்சார் பண்பாடு, கி.மு 1000 - 900 வரையிலுமாவது தொடர்ந்திருக்கக்கூடும் என்று காட்டுகின்றன.

சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குக் காலநிலை மாற்றம் தொடர்பான இயற்கைக் காரணங்கள் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. சிந்துவெளியின் காலநிலை கி.மு 1800 இலிருந்து, குறிப்பிடத் தக்க அளவு குளிரானதாகவும், வரண்டதாகவும் மாறியது. காக்கர் ஹக்ரா ஆற்று (Ghaggar Hakra river) முறைமையில் குறிப்பிடத்தக்க பகுதி இல்லாமல் போனதும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் மேற்படி எடுகோள் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆரியர் முதலாக, துருக்கியர், முகலாயர் போன்றோர் இந்து குஷ் பகுதியில் உள்ள கணவாய்கள் வழியாகத் தென்னாசியாவுக்குள் ஊடுருவிய பாதையில், இப் பகுதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சிந்து வெளிப் பண்பாட்டின் வீழ்ச்சி மற்றும் ஆரியர் வட இந்தியாவுக்குள் நுழைந்த இந்தோ-ஆரிய இடப்பெயர்வு தொடர்பான எடுகோள்கள் ஆராயப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ஒரு "ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை"யாக முன்வைக்கப்பட்டது. இதன் வீழ்ச்சிக்காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இக் கோட்பாட்டுக்கு ஒரு சான்றாக அமைந்தது. அத்துடன் போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் மேற்படைகளில் காணப்பட்டதும் இக் கோட்பாட்டிற்கு வலு சேர்த்தது. தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) இது பற்றிக் குறிப்பிட்டபோது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே, அழிவுக்காகக் "குற்றம் சாட்டப்படுகிறான்" என்றார். இன்று இக் கொள்கைக்கு மாற்றாக வேறு பல கொள்கைகளும் நிலவுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் வெளியிலிருந்து வரவில்லையென்றும், இந்தியாவே அவர்களது தாயகம் என்றும், இந்தோ ஐரோப்பிய மொழிகள் தோன்றியது இந்தியாவிலேயே என்றும், சில இந்திய ஆய்வாளர்கள், குறிப்பாக வட இந்திய ஆய்வாளர்கள் வாதாடி வருகிறார்கள். சிந்துவெளி நாகரீகம் ஆரியர்களுடையது என்பதும் இவர்களது வாதம். எனினும் இவ் வாதம் அனைத்துலக அளவில் அறிஞர் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை.

f_IVCMapm_22976b2.jpg

சிந்துவெளி

பல தளங்களிலிருந்து தொகுக்கப் பட்டது

Posted

தமிழகத்தில் சிந்துச் சமவெளி நாகரிக நீட்சி

மயிலாடு துறை செம்பியம் கண்டியூரில் தடயம்

சிந்துச்சமவெளி எழுத்துகள் கொண்ட புதிய கற்காலத்துக்கைக் கோடரி ஒன்று மயிலாடுதுறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. “இது மிகப் பெரிய கண்டுபிடிப்பு, ஏனென்றால் முதல்முறையாக சிந்துச் சமவெளி எழுத்துகள் அடங்கியதும், கால வரையறை செய்யக்கூடியதுமான ஒரு தடயம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, என்கிறார் சிந்து சமவெளி எழுத்துகள் பற்றித் தமிழகத் தொல்லியல் துறை வல்லுநரான ஐராவதம் மஹாதேவன். “இதன் மூலம் தெரிய வரும் உண்மை என்னவென்றால் தமிழகத்தைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மொழிக்குடும்பம் சார்ந்த மொழி ஒன்றையே பேசினார்கள் என்பதுதான். அம்மொழி திராவிட மொழியே, என்பதும் அவர் கருத்து, தடயத்தின் காலம் கி.மு. 2000 - 1500 என்றும் அவர் வரையறை செய்கிறார்.

2006 பிப்ரவரி மாதத்தில் வி. ஷண்முகநாதன் என்னும் பள்ளியாசிரியர் வீட்டுப்புறக்கடையில் குழி தோண்டிய போது தற்செயலாக இத்தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழ்வாய்வில் ஆர்வம் கொண்ட ஆசிரியர் தரங்கம்பாடி அருங்காட்சியகத்தில் பணிபுரியும் தமது நண்பர் ஜி. முத்துசாமி என்பவருக்கு இதைத் தெரிவிக்க தடயங்கள் அரசு - அகழ்வாய்வுத்துறையினர் வசம் வந்தன.

தடயங்களை ஆய்வு செய்தபோது அவற்றில் 4 குறியீடுகள் அல்லது சின்னங்கள் இருப்பதும் அவை சிந்துச்சமவெளி எழுத்துவகை சார்ந்தவை என்பதும் கண்டறியப்பட்டன. அவை சிந்துச்சமவெளி சார்ந்தவையே என்று மஹாதேவன் கூறினார். கண்டறியப்பட்ட இரு கோடரிகளில் ஒன்றில் எழுத்துகள் இல்லை. ஒன்றில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு கோடரியும் 125 கிராம் எடை கொண்டது.

இனி அந்த 4 குறியீடுகள் பற்றி - முதல் குறியீட்டில் விலா எலும்புகள் கொண்ட ஒரு மனிதன் முதுகு கூன் வளைந்து பின்னங்கால் மடித்து முழங்கால் உயர்த்தி அமர்ந்திருக்கும் தோற்றம். இரண்டாம் குறியீடு கைப்பிடி கொண்ட ஒரு குவளை. முதல் குறியீடு ‘முருகு’ என்றும் இரண்டாம் குறியீடு ‘அன்’என்றும் படிக்கப் படவேண்டியவை. இரண்டும் இணைந்து ‘முருகன்’ ஆகின்றன. ஹரப்பா தடயங்களில் இவ்விரு பொருள்களும் பல்கிவருபவை. “முருகு” சின்னம் 48 என்னும் சிந்துச்சமவெளி முத்திரை எண்ணோடும் “அன்” சின்னம் 342 என்னும் எண்ணோடும் பொருந்துகின்றன. மூன்றாம் சின்னம் சூலம் போல் தோன்றுகிறது. அதன் எண் 367. நான்காம் சின்னம் 301. மஹாதேவன் சிந்துச் சமவெளி எழுத்துகள் பற்றி வெளியிட்டுள்ள பட்டியலில் இவை தரப்பட்டுள்ளன. மஹாதேவன் சொல்கிறார் - ‘முருகு’ ‘அன்’ என்னும் இரு சொற்களும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஹரப்பா வரிவடிவங்களில் இடம் பெறுகின்றன.

செம்பியம் கண்டியூர் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் வாய்ந்தது; ஹரப்பா, தமிழகம் ஆகிய இரு நிலப்பகுதிகளில் மக்கள் ஒரே வரிவடிவத்தை மட்டுமன்றி ஒரே மொழியைத்தான் பயன்படுத்தினார்கள் என்பது இதனால் பெறப்படும் உண்மையாகும்.

முருகு என்னும் சின்னம் தமிழ்நாட்டில் முதன்முதலில் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள சானூரில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட ஓவியங்களிலிருந்து அறியப்பட்டது. பி. பி லால் என்னும் அகழ்வாய்வாளர் இதைச் சிந்துச் சமவெளியின் 47 ஆம் முத்திரை எண்ணோடு ஒப்பிட்டு அடையாளப்படுத்தினார். மாங்குடி (திருநெல்வேலி), முசிறி (கேரளம்) மண்பாண்ட ஓவியங்களிலும் இச்சின்னம் சுட்டி அடையாளம் காட்டப் பட்டுள்ளது. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக ஒரு முழுச் சிந்துச்சமவெளி வரிவடிவம் ஒரு கற்கருவியில் பதிந்துள்ளமை நம் பார்வைக்கு வந்துள்ளது -- என்கிறார் மஹாதேவன்.

“இக்கற்கருவி வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது. இது தென்னாட்டைச் சேர்ந்ததுதான். இத்தகைய கற்கள் வடநாட்டில் இல்லை. இவை நம் தீபகற்பம் சார்ந்தவை. இக்கண்டுபிடிப்பின் மூலம் சிந்துச்சமவெளி மக்கள் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒன்றைப் பேசியவர்கள் அல்லர். அவர்கள் திராவிட மொழி பேசியவர்கள்தாம் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது” என்றும் உறுதியாகச் சொல்கிறார் மஹாதேவன்.

நன்றி : தி இந்து மே-2006.

(குறிப்பு: தமிழ்மொழி - தமிழ்நாடு வரலாற்றின் தொன்மையை ஆய்ந்தறிந்து காலவரையறை செய்ய இது உதவலாம். இது போன்ற எண்ணற்ற தடயங்கள் நிலத்துக்கடியில் இன்னும் புதைந்து கிடக்கலாம்

ஆசிரியர்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு தகவல் நண்பரே!

வெறுமனே தமிழன் தான் மூத்தகுடி என்று சொல்வதை ஆதாரங்களோடு நிருபித்தலே, உலகத்திற்கு சொல்லப்படும் செய்தியாக இருக்கும்.

தொடர்ந்து இணையுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.