Jump to content

நாங்கள் யார்?

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

  1. யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள்.
  2. உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்?
  3. மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)?
  4. தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா?
  5. அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்?
  6. நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)?
  7. எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)?

தயவு செய்து பதில் சொல்லுங்கள்! மேலுள்ள வற்றை அப்படியே கொப்பி செய்து பதிலில் ஒட்டி உங்கள் பதிலையும் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏதோ கஸ்டப்பட்டுக் கேட்டுட்டீங்க.. பொதுவான பதில்கள்..

  1. யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள்.
    இப்படி வெளிப்படையாகக் கேட்டால் எப்படி? உருப்படியாக அலசி முடிவுகள் எடுத்து செயற்படுத்த கூட்டங்களா யாழ் களத்தில் நடக்கின்றது? பல்வேறு அவதாரங்களிற்குள் பற்பலர் இருப்பார்கள்.. ஒவ்வொருவரின் உள்நோக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.. நம்பிக்கையை கட்டியெழுப்பி ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஒருங்கிணைப்பது என்பது நேரடிச் சந்திப்புக்கள் இன்றி, ஒத்துழைப்புக்கள் இன்றி நடக்கமாட்டா. எனவே இங்கு கருத்தாடுபவர்கள் உருப்படியாகக் கருத்தாடுகின்றார்களா இல்லையா என்பதை ஆராயாமல், எல்லோருக்கும் தமிழீழம் என்ற இலக்கின் தேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதற் காரியமாக இருக்கவேண்டும்..
    அறிபூர்வமாக மட்டும் கருத்தாடினால், பலருக்கு அது சலிப்பை உருவாக்கும்.. பெரும் கட்டுரைகளை எழுதினால் ஒன்றிரண்டு பேருக்கு மேல் படிக்கமாட்டார்கள். சிறு சிறு பந்தியாக எழுதினால்தான் வாசிக்க இலகுவாக இருக்கும் என்று சொல்வார்கள்.. எனவே மாற்றங்களை சடுதியாக கொண்டுவரலாம் என்ற நினைப்பைவிட்டு எப்படியும் சரியான திசையில் பயணித்தால் போதும் என்றிருப்பது நல்லது.

  2. உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்?
    கூடிக் கதைக்கின்றோம். ஊரில் சந்திகளிலும், தெருமுனைகளிலும் நின்று கதைப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்.. எல்லோரும் வெட்டிப் பேச்சில் நேரத்தை விரயமாக்குவதில்லை. எனவே யாழ் களமூடாக 5% சதவீதம் தேசியத்தைப் பற்றி ஒருவர் ஒவ்வொரு நாளும் அறிந்தாலே போதுமானது!

  3. மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)?
    நீங்கள் கூறியபடி எல்லோரும் ஊடகவியலாளராக இருக்க முடியாது. அபிப்பிராயங்களை பகிர்வதற்கு ஒவ்வொருவருக்கும் வேறுவேறான தெரிவுகள்/முறைகள் உண்டு. ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டுவந்து இப்படித்தான் அபிப்பிராயம் சொல்லவேண்டும், இந்த இந்த விதிகளைக் கடைப் பிடிக்கவேண்டும் என்று அறிவுரைகள் சொல்லுவது கருத்துக்கள் பதிவதைத்தான் குறைக்கும்.

  4. தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா?
    புலம்பெயர் மக்கள் எல்லோரும் மனம் வருந்தி கொலைகளைத் தடுப்பதற்கு முயற்சிகள் செய்ய ஆரம்பித்தால், பல விடயங்கள் எங்களுக்கு சாதகமாக எப்போதோ நடந்து முடிந்திருக்கும். எனவே இங்கு வருபவர்கள் எல்லோரும் ஒத்த கருத்தினர், ஒரே நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள் என்று நினைக்காமல், நாம் எல்லோரும் புலம் பெயர் மக்களின் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தும் மாதிரிகள் என்று கொள்ளவேண்டும்.. எனவே சிலர் கொலைகளையும் அவலங்களையும் பற்றி வருத்தப்படுவார்கள், சிலர் செய்தி என்ன என்று அறிய வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள், சிலர் தங்கள் கணிப்பீடுகள் சரியாக நடக்கின்றன என்பதையிட்டுப் பெருமிதம் கொள்வார்கள். இப்படி பலவற்றைக் கூறலாம்..

  5. அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்?
    செய்பவர்கள் சிறு பகுதியினர். பலரைப் பங்களிக்கச் செய்ய நீண்ட காலம் எடுக்கும்.. அரசியல் தெளிவற்றும், அரசியல் அறிவற்றும், அல்லது அதைப் பற்றி அக்கறையற்றும் இருக்கும் பலரை மாற்றத் தனிநபர்களின் முயற்சிகள் போதாது. பல்ரின் கூட்டு முயற்சி தேவை. ஒரே குடையின் கீழ் ஒவ்வொரு நாடுகளிலும் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவர்கள் தேவை. சுயநல/குறுகிய நல நோக்கோடு செயற்படமால், பொது நோக்கத்தோடு செயற்பட எல்லோரும் முன்வந்தால் பலவிடயங்களைச் சாதிக்கலாம்.

  6. நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)?
    ஒரு பலனுமில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தமிழர்களின் பலம் இல்லை. ஒற்றுமையாகச் செயற்படாமல் சிதறி இருக்குமட்டும் பெரிய மாற்றங்களைப் புலம்பெயர் தமிழரால் கொண்டுவரமுடியாது.

  7. எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)?
    எதிர்கால இலக்கு: யாழ் களம் என்றால் தொடர்ந்து கருத்தாடுவது (அதாவது ஒன்றும் செய்யாமல் இருப்பது).. புலம் பெயர் தமிழர்கள் என்றால் வெற்றிச் செய்திகள் வரும் என்று காத்திருப்பது. தாயகத் தமிழர் என்றால் எப்போது அவலங்கள் நீங்கி விடிவு கிட்டும் என்று காத்திருப்பது.. ஆக மொத்தத்தில் "காத்திருப்பு" ஒன்று மட்டும்தான் எமது இலக்காக இருக்கும்.

    மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்றால் தெருவில் இறங்க வேண்டும், விசைப்பலகையைத் தட்டி ஒன்றையும் கிழிக்க முடியாது..
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கிருபன்

    உங்கள் கருத்தின்படி யாழ் களத்தைப்பொறுத்தவரை எங்களுக்கு தமிழீழம் தேவை, ஏன் தேவை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதுமானது. மற்றபடி அதைப்பெற எம் பங்கு என்ன என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தத்தேவையில்லை என்கிறீர்கள்
  2. உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்?
    கூடிக் கதைக்கின்றோம். ஊரில் சந்திகளிலும், தெருமுனைகளிலும் நின்று கதைப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்.. எல்லோரும் வெட்டிப் பேச்சில் நேரத்தை விரயமாக்குவதில்லை. எனவே யாழ் களமூடாக 5% சதவீதம் தேசியத்தைப் பற்றி ஒருவர் ஒவ்வொரு நாளும் அறிந்தாலே போதுமானது!
    5% பேர் தேசியத்தைப்பற்றி அறிந்தாலே போதும். அடடா! உங்கள் கணக்குப்ப்டி பார்த்தாலும் 20 நாட்களில் எல்லாருக்கும் தேசியத்தைப்பற்றி 100% தெளிவு இருக்க வேண்டுமே? இருக்கிறதா?
  3. மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)?
    நீங்கள் கூறியபடி எல்லோரும் ஊடகவியலாளராக இருக்க முடியாது. அபிப்பிராயங்களை பகிர்வதற்கு ஒவ்வொருவருக்கும் வேறுவேறான தெரிவுகள்/முறைகள் உண்டு. ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டுவந்து இப்படித்தான் அபிப்பிராயம் சொல்லவேண்டும், இந்த இந்த விதிகளைக் கடைப் பிடிக்கவேண்டும் என்று அறிவுரைகள் சொல்லுவது கருத்துக்கள் பதிவதைத்தான் குறைக்கும்.
    கர்ப்பிணிப்பெண்கள் அதிகம் உடலை வருத்தினால், ஏதாவது வழமைக்கு மாறான கடும்வேலை செய்தால் கூடாது என்பார்கள். கிபிர் வட்டமிட்டு அடிக்கும் போது அவர்கள் இதை எல்லாம் பார்க்கிறார்களா? உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்களே? எதற்காக? ஆக நாங்கள் காலத்தின் தேவையறிந்து ஓடத்தேவையில்லை என்கிறீர்கள். ஆறுதலாக அரட்டையடித்து அளவாக தாயகத்தைப்பற்றி அறிந்து கொள்வோம் என்கிறீர்கள். ஏனென்றால் எங்களுக்கு மேல் கிபிர் வட்டமிடவில்லைத்தானே!
  4. தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா?
    புலம்பெயர் மக்கள் எல்லோரும் மனம் வருந்தி கொலைகளைத் தடுப்பதற்கு முயற்சிகள் செய்ய ஆரம்பித்தால், பல விடயங்கள் எங்களுக்கு சாதகமாக எப்போதோ நடந்து முடிந்திருக்கும். எனவே இங்கு வருபவர்கள் எல்லோரும் ஒத்த கருத்தினர், ஒரே நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள் என்று நினைக்காமல், நாம் எல்லோரும் புலம் பெயர் மக்களின் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தும் மாதிரிகள் என்று கொள்ளவேண்டும்.. எனவே சிலர் கொலைகளையும் அவலங்களையும் பற்றி வருத்தப்படுவார்கள், சிலர் செய்தி என்ன என்று அறிய வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள், சிலர் தங்கள் கணிப்பீடுகள் சரியாக நடக்கின்றன என்பதையிட்டுப் பெருமிதம் கொள்வார்கள். இப்படி பலவற்றைக் கூறலாம்..
    சிலர் வருந்துகிறார்கள். சிலர் அறிவதோடு நிறுத்துவர். சிலர் dont care என்கிறீர்கள். அந்த dont care ஆசாமிக்ளை விடுங்கள். மற்றவர்களுக்கு அந்தக்கொலைகளுக்கு எவ்வாறு தம் சக்திக்கேற்றவாறு எதிர்வினையற்றுவது என்று கற்றுக்கொடுக்கவேண்டாமா? தனிமனிதனால் அப்படிச் செய்யமுடியாது என்று நினைக்கிறீர்களா?
  5. அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்?
    செய்பவர்கள் சிறு பகுதியினர். பலரைப் பங்களிக்கச் செய்ய நீண்ட காலம் எடுக்கும்.. அரசியல் தெளிவற்றும், அரசியல் அறிவற்றும், அல்லது அதைப் பற்றி அக்கறையற்றும் இருக்கும் பலரை மாற்றத் தனிநபர்களின் முயற்சிகள் போதாது. பல்ரின் கூட்டு முயற்சி தேவை. ஒரே குடையின் கீழ் ஒவ்வொரு நாடுகளிலும் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவர்கள் தேவை. சுயநல/குறுகிய நல நோக்கோடு செயற்படமால், பொது நோக்கத்தோடு செயற்பட எல்லோரும் முன்வந்தால் பலவிடயங்களைச் சாதிக்கலாம்.
    செய்யவேண்டுமென்று ஒத்துக்கொள்கிறீர்க்ளல்லவா? நீண்டகாலம் என்றால் எவ்வளவு காலம்? எங்களால் இதைவிட வேகமாக செய்யமுடிது என்று நினைக்கிறீர்களா?
  6. நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)?
    ஒரு பலனுமில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தமிழர்களின் பலம் இல்லை. ஒற்றுமையாகச் செயற்படாமல் சிதறி இருக்குமட்டும் பெரிய மாற்றங்களைப் புலம்பெயர் தமிழரால் கொண்டுவரமுடியாது.
    ஏதோ கொஞ்சப்பலுள்ளது என்கிறீர்கள் தானே? ஆக செய்வது வீண்போக வில்லை. இப்போது தேவை எங்கள் efficiendy யை கூட்டுவது. மனம் வைத்தால் செய்ய முடியாதா?
  7. எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)?
    எதிர்கால இலக்கு: யாழ் களம் என்றால் தொடர்ந்து கருத்தாடுவது (அதாவது ஒன்றும் செய்யாமல் இருப்பது).. புலம் பெயர் தமிழர்கள் என்றால் வெற்றிச் செய்திகள் வரும் என்று காத்திருப்பது. தாயகத் தமிழர் என்றால் எப்போது அவலங்கள் நீங்கி விடிவு கிட்டும் என்று காத்திருப்பது.. ஆக மொத்தத்தில் "காத்திருப்பு" ஒன்று மட்டும்தான் எமது இலக்காக இருக்கும்.
    காத்திருப்போம். முதலில் விதைத்துவிட்டு பின்னர் அறுவடைக்குக் காத்திருப்போம். விதைக்காமல் அறுவடை எப்படி சாத்தியம்? தாயகத்தில் மக்கள் விதைத்துவிட்டு காத்திருக்கிறார்கள். நாங்கள் இன்னும் வடிவாக விதைக்கவில்லை. now is better than later.

மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்றால் தெருவில் இறங்க வேண்டும், விசைப்பலகையைத் தட்டி ஒன்றையும் கிழிக்க முடியாது..

ஒரு திட்டமும் இல்லாமல் தெருவில் இறங்கி ஒரு புண்ணியமும் இல்லை. பல தடவை தெருவில் இறங்கிய அனுபவம் உண்டு. கனடாவில் 75,000 பேர் இறங்கினார்கள் பொங்கு தமிழுக்கு. என்ன பலன்? முதலில் மூளையை பாவிக்கவேண்டும். பிறகு தான் சாரீரத்தை.

அது போக இங்கு நாங்கள் என்னத்தை கதைக்கிறோம். நாளும் அரச அட்டூழியத்தால் இறக்கும் மக்களினை பதுகாக்க என்ன செய்யலாம் என் கதைக்கிறோம். அது தொடர்பான அரசின் பொய்ப்பிரசாரத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று கதைக்கிறோம். தமிழ் ஊடகங்களை பற்றி கதைக்கிறோம். அது தவறே இல்லை.

இது ஒரு open source software மாதிரி. எல்லாரும் சேர்ந்து develop பண்ணுவோம் என்கிறேன். அப்படி உருவாகிய Linux இன்று Microsoft என்ற பில்லியன் கணக்கில் செலவழித்து உருவாக்கிய அரக்கனை எதிர்த்து நிற்கவில்லையா? இன்றைக்கு Firefox ஆனது IE யை பின் தள்ளி முன்னேறவில்லையா?

மனமுண்டானால் இடமுண்டு சார். நாங்கள் தோற்றதற்கு ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கலாம். வெல்லவேண்டுமானால் ஒரே ஒரு வழிதான். உழைப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பண்டிதர், உண்மையைச் சொன்னால் உறைக்கின்றது போலுள்ளது.. உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் விரும்பும் விடைகளைத் தந்தால் நடக்காதவை நடக்கக் கூடியவையாக மாற்றம் பெற்றுவிடுமா? ஒரு சின்ன உதாரணம்.. நீங்கள் இந்தக் கேள்விகளைப் பதிந்து எத்தனை நாட்கள்/எத்தனை மணித்தியாலங்கள்? எத்தனை பேர் இத்தலைப்பைப் பார்த்துள்ளார்கள்? எத்தனை பேர் தங்கள் அபிப்பிராயங்களைத் தந்துள்ளார்கள்? இவற்றில் இருந்து நீங்கள் கற்கவேண்டிய பாடம் பல இருக்கின்றது.. நான் pessimistic ஆக கருத்து எழுதவில்லை. உண்மையில் என்ன நடக்கின்றது என்பதையே எழுதினேன். உங்கள் கோபம்/ஆதங்கம் நியாயமாக இருக்கலாம். அதற்காக மந்திரத்தில் மாங்காய் பறிக்கலாம் என்று நினைக்கக்கூடாது..

இன்னொரு சின்னக் கதை (உண்மையானதுதான்)..

தேசியத் தலைவர் பிரபாகரனும், புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்களும் எவ்வாறு புலனாய்வுத் துறையை மேலும் சிறப்பாகத் தொழிற்படச் செய்யலாம் என்பதை ஆராய ஒரு பட்டறையை நடாத்தினார்கள். தலைவர் எல்லோரையும் பார்த்து முக்கியமாகத் தேவையானது என்னவென்று கேட்டார். ஒவ்வொருவர் ஒவ்வொருமாதிரி விடையளித்தார்கள், சிலர் புதிய தொழில்நுட்பம் தேவையென்றனர், சிலர் நவீன உளவியல் முறைகளையும், மற்றைய உளவு நிறுவனங்களின் உத்திகளையும் பாவிக்கவேண்டுமென்றனர். இப்படி எல்லோரும் கூறிமுடித்த பின்னர், தலைவர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது "ஆர்வம்" என்றார்.

உங்களைப் போல் எத்தனை பேர் ஆர்வத்துடன் இங்குள்ளனர்? இருக்கிற மாதிரித் தெரிகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இத்தலைப்பின் கீழ் உள்ள கிருபனின் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றேன்.உண்மையில் சாதாரணமாக நடைமுறையில் உள்ளதையே கிருபன் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஈழவனின் பின்வரும் கூற்றுக்கு என்பதில்:

மற்றது நாம் யார் என பொருள் படும் தலைப்பில் நீங்கல் கேட்ட கேள்விக்கு பதில்

யாழ் களத்தில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் நடக்கின்ரன காரசாரமான விவாதங்கள் நடக்கின்றன அத்துடன் அரட்டையும் நடக்குது ஆனால் அவை அதுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தெலேயே நடக்குது கண்ட கண்ட இடங்களில் எல்லாம் நடக்கவில்லை அரட்டையை எதிர்கிறீர்கள் எண்டால் மோகன் அண்னாவிடம் மற்ரைய பகுதிகளை எடுக்க சொல்லுங்கள்!!!!

யாழ் களமும் கள உறவுகளும் என் குடும்பம் போன்றவர்கள் அவர்களுடன் அரட்டை அடைப்பதையோ நலம் விசாரிப்பதையோ அதாவது சரியான பகுதியில் செய்யும் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது நானும் அதை எதிர்ப்பேன்்

அரட்டை அடிக்க வேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. அரட்டை அடிக்கும் அளவுக்கு மற்றவிடயங்கள் போகவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன்.

உதாரணத்துக்கு நீங்கள் தொட்ங்கிய ஒரு விடயத்தை எடுத்துக்கொள்வோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20045

இவ்வவு நாட்களாக இது ஒரு அடி முன்னேறாததற்கு என்ன காரணம்?

இங்கு ஈழமே தெரியாதவர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அரட்டைப்பகுதியிலாவது வருவதை நாங்கள் வரவேற்கவேண்டும். தாயகத்தில் நடக்கும் விடயங்களைப்பற்றி முழுவதுமாக தெரிந்த நீங்களும் இப்படியா கேட்பீர்கள். இன்று அரட்டை ஒன்று தானா எமக்கு குறைச்சல்? குடும்பம் என்று சொல்கிறீர்களே ஈழத்தில் வாழ்பவன் எம் குடூம்பம் இல்லையா? அவர்க்ளுக்காக ஏதாவது செய்வோம் என்றால் அது பிழையா? யாழ் குடும்பம் நீங்கள் நலம் விசாரித்தாலும் விசாரிக்காவிட்டாலும் நலமாகத்தான் இருப்பார்கள். அட் லீஸ்ட் உயிரோடு இருப்பார்கள். ஈழக்குடும்பம் அப்படியில்லை.

எனவே நான் சொல்ல வந்த விடயத்தை புரியாதது போல கதைக்காதீர்கள். அரட்டை அடிக்கவேண்டாம் என் நான்கூறவரவில்லை. அரட்டை, உபயோகவேலை என வரும்போது இரண்டாவதுக்கு முதல் இடத்தையும் அடுத்ததுக்கு இரண்டாம் இடத்தையும் கொடுப்போம் என்கிறேன். எங்களுக்கு நேரம் என்ன மிதமிஞ்சியா கிடக்கிறது? வேலை போக ஒருநாளைக்கு ஒரு மணித்தியாலம் யாழின் முன் குந்துவோமா? அந்த 1 மணித்தியாலத்தில் முதல் 45 நிமிடத்தை உபயோகவேலைக்கும் மிகுதி 15 நிமிடத்தை அரட்டைக்கும் செலவழிப்போம் என்றேன்.

முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

Posted

நீங்கள் சொல்லுவது போலதான் இங்கு நடக்குது நான் அரட்டைக்கு முக்கியம் கொடுக்கவில்லை ஆனால் அரட்டை அடிக்காமலும் இருக்கவில்லை.நீங்கள் சொல்லுவது போல அத்தலைப்பானது ஒரு அடி முன்னேறாமல் இருக்கவில்லை குறுக்ஸ் அதற்கான உதவிகளை செய்துள்ளார் தொகுக்கும் வேலையிம் வடிவமைக்கும் வேலையும் நடக்கின்றது எனக்கு நேரம் அவ்வளவு கிடைப்பதில்லை அதனாலேயே தாமதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஒரு திட்டமும் இல்லாமல் தெருவில் இறங்கி ஒரு புண்ணியமும் இல்லை. பல தடவை தெருவில் இறங்கிய அனுபவம் உண்டு. கனடாவில் 75,000 பேர் இறங்கினார்கள் பொங்கு தமிழுக்கு. என்ன பலன்? முதலில் மூளையை பாவிக்கவேண்டும். பிறகு தான் சாரீரத்தை.

அது போக இங்கு நாங்கள் என்னத்தை கதைக்கிறோம். நாளும் அரச அட்டூழியத்தால் இறக்கும் மக்களினை பதுகாக்க என்ன செய்யலாம் என் கதைக்கிறோம். அது தொடர்பான அரசின் பொய்ப்பிரசாரத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று கதைக்கிறோம். தமிழ் ஊடகங்களை பற்றி கதைக்கிறோம். அது தவறே இல்லை.

உங்களிற்கு கனடாவில் உள்ளவர்கள் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. கனடாவில் 75,000 பேர் இறங்கியதன் பலன் உங்களிற்கு வேண்டுமானால் தெரியாது இருக்கலாம். ஆயினும் அவ்வளவு மக்களையும் இறக்கியவர்களிற்கு அதனால் ஏற்பட்ட பயனைத் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். 75,000 மக்கள் இறங்கியது மாத்திரமல்ல அவர்கள் கட்டுக்கோட்பாகத் தம் வேட்கையை மட்டும் தான் சார்ந்து வாழும் சமூகத்துக்கு தெரிவித்த விதம் அவர்களையும் பார்வைகளைத் திருப்ப வைத்திருந்தது. எழுந்தமானமாக இவ்வளவு பேர் தெருவில் இறங்கினார்கள் அதற்கு என்ன நடந்தது என்று மக்கள் மனதில் நீங்கள் சேர்க்கும் வெறுப்பானது, மக்களை சலிப்படைந்த நிலைக்குக் கொண்டுசென்று அம்மக்கள் மீண்டும் ஓர் ஒன்று கூடலிற்கு அழைப்புவிடுக்கும் போது இதுபோன்ற உங்களின் எவ்வித பொருளுமற்ற விதண்டாவாதத்தைக் காரணம் காட்டி மறுதலிக்கக் கூடும். தாயகத்திற்குப் பலம் சேர்க்கிறேன் என்று புறப்பட்டு அதன் அழிவுக்கு வழிவகுக்காதீர்கள். பிறிதொரு விடயத்தில் குறுக்காலபோவன் கூறியது போல் தமிழீழ விடுதலை என்று புறப்பட்டு கட்டுமீறாது இருப்பின் அது சாலச் சிறந்தது.

Posted

வணக்கம் பண்டிதர் நீங்கள் நடைமுறைக்கு ஏற்ப சிந்திக்க மறுக்கின்றீர்கள்

யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள்.

உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்?

இங்கே எத்தினை பேருக்கு போரட்டம் பற்றி தெரியும்....? எனக்கு கூட போரட்டம் நடக்குது என்று தெரியும், ஆனால் யாழ் வந்தபிறகுதான் அதன் முக்கியதுவம், நாங்கள் அதற்க்கு எப்படி உதவுவது என்ற பல விடயங்களை அறிந்தேன், இதை பொறுத்தவரையில் யாழுக்கு வெற்றிதானே. முடிவுக்குப் போகமுதல் ஆரமபம் தெரிய வேண்டும். தற்போது யாழில் அது 100% வெற்றிகரமாகவே நடக்கின்றது. எத்தனை பேர் யாழ் வந்த பிறகு என்னைப் போல போரட்டத்தைப் பற்றி பலமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதை நீங்கள் ஏற்க்க மறக்கினிறீர்கள்.

இங்கே வருபவர்கள் எல்லாரும் ஒரே போலயில்லை ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமானவர்கள், நீங்கள் எல்லாரும் ஒரேபோல இருப்பார்கள் என்று நினைப்பது யதார்ததிற்க்கு எட்டாத முட்டாள்தனம். இதுவரை நான் எதுவும் செய்தோமென்றும் சொல்லமுடியாது, செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது. வெவ்வேறாக வெவ்வேறு தேசத்தில் உள்ளவர்களை இணைத்து ஊடகமூடன போரட்ட ஆதரவிற்க்கு யாழ் இணைத்துள்ளது இதை யாரலும் மறுக்க முடியாது. ஈழவன் ஆரம்பித்த முயற்ச்சிக்கு ஆதரவாக சிலர் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். நாங்களும் நம்மால் இயன்ற ஆதரவை வழங்க 1 முயற்ச்சியெடுத்து ஆரம்பக்கட்ட வேலைகளில் இறங்கியுள்ளோம். எல்லோருக்கும் படிப்பு,வேலை,குடும்பம் என்று நிறையப் பிரச்சினைகள் உள்ளது, அதையும் நீர் சற்று கவனத்திலெடுத்தால் நல்லது. பொழுது போக்குக்கு சற்று அரட்டையடிப்பதில் ஏதும் தப்பிருப்தாக தோன்றவில்லை

Posted

நானும் ஈழவன் கருத்தை ஏற்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்களிற்கு கனடாவில் உள்ளவர்கள் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. கனடாவில் 75,000 பேர் இறங்கியதன் பலன் உங்களிற்கு வேண்டுமானால் தெரியாது இருக்கலாம். ஆயினும் அவ்வளவு மக்களையும் இறக்கியவர்களிற்கு அதனால் ஏற்பட்ட பயனைத் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். 75,000 மக்கள் இறங்கியது மாத்திரமல்ல அவர்கள் கட்டுக்கோட்பாகத் தம் வேட்கையை மட்டும் தான் சார்ந்து வாழும் சமூகத்துக்கு தெரிவித்த விதம் அவர்களையும் பார்வைகளைத் திருப்ப வைத்திருந்தது. எழுந்தமானமாக இவ்வளவு பேர் தெருவில் இறங்கினார்கள் அதற்கு என்ன நடந்தது என்று மக்கள் மனதில் நீங்கள் சேர்க்கும் வெறுப்பானது, மக்களை சலிப்படைந்த நிலைக்குக் கொண்டுசென்று அம்மக்கள் மீண்டும் ஓர் ஒன்று கூடலிற்கு அழைப்புவிடுக்கும் போது இதுபோன்ற உங்களின் எவ்வித பொருளுமற்ற விதண்டாவாதத்தைக் காரணம் காட்டி மறுதலிக்கக் கூடும். தாயகத்திற்குப் பலம் சேர்க்கிறேன் என்று புறப்பட்டு அதன் அழிவுக்கு வழிவகுக்காதீர்கள். பிறிதொரு விடயத்தில் குறுக்காலபோவன் கூறியது போல் தமிழீழ விடுதலை என்று புறப்பட்டு கட்டுமீறாது இருப்பின் அது சாலச் சிறந்தது.

உங்கள் கருத்துக்கு நன்றி.

கனடாவில் இவ்வளவு பேர் இருந்தும் அரசியலில் பெரிதாக செல்வாக்கு செலுத்த முடியவில்லையென்பதே என்கருத்தாகவிருந்தது. அதாவது அந்த நிகழ்வின்பின்னும் ஏற்பட்ட"தடை"யைக்குறிப்பிட்டேன். ஆக, வீதியில் இறங்குவதை விட அரசியல் வேலைகள் போன்ற வேலைகளில் அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை என் குறிப்பிட்டேன். நான் என்ன குறிப்பிட்டது கடந்த வார "காலக்கணிப்பு" வை பாருங்கள்.

இதைப்பற்றி நான் அதிகதைக்க விரும்பவில்லை. கனடாவைப்பற்றி கதைப்பது என் நோக்கமல்ல. யாழைப்பற்றி மட்டும் கதைப்ப்து மட்டுமே. மேலும் கனடாவைப்பற்றி கதைக்க எந்த moral authority யும் எனக்கும் இல்லை. கதைத்தது பிழையானால் மன்னித்துவிடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இங்கே எத்தினை பேருக்கு போரட்டம் பற்றி தெரியும்....? எனக்கு கூட போரட்டம் நடக்குது என்று தெரியும், ஆனால் யாழ் வந்தபிறகுதான் அதன் முக்கியதுவம், நாங்கள் அதற்க்கு எப்படி உதவுவது என்ற பல விடயங்களை அறிந்தேன், இதை பொறுத்தவரையில் யாழுக்கு வெற்றிதானே. முடிவுக்குப் போகமுதல் ஆரமபம் தெரிய வேண்டும். தற்போது யாழில் அது 100% வெற்றிகரமாகவே நடக்கின்றது. எத்தனை பேர் யாழ் வந்த பிறகு என்னைப் போல போரட்டத்தைப் பற்றி பலமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதை நீங்கள் ஏற்க்க மறக்கினிறீர்கள்.

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

பலமாக சிந்திப்பதை செயலிலும் காட்டுவோம்.

எல்லோருக்கும் படிப்பு,வேலை,குடும்பம் என்று நிறையப் பிரச்சினைகள் உள்ளது, அதையும் நீர் சற்று கவனத்திலெடுத்தால் நல்லது.

அதனால் தான் உபயோகவேலை #1 அரட்டை #2 என்றேன். அரட்டை தவறு என கூறவரவில்லை என்பதை மேலே ஈழவனுக்கான பதிலில் கூறியிருந்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பண்டிதர் அவர்களே,

உங்கள் கருத்தை நான் வழிமொழிகின்றேன். யாழ்களத்தில் கூட அரட்டை/பொழுதுபோக்குக்கென்று பகுதிகள் இருக்கின்றன. ஆனால் செய்திகளுக்கிடையில் கூட வேண்டாத சீண்டல்களும்.தேவையற்ற கீறல்களுமாய் கருத்தின் நோக்கமே திசை திருப்பி நிற்பதை நானும் அவதானித்திருக்கின்றேன்.

நமக்கான பணிகளை நாம் இன்னும் சரிவர உணரவில்லை என்றே தோன்றுகின்றது.

கசப்பு மருந்துக்கு இனிப்புத்தடவிக்கொடுக்க யாரும் குழந்தைகள் இல்லை இங்கே. எத்தனையோ கசப்புகளை நாமும் நம் உறவுகளும் தாங்கி வந்திருக்கின்றோம் இன்னும் தாங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே அதற்கான தீர்வினை வழியினை நோக்கி நம் பணிகளை முன் வைப்போமானால் நமக்கான விடியல் வெகுதொலைவில் இல்லை!.

ஒரு சிலருக்கே புரிகின்றது! என்ன செய்வது?!

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழக மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நடக்கும் இந்த நாட்களில் முன்னர் பண்டிதர் கேட்ட கேள்விகள் நினைவுக்க வந்தன.

தற்போதுள்ள சூழலில் பண்டிதரின் கேள்விகளுக்கு பதில்கள் வேறாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.