Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்ஆப்பிரிக்கா எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்! தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி

 
 

கேப்டவுன் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

SA_20387.jpg

 


இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

 

வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான பிட்சில் 208 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே திணறியது. காயத்தால் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் பந்துவீச இயலாத நிலையில், மோர்னே மோர்கல், பிலாண்டர், ரபாடா கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது. இந்தக் கூட்டணியின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். முதல் இன்னிங்ஸைப் போலவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தமுறையும் சொதப்பினர். இந்திய அணி 82 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்குக் கைகோத்த அஷ்வின் - புவனேஷ்வர் குமார் ஜோடி சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது. அஷ்வின், 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 42.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

https://www.vikatan.com/news/sports/113074-sa-win-capetown-test-by-72-runs.html

  • Replies 73
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பிலாண்டரின் பதற்றமடையா மேதைமை; நடுங்கிய இந்திய பேட்டிங்: தென் ஆப்பிரிக்கா பதிலடி வெற்றி

 

 
virat%20kohli

வெர்னன் பிலாண்டர், விராட் கோலியை எல்.பியில் வீழ்த்திய காட்சி.   -  படம். | கேலோ இமேஜஸ்.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 208 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி பதற்றத்துடன் விளையாடி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

43-வது ஓவரில் அஸ்வின், மொகமது ஷமி, பும்ரா ஆகியோரை வீழ்த்தி 15.4 ஓவர்கள் 4 மெய்டன்களுடன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வெர்னன் பிலாண்டர் மொத்தம் இந்த டெஸ்ட் போட்டியில் 75 விக்கெட்டுகளுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிலாண்டர் எனும் ‘ஜென்’ மன நிலை பவுலர்

தரவரிசையில் கடைநிலையில் இருக்கும் ஜிம்பாப்வேவுக்கு ஒன்றரை நாட்களில் உதை, தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்திய அணிக்கோ இரண்டே முக்கால் நாட்களில் உதை. தென் ஆப்பிரிக்காவுக்கு, ஜிம்பாப்வே அணிக்கும் இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் வெறும் ஒண்ணேகால் நாள்தான்! சுரங்க லக்மலை தடவு தடவென்று தடவிய இந்த அணி எப்படி இந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத பந்து வீச்சை வெல்ல முடியும்?

இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து தென் ஆப்பிரிக்கா 48 பவுண்டரிகளை கொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மட்டும் 39 பவுண்டரிகள் 2 சிக்சர்களை வாரி வழங்கியது.

130 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகி இந்திய அணிக்கு 208 ரன்களே வெற்றி இலக்காக இருந்த போதும் தென் ஆப்பிரிக்க அணி பவுலர்களிடத்தில் எந்த வித பதற்றமும் இல்லை, மாறாக இந்திய பேட்ஸ்மென்கள் ‘ஒரு வேளை வெற்றி பெற்று விடுவோமோ” என்ற பயத்தில் பதற்றத்தில் ஆடினார்களோ என்று தோன்றுகிறது. வெர்னன் பிலாண்டர் ஒரு ஜென் பவுத்த மனநிலையில் பந்து வீசினார்.

அணியின் 8 மற்றும் 9-ம் நிலை பேட்ஸ்மென்கள், அஸ்வின், புவனேஷ்வர் குமார் இணைந்து 94 பந்துகளை சந்தித்து 49 ரன்களை 8-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க முடியும் போது தவண், விஜய், புஜாரா, கோலி, ரோஹித் சர்மா அடங்கிய பேட்டிங் வரிசை மொத்தம் 117 பந்துகளை மட்டுமே சந்தித்து 76 ரன்களுக்கு அவுட் ஆவது என்றால் எப்படி அணி வெற்றி பெற முடியும்?

குறிப்பாக விராட் கோலி உலகின் நம்பர் 1 பேட்ஸ்மென், இரட்டைச் சத நாயகன் என்றெல்லாம் விதந்தோதப்பட்டவரை பிலாண்டர் ‘ஒர்க் அவுட்’ செய்ய முடிகிறது என்றால் இந்தத் தொடருக்கு முன் நாம், நம் ஊடகங்கள் விராட் கோலி பற்றி பேசிய ஊதிப்பெருக்கங்களை மறுபரிசீலனை செய்வதே முறை. பிட்ச் ஒன்றும் பேய்களை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை, இந்திய பவுலர்கள் 2-வது இன்னிங்சில் முதல் இன்னிங்ஸில் தவறை திருத்திக் கொண்டு சரியான இடத்தில் வீசி சுருட்டினர், தென் ஆப்பிரிக்க பவுலர்களும் அருமையான இடங்களில் பந்தைப் பிட்ச் செய்தனர். இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மென் என்று பெயரெடுத்த விராட் கோலி, வெர்னன் பிலாண்டர் 7-8 பந்துகளை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசும்போது ஒரு பந்து உள்ளே வரும் என்பதைக் கணித்திருக்க வேண்டும். ஆனால் அவரோ அந்தப் பந்தை நேராக ஆடுவதை விடுத்து ஏதோ அது பவுண்டரி பந்து போல் லெக் திசையில் பிளிக் ஆட முயன்றார், பந்து காற்றில் உள்ளே வந்ததைப் பார்க்கும் ஒரு வீரர் பந்தின் திசைக்கு நேராகத்தான் மட்டையைக் கொண்டு சென்றிருக்க வெண்டும், அந்தப் பந்தை நேராக ஆடியிருந்தால் அது மட்டையில் பட்டிருக்கும். ஆனால் காலியாக உள்ள லெக் திசை அவரை கவர்ந்திழுத்தது. இதுதான் பொறி. இதில்தான் சிக்கினார் விராட் கோலி.

அதுவரை 40 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் என்று ஆடி வந்தார். இறங்கியவுடன் ஒரு 5-6 ரபாடா வேகப்பந்துகள் அவரது கால்காப்பை வேகமாகத் தாக்கியபோதே சுதாரித்திருக்க வேண்டும்.

இன்னொரு ‘உள்ளூர் இரட்டைச் சதப் புலி’ ரோஹித் சர்மா. இவர் 10 ரன்கள் எடுத்து, அதுவும் தடுமாற்றத்துடனும் நடுக்கத்துடனும் எடுத்து, பிலாண்டரின் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்தை காலை நன்றாக பிட்ச் ஆஃப் த பந்துக்கு கொண்டு சென்று ஆடியிருக்க வேண்டும், ஆனால் அரைகுறையாக நின்ற இடத்திலிருந்தே பந்தின் மீது மட்டையைத் தொங்க விட்டு உள்ளே வாங்கி விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார். மிகவும் பரிதாபத்துக்குரிய ஒரு பவுல்டாக இது அமைந்தது. விருத்திமான் சஹாவின் உத்தி அந்தப் பிட்ச்களுக்கோ, அந்த உயர்தரப் பந்து வீச்சுக்கோ உரியதல்ல என்பது நிரூபணமானது. ரபாடா இவருக்கும் ஓரிரு பந்துகளை லெந்தில் பிட்ச் செய்து வெளியே கொண்டு சென்றார், பிறகு அதே லெந்தில் ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தார், கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். எல்.பியாக இருந்தாலும் நடுவர் அவுட் கொடுப்பதை எதிர்பார்க்காமலேயே செல்ல வேண்டியதாகும் இது, ஆனால் மீண்டும் ஒரு ரிவியூவை வேஸ்ட் செய்து பெவிலியன் திரும்பினார்.

முதல் இன்னிங்ஸ் நாயகன் ஹர்திக் பாண்டியா என்ன செய்வார் பாவம்? பெரிய தலைகள் பதற்றமாக ஆடும் போது, இவரும் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்து ஆடாமல் விட வேண்டிய பந்தை ஆடி எட்ஜ் செய்ய டிவில்லியர்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார். டிவில்லியர்ஸ் பேட்டிங் பார்மை விட அவரது பீல்டிங் பார்ம், கேட்சிங் இந்திய அணிக்கு வரும் போட்டிகளில் இரட்டை அச்சுறுத்தல்.

208 ரன்கள் இலக்கிற்கு இந்திய அணி தொடக்க வீரர்கள் 7 ஓவர்களில் 28 என்று நன்றாகவே தொடங்கினர். முரளி விஜய் இருமுறை அவுட் கொடுக்கப்பட்டு ரிவியூவில் தப்பினார், ஆனாலும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிலாண்டர் ஒரு முனையில் ஜென் மனநிலையில் வீச மறு முனையில் மோர்னி மோர்கெல் தனது பவுன்சினால் கடும் சிரமங்களைக் கொடுத்தார், இதில் ஒரு பந்து எகிற ஷிகர் தவண் புல் ஆடச் சென்றார், ஆனால் பந்து ஏடாகூடமாக பவுன்ஸ் ஆக முகத்துக்கு நேராக பேட்டைத் தூக்கி, தன் கால்களையும் தூக்கி எக்குத்தப்பாக ஆடப்போக பந்து பட்டு கல்லியில் கிறிஸ் மோரிசுக்கு எளிதான கேட்ச் ஆனது, புஜாராவுக்கும் ஒரு அற்புதமான ஷார்ட் பிட்ச் பந்து சற்றே எழும்பி வெளியே எடுத்தது, ஆடித்தான் ஆக வேண்டிய கட்டாயம் ஆடினார், கேட்ச் ஆனார்.

விராட் கோலி குறிக்கோளுடன் ஆடினார், நகர்ந்து வந்து முன்காலை முன்னால் நகர்த்தி ஆடினார், ஓரிரு பந்துகள் மட்டையில் படாமல் கால்காப்பில் பட்டிருந்தால் அவுட் என்ற நிலைதான் இருந்தது, ரபாடா இவரை ஒரு 6 முறையாவது இன்ஸ்விங்கரில் பேடைத் தாக்கியிருப்பார், ஆனால் இந்த வாய்ப்பை பிலாண்டர் அருமையாகப் பயன்படுத்தினார். ஒரு பந்தை லேசாக உள்ளே கொண்டுவர நேராக ஆட வேண்டிய கோலி ஒருநாள் போட்டி போல் பிளிக் செய்ய முயன்று வெளியேறினார். ரோஹித் சர்மாவுக்கு ரபாடா ஒரு அசுர பவுன்சரை வீச சிக்சர் தாதா அரைகுறை புல் ஷாட் ஆட மிட்விக்கெட்டில் மஹராஜ் கைக்கு வந்த கேட்சை விட்டார். 5 பந்துகள் சென்று பிலாண்டர் மீண்டும் ஒரு தளர்வான ஷாட்டை ஆட வைத்தார் ரோஹித் சர்மா பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டார்.

ஹர்திக் பாண்டியா முதல் இன்னிங்சில் கேட்ச் விடப்பட்ட அதே இடத்தில் 2-வது இன்னிங்சில் சிக்கினார். அஸ்வின் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களுக்கு நிதானத்துடனும் உறுதியுடனும் ஆடினார். ஆனால் அந்தக் குறிப்பிட்ட ஓவரில் பிலாண்டர் வீச வரும்போது குவிண்டன் டிகாக் ஸ்டம்புக்கு அருகில் வந்தார், அஸ்வின் இந்த வாய்ப்பை கட் ஷாட்டாக மாற்றப்பார்க்க எட்ஜ் ஆக டிகாக் மிகப்பிரமாதமாக ‘ரிப்ளெக்ஸ் ஆக்சன்’ கேட்ச் எடுத்தார். ஷமி, பும்ரா அதே ஓவரில் ஆட்டமிழக்க இந்தியா 42.4 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. தொடரின் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிராக சில கணக்குகளைத் தீர்க்க வேண்டியுள்ளது என்ற ரீதியில் தென் ஆப்பிரிக்க அணியினர் பேசி வந்தனர், அது அவர்களது ஆட்டத்தில் வெளிப்பட்டது, நடத்தையில் அல்ல.

இத்தகைய தரமான அணியை குண்டும் குழியுமான பிட்சைப் போட்டு இங்கு காலி செய்த போது உலகின் சிறந்த அணியாக அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? அதுதான் இப்போது இந்திய அணிக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article22398774.ece?homepage=true

  • தொடங்கியவர்

‘2-வது இன்னிங்சில் இந்தியாதானே வெற்றி பெற்றது?’ தோல்வி குறித்து நெட்டிசன்கள் கேலி

 

 
kohli

டெஸ்ட் முடிந்த பிறகு கோலி, டுபிளெசிஸ், பிலாண்டர்   -  படம். | கெட்டி இமேஜஸ்.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 208 ரன்கள் என்ற குறைந்த இலக்கை இமாலய இலக்காக நினைத்து பாசிட்டிவ்வாக ஆடாமல் சொதப்பி தோல்வி தழுவிய இந்திய அணியை பல்வேறு விதமாக நெட்டிசன்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கங்கங்களில் கேலி செய்து வருகின்றனர்.

ஓரிரு பாராட்டும் இருக்கிறது, ஆனால் பெரும்பாலும் கிண்டல்தான்.

அதில் சில வருமாறு:

கவுரவ் சேத்தி: தவண் அவுட், விஜய் ஏன் ரிவியூ செய்யவில்லை? (விஜய் நேற்று 2 முறை ரிவியூ செய்து தப்பியதைச் சுட்டிக்காட்டி), மேலும் இவரே, இன்னொரு ட்வீட்டில், “முரளி விஜய் எவ்வளவு காலமாக நோ-பால்களுக்காக ரிவியூ செய்து அது சரியென நிரூபித்திருக்கிறாரோ”.

நிகில்: “முரளி டிஆர்எஸ். விஜய்”

விராட் கொலாப்ஸ்: இந்த டெஸ்ட் நடைபெறும் போது பிக் பாஷ் பார்ப்பது போல் இருந்தது. என்ன ஆயிற்று மக்களே உங்களுக்கு?

விக்னேஷ்: ஒருநாள் போட்டிகளில் 208 ரன்களை நீ ஒருவனே எடுத்திருக்கலாம் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணி மொத்தமும் 208 எடுக்க முடியவில்லை.

சோமித்ரா பல்துவா: “பரீட்சைக்கு கடைசி நேரத்தில் கூட படிக்காவிட்டால் எப்படி?” என்ற வாசகத்துடன் விஜய் 1, தவண் 16, புஜாரா 5, கோலி 5, ரோஹித் சர்மா 0 என்று ஸ்கோர்கார்டை மார்க் ஷீட் போல் பதிவிட்டுள்ளார்.

மாலன்: இன்னும் வெற்றி பெற எங்களுக்கு வாய்ப்புள்ளது: இந்திய அணி; பிலாண்டர்: ஹிஹி!

மிஸ் ராத்தோர்:

twitter
 

கல்லி கிரிக்கெட்: நிபுணர்கள் உள்நாட்டில் மட்டும்தான் வெற்றி பெறுவார்கள் ஹோம் டிராக் புல்லி.

இந்தியன் கிரிடிக்ஸ்: ஹனிமூன், விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது.

கபீர் இஸ் காட்: ஏன் கிரிக்கெட்டைப் பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆகவேண்டியதைப் பாருங்கள்.

ஆகாஷ் சோப்ரா: முதல் டெஸ்ட்டின் 4-ம் நாள் ஆட்டம், இல்லாத 4-வது டெஸ்ட் போட்டியை ஏற்கெனவே மிஸ் செய்ததாக என்னை எண்ண வைக்கிறது.

ஸ்டேபில் ஜீனியஸ்: தவண் தன் வேலையைச் சிறப்பாகச் செய்தார். இதற்கு மேல் அவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

சில்லி பாயிண்ட்: ஷிகர் தவன் இடைப்பெயர் ரெய்னா என்பது சிலருக்கு மட்டும்தான் தெரியும்.

காஷிஷ்: இது பிட்ச் பற்றிய பயமே. பிலாண்டரின் விக்கெட் வீழ்த்தும் பந்து நேர் பந்துதான்.

ஹசன் சீமா: இந்திய அணியின் சரிவு பற்றி கவாஸ்கரின் வர்ணனை, மார்க் வாங்காத குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டைப் பார்க்கும் பெற்றோர் போல் இருந்தது.

சில்லி பாயிண்ட்: எதிலும் பாசிட்டிவ் அம்சங்களைப் பார்க்க வேண்டும். இது இரண்டு வேறு மேட்ச். இந்தியா 2-வது இன்னிங்ஸில் வெற்றி பெற்றுவிட்டதே.

சுனில் த கிரிக்கெட்டர்: பிசிசிஐ- என்ன நடக்குது? விராட் கோலி: ஒண்ணுமே நடக்கலியே.

கவுரவ சேத்தி: இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/article22402492.ece?homepage=true

  • தொடங்கியவர்

கோலிக்கு வீசிய அந்த 13 பந்தில் பிலாண்டர் செய்த மேஜிக்! #SAvsIND

 
 

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் (#SAvsIND). நான்காம் நாள். இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா பேட்டிங். முகமது ஷமி வீசிய பெளன்ஸரை அலட்டாமல் தேர்டு மேன் ஏரியாவில் சிக்ஸர் அடித்தார் டி வில்லியர்ஸ். இதை எதிர்முனையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் டு பிளெஸ்ஸி. இந்த ஷாட்டைப் பார்த்து, ஒரு பெளலர் தவறு செய்யும்போது, எப்படித் தண்டிக்க வேண்டும் என்பதை டி வில்லியர்ஸிடமிருந்து டு பிளெஸ்ஸி பாடம் கற்றிருக்கலாம். ஆனால், டு பிளெஸ்ஸி வேடிக்கை மட்டுமே பார்த்தார். அதன் வினையை அடுத்த ஓவரில் அனுபவித்தார். பும்ரா 141 கி.மீ வேகத்தில் குட் லெந்தில் வீசிய பந்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பெளன்ஸ். திக்குமுக்காடிப்போனார் டு பிளெஸ்ஸி. பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. டு பிளெஸ்ஸி அவுட். டக் அவுட். 

டு பிளெஸ்ஸி - டி வில்லியர்ஸ் ஜோடி முதல் இன்னிங்ஸில் குவித்த 100+ ரன் பார்ட்னர்ஷிப், கேப்டவுன் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற முக்கியக் காரணங்களில் ஒன்று. இத்தனைக்கும் முதல் இன்னிங்ஸில் முதல் அரை மணி நேரத்துக்குள் டாப் ஆர்டரை பெவிலியனுக்கு அனுப்பிவைத்திருந்தார் புவனேஷ்வர் குமார். இக்கட்டான நேரத்திலும் டி வில்லியர்ஸ் இயல்பாக இருந்தது ஒருபுறம் இருந்தாலும், டு பிளெஸ்ஸி ரொம்பவே நிதானமாக தனக்கான தருணத்துக்காகக் காத்திருந்தார்.

 

#SAvsIND Philander


டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மாதிரி நேரத்தில், களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் அடித்து எடுக்கும் ஒவ்வொரு ரன்னும், அவருக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். எட்ஜாகி அது பவுண்டரிக்கே சென்றாலும், பேட்ஸ்மேனுக்கு ஒரு குற்றவுணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். முதல் இன்னிங்ஸில் டு பிளெஸ்ஸி, டி வில்லியர்ஸ் எடுத்த பெரும்பாலான ரன்கள் அடித்து எடுக்கப்பட்டவை. எட்ஜ் மூலம் வந்தவை அல்ல. இது ஒருபுறம் இருக்கட்டும். இந்திய பேட்ஸ்மேன்களுக்குத் தென்னாப்பிரிக்க பெளலர்கள் இரு இன்னிங்ஸிலும் இப்படியொரு வாய்ப்பு தரவில்லை. பாண்டியா சதத்தை நெருங்குகிறார் என்றதும், ரபாடா, மோர்கல் இருவருமே around the stick-ல் இருந்து பெளன்ஸர்களை ஏவினர். பாண்டியா திக்குமுக்காடினார். சதத்தையும் இழந்தார்... ஒரு சின்ன ட்ரிக்தான்... விளைவு பெரிது. இப்படி சின்னச்சின்ன யுக்திகளை இந்த டெஸ்ட் முழுவதும் தென்னாப்பிரிக்க அணியினர் பிரயோகிக்கத் தவறவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸ். மோர்னே மோர்கல் வீசிய முந்தைய பந்தைத் தொடாமல் விட்டார் புஜாரா. அதற்கு கோலி தம்ஸ் அப் காட்டினார். அடுத்த பந்து. கிட்டத்தட்ட அதே வேகம். அதே லைன். லைன் அண்ட் லெந்த் பக்கா. ஸ்ட்ரெய்ட் பேட் போட்டார் புஜாரா. எட்ஜ். காட் பிகைண்ட். சிவனேன்னு அதையும் தொடாமல் விட்டிருக்கலாம். அல்லது ஃபேக் ஃபுட் எடுத்து கிராஸ் பேட் போட்டிருக்கலாம். ஸ்ட்ரெய்ட் பேட் போட்டதால் விக்கெட்டை இழந்தார் புஜாரா. முரளி விஜயும் இதே மாதிரி கிராஸ் பேட் போட வேண்டிய இடத்தில் ஸ்ட்ரெய்ட் பேட் போட்டு விக்கெட்டை இழந்திருந்தார். கோலிக்கும் இதே அச்சுறுத்தல்தான். ஆனால், அவர் நேக்காக கிராஸ் பேட் போட்டு ஆடியதால் தப்பித்தார். கிராஸ் பேட் என்பதும் சின்ன ட்ரிக்தான். இங்கேயும் பலன் பெரிது. ஆனால், கோலிக்கு பிலாண்டர் வேறு பிளான் வைத்திருந்தது தனிக்கதை. 

20 சதவிகித ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா 30 சதவிகித விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்தியாவின் முதல் 50 ரன்களில் ஒரு பவுண்டரி கூட பிரம்மாதமான ஷாட் மூலம் வந்தவை அல்ல. விராட் கோலியின் பவுண்டரிகளிலும் கூட திருப்தி இல்லை. பந்து அப்படி. மோர்கல் போட்டது ஷார்ட் பால்தான். ஆனால், கொஞ்சம் பெளன்ஸர். இதுவே இந்திய பிட்ச்சாக இருந்தால் ரோஹித் இழுத்த இழுப்புக்கு பந்து டீப் மிட் விக்கெட் திசை நோக்கி பறந்திருக்கும். ஆனால், தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் அப்படியில்லை. ரோஹித்தின் புல் ஷாட்டுக்குப் பந்து சிக்கவில்லை. அடக்கி வாசித்தார் ரோஹித்... அல்ல, அல்ல அடக்கி வைத்திருந்தனர் தென்னாப்பிரிக்க பெளலர்கள். ரோஹித்தை மட்டுமா?!

#SAvsIND Philander


இரண்டாவது இன்னிங்ஸில் கோலிக்கு பிலாண்டர் வீசியது 13 பந்து. அதில் 11 பந்துகள் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசப்பட்டவை. வெளியே என்றால் ரொம்ப வெளியே இல்லை. அதேநேரத்தில் டிரைவ் செய்வதற்கு ஏதுவான இடத்திலும் பந்தை பிட்ச் செய்யவில்லை. ஏனெனில், டிரைவ் செய்வதில் கோலி புலி. கட் ஷாட் அடிக்கவும் வாய்ப்பில்லை. அதற்கேற்ற டெலிவரியும் இல்லை. ஷார்ட் பாலும் இல்லை. சொல்லிவைத்தாற்போல, 13 பந்தும் ஒரே இடத்தில் பிட்ச்சானது. அதாவது ஸ்டம்ப்பிலிருந்து 6 -8 மீட்டர் இடைவெளிக்குள்... அதுவும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே ஒரே லைனில்... குறிப்பாக ஒரே பேட்ஸ்மேனுக்கு... வாட்டே பியூட்டி! அழகு மட்டுமல்ல அதிசயம்... அதிசயம் மட்டுமல்ல ஆச்சர்யம். ஆம், எல்லாமே, பக்கா பிளானிங்! 

என்னடா இது... டிரைவ் செய்யவும் வழியில்லை. ரிஸ்க் எடுக்கவும் வழியில்லை... கோலி எரிச்சலைடந்தார். ஒவ்வொரு பந்தையும் ஸ்டம்ப்பிலிருந்து விலகிவந்து எதிர்கொள்ள வேண்டிய நிலை. 20-வது ஓவரில் ஐந்தாவது பந்து. ஒரு வழியாக, லைனும் லென்த்தும் பிடிபட்டது. ஒரு பஞ்ச். சிங்கிள். கோலி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். பிலாண்டரும் நிம்மதியடைகிறார். தன் பந்தை அடித்தற்கு எந்த பெளலராவது நிம்மதியடைவாரா? பிலாண்டர் நிம்மதியடைந்தார். ஏன்... காரணம், இருக்கிறது. பிலாண்டர் வீசிய வலையில் சிக்கிவிட்டார் கோலி. அப்படியா...? இல்லையே... ரபாடா வீசிய அடுத்த ஓவரை நிதானமாகத்தானே எதிர்கொண்டார். பின்  எப்படி? ஹா ஹா ஹா... கோலியின் விக்கெட்டை எடுக்க  நேர்ந்துவிடப்பட்ட ஆள்... ரபாடா இல்லை, பிலாண்டர்! ஆம், கோலியை வீழ்த்தும் அசைன்மென்ட்டை வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்டவர் அவர். அதற்கான ஹோம்வொர்க்கை பக்காவாக செய்திருந்தார் (பிரஸ் மீட்டில் அதைக் குறிப்பிட்டிருந்தார்). அதை எக்ஸிகியூட் பண்ணும் தருணத்துக்காக காத்திருந்தார். அந்தத் தருணமும் வந்தது.  

#SAvsIND Virat kohli

 


22-வது ஓவரில் மீண்டும் கோலி vs பிலாண்டர். மீண்டும் அதே லைன். அதே லென்த். ரன்னில்லை.  முதல் பந்து அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் நோக்கி வருகிறது. ஸ்டம்ப்பிலிருந்து விலகி கவர் திசை நோக்கி ஒரு Push. அடுத்த பந்து ஸ்டம்ப்புக்கு கொஞ்சம் வெளியே. கோலி தடுத்து விட்டார். அடுத்த பந்து மீண்டும் ஸ்டம்ப்புக்கு வெளியே... கோலி அதைத் தொடவில்லை. நான்காவது பந்து. அதே லைன், அதே லென்த். ஆனால், லேசாக ஸ்விங் ஆன பந்து, கோலியின் முன் காலின்  pad-ல்  பட்டது. பிலாண்டர் கத்துகிறார். தென்னாப்பிரிக்க வீரர்கள் கத்துகிறார்கள். ரசிகர்கள் கத்துகிறார்கள். நடுவர் விரலை மேல்நோக்கி தூக்கி விட்டார். அவுட். கோலி அவுட். இந்தியா அவுட்! கோலியால் நம்பமுடியவில்லை. ரோஹித்தால் நம்பமுடியவில்லை. இந்திய ரசிகர்களால் நம்பமுடியவில்லை. நம்பித்தான் ஆக வேண்டும். Pitching - out side off. Impact - on line. wickets - hitting... எல்லாமே சரியாக இருக்கிறது. தப்ப முடியாது. பந்து லெக் ஸ்டம்ப்பைத் தகர்க்கும். அது நமக்குத் தெரிந்தது. பிலாண்டருக்குத் தெரிந்திருந்தது. தென்னாப்பிரிக்க வீரர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், எதிர்முனையில் இருந்த ரோஹித்துக்குத் தெரியவில்லை. ஒருவேளை தெரிந்தும் இருக்கலாம்! கோலி, ரோஹித்திடம் பேசுகிறார். ரிவ்யூ கேட்கிறார். ரிவ்யூ தோல்வியடைந்தது. கோலி தோல்வியடைந்தார்.  இந்தியா தோல்வியடைந்தது. பிலாண்டர் வென்று விட்டார். கோலியை வென்று விட்டார். இந்தியாவை வென்று விட்டார். ஆட்ட நாயகன் விருதையும்...!

https://www.vikatan.com/news/sports/113146-philanders-plan-that-caught-kohli-plummed.html

  • தொடங்கியவர்

கேப்டவுனில் உட்கார வைக்கப்பட்ட மூவர் கடும் பயிற்சி: அடுத்தடுத்து கூடுதல் வேகம், பவுன்ஸ் பிட்ச்கள்

 

 
rahane-rahul

ராகுல், ரஹானே.   -  படம். | ஏ.எஃப்.பி.

கேப்டவுன் டெஸ்ட் போட்டிக்கு தவறான கணிப்பில் உட்கார வைக்கபப்ட்ட ராகுல், அஜிங்கிய ரஹானே, இஷாந்த் சர்மா ஆகியோர் இன்று நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தங்கள் சுய விருப்பத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா முதல் டெஸ்ட் போட்டியை இரண்டேமுக்கால் நாளில், 72 ரன்களில் இழந்தது. பிலாண்டர் இந்திய பேட்டிங் வரிசையை துண்டாடினார். இந்நிலையில் புறக்கணிக்கப்பட்ட ரஹானே, இஷாந்த் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். பார்த்திவ் படேலும் பயிற்சியில் ஈடுபட்டார்.

சஞ்சய் பாங்கர், பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி அமர்வு 90 நிமிடங்கள் நடந்தன.

ராகுல், ரஹானே அடுத்தடுத்த வலையில் பயிற்சி மேற்கொண்டனர். இஷாந்த் சர்மா பவுலிங் செய்தார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு பெரிய அதிர்ச்சி தருகிறோம் என்று முதிர்ச்சியற்ற முறையில் அணித்தேர்வு செய்யப்பட்டது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன, சமீபத்திய பார்ம் படிதான் அணித்தேர்வு நடக்கிறது என்று கூறும் விராட் கோலி எந்த பார்ம் அடிப்படையில் பும்ராவைத் தேர்வு செய்தார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. சமீபமாக நன்றாக வீசியது என்றால் உமேஷ் யாதவ்தான், அவரைவிட்டால் அனுபவசாலி மற்றும் அபாயகரமான வீச்சாளர் இஷாந்த் சர்மாதான்.

இங்கிலாந்துக்கு எதிராக 300 அடித்த கருண் நாயர் என்ன ஆனார்? ரோஹித் சர்மா ஏன் தேர்வு செய்யப்பட்டார்? அயல்நாடுகளில் அபாரமாக ஆடும் ரஹானே ஏன் உட்கார வைக்கப்பட்டார்?, ஷிகர் தவண் எந்த அடிப்படையில் ராகுலை விட முன்னுரிமை பெற்றவரானார்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விராட் கோலி பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளார்.

ஆனால் கோலி ஒர் அரதப் பழசான பார்முலாவை பதிலாக அளிக்கிறார்: “வலது, இடது சேர்க்கை பயனளிக்கும் என்று கருதினோம், எதிரணி பவுலர்களுக்கு வலது, இடது பேட்ஸ்மென்களுக்கு மாறி மாறி பீல்ட் செட் செய்வதும், பவுலர்கள் லைன், லெந்தை மாற்றுவது கடினம் என்று யோசித்து தேர்வு செய்தோம், மேலும் இத்தகைய முடிவு சமீபமாக நன்றாக வேலை செய்தது” என்றார்.

ஆனால் வலது இடது, லைன். லெந்த் போன்றவையெல்லாம் நின்று ஆடுகிற வீரர்களுக்குத்தானே? அயல்நாட்டில் 10 பந்துகள் தாங்காத வீரர்களை வைத்துக் கொண்டு வலது, இடது என்று கோலி திட்டமிட்டது எந்த வகையைச் சார்ந்தது என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஜனவரி 13-ம் தேதி சென்சூரியனில் 2-வது டெஸ்ட் நடைபெறுகிறது. வேகப்பந்து வீச்சாளரான ஆட்டிஸ் கிப்சன், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை வைத்து இந்திய அணியை காலி செய்ய ஏற்கெனவே திட்டமிட்டுள்ளார்.

இரண்டு புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர், டுவான் ஆலிவியர், இன்னும் அறிமுகமாகாத லுங்கி நிகிடி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் 2-வது டெஸ்ட் அணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர், ஏற்கெனவே வேகப்பந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் உள்ளார்

சென்சூரியன், 3-வது டெஸ்ட் நடக்கும் வாண்டரர்ஸ் மைதானங்கள் இன்னும் கூடுதலாகவே பவுன்ஸ், ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷிகர் தவண், ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ராகுல், ரஹானே அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article22405362.ece

  • தொடங்கியவர்

விராட் கோலி விக்கெட்தான் எங்கள் இலக்கு: தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் பேட்டி

virat%20kohli

வெர்னன் பிலாண்டர், விராட் கோலியை எல்.பியில் வீழ்த்திய காட்சி.   -  படம். | கேலோ இமேஜஸ்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விக்கெட்தான் எங்களது இலக்காக இருந்தது என்று தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெர்னன் பிலாண்டர் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கேப்டவுன் நகரில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி கண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 6 பேரை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் பிலாண்டர்.

போட்டியில் வெற்றி பெற்றது குறித்து அவர் கூறும்போது, “விராட் கோலி அருமையான, அதிரடியான ஆட்டக்காரர். அவரை வீழ்த்துவதுதான் எங்களது இலக்காக இருந்தது. அவரை தொடக்கத்திலேயே ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் எங்களுக்கு வெற்றி எளிது என்று கணித்தோம்.

அதன்படியே 2 இன்னிங்ஸ்களிலும் அவரை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தோம். விராட் கோலிக்கு தொடர்ந்து அவுட்- ஸ்விங்கர் பந்துகளையே வீசினேன். அதில் ஒரு பந்தில் அவர் சிக்கிவிட்டார்” என்றார். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article22410033.ece

  • தொடங்கியவர்

2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவுக்கு ராசியான செஞ்சூரியன் மைதானம்

 
அ-அ+

2-வது டெஸ்ட் போட்டி நடக்கும் செஞ்சூரியன், தென்ஆப்பிரிக்க அணியின் ஆதிக்கம் நிறைந்த மைதானம் என்பதால் இந்திய அணி தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவுக்கு ராசியான செஞ்சூரியன் மைதானம்
 
செஞ்சூரியன்:

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்ஆப்பிரிக்காவின் அசுரவேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நமது அணியினர் 2-வது இன்னிங்சில் 135 ரன்னில் முடங்கினர்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு ராசியான மைதானங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு இதுவரை நடந்துள்ள 22 டெஸ்டுகளில் விளையாடியுள்ள தென்ஆப்பிரிக்கா அதில் 17-ல் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டு முத்திரை பதித்து இருக்கிறது. 2 டெஸ்டில் மட்டுமே (ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதராக) தோல்வியை சந்தித்துள்ளது.

கேப்டவுன் போல் செஞ்சூரியனும் ஆசிய அணிகளுக்கு அலர்ஜி தான். இந்த மைதானத்தில் ஆசிய அணிகள் 7 டெஸ்டுகளில் (இந்தியா-1, பாகிஸ்தான்-2, இலங்கை-4) விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்தது மட்டுமே மிச்சம். 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 620 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். இதே டெஸ்டில் இந்தியா 459 ரன்கள் எடுத்தது வெளிநாட்டு அணி ஒன்று இங்கு பதிவு செய்த அதிகபட்சமாகும்.

செஞ்சூரியனும், உயிரோட்டமான ஆடுகளமாக இருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க அணியினர் விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ற வகையில் தான் இந்த ஆடுகளம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் மீண்டும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதல் தொடுக்க தென்ஆப்பிரிக்கா வியூகங்களை தீட்டி வருகிறது.

செஞ்சூரியன் ஆடுகள பராமரிப்பாளர் பிரையன் பிளாய் கூறுகையில், ‘சிறந்த ஆடுகளமாக இருக்கும் வகையில் இதை தயார் செய்து வருகிறோம். இது பந்துக்கும், பேட்டுக்கும் சமஅளவிலான போட்டி கொடுக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தொடக்கத்தில் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். அதன் பிறகு ஓரளவு பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுக்கும். போக போக, ஆடுகளத்தன்மையில் பெரிய அளவில் விரிசல் உண்டாகாது. புற்களும் அதிகமாக இருக்காது. ஆனால் நிச்சயம் வேகமும், பவுன்சும் கூடிய ஆடுகளமாக இருக்கும்’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா கோலோச்சுவதை இந்திய அணியினர் இங்கு தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
201801121044428275_1_qpbohus2._L_styvpf.jpg


இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 2-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ரோகித் சர்மாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. 

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/12104443/1139819/SAvIND-South-Africa-lucky-Centurion-stadium.vpf

  • தொடங்கியவர்

வெளியில் உருவாக்கப்படும் கருத்துகளின் வழி செல்ல மாட்டோம்: ரஹானே தேர்வு குறித்து கோலி சூசகம்

kohli

2-வது டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் பார்க்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோலி.   -  படம். | ஏ.பி.

முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே இல்லாமல் ரோஹித் சர்மா ஆடியது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது, தோல்விக்குப் பிறகு ரஹானே அணியில் இடம்பெற்றேயாக வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில் விராட் கோலி தன் பேட்டியில் ரஹானே இடம்பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கூறியதாவது:

சில வாரங்களில் அல்லது 5 நாட்களில் (உண்மையில் இரண்டேமுக்கால் நாள்தான்) விஷயங்கள் எப்படி மாறி விடுகின்றன என்பது வேடிக்கையாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் (ரஹானே) அணியில் இருக்க வேண்டும் என்று ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால் திடீரென இன்னொரு தெரிவை விரும்புகின்றனர்.

ஒரு அணியாக எங்களுக்கு உள்ளதெல்லாம் சரியான, சமச்சீரான ஒரு அணியே. ஒரு வீரர் எதிர்பார்க்கப்படும் சேர்க்கைக்குப் பொருந்தினால் அவருடன் களமிறங்குவோம், நிச்சயமாக வெளியிலிருந்து உருவாக்கப்படும் கருத்துகளின் படியோ அல்லது ஊரே இதைப் பேசுகிறது என்பதற்காக அதன் வழி செல்லமாட்டோம்.

அவர் (ரஹானே) ஒரு தரமான பேட்ஸ்மென். தென் ஆப்பிரிக்காவில் நன்றாக ஆடியுள்ளார். உள்நாட்டுக்கு வெளியே அனைத்து சூழல்களிலுமே நன்றாக ஆடியுள்ளார். வெளியில் அவர்தான் நம் அணியின் திடமான, சீரான வீரர். ரோஹித் சர்மாவுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று நான் விளக்கிவிட்டேன். அதாவது, அஜிங்கியா ரஹானே இந்தப் போட்டியில் ஆடமாட்டார், அடவைக்க முடியாது என்றெல்லாம் நான் கூறவில்லை. எல்லா சாத்தியங்களும் திறந்தே இருக்கின்றன. பயிற்சி முடிந்தவுடன் முடிவெடுப்போம்.

பவுலர்கள் அருமையாக வீசினர், இதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. பேட்டிங் சரியாக அமையவில்லை, பவுலிங் பற்றி கவலையில்லை. இருமுறை தென் ஆப்பிரிக்காவை சுருட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

டெஸ்ட் போட்டிகளை வெல்ல திடமான பேட்டிங் தேவை. குறிப்பாக வெளிநாடுகளில் ஆடும்போது 60-70-80 கூடுதல் ரன்கள் அவசியமாகிறது. உள்நாட்டில் பவுலர்கள் வலுவாகத் திகழ்வதில் ஆச்சரியமில்லை, ஆனால் இங்கு அவர்கள் வலுவாக இருப்பது, பேட்டிங்கில் எங்களை நிரூபிக்க வேண்டிய உத்வேகத்தைத் தந்துள்ளது.

தீவிரம் என்று நான் கூறுவது களத்தில் இறங்கி நேரடியாக ஷாட்களை ஆடுவது என்பதல்ல. பந்தை ஆடாமல் விடுவது, தடுத்தாடுவது என்பதிலும் தீவிரம் அடங்கியுள்ளது. நம் உடல்மொழி, ஆட்டத்தைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதம். உடல்மொழி இவற்றைத்தான் சித்தரிக்கிறது. கடினமான தருணங்கள் உள்ளன, ஆனால் அவற்றையும் தீவிர மனோபாவத்தில் நாம் கடக்கலாம். பாசிட்டிவ் சிந்தனை என்பது ஒவ்வொரு பந்திலும் ரன் எடுப்பது என்று அர்த்தமல்ல. நாம் என்ன செய்யவிருக்கிறோம் என்பதை நம் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. இப்படித்தான் நான் தீவிரம் என்பதைப் பார்க்கிறேன்.

விக்கெட் சரிவுகளினால் நாம் பதற்றம் அடைய வேண்டியதில்லை. வீரர்கள் இன்னும் தங்களை சரியாகச் செலுத்திக் கொள்ள வேண்டும். கடினமான பந்து வீச்சுக்கு எப்போதும் தயாராக இருப்பது அவசியம்” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article22431237.ece?homepage=true

  • தொடங்கியவர்

செஞ்சுரியனில் இன்று 2-வது டெஸ்ட் தொடக்கம்: தாக்குப்பிடிக்குமா விராட் கோலி குழு; தோல்வியடைந்தால் இந்திய அணி தொடரை இழக்க நேரிடும்

 

 
13CHPMUVIRATKOHLI2

விராட் கோலி   -  AFP

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் 2-வது டெஸ்ட்டில் செஞ்சுரியன் நகரில் இன்று மோதுகின்றன.

இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால் ஒன்று வெற்றி பெற வேண்டும், இல்லையென்றால் ஆட்டத்தை டிராவில் முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது. ஒருவேளை இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவினால் தொடரை இழப்பதுடன் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்ற சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துவிடும்.

2018-19ம் ஆண்டு சீசனில் அயல்நாட்டு மண்ணில் 12 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ள நிலையில் 2-வது போட்டியிலேயே தோல்வியடைந்தால் தொடர் பறிபோகி விடும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி. இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் சவால்களை எதிர்கொள்வதற்காக கடந்த சில நாட்களாக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவண், முரளி விஜய், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, விருத்திமான் சஹா ஆகியோர் சுமார் 4 மணி நேரம் பேட்டிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சிகளில் கவனம் செலுத்தினர். இன்றைய போட்டியில் ஷிகவர் தவண் நீக்கப்பட்டு கே.எல்.ராகுல் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஷிகர் தவண் வெளிநாடுகளில் 19 டெஸ்ட்களில் விளையாடி 43.74 சராசரி வைத்துள்ளார். இது அவரது ஒட்டுமொத்த 29 போட்டிகளின் சராசரியை (42.62) விட சற்று அதிகம் தான்.

ஆனால் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஷிகர் தவண் 11 டெஸ்ட்டில் விளையாடி 27.81 சராசரியையே கொண்டுள்ளார். இதில் தென் ஆப்பிரிக்காவில் அவரது சராசரி வெறும் 18 தான். இங்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்ச ஸ்கோர் 29 தான். அதுவும் கடந்த 2013-14ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் அடிக்கப்பட்டதே. எல்லாவற்றுக்கும் மேலாக இம்முறை அவரது ஷாட் தேர்வுகள் மோசமாக அமைந்தது. கேப்டவுன் டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் மோசமான ஷாட் மேற்கொண்டு விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.

ஒப்பீட்டளவில் ஷிகர் தவணைவிட கே.எல்.ராகுல் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக செயல்படக்கூடியவர். மாறாக ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானேவை ஒப்பிடுவது எளிதானது அல்ல. சமீபகால பார்மின் அடிப்படையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு தேர்வான ரோஹித் சர்மா முறையே 11 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் ஒரு ஆட்டத்தில் வெளிப்படுத்திய திறன் அடிப்படையில் அவர் நீக்கப்படுவாரா என்பது சந்தேகம் தான். மாறாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்குவது குறித்தே விராட் கோலி ஆலோசிக்கக்கூடும்.

கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தை விட செஞ்சுரியன் ஆடுகளம் வேகமானது. மேலும் பவுன்ஸ்களும் அதிகமாக இருக்கும். இதனால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அந்த இடத்தில் ரஹானே இடம் பெறக்கூடும். இதேபோல் வேகப்பந்து வீச்சு துறையிலும் சிறிது மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. பும்ரா, முகமது ஷமி நீக்கப்பட்டு இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் களமிறக்கப்படக்கூடும். இதில் உமேஷ் யாதவ் விளையாடும் லெவனில் இடம் பெறுதவற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் கடந்த சில நாட்களாக உமேஷ் யாதவ் பந்து வீச்சு பயிற்சியுடன் பேட்டிங் பயிற்சிக்கும் கணிசமான நேரத்தை செலவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் 2-வது போட்டியை சந்திக்கிறது. கேப்டவுன் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்த போதிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர். 208 ரன்களே இலக்காக கொடுத்த போதிலும் இந்திய அணியை 135 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினர். இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்கள் கைப்பற்றிய பிலாண்டர் மற்றும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட மோர்னே மோர்கல், ரபாடா ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர். காயம் காரணமாக ஸ்டெயின் விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அல்லது லுங்கின்ஜிடி இடம் பெறக்கூடும்.

 

ராசியான மைதானம்

போட்டி நடைபெறும் செஞ்சுரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 ஆட்டத்தில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. 17 ஆட்டங்களில் வெற்றியையும், 3 ஆட்டங்களை டிராவும் செய்துள்ளது. இந்திய அணி இங்கு கடைசியாக 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article22434868.ece

  • தொடங்கியவர்

புவனேஷ்வர் குமார் அதிர்ச்சி நீக்கம்; பார்த்திவ் படேல், ராகுல், இசாந்த் அணியில்: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்

 

 
TH01CKTBHUVNESHWAR

புவனேஷ்வர் குமார் அதிர்ச்சி நீக்கம்.   -  படம். | கே.ஆர்.தீபக்,

செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெய்னுக்குப் பதிலாக லுங்கி நிகிடி என்ற வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிட்சில் புற்கள் இல்லை, ஈரப்பதம் இல்லை, டாஸ் வென்று முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்ச், தென் ஆப்பிரிக்கா அதைத்தான் செய்தது, தானும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட் செய்வதாகவே இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பிற்பாடு பிட்ச் உடைந்தால் ஸ்பின் பந்து வீச்சுக்கு ஓரளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்று பிட்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய அணியில் சில அதிர்ச்சிகர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, கோலி கூறியது போல் வெளியில் உருவாக்கப்படும் கருத்துருவாக்கங்களுக்கு இசையவில்லை, ரஹானே இல்லை, ரோஹித் சர்மாவே தொடர்கிறார். ஆனால் 10 கேட்ச்களை எடுத்து தோனி சாதனையை உடைத்த விருத்திமான் சஹா நீக்கப்பட்டு பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு இசாந்த்சர்மா சேர்க்கப்பட்டதே, விராட் கோலி, இதற்குக் காரணமாக கூடுதல் பவுன்ஸ் என்கிறார், ஆனால் அப்படி இதுவரை தெரியவில்லை. புவனேஷ்வர் குமார் உண்மையில் சிறப்பாக வீசியதோடு பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் அவரை ஏன் நீக்கினார்கள் என்று புரியவில்லை.

ஷிகர் தவணுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் வந்துள்ளார். புவனேஷ்வர் குமாரை நீக்கியதன் மீதான விமர்சனங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. இசாந்த் சர்மா வேண்டுமென்றால் பும்ராவை உட்கார வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியில் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆட்டம் தொடங்கி இதுவரை எடுத்த எட்ஜ்கள் எதுவும் ஸ்லிப்பின் கைகள் வரை செல்லவில்லை, முன்பே தரைதட்டிவிடுகிறது. இதில் பவுன்ஸ் காரணமாக இசாந்த் சர்மாவை எடுத்துள்ளோம் என்கிறார் கோலி, ஒருவேளை இசாந்த் சர்மா கூடுதல் பவுன்ஸ் செய்வார் என்று கூறினாரோ என்னவோ? டீன் எல்கர் பந்தைத் தொட வேண்டும் என்று ஏற்கெனவே இசாந்த் சர்மாவிடம் பீட்டன்கள் ஆகியுள்ளார். இதுவரை 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 47 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் 19 ரன்களுடனும் மார்க்ரம் 31 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/article22435939.ece

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

புவனேஷ்வர் குமார் அதிர்ச்சி நீக்கம்; பார்த்திவ் படேல், ராகுல், இசாந்த் அணியில்: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்

 

 
TH01CKTBHUVNESHWAR

புவனேஷ்வர் குமார் அதிர்ச்சி நீக்கம்.   -  படம். | கே.ஆர்.தீபக்,

 

மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு இசாந்த்சர்மா சேர்க்கப்பட்டதே, விராட் கோலி, இதற்குக் காரணமாக கூடுதல் பவுன்ஸ் என்கிறார், ஆனால் அப்படி இதுவரை தெரியவில்லை. புவனேஷ்வர் குமார் உண்மையில் சிறப்பாக வீசியதோடு பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் அவரை ஏன் நீக்கினார்கள் என்று புரியவில்லை.

http://tamil.thehindu.com/sports/article22435939.ece

தலைக்கனம் மெத்தினால் இப்படித்தான்.புவனேஸ் இல்லாதது இப்பவே தெரியுது.SA 130/1 * (40.5 ov)

  • தொடங்கியவர்

செஞ்சூரியன் டெஸ்ட்: தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 182-2

 

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் தேனீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. #SAvIND #Markram #Ashwin

 
செஞ்சூரியன் டெஸ்ட்: தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 182-2
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். கேப் டவுன் டெஸ்டில் காயம் அடைந்த டேல் ஸ்டெயினுக்குப் பதிலாக லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதாகும் இவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட்  ஆகும்.

இந்திய அணியில் தவான், விக்கெட் கீப்பர் சகா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல், பார்தீவ் பட்டேல், இசாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். லீவ் செய்யக்கூடிய பந்தை லீவ் செய்து. அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடினார்கள். டீன் எல்கர் நிதானமாக விளையாட மார்கிராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சொந்த மைதானத்தில் பந்து எப்படி வரும் என்பதை துள்ளியமாக அறிந்த வைத்திருக்கும் மார்கிராம் 81 பந்தில் 9 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் 27 ஓவரில் 78 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 26 ரன்னுடனும், மார்கிராம் 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா 85 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. டீன் எல்கர் 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார்.

201801131834189815_1_6bumrah-s._L_styvpf.jpg

மார்கிராம் உடன் இணைந்து அம்லா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்தில் அம்லா அடித்த பந்து ஹர்திக் பாண்டியாவை நோக்கி சென்றது. பந்து சற்று விலகிச் சென்றதால் கேட்ச் ஆக மாறாமல் அம்லா தப்பித்தார்.

மறுமுனையில் விளையாடிய மார்கிராம் 94 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சொந்த மைதானத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பு இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். 51-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அம்லா கொடுத்த கேட்ச்-ஐ பார்தீவ் பட்டேல் பிடிக்க தவறினார். இதனால் 30 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

முதல் நாள் தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. அம்லா 35 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 16 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/13183419/1140159/SAvIND-centurion-Test-Tea-Break-south-africa-182-for.vpf

  • தொடங்கியவர்

2-வது டெஸ்ட்: முதலில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்; முடிவில் இந்தியா கை ஒங்கியது

 

markramjpg
aShwinjpg
markramjpg
aShwinjpg

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களை எடுத்துள்ளது.

முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஃபாப் டுபிளெசிஸ் 24 ரன்களுடனும், கேஷவ் மஹராஜ் 10 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 90 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்கா கடைசியில் தேவையில்லாமல் ரன் அவுட்டில் ஆம்லா மற்றும் பிலாண்டரை இழந்தது. ஹஷிம் ஆம்லாவுக்கு முன்னதாக பார்த்திவ் படேல் லெக் திசையில் டைவ் அடித்து கேட்ச் ஒன்றை கோட்டை விட்ட பிறகு அருமையாக ஆடினார்.

அதிக பவுன்ஸ் ஆகும் பிட்ச், கேப்டவுனை விடவும் ஸ்விங் வேகம் உள்ள பிட்ச் என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்த பிறகு இடையில் என்ன ‘நடந்தது’ என்று தெரியவில்லை, துணைக்கண்டம் போல் ஒரு பிட்ச் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பந்து வீசும் வரை நாம் எதையும் இறுதியாகக் கூறுவதற்கில்லை. பிட்சில் புற்கள் இல்லாமல் மழிக்கப்பட்டது சில கேள்விகளை எழுப்பாமல் இல்லை. இதில் அஸ்வின் 31 ஓவர்களை வீசி 8 மெய்டன்களுடன் 90 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஹஷிம் ஆம்லா நன்றாக செட்டில் ஆகி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த போது அவர் 82 ரன்களில் இருந்தார், தென் ஆப்பிரிக்கா ஸ்கோர் 246/3. அப்போதுதான் மினி சரிவு கண்டது தென் ஆப்பிரிக்கா.

ஹர்திக் பாண்டியா வீசிய ஷார்ட் பிட்ச் பந்து ஒன்று ஆம்லாவின் நெஞ்சுயரத்துக்கு வந்தது, அவர் அதனை ஒருவழியாக தடுத்தாடிய போது லெக் திசையில் அருகிலேயே பந்து சென்றது, டுபிளெசிஸ் சிங்கிளுக்கு அழைத்தார், சற்றே தயங்கி ஓடினார் ஆம்லா. ஆனால் பாண்டியாவும் ஓடினார் பந்தை எடுக்க எடுத்தார் சற்றும் எதிர்பாராத விதமாக ரன்னர் முனையில் நேரடியாக ஸ்டம்பைப் பெயர்க்க ஆம்லா கிரீசுக்கு வெளியே சிக்கி ரன் அவுட் ஆனார். பாண்டியாவின் சமயோசிதத்தினால் விழுந்த விக்கெட், கபில்தேவ் இப்படிப்பட்ட ரன் அவுட்களை செய்துள்ளார். ஆம்லா 82 ரன்னில் அவுட்.

அடுத்ததாக குவிண்டன் டி காக், அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து ஒரு பந்தை லெந்தில் பிட்ச் செய்து திருப்ப காலை நகர்த்தாமல் அந்தப் பந்தை தள்ளியாட முயன்றார் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. பிறகு வெர்னன் பிலாண்டர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் பாண்டியாவின் பந்தை லெக் திசையில் தட்டி விட்டு திடுதிடுவென ஒரு ரன்னுக்கு எதிர்முனை நோக்கி ஓடினார், ரன்னர் முனையில் டுபிளெசிஸ் வராதே வராதே என்று கத்தியது பிலாண்டர் காதில் விழவில்லை, இருவரும் ஒரு முனையில் தேங்க பாண்டியா பேட்டிங் முனையில் பைல்களை அகற்றினார். 246/3லிருந்து 251/6 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா. கடைசியில் மகராஜ் அடித்த ஷாட்டுக்கு மிட்விக்கெட்டில் பும்ரா 15 அடி முன்னால் நின்றதால் தலைக்கு மேல் பவுண்டரி ஆனது, பின்னால் நின்றிருந்தால் கேட்ச் ஆகியிருக்கும்.

முன்னதாக டிவில்லியர்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். தென் ஆப்பிரிக்கா ஆட்ட முடிவில் 269/6. கொல்கத்தாவில் சுருட்டியது போல் 300 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.

முன்னதாக...

அஸ்வின் 2விக்., மார்க்ரம் 94 ரன்கள்; தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்

செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா தேநீர் இடைவேளை வரை  2 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.

ஹஷிம் ஆம்லா 39 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று விழுந்த 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் கைப்பற்றினார். அஸ்வினுக்கு பந்துகள் திரும்பின, எழும்பின, ஆனால் அவர் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை அவரை ஒரு கட்டத்தில் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்தனர்.

மார்க்ரம் மிக அருமையாக ஆடினார், தொடக்கத்தில் இசாந்த் சர்மாவின் பந்துகள் இருமுறை மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்புக்கு அருகில் சென்றது, பும்ராவின் ஒரு பந்து அவரை இரண்டாக்கி, உள்ளே வந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது, எட்ஜ் கூட ஸ்லிப் முன்னால் விழுந்தது. கேரி ஆகவில்லை.

மார்க்ரம் 150 பந்துகளில் 15 அருமையான பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்து அஸ்வின் ரவுண்ட் த விக்கெட் பந்தில் மட்டையில் மெலிதாகப் பட்டு பார்த்திவ் படேல் கையில் கேட்ச் ஆனது.

முன்னதாக ஏகப்பட்ட பீட்டன்களுடன் ஆடிய டீன் எல்கர் 31 ரன்களில் 4 பவுண்டரிகளுடன் வெளியேறினார், இதில் ஒரு பவுண்டரி ஆஃப் ஸ்டம்ப் லைனில் தனக்கு குறுக்காகச் சென்ற பந்தை மிட் ஆனில் அடித்த ஷாட் அபாரம். இவர் அஸ்வின் பந்தை ரீச் செய்ய முயன்று தொடர்ந்து தோல்வியடைந்த நேரத்தில் மேலேறி வந்து பந்தை அடிக்க முயன்றார், ஆனால் பந்து முன்னதாகவே பிட்ச் ஆகி சற்று, மிகச் சற்று எழும்பியது அடித்தார் பந்து சிலி மிட் ஆஃபில் விஜய் வயிற்றுப் பகுதியில் ஒட்டியது, அவர் அமுக்கினார்.

டீன் எல்கருக்கு ஒரு வாய்ப்பு லெக் திசை பவுண்டரியில் தவறான கணிப்பினால் தவறியது, ஆம்லாவுக்கு பார்த்திவ்  லெக் திசையில் டைவ் அடித்து வாய்ப்பு ஒன்றை விட்டார்.

பந்து வீச்சில் பும்ரா, ஷமி கடும் ஏமாற்றமளித்தனர். பும்ரா 13 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்தார், ஷமி மீண்டும் ஒரு முறை எந்தவித நோக்கமும் இல்லாமல் வீசி 8 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்தார், இசாந்த் சர்மா ஓரளவுக்கு நன்றாக வீசினார், ஆனால் வேகம் இல்லை. 13 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பாண்டியா சிக்கனமாகத் திகழ்ந்தார், 7 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்தார். அஸ்வின் 18. ஓவர்களில் 54 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மார்க்ரம் ஆஃப் ஸ்டம்ப் கார்டு எடுத்து ஆடி இந்திய பவுலர்களுகு எல்.பி.ஆசைக் காட்டினார், இதனால் புல் லெந்தில் வீசி வாங்கிக் கட்டிக் கொண்டனர், மிட் ஆன், மிட் ஆஃபில் அசத்தினார் மார்க்ரம். ஷார்ட் ஆகப் போட்டால் வெளுக்கவும் செய்தார்.

ஜஸ்பிரித் பும்ரா புதிய பந்தில் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுடன் வீசியது போல் தெரிந்தாலும் இங்கும் அங்கும் எங்கும் வீசிக்கொண்டிருந்தார். இவரும் ஷமியும் நிறைய பவுண்டரி பந்துகளை வீசினர். இப்போது இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தல் ஆம்லா, டிவில்லியர்ஸ் கூட்டணியே, டிவில்லியர்ஸ் ஏற்கெனவே அஸ்வினை ஒரு அபாரமான ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார்.

முன்னதாக...

புவனேஷ்வர் குமார் அதிர்ச்சி நீக்கம்; பார்த்திவ் படேல், ராகுல், இசாந்த் அணியில்: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்

செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெய்னுக்குப் பதிலாக லுங்கி நிகிடி என்ற வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிட்சில் புற்கள் இல்லை, ஈரப்பதம் இல்லை, டாஸ் வென்று முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்ச், தென் ஆப்பிரிக்கா அதைத்தான் செய்தது, தானும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட் செய்வதாகவே இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பிற்பாடு பிட்ச் உடைந்தால் ஸ்பின் பந்து வீச்சுக்கு ஓரளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்று பிட்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய அணியில் சில அதிர்ச்சிகர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, கோலி கூறியது போல் வெளியில் உருவாக்கப்படும் கருத்துருவாக்கங்களுக்கு இசையவில்லை, ரஹானே இல்லை, ரோஹித் சர்மாவே தொடர்கிறார். ஆனால் 10 கேட்ச்களை எடுத்து தோனி சாதனையை உடைத்த விருத்திமான் சஹா நீக்கப்பட்டு பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு இசாந்த்சர்மா சேர்க்கப்பட்டதே, விராட் கோலி, இதற்குக் காரணமாக கூடுதல் பவுன்ஸ் என்கிறார், ஆனால் அப்படி இதுவரை தெரியவில்லை. புவனேஷ்வர் குமார் உண்மையில் சிறப்பாக வீசியதோடு பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் அவரை ஏன் நீக்கினார்கள் என்று புரியவில்லை.

ஷிகர் தவணுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் வந்துள்ளார். புவனேஷ்வர் குமாரை நீக்கியதன் மீதான விமர்சனங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. இசாந்த் சர்மா வேண்டுமென்றால் பும்ராவை உட்கார வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியில் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆட்டம் தொடங்கி இதுவரை எடுத்த எட்ஜ்கள் எதுவும் ஸ்லிப்பின் கைகள் வரை செல்லவில்லை, முன்பே தரைதட்டிவிடுகிறது. இதில் பவுன்ஸ் காரணமாக இசாந்த் சர்மாவை எடுத்துள்ளோம் என்கிறார் கோலி, ஒருவேளை இசாந்த் சர்மா கூடுதல் பவுன்ஸ் செய்வார் என்று கூறினாரோ என்னவோ? டீன் எல்கர் பந்தைத் தொட வேண்டும் என்று ஏற்கெனவே இசாந்த் சர்மாவிடம் பீட்டன்கள் ஆகியுள்ளார். இதுவரை 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 47 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் 19 ரன்களுடனும் மார்க்ரம் 31 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/article22435939.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஷிகர் தவான் பலிகடா; புவனேஷ்வர் ஆடும் லெவனில் இடம்பெறாதது ஏன்? - கொதிக்கும் சுனில் கவாஸ்கர்

 
 

செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கிய இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளசி பேட்டிங் தேர்வு செய்தார். 

Ishanth_19024.jpg

 


இந்த போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்குப் பதிலாக பார்த்தீவ் படேலும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குப் பதிலாக இஷாந்த் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 

இந்தநிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”முதல் டெஸ்டில் சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்த புவனேஷ்வர் குமாரை ஆடும் லெவனில் சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது. இஷாந்த் ஷர்மாவை அணிக்குள் கொண்டுவர வேண்டுமென்றால், முகமது ஷமி அல்லது பும்ரா ஆகியோரில் ஒருவருக்குப் பதிலாகக் கொண்டு வந்திருக்கலாம். 
அதேபோல், இந்திய அணியில் ஷிகர் தவானே எப்போது பலியாடாக ஆக்கப்படுகிறார். ஒரு இன்னிங்ஸில் அவர் மோசமாக விளையாடினால் போதும், உடனடியாக அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்படுவதை நாம் பார்க்கலாம்’’ என்றார்.  

https://www.vikatan.com/news/sports/113540-sunil-gavaskar-questions-indias-team-selection-for-2nd-test.html

  • தொடங்கியவர்

செஞ்சூரியனில் ரன் அடிக்கவில்லையெனில் கோலி தன்னையே நீக்கிக்கொள்ள வேண்டும்: சேவாக் அதிரடி

 

 
sehwag

கோலியைச் சாடிய சேவாக்.   -  படம். | கே.பாக்யபிரகாஷ்.

புவனேஷ்வர் குமாரை காரணமின்றி அணியிலிருந்து நீக்கிய இந்திய கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் ரன் அடிக்கவில்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்குத் தன்னைத்தானே நீக்கிக் கொள்வது உசிதம் என்று அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா டிவி-க்காக சேவாக் கூறியதாவது:

ஷிகர் தவண் ஒரு போட்டியில் தோல்வியடைந்ததற்காகவும், காரணமில்லாமல் புவனேஷ்வர் குமாரையும் கோலி நீக்கியதைப் பார்க்கும் போது செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் கோலி ரன் எடுக்கவில்லை என்றால் ஜோஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக் கொள்ள வேண்டும்.

இஷாந்த் சர்மாவை வேறு எந்த பவுலருக்குப் பதிலாகவும் சேர்த்திருக்கலாம், புவனேஷ்வர் குமார் கேப்டவுனில் அபாரமாக ஆடினார். அவரை உட்கார வைப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒரு செயல்.

இவ்வாறு சாடினார் சேவாக்.

http://tamil.thehindu.com/sports/article22440483.ece?homepage=true

  • தொடங்கியவர்

புவனேஷ்வர் குமாரை ஏன் நீக்க வேண்டும்? - ‘ஸ்விங் கிங்’ ஃபானி டிவிலியர்ஸ் ஆச்சரியம்

 

 
TH14FANIE

ஃபானி டிவிலியர்ஸ்.

ஃபானி டிவில்லியர்ஸ் ஒரு மிகப்பெரிய தென் ஆப்பிரிக்க ஸ்விங் பவுலர், ஆலன் டோனல்டுடன் இணைந்து 90களில் முன்னணி பேட்ஸ்மென்களை ஸ்விங்கினால் அச்சுறுத்தியவர்.

ரிச்சர்ட் ஹாட்லியுடன் ஒப்பிடக்கூடிய ஒரே பவுலர் ஃபானி டிவில்லியர்ஸ், அவர் புவனேஷ்வர் குமாரை உட்காரவைத்த கோலி, ரவிசாஸ்திரியின் அராஜக முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு ஃபானி டிவில்லியர்ஸ் கூறும்போது, “புவனேஷ்வர் குமார் வலது கை பேட்ஸ்மென்களுக்கு பந்தை வெளியே ஸ்விங் செய்கிறார், இடது கை பேட்ஸ்மென்களுக்கும் பந்தை அருமையாக வெளியே கொண்டு செல்கிறார்., இதற்கு மேல் என்ன வேண்டும்? அவர் உண்மையில் எதிர்கொள்ள வேண்டிய ஒரு பவுலர், அவர் எப்போதும் அணியில் இருக்க வேண்டும்.

உலக கிரிக்கெட் முழுதுமே ஆஃப் ஸ்டம்புக்கு நெருக்கமாக பந்தை பிட்ச் செய்து வலது கை பேட்ஸ்மென்களுக்குப் பந்தை வெளியே கொண்டு செல்பவர்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பவுலர்களாகக் கருதப்படுகின்றனர். பெரிய வேகம் தேவையில்லை, மெக்ரா, ஷான் போலக், பிலாண்டர் ஆகியோரைப் பாருங்கள்.

இஷாந்த் சர்மாவின் பிரச்சினை என்னவெனில் அவர் இன்ஸ்விங்கர்களை வீசுபவர், எப்போதாவதுதான் பந்தை வெளியே எடுக்கிறார். இதேதான் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் பொருந்தும் இவரும் பந்தை உள்ளே செலுத்துபவர்தான். இது டெஸ்ட் போட்டிகளுக்கு அவ்வளவாக பொருந்தக் கூடியதல்ல. ஹர்திக் பாண்டியா பிரதானமாக பேட்ஸ்மென் ஆனால் கொஞ்சம் பவுலிங் செய்பவர் அவ்வளவே.

மொகமது ஷமியிடம் அருமையான ரன் அப், வேகம், அவுட் ஸ்விங்கர் உள்ளது, அவரை பஞ்சில் சுற்றி வைத்து இந்திய அணி பாதுகாக்க வேண்டும்.

குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் ஸ்லிப் அதிகம் வைக்க முடியாத நிலையில் பவுலர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த பந்துகளை உள்ளே கொண்டு வருகின்றனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது பொருந்தாது.

இந்திய பேட்ஸ்மென்கள் தங்கள் நாட்டில் ஆடுவது போல் காலை முன்னால் போட்டு ஆடும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். இங்கெல்லாம் பின்னால் சென்று அதிக பந்துகளை எதிர்கொள்வதே நலம். ஆட்டம் போகப்போக இந்தப் பிட்ச் இன்னும் வேகம் காட்டும் 350 ரன்கள் இந்தப் பிட்சில் நல்ல ஸ்கோராகும்” இவ்வாறு கூறினார் ஃபானி டிவில்லியர்ஸ்.

http://tamil.thehindu.com/sports/article22440248.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்திய வீரர்களுக்கு இதற்கும் மட்டுப்பாடா ?

 

 

போட்டிகளின் பின்னர் இரண்டு நிமிடங்கள் மாத்திரமே குளிக்குமாறு இந்திய அணிவீரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

india-ss.jpg

தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்கோது டெஸ்ட் தொடரில் பங்கேற்கு விளையாடி வருகின்றது.

இந்நிலையில் போட்டிகளுக்குப் பின்னர் இரண்டு நிமிடம் மாத்திரமே இந்தி வீரர்களைக் குளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப் டவுனில்  நீர் தீர்ந்துபோகும் நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நீர் தீர்ந்துபோகலாம் என அண்மைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

கடந்த மூன்று வருடங்களாகப் பெய்த மிக குறைந்த மழை மற்றும் அதிகரித்துவரும் மக்கள் தொகையால் அதிகரித்துள்ள நீர் நுகர்வே இந்நெருக்கடிக்குக் காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

கடல் நீரை குடிநீராக்குவது, நிலத்தடி நீர் சேகரிப்பு திட்டங்கள், நீர் மறுசுழற்சி திட்டங்கள் போன்ற தீர்வுத் திட்டங்கள் மூலம் நீர்ப் பிரச்சனையை தீர்க்க தென்னாபிரிக்க அரசு வேகமாக செயல்பட்டு வருகின்றது.

நீரைப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஒரு நாளைக்கு 87 லீற்றர் நீருக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்றும் தென்னாபிரிக்கான் கேப்டவுன் நகரிலுள்ள 4 மில்லியன் மக்கள்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காரை கழுவுவதற்கும், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கும் தடை அங்கு விதிக்கப்பட்டுள்ளது.

 

இதுபோன்ற தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் கேப் டவுனில் மாத்திரமல்லாது, உலகளவில் கிட்டதட்ட 850 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/29376

  • தொடங்கியவர்

3.png&h=42&w=42

 
335
 
6.png&h=42&w=42
28/0 * (8.1 ov)
 
  • தொடங்கியவர்

கோலி உட்பட கேட்ச்களை விட்ட இந்திய அணி : தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள்!

 

 
ashwin

கொலி கேட்சை விட்ட பிறகு அஸ்வின் ஏமாற்றம்.   -  படம்.| ஏ.எஃப்.பி.

செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு சற்று முன் தென் ஆப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்சில் 335 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அஸ்வின் 38.5 ஓவர்கள் 10 மெய்டன்களுடன் 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணியினர் தவறவிட்ட கேட்ச்களுடன் தென் ஆப்பிரிக்கா 66 ரன்களைச் சேர்த்தது. ஆனாலும் தன் கடைசி 7 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா 89 ரன்களுக்கு இழந்தது, இந்தியா தன் முதல் 7 விக்கெட்டுகளை இதே 89 ரன்களுக்கு இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். ஏனெனில் ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்ச் இன்னும் வேகம் கூடும் பிட்ச், எனவே 350 ரன்கள் நல்ல ஸ்கோர் என்றார், இந்தப் பிட்சில் நம் பவுலிங்கை வைத்து எதுவும் கூற முடியாது, அவர்கள் வீசத் தொடங்கிய பிறகுதான் தெரியும். இந்திய பேட்ஸ்மென்க்ள் அனாவசியமாக குகைக்குள் செல்லாமல் தைரியமாக ஆட வேண்டும். பிலாண்டரை ரெண்டு வாங்கு வாங்கினால் கொஞ்சம் ஆடிப்போவார்கள்.

பார்த்திவ் படேல், பாண்டியா, விராட் கோலி விட்ட கேட்ச்கள்:

சஹா போன போட்டியில் 10 கேட்ச்களை பிடித்து சாதனை புரிந்தார், ஆனால் கோலியின் அராஜகத்தினால் அவரும் புவனேஷ்வர் குமார் போல் உட்கார வைக்கப்பட்ட நிலையில் ஆம்லாவுக்கு இடது புறம், அதுவும் படேலுக்கு வாகான இடது புறம் வந்த கேட்சை அவர் தவற விட்டார் நேற்று, ஆம்லா 82 ரன்கள் எடுத்தார். இன்று டுபிளெசிஸுக்கு அஸ்வின் பந்தில் எட்ஜ் ஆக கேட்சை விட்டார் பார்த்த்திவ் படேல்.

ரபாடாவுக்கு அஸ்வின் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கேட்ச்கள் தவற விடப்பட்டது, ஒன்று மோசமான ஸ்லிப் பீல்டரான கோலியால் விடப்பட்டது, அஸ்வின் பந்து ஒன்று திரும்பி எட்ஜ் எடுக்க ஸ்லிப்பில் தவறாக, வைடாக நின்று கொண்டிருந்த கோலியின் வலது புறம் வந்த கேட்சை நழுவ விட்டார். அடுத்த பந்தே ரபாடா மீண்டும் ஆஃப் திசையில் ஷாட் ஆட சற்று தள்ளி பாண்டியா கேட்ச் எடுக்கப் போக இன்னொரு வீரர் வர அவர் கேட்சைக் கோட்டை விட்டார். இந்த இரண்டு கேட்ச்களூம் விடும்போது தென் ஆப்பிரிக்கா 292/7 என்று இருந்தது. மீண்டும் கோட்டை விட்ட கேட்ச்களினால் 35-40 ரன்களைக் கூடுதலாக விட்டுக் கொடுத்தது இந்திய அணி. விராட் தனக்கு வந்த கேட்சை விட்டுவிட்டு அடுத்த பந்தில் கேட்ச் விட்ட பீல்டரை திட்டுகிறார்! என்ன சொல்ல?

இன்று காலை மஹராஜ் 18 ரன்களில் ஆஃப் ஸ்டம்புக்கு நெருக்கமான பந்து ஒன்று எழும்ப மஹராஜ் மட்டையில் பட்டு பார்த்திவ் படேலிடம் கேட்ச் ஆனது. இந்தப் போட்டியில் ஷமி வீசிய சிறந்த ஓவர் இதுதான். ரபாடாவுக்கும், டுபிளெசிசுக்கும் 42 ரன்கள் கூட்டணி அளித்தனர் இந்திய பீல்டர்கள். ரபாடா 11 ரன்கள் எடுத்து இஷாந்த் ஷர்மாவின் பவுன்சரி ஹூக் செய்ய அது டீப் ஸ்கொயர் லெக்கில் இறங்க முன்னால் ஓடி வந்த் கடினமான கேட்சைப் பிடித்தார் பாண்டியா. டுபிளெசிஸ் மிக அருமையான பொறுமையான இன்னிங்சை ஆடி 9 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மாவின் சாதாரண இன்ஸ்விங்கர் பந்தை லெக் திசையில் ஆக்ரோஷமாக பிளிக் செய்ய முயன்று மிடில் ஸ்டம்ப்பை இழந்தார். மோர்னி மோர்கெல் ஆச்சரியகரமான ஒரு ஆன் திசை பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வீப்பர் கவரில் விஜய்யிடம் கேட்ச் கொடுத்து அஸ்வினின் 4வது விக்கெட்டானார். தென் ஆப்பிரிக்கா 335 ரன்களுக்குச் சுருண்டது.

இந்திய அணி ஒரு ஓவரை ஆடியது, அதில் மஹராஜ் வீச முரளி விஜய் முதல் புல்டாஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார், கடைசி பந்தில் மட்டையின் உள்விளிம்பில் வாங்கி கேட்சுக்கு நெருக்கமாகச் சென்றது தப்பினார். இந்தியா 4/0

http://tamil.thehindu.com/sports/article22440932.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

6.png&h=42&w=42

183/5 * (61 ov)
 
  • தொடங்கியவர்

செஞ்சூரியன் டெஸ்ட் இரண்டாம் நாள்: கோலி நிதானமான ஆட்டம் - இந்தியா 183/5

 

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. #SAvIND #CenturionTest #Kohli

 
 
செஞ்சூரியன் டெஸ்ட் இரண்டாம் நாள்: கோலி நிதானமான ஆட்டம் - இந்தியா 183/5
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். டீன் எல்கர் 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய மார்கிராம் 94 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டிவில்லியர்ஸ் 20 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில் ஸ்டெம்புகள் சிதற அவுட் ஆனார். அதன்பின் கேப்டன் டு பிளிசிஸ், அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். அரைசதம் கடந்த அம்லா, 82 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது.

201801142300189162_1_jyryvaig._L_styvpf.jpg

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கேஷவ் மகராஜ் அவுட்டானார்.  அரை சதமடித்த டு பிளசிஸ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்ஆப்ரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி பந்துவீச்சில் அஷ்வின் 4 விக்கெட்களும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 28 ஆக இருக்கும் போது லோகேஷ் ராகுல் 10 ரன்களில் மார்கல் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த புஜாரா எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் கோலி - முரளி விஜய் ஜோடி பொறுப்பாக ஆடியது. அணி எண்ணிக்கை 107 ஆக இருக்கும்போது 46 ரன்களில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 10 ரன்களிலும், விக்கெட் கீப்பர் பர்தீவ் படேல் 19 ரன்களில் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை 164 ஆக இருந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய கோலி அரை சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 85 ரன்களுடனும், பாண்ட்யா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தென் ஆப்ரிக்காவை விட 152 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தென்ஆப்ரிக்கா அணி சார்பில் கேஷவ் மகராஜ், மார்கல், ரபடா, கிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #SAvIND #CenturionTest #kohli 

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/14230019/1140232/2nd-test-Day-2-India-trail-South-Africa-by-152-runs.vpf

  • தொடங்கியவர்

செஞ்சூரியன் டெஸ்ட்: விராட் கோலி சதம்- ஹர்திக் பாண்டியா ரன்அவுட்

 
அ-அ+

செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா ரன்அவுட் ஆனார். #SAvIND #ViratKohli

 
செஞ்சூரியன் டெஸ்ட்: விராட் கோலி சதம்- ஹர்திக் பாண்டியா ரன்அவுட்
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 335 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 61 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 85 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 65-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தை பவுண்டரிக்கு விராட்டினார் கோலி.

201801151456123350_1_2ViratKohli-s._L_styvpf.jpg

67-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். விராட் கோலி. 146 பந்தில் சதத்தை தொட்டார். இது அவரின் 21-வது சதமாகும். செஞ்சூரியனில் சச்சின் தெண்டுல்கருக்குப் பின் சதமடிக்கும் 2-வது இந்தியர் இவராவார்.

மறுமுனையில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 68-வர் ஓவரின் முதல் பந்தில் கவனக்குறைவாக 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். #SAvIND #ViratKohli #HardikPandya

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/15145612/1140346/SAvIND-Virat-Kohli-century-hardik-pandya-run-out.vpf

  • தொடங்கியவர்

செஞ்சூரியன் டெஸ்ட்: இந்தியா 307 ரன்கள்

 

21-வது சதம் எடுத்து கோலி மாஸ்டர் கிளாஸ் 153; அஸ்வின் அதிரடி 38: இந்தியா 307 ஆல் அவுட்

 

 
kohli

141 நாட் அவுட்; கோலியின் மாஸ்டர் கிளாஸ்.   -  படம். | ஏ.எஃப்.பி.

செஞ்சூரியன் மைதானத்தில் விராட் கோலி அபாரமான பதிலடி இன்னிங்சில் 21-வது சதத்தை எடுத்து முடித்து மேலும் தொடர்ந்து பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 153 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அஸ்வின் எதிர்த்தாக்குதல் இன்னிங்சில் 54 பந்துகளில் 38 ரன்களை எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

விராட் கோலி 217 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் எடுத்து மோர்னி மோர்கெல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடித்தார், ஆனால் ஷாட் சரியாகச் சிக்காமல் லாங் ஆனில் எளிதான கேட்ச் ஆனது. இத்துடன் இந்திய இன்னிங்ஸும் நிறைவுற்றது. 307 ரன்களில் கோலி 153 ரன்கள். பாதி ரன்களை இவரே எடுத்துள்ளார், ஒருவர் ஸ்டாண்ட் கொடுத்திருந்தால் கூட 400-க்கும் மேல் கொண்டு சென்றிருப்பார். தென் ஆப்பிரிக்காவுக்கு சிக்கல் அதிகமாகியிருக்கும்.

உணவு இடைவேளைக்குப் பிறகு இஷாந்த் ஷர்மா, மோர்னி மோர்கெலின் எகிறு பந்தை ஷார்ட் லெக்கில் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசியாக கிரேட் இன்னிங்ஸுக்குப் பிறகு விராட் கோலி 153 ரன்களில் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்னி மோர்கெல் 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் மற்ற பவுலர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

விராட் கோலியின் கிரேட் இன்னிங்ஸ்:

விராட் கோலி அபாரமான பதிலடி இன்னிங்சில் 21-வது சதத்தை எடுத்து முடித்து மேலும் தொடர்ந்து பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அஸ்வின் எதிர்த்தாக்குதல் இன்னிங்சில் 54 பந்துகளில் 38 ரன்களை எடுக்க உணவு இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.

கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது மிகச்சிறந்த சதங்களில் இது ஒன்றாக பேசப்படும் அளவுக்கு அற்புதமாக ஆடி 21வது சதத்தை எடுத்து உணவு இடைவேளையின் போது 141 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

பிட்ச் அறிக்கையில் முதல்நாள் பிட்ச் போல்தான் இருக்கிறது என்றனர் போலக்கும், கவாஸ்கரும், இன்னொரு கூடுதல் தகவல் புதிய பந்துக்கான பிட்ச் என்பதையும் இருவரும் தெரிவித்தனர். அதற்கேற்பவே அஸ்வின், ஷமி இருவரும் புதிய பந்து எடுத்தவுடன் ஆட்டமிழந்தனர்.

முன்னதாக இந்திய அணி இன்று தொடங்கிய போது ஹர்திக் பாண்டியா 15 ரன்கள் எடுத்த நிலையில் மிட் ஆனில் தட்டி விட்டு ஒரு ரன்னுக்காக ஓடி வந்தார், கோலி வேண்டாம் என்று திருப்பி அனுப்ப பிலாண்டர் நேர் த்ரோ ஸ்டம்பைத் தொந்தரவு செய்ய பாண்டியாவின் கால்களும் மட்டையும் தரையில் இல்லை. ரன் அவுட் ஆனார். கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடி ரன் அவுட் ஆகியிருக்கலாம்.

முன்னதாக விராட் கோலி அபாரமான தன் சதத்தை எடுத்து முடித்தார். 86 ரன்களில் இருந்த போது நிகிடி வீசிய பந்து ஒன்று  கல்லியின் இடது கையை ஏமாற்றி எட்ஜ் பவுண்டரி அடித்து 90 ரன்களுக்கு வந்தார். அடுத்த பந்து லேட் ஸ்விங் ஆக காலைப் போட்டு தன் பாணி ராஜகவர் ட்ரைவ் ஒன்றை அடித்து பவுண்டரிக்கு விரட்டி 94 ரன்களுக்கு வந்தார். அடுத்த பந்து,  முதல் இரண்டு பந்துகள் போல் அல்லாமல் குட் லெந்துக்கு சற்றே முன்னே பிட்ச் ஆகி வர எட்ஜ் ஆகி ஆம்லாவுக்கு முன்னதாக தரையில் விழுந்தது. இதே ஓவரில் கடைசி பந்தில் மிக அருமையாக நேர் ஷாட் ஒன்றை அடித்து 3 ரன்களை ஓடி எடுத்து 97 ரன்களுக்கு வந்தார். கடைசியில் நிகிடி பந்தை மிட்விக்கெட்டில் தட்டி விட்டு ஒரு ரன் ஓடி சதத்தை ஹெல்மெட்டை கழற்றி கொண்டாடிய போது ஓவர் த்ரோ என்பதைப் பார்த்து விட்டு கொண்டாட்டத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு 2வது ரன் ஓடி 101 ரன்கள் எடுத்தவுடன் தன் கொண்டாட்டத்தை தொடர்ந்தார்.

என்னதான் சாதகமான பிட்ச் என்றாலும் ஒரு தரமான பந்து வீச்சு, இறுக்கமான கள வியூகத்தில் ஏகப்பட்ட சவால்கள், முறையீடுகளுக்கு விட்டுக் கொடுக்காமல் 146 பந்துகளில் சதம் கண்டது கிரேட் பிளேயருக்கான விடயமாகும்.

அஸ்வின் களமிறங்கி பதற்றமாக ரபாடா பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்தார். பிறகு நிகிடியின் ஷாட், வைடு ஆஃப் திசை பந்தை முறையாக பாயிண்ட் பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த ஓவர் ரபாடாவை என்ன சேதி என்று கேட்டார் அஸ்வின், முதலில் கவர் திசையில் ஒரு பவுண்டரி, பிறகு மிட் ஆஃப், எக்ஸ்ட்ரா கவர் இடையில் தூக்கி அடித்து இன்னொரு பவுண்டரி. பிறகு மீண்டும் குட் லெந்த் பந்தை கவர் பவுண்டரிக்கு அனுப்பி ஆக்ரோஷம் காட்டினார். ரபாடாவையே மீண்டும் ஒரு தேர்ட்மேன் பவுண்டரி அடித்தார். கோலி, அஸ்வின் இணைந்து 62 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர். மஹராஜை மிட் ஆஃப் மேல் தூக்கி ஒரு பவுண்டரி அடித்து அஸ்வின் வேறு ஒரு மூடில் ஆடினார். பிறகு கோலி ஒரு அபார கவர் டிரைவ் ஆடி பவுண்டரி அடிக்க அதே ஓவரில் புதிய பந்தில் பிலாண்டர் பந்தை எட்ஜ் செய்ய டுபிளெசிஸ் பின்னால் அருமையாகப் பிடித்தார்.

மொகமது ஷமி 1 ரன் எடுத்து மோர்கெலிடம் எட்ஜ் ஆகி ஆம்லாவிடம் கேட்ச் ஆனார். மீண்டும் பிலாண்டரை கோலி நடந்து வந்து மிட் ஆஃபில் பவுண்டரி சாத்தினார். உணவு இடைவேளையின் போது 193 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார், இவருடன் இஷாந்த் சர்மா ரன் எடுக்காமல் நிற்கிறார். அஸ்வின், கோலி கூட்டணி சுமார் 14 ஒவர்களில் 7வது விக்கெட்டுக்காக 71 ரன்களைச் சேர்த்தது தென் ஆப்பிரிக்காவுக்கு நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும்.

 

http://tamil.thehindu.com/sports/article22442922.ece?homepage=true

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அவுட் ஸ்விங், இன் ஸ்விங்: சமிக்ஞை மூலம் ஹர்திக் பாண்டியாவை வழிநடத்திய கோலி

 
அ-அ+

அவுட் ஸ்விங், இன் ஸ்விங் பந்துகளை எப்படி தெரிந்து கொள்வதை தனது சைகை மூலம் ஹர்திக் பாண்டியாவிற்கு உணர்த்தி விராட் கோலி வழிநடத்தியுள்ளார். #SAvIND #ViratKohli #HardikPandya

 
அவுட் ஸ்விங், இன் ஸ்விங்: சமிக்ஞை மூலம் ஹர்திக் பாண்டியாவை வழிநடத்திய கோலி
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அஸ்வினின் அபார பந்து வீச்சால் 335 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் - விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ஓரளவிற்கு ரன்கள் குவித்தது.

முரளி விஜய் 46 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர், இந்தியாவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. 54-வது ஒவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். ஆட்டம் முடிய சில ஓவர்களே இருந்தன. இதனால் மேலும் விக்கெட்டுக்களை இழந்து விடக்கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருந்தனர்.

அப்போது விராட் கோலியுடன் சென்று பந்து சரியாக தெரியவில்லை. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் ஆடுவதில் கடினமாக உள்ளது என்றார். உடனே, கோலி என்னால் பந்தை நன்றாக பார்க்க முடியும். நான் உங்களுக்கு தகவல் சொல்கிறேன் என்றார்.

அதன்படி தனது பேட்டை இடது கையில் வைத்திருந்தால் அது அவுட் ஸ்விங் எனவும், வலது கையில் வைத்திருந்தால் இன் ஸ்விங் எனவும் சமிக்ஞை காட்டினார்.

56-வது ஓவரை நிகிடி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை நிகிடி அவுட் ஸ்விங்காக வீசினார். விராட் கோலி தனது பேட்டை இடது கையில் வைத்திருந்ததால் நிகிடி பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே ஹர்திக் பாண்டியா ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வந்து பந்தை லீவ் செய்தார். அந்த ஓவர் முழுவதும் அப்படிதான் செய்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

201801151650398791_1_5Kohli001-s._L_styvpf.jpg

58-வது ஓவரின் 5-வது பந்திலும் அதேபோல் இன் ஸ்விங் பந்திற்கு சமிக்ஞை காட்டினார். ஹர்திக் பாண்டியா கிரீஸ்-க்குள் நின்று அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

பின்னர் கையில் பேட்டை வைத்திருப்பதற்குப் பதிலாக காலை வைத்து சமிக்ஞை காட்டினார். போட்டி முடிந்த பின்னர் ஸ்டம்பிள் உள்ள மைக்கை வாய்ஸ்-ஐ ஆராயும்போது இந்த உரையாடல் தெரியவந்துள்ளது.

இந்திய வீரர்கள் இப்படி செய்வது முதல் முறையல்ல. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சச்சின் தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் விளையாடும்போது இப்படி நடைபெற்றுள்ளது. கிறிஸ் கெய்ன் பந்து வீசும்போது ராகுல் டிராவிட் பந்து தெரியவில்லை என்ற போது சச்சின் தெண்டுல்கர் டிராவிட்டிற்கு பேட்டை வைத்து அவுட் ஸ்விங் எது, இன் ஸ்விங் எது என்பது குறித்து சமிக்ஞை மூலம் தெரியப்படுத்தியுள்ளார். #SAvIND #ViratKohli #HardikPandya

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/15165040/1140378/Virat-Kohli-plays-spotter-for-Hardik-Pandya.vpf

  • தொடங்கியவர்

டீன் எல்கருக்கு கேட்சுக்கே செல்லாத பார்த்திவ் படேல்; பும்ரா அபாரம்; டிவில்லியர்ஸ் அரைசதம்

 

 
bumrah

டீன் எல்கருக்கு கேட்சுக்கே செல்லாமல் விட்ட பார்த்திவ் படேல், ஏமாற்றத்தில் பும்ரா, தலையில் கையை வைத்தபடி டிவில்லியர்ஸ்.   -  படம். | ஏ.பி.

கோலியின் மாஸ்டர் கிளாஸ் 153 ரன்களுக்குப் பிறகு இந்திய அணியை 307 ரன்களுக்கு மட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

முதலில் மழை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம் அதன் பிறகு தொடங்கி தற்போது வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

2-வது இன்னிங்ஸை அஸ்வின், பும்ராவுடன் தொடங்கினார் விராட் கோலி, இது உண்மையில் ஆக்ரோஷமான ஒரு கேப்டன்சிதான். குறிப்பாக பும்ரா பயங்கரமாக வீசினார். 140-141 கிமீ வேகத்தில் பயங்கரமான இன்ஸ்விங்கர்களை அவர் வீசினார் அவ்வப்போது ஓரிரு பந்துகளை அதே லெந்த், கோணத்தில் வெளியே எடுக்கவும் செய்தார், இதனால் டிவில்லியர்ஸ் கடுமையாகத் தடுமாறினார், ஆனாலும் அவர் தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 78 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்கிறார்.

முன்னதாக பும்ரா தன் முதல் ஓவர் 2-வது பந்திலேயே மார்க்ரமை எல்.பி.செய்தார். பந்து எழும்பும் என்று நினைத்து மார்க்ரம் கிரீசில் எம்பினார் ஆனால் பந்து சறுக்கிக் கொண்டு உள்ளே வந்து பின் கால்காப்பைத் தாக்க எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார். பந்து தாழ்வாக வந்தது. ஹஷீம் ஆம்லாவையும் இதே பாணியில் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆக்கினார், இம்முறை ஆம்லா லெக் திசையில் ஆட முயன்றார் ஆனால் பந்து மீண்டும் மட்டைக்குக் கீழ் தாழ்வாக வந்து கால்காப்பைத் தாக்கியது.

டீன் எல்கர் ஏகப்பட்ட பீட்டன்களில் 29 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது இன்னிங்ஸின் 25-வது ஓவரில் பும்ரா மீண்டும் ஒரு பந்தை ஷார்ட் ஆஃப் குட் லெந்தில் வீசி எழுப்பினார், எல்கர் அருகில் பந்து எழும்பி மட்டை விளிம்பில் பட்டு பார்த்திவ் படேலுக்கும், புஜாராவுக்கும் இடையே கேட்ச் பிடிக்கக் கூடிய உயரத்தில் தூரத்தில் சென்று பவுண்டரிக்குப் பறந்தது.

பார்த்திவ் புஜாராவைக் கையைக் காட்டினார், ஆனால் முதல் தவறு இது பார்த்திவ் சுலபமாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச். 2வது தவறு ஸ்லிப்பில் நீண்ட காலமாக விக்கெட் கீப்பர் அருகில் முதல் ஸ்லிப் பீல்டர் நிற்காமல் தள்ளி நிற்பது. முதல் இன்னிங்ஸில் கோலி தள்ளி நின்றுதான் ரபாடாவுக்கு கேட்சை விட்டார், இன்று புஜாரா தள்ளி நின்றார், ஆனாலும் இது பார்த்திவ் படேல் எளிதாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச் கோட்டை விட்டார். எல்கர் தற்போது 4 பவுண்டரி ஒருசிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். கோலி தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

அஸ்வின் பந்தை லாங் ஆனுக்கு மேல் ஒரே தூக்குத் தூக்கி சிக்ஸ் அடித்தார் எல்கர்.

3 ரன்களுகு 2 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா தற்போது எல்கர், டிவில்லியர்ஸ் 87 ரன் கூட்டணியினால் 90 ரன்கள் எடுத்து மொத்தமாக 118 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது. அஸ்வினும் அற்புதமாக வீசினார். இசாந்த், ஷமி டைட்டாக வீசினர்.

பாண்டியா ரன் அவுட், பார்த்திவ் படேல் செல்லாத கேட்ச் ஆகியவை இன்று ரசிகர்களின் ஏமாற்றத்துக்கும் கேலிக்கும் ஆளாகி வருகின்றன.

http://tamil.thehindu.com/sports/article22444462.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.