Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் காலில் விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்;மஹிந்த சூளுரை

Featured Replies

பிரபாகரனின் காலில் விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்;மஹிந்த சூளுரை

 

பிரபாகரனின் காலில்  விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்;மஹிந்த சூளுரை 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முன்பாக முழங்காலிடாத தாம், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் முன்னிலையிலும் முழங்காவிட மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த முதலாவது அரசியல் மக்கள் கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதுளை வின்சன் டயஸ் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வலுக்கட்டாயமான மற்றும் போதையுடனான அரசியலை செய்ய வேண்டாம் என்றும் ஆட்சியாளர்களிடம் தாம் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் கூறினார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/mahinda-comment-on-LTTE-leader-

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கும் உறவுக்கும் தெரியாமல் பிரபாகரன் காலில் நீங்க விழுந்தபடியால்தான் ஜனாதிபதி ஆனீங்க, இல்லையென்றால் வடக்கிலும் தேர்தல் நடந்திருந்தால் ரணில்தான் நிரந்தர ஜனாதிபதி ஆகியிருப்பார், படைகளில் ஏராளமானோரை சேர்த்து வைத்தது ரணில், சர்வதேசங்களில் ஆயுதங்களை வாங்கி குவித்து தயார் நிலையில் இருந்தது ரணில், சர்வதேச மட்டத்தில் புலிகள்மீதான நெருக்கடி வலைபின்னலை ஏற்படுத்தி வைத்திருந்தது ரணில்...நரியிடமிருந்து தப்பிக்க நினைத்து ஆற்றில் இறங்கி முதலையின் வாயில் சிக்கி முடிந்ததுதான் எம் வரலாறு!

  • தொடங்கியவர்

பிரபாகரனிடம் மண்டியிடாத நாம் எந்த சவாலையும் சந்திக்க தயார் ; பதுளையில் மஹிந்த சூளுரை

4-2434608457604c0341d03573917034754b893d8d.jpg

 

(ஆர்.யசி)

பிர­பா­க­ர­னிடம் மண்­டி­யி­டாத நாம் இன்­றைய அர­சி­யல்­வா­தி­க­ளி­டமா மண்­டி­யி­டப்­போ­கின்றோம், எந்த சவா­லையும் வெற்­றி­கொள்வோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். உண்­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் நாங்­களே, சின்­னத்தை விடவும் கொள்கை ரீதியில் உள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார்.  

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் முத­லா­வது தேர்தல் கூட்டம் நேற்று பது­ளையில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்.

நல்­லாட்சி வந்தால் நாடு அபி­வி­ருத்தி அடையும் எனவும் மக்­க­ளிடம் பணம் இருக்கும் எனவும் கூறி ஆட்­சிக்கு வந்­த­வர்கள் இன்று நாட்டின் பொரு­ளா­த­ரத்தில் வீழ்ச்சி உள்­ள­தாக கூறி வரு­கின்­றனர். இந்த நாட்டின் பொரு­ளா­த­ரத்தை நாம் வீழ்த்­தி­ய­தா­கவும், இந்த நாட்­டினை கடனில் ஆழ்த்­தி­யது எமது அர­சாங்கம் எனவும் கூறு­கின்­றனர். நாம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் தான் வீழ்ச்­சிக்கு காரணம் என கூறு­கின்­றனர். ஆனால் நாம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் அனைத்­தையும் முன்­னெ­டுக்க சரி­யான வேலைத்­திட்­டங்­களை வகுத்­தி­ருந்தோம். மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து எம்மை வெளி­யேற்­றவும் நாம் ஸ்ரீலங்கா காரர்கள் இல்லை எனவும் சிலர் கூறி வரு­கின்­றனர். உண்­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­கா­ரர்கள் நாங்கள் தான். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி என்­பது சின்னம் அல்ல, கொள்­கையே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாகும். அது எம்­மிடம் மட்­டுமே உள்­ளது. தேசிய அர­சாங்­கத்தில் சலு­கை­க­ளுக்­காக தஞ்சம் புகிந்­துள்ள ஒரு இலர் தம்மை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் எனவும் எமது மக்­களை பாது­காக்­கவே தாம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்டு வரு­வ­தா­கவும் கூரு­கி­னர்னர். அவ்­வாறு என்றால் நாம் எதற்­காக உள்ளோம், எதற்­காக இந்த போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்த நாட்டின் மீண்டும் சரி­யான தலை­மைத்­துவம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்­கா­கவே மீண்டும் நாம் போராட ஆரம்­பித்­துள்ளோம்.

இந்த நாட்டின் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து இந்த நாட்­டினை பாது­காத்­துள்ளோம். பிர­பா­க­ரனின் அச்­சு­றுத்தல், அவர்­க­ளுக்கு இருந்த சர்­வ­தேச பலம் எதையும் கண்டு அஞ்­சாது, அவர்­க­ளிடம் மண்­டி­யி­டாத நாம் இன்றுள்ள அரசியல் வாதிகளில் வெட்டி சவால்களுக்காக அடிபணியப்போகின்றோம். இந்த அரசாங்கம் எம்மீது சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் எதையும் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.