Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெருசலேம்தான் இஸ்ரேல் தலைநகர்: சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் டிரம்ப்

Featured Replies

ஜெருசலேம்தான் இஸ்ரேல் தலைநகர்: சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் டிரம்ப்

ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்: இன்னும் சிலமணி நேரங்களில் அறிவிக்கிறார் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக தன்னிச்சையாக அங்கீகரிக்க உள்ளதாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், டெல் அவிவ்வில் இருக்கும் அமெரிக்க தூதகரத்தை டிரம்ப் உடனடியாக ஜெருசலேமிற்கு மாற்றமாட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) ஜெருசலேம் விவகாரம் குறித்து டிரம்ப் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தகவல் வெளிவந்துள்ளது.

முன்னர், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று டிரம்ப்பை அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் எச்சரித்திருந்தனர். அவர்களில் ஒருவர், இது முஸ்லிம்களை வெளிப்படையாக ஆத்திரமூட்டும் செயலாக அமையும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்: இன்னும் சிலமணி நேரங்களில் அறிவிக்கிறார் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜெருசலேமை எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதிவந்தது. ஆனால், பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமை எதிர்கால பாலத்தீனிய ராஜ்ஜியத்தின் தலைநகரமாக உரிமை கோரி வருகின்றனர்.

டிரம்பிற்கு துருக்கி வி்டுத்த எச்சரிக்கை

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரிக்குமானால், இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படலாம் என்று முன்னர் துருக்கி அதிபர் எச்சரித்திருந்தார்.

இத்தகைய நடவடிக்கை முஸ்லீம்களுக்கான சிவப்புக் கோட்டை தாண்டுவதாக அமையும் என்று துருக்கி அதிபர் ரிசெஃப் தாயிப் எர்துவான் கூறியிருந்தார்.

ஜெருசலேமின் தகுநிலை என்ன?

ஜெருசலேமின் தகுதி நிலை இஸ்ரேல் பாலத்தீனருடன் கொண்டிருக்கும் மோதலின் முக்கிய பகுதியாக உள்ளது.

ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்: இன்னும் சிலமணி நேரங்களில் அறிவிக்கிறார் டிரம்ப்

பாலத்தீனர்கள் அரேபிய மற்றும் இஸ்லாமிய உலகத்தின் ஆதரவை பெற்றுள்ளனர்.

இந்த நகரில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேமில்தான், யூத, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களின் முக்கிய புனித இடங்கள் உள்ளன.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் ஜோர்டனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இவ்விடத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலேம் முழுவதையும் அதனுடைய தலைநகரமாக இஸ்ரேல் கூறி வருகிறது.

எதிர்கால சுதந்திர தனி நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனம் உரிமை கோரி வருகிறது. 1993ம் ஆண்டு இஸ்ரேல்-பாலத்தீன அமைதி உடன்படிக்கையின்படி, தலைநகரின் இறுதி தகுதி நிலை பிந்தைய அமைதி பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்: இன்னும் சிலமணி நேரங்களில் அறிவிக்கிறார் டிரம்ப்படத்தின் காப்புரிமைAFP

ஜெருசலேம் முழுவதையும் தன்னுடையதாக கோருகின்ற இஸ்ரேலின் நிலைப்பாடு சர்வதேச அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இஸ்ரேலின் மிகவும் நெருக்கமாக கூட்டாளியான அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளும் தங்களின் தூதரகங்களை இஸ்ரேலின் டெல் அவிவில் கொண்டுள்ளன.

1967 ஆம் ஆண்டு தொடங்கி கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் ஒரு டஜன் குடியிருப்புக்களை கட்டி சுமார் 2 லட்சம் யூதர்கனை குடியேற்றியுள்ளது. சர்வதேச சட்டப்படி இது சட்டத்திற்கு புறம்பானது என்று கருதப்படுகிறது. இதை இஸ்ரேல் மறுக்கிறது.

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால், பிற சர்வதேச சமூகத்திற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக அமையும். கிழக்கு ஜெருசலேமிலுள்ள இஸ்ரேலிய சமூகத்தின் குடியிருப்புகள் அனைத்தும் சரியானவை என்று வாதிடும் இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்.

http://www.bbc.com/tamil/global-42247792

  • தொடங்கியவர்

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் அதிபர் டிரம்ப்

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சற்று நேரத்திற்கு முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார்.

டிரம்ப்

அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

முன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42258826

  • தொடங்கியவர்

'இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்': டிரம்ப்பின் அறிவிப்பில் என்ன முக்கியத்துவம்?

99100456trearttjpg

புதன்கிழமையன்று ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அறிவிப்பு தொடர்பாக பல முக்கியத்துவங்கள் உள்ளன.

என்ன முக்கியத்துவம்?

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக வெளியான அமெரிக்காவின் அறிவிப்பு, ஜெருசலேம் தொடர்பான நிலைப்பாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது..

பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால அரசின் தலைநகரமாகக் கூறுகின்றனர். மேலும், 1993 ஆண்டு நடந்த இஸ்ரேல்-பாலத்தீனிய சமாதான உடன்படிக்கைகளின்படி, அதன் இறுதி நிலை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் கடைசி கட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.

99099830dddddjpg

இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்   -  AFP

ஜெருசலேம் மீது இஸ்ரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.

இதுவரை வரை அனைத்து நாடுகளும் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன.

யூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.

பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேத்தை , 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இஸ்ரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

99100453trearttjpg

'வரலாற்று சிறப்புமிக்க நாள்'

டிரம்ப்பின் அ றிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

"மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேம் எங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பிரார்த்தனைகளின் மையமாக இருந்தது," என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாஸ் தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் ஜெருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

99100455afpjpg

முன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.

இதே கருத்தை மற்ற அரபு நாட்டு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினால் இந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்

தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article21287863.ece

  • தொடங்கியவர்

ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்க முடிவுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாலத்தீனத்தில் நடந்த போராட்டம்படத்தின் காப்புரிமைJAAFAR ASHTIYEH/AFP/GETTY IMAGES

இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு "நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற" செயல் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இது ஒரு "வரலாற்று சிறப்புமிக்க நாள்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அமெரிக்க கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. ஜெருசலேம் குறித்த சர்ச்சை இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள் இடையே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவின் இந்த முடிவையடுத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில், 8 நாடுகள் இந்த வார இறுதியில் அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளன.

உலகம் என்ன சொல்கிறது?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உதவாத அமெரிக்காவின் இந்த முடிவோடு மாறுபடுவதாக தெரீசா மே தெரிவித்துள்ளார். இந்த நகர்வை தங்கள் நாடுகள் ஆதரிக்கவில்லை என்று பிரான் அதிபர் இம்மானுவல் மக்ரோங்கும், ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்க்கெலும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத் தூதுவர் ஃபெடரிகா மொகெரினி இந்த நடவடிக்கையை 'பெரும் கவலைக்குரியது' என்று வருணித்துள்ளார்.

"பெரும் மன உளைச்சல் ஏற்படுத்தும் தருணம் இது" என்று கூறிய ஐ.நா. தலைமை செயலாளர் ஆண்டானியோ கட்டரஸ் இரு தேசக் கொள்கைக்கு மாற்று இல்லை என்று தெரிவித்தார்.

பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசின் ஃபடா கட்சி இது குறித்து ஐ.நா.விடம் முறையிடப்போவதாகக் கூறியுள்ளது. இஸ்லாமியவாதக் குழுவான ஹமாஸ் புதிய கிளர்ச்சி ஒன்றுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரின் அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டம் வெடித்தது. ஜோர்டான் தலைநகர் அம்மானிலும் போராட்டம் வெடித்தது. இயேசு கிறிஸ்துவின் பாரம்பரியப் பிறப்பிடமான, மேற்குக் கரையில் உள்ள பெத்லஹேமில் கிறிஸ்துமஸை ஒட்டி ஏற்றப்பட்ட மின் விளக்குகளை பாலத்தீனியர்கள் அணைத்தனர்.

என்ன முக்கியத்துவம்?

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக வெளியான அமெரிக்காவின் அறிவிப்பு, ஜெருசலேம் தொடர்பான நிலைப்பாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது..

பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால அரசின் தலைநகரமாகக் கூறுகின்றனர். மேலும், 1993 ஆண்டு நடந்த இஸ்ரேல்-பாலத்தீனிய சமாதான உடன்படிக்கைகளின்படி, அதன் இறுதி நிலை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் கடைசி கட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.

ஜெருசலேம் மீது இஸ்ரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.

ஜெருசலேம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுவரை அனைத்து நாடுகளும் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன.

யூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.

பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேத்தை , 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இஸ்ரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

'வரலாற்று சிறப்புமிக்க நாள்'

டிரம்ப்பின் அ றிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

"மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேம் எங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பிரார்த்தனைகளின் மையமாக இருந்தது," என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாஸ் தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் ஜெருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42262157

  • தொடங்கியவர்

ஜெருசலேம்: இஸ்ரேலின் உரிமை சர்வதேச அளவில் ஏற்கப்படுகிறதா?

புதன்கிழமையன்று ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அறிவிப்பு தொடர்பாக பல முக்கியத்துவங்கள் உள்ளன.

என்ன முக்கியத்துவம்?

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக வெளியான அமெரிக்காவின் அறிவிப்பு, ஜெருசலேம் தொடர்பான நிலைப்பாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது..

பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால அரசின் தலைநகரமாகக் கூறுகின்றனர். மேலும், 1993 ஆண்டு நடந்த இஸ்ரேல்-பாலத்தீனிய சமாதான உடன்படிக்கைகளின்படி, அதன் இறுதி நிலை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் கடைசி கட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.

இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்படத்தின் காப்புரிமைAFP Image captionஇஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்

ஜெருசலேம் மீது இஸ்ரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.

இதுவரை வரை அனைத்து நாடுகளும் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன.

யூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.

பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேத்தை , 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இஸ்ரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்படத்தின் காப்புரிமைAFP

'வரலாற்று சிறப்புமிக்க நாள்'

டிரம்ப்பின் அ றிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

"மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேம் எங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பிரார்த்தனைகளின் மையமாக இருந்தது," என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாஸ் தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் ஜெருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்:படத்தின் காப்புரிமைAFP

முன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.

இதே கருத்தை மற்ற அரபு நாட்டு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினால் இந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்

தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global-42261251

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.