Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் அரசியல் பலவீனம்

Featured Replies

தமிழ் மக்களின் அரசியல் பலவீனம்

 

தமிழர் தரப்பு அர­சி­ய­லா­னது, தமி­ழ­ர­சுக்­கட்சி தலை­மை­யி­லான அணி, ஈ.பி­.ஆர்­.எல்.எவ். - தமி­ழர்­ வி­டு­தலைக் கூட்­டணி இணைந்த அணி, தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியை உள்­ள­டக்கி பொன்­னம்­பலம் கஜேந்­தி­ர­குமார் தலை­மையில் மற்­றுமோர் அணி என பல கூறு­க­ளாக சித­றி­யி­ருக்­கின்­றன. தமிழ் மக்­களின் பலம் வாய்ந்த அர­சியல் அமைப்­பாக இருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இதனால் பல­மி­ழக்க நேரிட்­டி­ருக்­கின்­றது. இது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் உடை­வாக மட்­டு­மல்­லாமல் முக்­கி­ய­மாக தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் பல­வீ­ன­மா­கவும் பல­ராலும் கவ­லை­யுடன் நோக்­கப்­ப­டு­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை மேலும் மேலும் பல­முள்­ளதோர் அர­சி­ய­ல­மைப்­பாகக் கட்­டி­யெ­ழுப்பி ஜன­நா­யக பண்­புகள் நிறைந்த வழி­மு­றையில் செயற்­ப­டுத்­து­வ­தற்கு கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ர­சுக்­கட்சி மற்றும் பங்­கா­ளிக்­கட்­சி­களும் தவ­றி­யி­ருந்­தன. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைத் தனி­யா­னதோர் அர­சியல் அமைப்­பாக அல்­லது கட்­சி­யாக, தேர்தல் திணைக்­க­ளத்தில் பதிவு செய்து அதன் செயற்­பா­டு­களை ஒரு கட்­டுக்­கோப்­பினுள் நெறிப்­ப­டுத்­து­வ­தற்கு, தமி­ழ­ரசுக் கட்சி நாட்டம் கொள்­ள­வில்லை. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பலம்­வாய்ந்­ததோர் அர­சியல் கட்­சி­யாகக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டால், பாரம்­ப­ரிய அர­சியல் பெரு­மை­யு­டைய தமது தமி­ழ­ர­சுக்­கட்சி மக்கள் மத்­தியில் செல்­வாக்கு இழக்க நேரிடும் என்ற அச்­சமே அதற்கு முக்­கிய கார­ண­மாகும். தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பின்னர், விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்­சி­யாக பொறுப்­பேற்­றதன் பின்னர், தமிழ் மக்கள் மத்­தியில் தமி­ழ­ர­சுக்­கட்சி செல்­வாக்கு பெற்­றி­ருந்­தது.

உறங்கு நிலையில் 30 ஆண்­டுகள்

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அதி­கா­ர­பூர்வ தேர்தல் சின்­ன­மாக தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வீட்டுச் சின்னம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­த­னாலும், கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ற அதி­கா­ர­முள்ள அந்­தஸ்தை, தமி­ழ­ர­சுக்­கட்சி வழங்­கி­ய­த­னாலும் மக்கள் மத்­தியில் அந்தக் கட்சி மீண்டும் அர­சியல் செயற்­பா­டு­களில் அறி­மு­க­மா­கி­யது.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, தமிழ் காங்­கிரஸ் மற்றும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகிய மூன்று கட்­சி­களை உள்­ள­டக்­கி­ய­தாக 1974 ஆம் ஆண்டு தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டது. உத­ய­சூ­ரியன் சின்­னத்தைக் கொண்­ட­தாக தேர்தல் திணைக்­க­ளத்தில் தனி­யொரு கட்­சி­யாக அது பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக உத­ய­சூ­ரியன் சின்­னத்­திற்குத் தனித்­து­வ­மாக ஆனந்­த­சங்­கரி உரிமை கோரி­ய­தை­ய­டுத்து, தமிழர் விடு­தலைக் கூட்­டணி தொடர்ந்து செயற்­பட முடி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­ட­த­னா­ல் ­த­மி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டுச் சின்­னத்தைப் பொதுச்­சின்­ன­மாக ஏற்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்­டது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் உரு­வாக்­கத்­திற்கு விடு­த­லைப்­பு­லிகள் முக்­கிய பங்­கேற்­றி­ருந்­தனர்.

அர­சியல் கட்­சி­யா­கிய தமிழர் விடு­தலைக் கூட்­டணி, ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் தலை­மையை ஏற்­ப­தற்கு, ஆனந்­த­சங்­கரி எதிர்ப்பு தெரி­வித்­த­தை­ய­டுத்தே, தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்பு தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வீட்டுச் சின்­னத்தை வரித்துக் கொள்ள வேண்­டிய நிலை­மைக்கு ஆளா­கி­யது.

தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி உரு­வாக்­கப்­பட்ட 1974 ஆம் ஆண்டு தொடக்கம், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வீட்டுச் சின்­னத்தில் முதன் முறை­யாக 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் களம் இறங்­கி­யது வரை­யி­லான மூன்று தசாப்­தங்கள் தமி­ழ­ரசுக் கட்சி மக்கள் மத்­தியில் இருந்து விலகி உறங்கு நிலை­யி­லேயே இருந்­தது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தேர்தல் சின்­ன­மாக வீட்டுச் சின்னம் பயன்­ப­டுத்­தப்பட்டதை­ய­டுத்தே அந்தக் கட்சி அர­சியல் அரங்கில் நீண்ட இடை­வெ­ளியின் பின்னர் பிர­வே­சிக்க முடிந்­தது.

பங்­காளிக் கட்­சி­களில் தங்­கி­யி­ருந்த நிலை

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைப் பொறுப்பை தமி­ழ­ர­சுக்­கட்சி ஏற்­றி­ருந்த போதிலும், 2010 ஆம் ஆண்டு வரை­யி­லான சுமார் ஆறு வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட காலப்­ப­கு­தியில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளா­கிய ஆயுதக் குழுக்­களின் அர­சியல் செயற்­பா­டு­க­ளி­லேயே தங்­கி­யி­ருந்­தது. உயி­ரா­பத்து மிக்க அர­சியல் நெருக்­க­டிகள் நிறைந்த அந்தக் காலப்­ப­கு­தியில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் வேட்­பா­ளர்­களைப் பெற்­றுக்­கொள்­வது குதி­ரைக்­கொம்­பா­கவே இருந்­தது. நீண்ட கால­மாக மக்கள் மத்­தியில் இருந்து செய­லற்­றி­ருந்த கார­ணத்­தினால், தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கு வேட்­பா­ளர்­களைப் பெற்றுக் கொள்­வது கடி­ன­மான காரி­ய­மாக இருந்­தது. அந்தச் செயற்­பா­டு­களில் அந்தக் கட்சி பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்கு முழு­மை­யான விட்­டுக்­கொ­டுப்பைச் செய்­தி­ருந்­தது.

வவு­னியா, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்­களில் இடம்­பெற்ற உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் மட்­டு­மல்­லாமல், கிழக்கு மாகாண சபைக்­கான தேர்­த­லிலும் நில­விய ஆபத்­து­மிக்க நெருக்­கடி நிலை­மைகள் கார­ண­மாக இத்­த­கைய விட்­டுக்­கொ­டுப்­பான போக்கே நில­வி­யது எனலாம். அர­சியல் செயற்­பா­டு­களில் நில­விய உயிர் அச்­சு­றுத்தல் மிக்க நெருக்­கடி நிலை­மைகள் படிப்­ப­டி­யாகத் தளர்­வ­டைந்­த­தை­ய­டுத்து, தமி­ழ­ர­சுக்­கட்சி தனது கட்சிச் செல்­வாக்கை அதி­க­ரிப்­ப­திலும், மக்கள் மத்­தியில் தன்னை வளர்த்துக் கொள்­வ­திலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்­கி­யது. அத்­த­கைய கட்சி அர­சியல் செயற்­பாட்டின் விளை­வா­கவே 2012க்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் வேட்­பா­ளர்­க­ளுக்­கான தொகுதிப் பங்­கீ­டு­களில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­டையே முரண்­பா­டு­களும், அதி­ருப்­தி­யும் தலை­யெ­டுக்கத் தொடங்­கி­யது.

அதன் உச்­ச­கட்ட நிலை­மை­யா­கவே வரப்­போ­கின்ற உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல்­களில் ஈ.பி.­ஆர்­.எல்.எவ். தவிர்ந்த ஏனைய பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் தொகுதி பங்­கீட்டில் முறுகல் நிலை ஏற்­பட்டு, டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்­சிகள் அதி­ருப்­தி­யுடன் தொகுதிப் பங்­கீட்டு கூட்­டத்தில் இருந்து வெளி­யேற நேர்ந்­தி­ருக்­கின்­றது.

உணர்ச்­சி­க­ர­மான ஒரு நிலையில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வீட்டுச் சின்­னத்தில் போட்­டி­யிடப் போவ­தில்லை அல்­லது தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து இனிமேல் செயற்­ப­டு­வ­தில்லை என இந்த இரண்டு கட்­சி­களும் ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்­டி­ருந்த போதிலும், தமது நிலை­மை­களை மீள் பரி­சீ­லனை செய்­வ­தற்கும், தத்­த­மது கட்­சி­களின் மத்­தி­ய­குழு மற்றும் அர­சியல் குழுவில் கலந்­தா­லோ­சித்து முடி­வெ­டுப்­ப­தற்கும் முன்­வந்­தி­ருக்­கின்­றன. எனினும், அந்தக் கட்­சி­களின் இறுதி முடிவு என்ன என்­பது இதனை எழு­தும்­வ­ரையில் வெளி­யா­க­வில்லை.

அடுத்த கட்டம் என்ன?

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் மற்­று­மொரு பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.­ஆர்­.எல்.எவ். தமி­ழ­ ரசுக் கட்­சியின் வீட்டுச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தில்லை என தெரி­வித்து, தமி­ழர்­வி­டு­தலைக் கூட்­ட­ணியின் உத­ய­சூ­ரியன் சின்­னத்தைப் பொதுச் சின்­ன­மாக ஏற்று புதிய அர­சியல் கூட்­ட­ணியை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. இந்த நிலையில் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மை­யி­லான அணிக்கும், உத­ய­சூ­ரியன் சின்­னத்தைக் கொண்ட அர­சியல் அணிக்கும் இடையில் போட்டி கடு­மை­யாக இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் கஜேந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய பேரவை என்ற பெய­ரி­லான அணியும் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்குக் கள­மி­றங்­கி­யி­ருக்­கின்­றது. இதை­யும்­விட தேசிய கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி உள்­ளிட்ட தென்­னி­லங்கைக் கட்­சி­களும், வேறு சில அர­சியல் அமைப்­புக்­களும், சுயேச்சை குழுக்­களும் இந்தத் தேர்தல் களத்தில் வரிந்து கட்­டிக்­கொண்டு இறங்கி வாக்­கா­ளர்­களைக் கலங்கித் தவிக்கச் செய்­யப்­போ­கின்­றார்கள்.

தேர்தல் நிலைமை இவ்­வா­றி­ருக்க, நடக்­குமா நடக்­காதா என்று நிச்­ச­ய­மற்ற நிலையில் இருந்­த­போது வெளி­வந்த தேர்தல் நடை­பெ­று­வது பற்­றிய அறி­வித்தல் வரும் வரையில், புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே அர­சியல் களத்தில் சூடு பிடித்­தி­ருந்­தது. தேர்தல் தயா­ரிப்­புக்­கான அர­சியல் கட்­சி­களின் பிரி­வு­களும், கூட்டுச் சேர்­வு­களும் அர­சி­யல்­வா­தி­களின் கட்­சித்­தா­வல்­களும் பர­ப­ரப்­பாகி, அந்த அர­சியல் சூட்டைத் தணித்­தி­ருக்­கின்­றது.

தேர்தல் முடிந்த சூட்­டோடு மீண்டும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான நட­வ­டிக்­கைகள் பற்­றிய விட­யங்­களும், அர­சியல் தீர்­வுக்­கான வாதப்­பி­ர­தி­வா­தங்­களும், அர­சியல் அரங்கில் கனல் தெறிக்கச் செய்யும் என்­பதில் சந்­தே­க­மில்லை. அது மட்­டு­மல்­லாமல், அடுத்த வருட ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை விவ­காரம் இன்னும் தீவி­ர­ம­டைந்­தி­ருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லக உரு­வாக்கம், நீதியை நிலை­நிறுத்­து­வ­தற்­கான பொறி­முறை உரு­வாக்கம், நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் என்­ப­னவும் தீவி­ர­ம­டைந்­தி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. இத்­த­கைய ஒரு நிலையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் ஏற்­பட்­டுள்ள பிளவும் அத­னை­யொட்­டிய பல­வீ­ன­மான நிலையும், அர­சியல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் சார்ந்த விட­யங்­களில் எடுக்­கப்­பட வேண்­டிய நிலைப்­பா­டுகள், அவை தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்கள் என்­ப­வற்றைத் தமிழர் தரப்பு எந்த வகையில் கையாளப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை.

நெருக்­கடி நிலைமை உரு­வா­குமா....?

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யேறி புதிய அர­சியல் அணியை உரு­வாக்­கி­யுள்ள ஈ.பி.­ஆர். எல்.எவ். பாரா­ளு­மன்­றத்தில் தனித்துச் செயற்­படப் போவ­தாக அந்தக் கட்­சியின் செய­லாளர் சிவ­சக்தி ஆனந்தன் கூறு­கின்றார். இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பிர­தி­நி­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டு, அந்தக் கட்­சி­யுடன் முரண்­பட்­டுக்­கொண்டு பாராளு­மன்­றத்தில் எவ்­வாறு அவர் தனித்துச் செயற்­படப் போகின்றார் என்­பது முக்­கிய கேள்­வி­யாக எழுந்­தி­ருக்­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து தனி­யொ­ரு­வ­ராக அவர் மாத்­திரம் வெளி­யே­று­வ­தனால், கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்­சி­யா­கிய தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பாராளு­மன்றச் செயற்­பா­டு­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தற்கு இட­மி­ருக்­காது. குறிப்பாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரா­கிய இரா.சம்­பந்தன் எந்­த­வி­த­மான பாதிப்­பு­மின்றி எதிர்க்­கட்சித் தலை­வ­ராகத் தொடர்ந்து செய­லாற்ற முடியும்.

ஆனால், ஏனைய இரு பங்­கா­ளிக்­கட்­சி­க­ளா­கிய டெலோ மற்றும் புளொட் ஆகி­யன தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யேறி ஈ.பி­.ஆர்­.எல்.எவ். உட்­பட மூன்று கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து பாராளு­மன்­றத்தில் தனித்துச் செயற்­பட்டால், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் வச­முள்ள எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கு நெருக்­க­டி­யான ஒரு நிலைமை ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆனால், அத்­த­கை­ய­தொரு நிலை உரு­வா­குமா என்­பது இதனை எழுதும் வரையில் சந்­தே­கத்­திற்கு உரி­ய­தாக இருக்­கின்­றது. ஏனெனில் டெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்­சி­க­ளுமே கூட்­ட­மைப்பில் இருந்து வில­கு­வதா இல்­லையா என்­பது குறித்து தீர்க்­க­மான முடிவு எத­னையும் எடுத்­தி­ருக்­க­வில்லை. அதே­வேளை, அந்­தக்­கட்­சிகள் வெளி­யேறிச் செல்­வதைத் தடுப்­ப­தற்­கான முயற்­சி­களில் தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றனர்.

இணக்­கப்­பாட்­டுக்­கான முயற்­சிகள்

குறிப்­பாக தேர்­த­லுக்­கான தொகுதிப் பங்­கீட்டில் ஏற்­பட்ட குழப்ப நிலை­மைக்கு மக்­க­ளிடம் மன்­னிப்பு கேட்­டுள்ள கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன், கூட்­ட­மைப்பில் பிளவு என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்றும், தேவை­யான விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்து ஒரே அணியில் பய­ணிப்போம் என தெரி­வித்­துள்ளார். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவும் இத்­த­கைய உத்­த­ர­வா­தத்தைத் தெரி­வித்து முறுகல் நிலை­மைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். அதே­நேரம் கூட்­ட­மைப்பின் ஒற்­று­மைக்­காக எத்­த­கைய விட்­டுக்­கொ­டுப்­பையும் செய்­யத்­தயார் என்றும், இது தொடர்பில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யிடம் தெரி­விப்­ப­தா­கவும் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்­தனும் உறு­தி­யாகக் கூறி­யி­ருக்­கின்றார். இருந்த போதிலும், தொகுதி பங்­கீட்டு விட­யத்தில் பங்­கா­ளிக்­கட்­சிகள் விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்ய வேண்டும் என்­ப­தையும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருப்­பதன் மூலம் எத்­த­கைய விட்­டுக்­கொ­டுப்பை அவர் எதிர்­பார்க்­கின்றார் என்­பது தெளி­வற்­ற­தாக உள்­ளது.

விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்குத் தயா­ராக இருப்­ப­தாகத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர் உறு­திப்­படத் தெரி­வித்­துள்ள போதிலும், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் நிலைப்­பா­டு­க­ளுக்கு பங்­கா­ளிக்­கட்­சிகள் விட்­டுக்­கொ­டுக்கத் தய­ராக இருக்க வேண்டும் என்று இரா.சம்­பந்தன் கூறி­யி­ருப்­பதும், தமி­ழ­ர­சுக்­கட்சி வெற்­றி­பெறக் கூடிய உள்­ளு­ராட்சி சபை­களை விட்­டுக்­கொ­டுக்­கு­மாறு பங்­கா­ளிக்­கட்­சிகள் பிடி­வா­த­மாகக் கோரி­யி­ருப்­பதே பிரச்­சி­னைக்குக் காரணம் என தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா சுட்­டிக்­காட்­டி­யி­ருப்­பதும், தொகுதிப் பங்­கீட்டில் இணக்­கப்­பாடு சாத்­தி­ய­மா­குமா என்ற சந்­தே­கத்தை எழுப்பி;யிருக்­கின்­றது.

இடைக்­கால அறிக்கை மீதான விவாதம்

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்பில் முதலில் இணைப்­பக்­குழு கூட்­டத்­திலும் பின்னர் பாராளு­மன்ற குழு கூட்டத்திலும் விவா­திக்­கப்­பட வேண்டும் என ஈ.பி­.ஆர்­.எல்.எவ். கட்­சியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன் விடுத்­தி­ருந்த வேண்­டு­கோ­ளுக்கு எதிர்க்­கட்சித் தலை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் செவி­சாய்க்­க­வில்லை. மாறாக முதலில் பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்­திலும் பின்னர் ஒருங்­கி­ணைப்பு குழு­விலும் அந்த அறிக்கை குறித்து விவா­திக்­கப்­பட்­டது. ஆயினும் இந்தக் கூட்­டங்­களில்; சிவ­சக்தி ஆனந்தன் கலந்து கொள்­ள­வில்லை.

கூட்­டத்தில் கலந்து கொள்­ளாத கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இடைக்­கால அறிக்கை தொடர்­பாக, அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்தில் கருத்­து­ரைப்­ப­தற்கு அனு­ம­திப்­ப­தில்லை என நாடா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்து, அந்தத் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்­த­னு­க்கு நேரம் ஒதுக்கித் தரப்­ப­ட­வில்லை. எதிர்க்­கட்சித் தலைவர் என்ற ரீதியில் சிவ­சக்தி ஆனந்தன் பேசு­வ­தற்கு இரா­சம்­பந்தன் அனு­மதி மறுத்திருந்தார்.

இந்த அனு­மதி மறுப்பு குறித்து சிவ­சக்தி ஆனந்தன் சபா­நா­ய­க­ரிடம் நேர­டி­யா­கவே முறை­யிட்டு நேரம் ஒதுக்கித் தரு­மாறு கோரிய போதிலும், இடைக்­கால அறிக்­கைக்கு எதி­ராக அவர் உரை­யாற்­ற­வுள்ளார் என சபா­நா­ய­க­ரி­டமும், பிர­த­ம­ரி­டமும் எதிர்க்­கட்சித் தலைவர் என்ற ரீதியில் இரா.சம்­பந்தன் எடுத்­து­ரைத்து, தன்னை மீறி அவர்கள் நேரம் ஒதுக்­கு­வதைத் தடுத்­தி­ருந்தார் என தெரி­விக்­கப்­பட்­டது.

எது எப்­ப­டி­யா­னாலும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஒன்­றி­ணைந்த செயற்­பாடு என்­பன குறித்து இப்­போது ஆளுநருக்கு அவ­சர அவ­ச­ர­மாகக் கருத்து வெளி­யி­டு­கின்ற தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளி­கட்­சி­களில் ஒன்­றா­கிய ஈ.பி.­ஆர்­.எல்.எவ். கட்­சியின் செய­லா­ளரும், உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன் தேசிய முக்­கி­யத்­துவம் மிக்க இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­று­வ­தற்கு விட்டுக் கொடுப்­புடன் செயற்­படத் தவ­றி­யி­ருந்­தார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அவ்­வாறு சிவ­சக்தி ஆனந்தன் உரை­யாற்­று­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­ட­மை­யா­னது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யையும் தலை­மைக்­கட்­சி­யா­கிய தமி­ழ­ர­சு­கட்­சி­யையும் தொடர்ச்­சி­யாக விமர்­சித்து வந்­த­மைக்­காக அவர் மீது பழி தீர்த்துக் கொள்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை என்றும் பலரும் கரு­தி­னார்கள்.

கடும்­போக்கு வெளிப்­ப­டுமா?

இப்­போது தமி­ழ­ரசுக் கட்­சியின் சின்­ன­மா­கிய வீட்டுச் சின்­னத்தைத் துறந்து புதிதான அரசியல் அணியொன்றை அமைத்து உதய சூரியன் சின்னத்தில் தேர்தல் களத்தில் இறங்க வுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் பாராளு மன்றச் செயற்பாடுகளுக்கு தமிழரசு கட்சி இடையூறு விளைவிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கிடைத் துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கேள்விக்குறியாக்கும் வகையில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஓர் அரசியல் போக்கைக் கடைப்பிடித்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் மீது தமிழரசுக்கட்சி முன்னரிலும்பார்க்க அதிக அதிருப்தியும் கோபமும் கொண்டிருக்கும் என்றே நம்பப்படுகின்றது. அத்தகைய ஒரு நிலையில் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு அனு மதி வழங்க மறுத்ததைப்போன்று எதிர்வரும் நாட் களில் பாராளுமன்றத்தில் சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை வழங் காமல் இடையுறுகள் விளைவிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இத்தகைய நிலைமை ஏற்படுமா என கேட் டதற்கு, அத்தகைய செயற்பாடுகளுக்கு பாரா ளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளும் பாராளுமன்றச் செயற்பாட்டு மரபுகளும் இடம ளிக்கமாட்டாது என்றே பாராளுமன்ற உறுப்பி னர் சிவசக்தி ஆனந்தன் பதிலளித்தார்.

அதேவேளை, ஜனநாயகப் பண்புகளுக்கு விரோதமான அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெற்றால், அது முழு பாராளுமன்றத்தின தும் ஜனநாயக நெறிமுறைகளைக் கேள்விக்கு உள்ளாக்கும் என்றும் பாராளுமன்றத்தில் அங் கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலை வர்கள் அத்தகைய ஒரு நிலைமைக்கு இடம ளிக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு நிலைமையானது, அடு த்து வரவுள்ள அரசியல் தீர்வுக்கான நடவ டிக்கைகள் அரசாங்கத்தின் பொறுப்பு கூறு கின்ற நடவடிக்கைகள் என்பவற்றில் தமிழர சுக் கட்சியின் இணைந்த செயற்பாட்டில் இருந்து விலகியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி கடினமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றே கூற வேண்டும். ஏனெனில் பழுத்த அரசியல்வாதியாகிய இரா.சம்பந்தனின் கடும் அரசியல் போக்கு தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்ப டாதவர்கள் மீது விட்டுக் கொடுப்புடன் செயற் பட இடமளிக்கமாட்டாது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

பி.மாணிக்கவாசகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.