Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் குறைவடையும் தமிழ் பிரதிநித்துவம்

Featured Replies

திருமலையில் குறைவடையும் தமிழ் பிரதிநித்துவம்

 

திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள 13 உள்­ளூ­ராட்சி சபை­களில் 1980 ஆம் ஆண்­டுக்குப் பின் 10 க்கு மேற்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­களில் தமிழ் மக்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­துவம் இல்­லாது ஆக்­கப்­பட்ட நிலையில் எஞ்­சி­யுள்ள மூன்று உள்­ளூ­ராட்சி சபைகள் கூட, தமிழ் மக்­க­ளு­டைய கைக­ளி­லி­ருந்து பறி­போகும் அபா­யத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

புதிய உள்­ளூ­ராட்சி சட்­டத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் வட்­டாரப் பிரிப்­புகள், எல்லை நிர்­ண­யங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன என, பொது மக்கள் தமது விச­னத்தை தெரி­வித்­து­வ­ரு­வ­துடன், புத்­தி­ஜீ­விகள் விமர்­சித்தும் வரு­கின்­றனர்.

11 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களைக் கொண்ட, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 13 உள்­ளூ­ராட்சி சபைகள் இயங்கி வரு­கின்­றன. இதில் திரு­மலை, கிண்­ணியா ஆகிய இரண்டும் நகர சபைகள். ஏனை­யவை 11 உம் பிர­தேச சபை­க­ளாகும்.

2011 ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மாவட்­டத்­தி­லுள்ள 13 உள்­ளூ­ராட்சி சபை­களில் திரு­கோ­ண­மலை நக­ர­சபை, திரு­மலை பட்­ட­ணமும் சூழலும் (உப்­பு­வெளி) பிர­தே­ச­சபை, வெருகல் பிர­தேச சபை ஆகிய மூன்று மன்­றங்கள் மட்­டுமே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆளு­கைக்கு உட்­பட்­ட­தாக இருக்க, ஏனைய 10 சபை­களும் மாற்றுக் கட்­சி­களின் ஆளு­கைக்கு உட்­பட்­ட­தா­கவே இருந்­துள்­ளன. இன்னும் தெளி­வாக கூறு­வ­தானால் ஏனைய சபை­களில் தமிழ் பிர­தி­நி­தித்­துவம் வரக்­கூ­டிய எந்த வாய்ப்பும் இருக்­க­வில்லை.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­தாமல் அர­சாங்கம் இழுத்­த­டிக்­கி­றது. எல்லை நிர்­ண­யத்தில் தவறு இருக்­கி­றது. வட்­டாரப் பிரிப்பு உரிய முறையில் செய்­யப்­ப­ட­வில்லை. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணயம், அதன் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் நிர்­ணயம் செய்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 17 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 2006/44 எனும் அதி விசேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­காலத் தடை உத்­த­ரவு வழங்­க­வேண்­டு­மெனக்கோரி ரிட்­ம­னு­வொன்று நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டமை போன்ற பல்­வேறு குழப்­பங்­க­ளுக்கு மத்­தியில் சட்­டச்­சிக்­க­லுக்குள் உட்­ப­டாத 93, உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்­பகல் 12 மணி வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என தேர்தல் ஆணைக்­குழு கடந்த 27.11.2017 ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தி­ருந்­தது.

இதன்­பி­ர­காரம் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட 6, உள்­ளூ­ராட்சி சபைகள் உட்­பட நாட்­டி­லுள்ள 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 93, உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கே தேர்தல் நடை­பெ­று­மென அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்கு தடை­யாக இருந்த மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் இடைக்­கால தடையை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் 30.11.2017ஆம் திகதி நீக்­கி­யதன் கார­ண­மாக இலங்­கை­யி­லுள்ள அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கும் தேர்­தலை ஒரே­நே­ரத்தில் நடத்­து­வ­தற்கு தேர்­தல் ஆணைக்­குழு அறி­வித்­தி­ருக்கும் நிலையில் புதிய தேர்தல் முறை­யான கலப்பு தேர்தல் பற்றி வாக்­கா­ளர்கள் அறிந்து கொள்­வது அவ­சி­ய­மா­கி­றது.

புதிய முறையில் நடை­பெறவுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­த­லா­னது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் தமிழர் பிர­தி­நி­தித்­து­வத்­துக்கு எத்­த­கைய பாதிப்­பு­களை உண்­டாக்­கப்­போ­கி­றது என்­பதைப் பார்ப்­ப­தற்கு முதல் புதிய தேர்தல் முறை பற்றி சுருக்­க­மாகப் பார்ப்­பது அவ­சி­ய­மா­கி­றது.

புதிய தேர்­தல்­முறை

புதிய தேர்தல் முறை­யா­னது பல புதிய மாற்­றங்­க­ளையும் அம்சங்­க­ளையும் கொண்­டுள்­ளது என்­பதே அதன் சிறப்பு அம்­ச­மாகும்.

கலப்­பு­மு­றை­யென்ற புதிய அறி­மு­கத்­துடன் நடத்­தப்­ப­ட­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் முறை­யா­னது என்­னென்ன புதிய அம்சங்­களைக் கொண்­ட­தாக இருக்­கப்­போ­கி­றது என்­பதை விளக்­க­மாக பார்ப்­போ­மாயின்,

1) கலப்பு முறை

2) வட்­டாரம், விகி­தா­சாரம் என்ற இரட்டைத் தன்மை

3) பெண்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­துவம்

4) விருப்பு வாக்­கு­முறை ரத்து

5) கட்­டுப்­பணம் அனைத்து வேட்­பா­ள­ருக்கும்

6) வேட்பு மனுவின் புதிய வடிவம்

7) வேட்­பா­ளர்­களின் தகு­தி­யீ­னங்கள்

கலப்­பு­முறை

புதிய தேர்தல் முறை­யா­னது ஒரு கலப்­புத்­தன்மை கொண்­ட­தாக இருக்­கப்­போ­கி­றது. வட்­டாரம், விகி­தா­சாரம் என்ற இரட்டைத் தன்­மை­யொட்­டிய முறை­யையே இங்கு கலப்­புத்­தன்­மை­யெனக் கூறப்­ப­டு­கி­றது.

குறித்த ஒரு பிர­தேச சபைக்கோ அல்­லது நக­ர­ச­பைக்கோ, எத்­தனை வட்­டாரம் உண்­டாக்­கப்­பட வேண்டும். அந்த வட்­டா­ரங்­களின் எல்லை நிர்­ணயம் எவ்­வாறு அமைந்­தி­ருக்க வேண்­டு­மென எல்லை நிர்­ணயக் குழு­வினால் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­மைக்கு ஏற்ப, வட்­டா­ரங்கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக திரு­கோ­ண­மலை நக­ர­சபை 11 வட்­டா­ரங்கள் கொண்­ட­தாக வகுக்­கப்­பட்­டுள்­ளது.

இதேபோல் கண்டி மாவட்­டத்­தி­லுள்ள பாத்­த­தும்­பறை உள்­ளூ­ராட்சி சபையை எடுத்­துக்­கொள்­வோ­மாயின், அங்கு வட்­டா­ரங்­களின் எண்­ணிக்கை 18 எல்லை நிர்­ண­யக்­குழு வட்­டா­ரங்­களை வகுக்­கின்­ற­போது அது தனி அங்­கத்­தவர் வட்­டா­ரமா அல்­லது இரண்டு அல்­லது மூன்று உறுப்­பி­னர்கள் தெரி­வாகும் வட்­டா­ரமா எனத் தீர்­மா­னிக்கும். அத்­துடன் வட்­டா­ரங்­களின் எல்லை எவை­யென அடை­யா­ளப்­ப­டுத்திக் காட்­டு­வ­துடன் எத்­தனை கிராம சேவகர் பிரி­வுகள் குறிப்­பிட்ட வட்­டா­ரத்­துக்குள் உள்­ள­டங்கி காணப்­ப­டு­கி­ன்றன. வாக்­கா­ளரின் எண்­ணிக்கை, எத்­த­னை­யென்ற சகல விப­ரங்­களும் உள்­ள­டக்­கப்­படும்.

உதா­ர­ண­மாக, திரு­கோ­ண­மலை நகர சபையின் முதலாம் வட்­டாரம் அன்பு வழி­புரம் (1), வட்­டா­ரத்­திற்­காக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை இரண்டு (2), எல்­லைகள் இவ்­வாறு 2015, ஆம் ஆண்டு வர்த்­த­மா­னியில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. வடக்கு; திரு­கோ­ண­மலை நகர மற்றும் பட்­டின பிர­தேச சபை எல்லை. கிழக்கே ஜின்னா நகர் கிராம அலு­வலர் பிரிவின் ஒரு பகு­தியின் மேற்கு எல்லை மற்றும் அப­ய­புர கிராம அலு­வலர் பிரிவின் வடக்கு மற்றும் மேற்கு எல்­லைகள் தெற்கே; திரு­கோ­ண­மலை நகர மற்றும் பட்­டின பிர­தேச சபை எல்லை. மேற்கே; திரு­கோ­ண­மலை நகர மற்றும் பிர­தே­ச­சபை எல்லை.

இவ்­வாறு எல்­லைகள் வட்­டா­ரங்­க­ளுக்கு வகுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வட்­டா­ர­மு­றை­யென்­பது 1978 ஆம் ஆண்­டுக்கு முன் இருந்­துள்­ளது என்­பது நாம் அறிந்த விடயம்.

இனி­வி­கி­தா­சாரம் என்றால் என்­ன­வென்று நோக்­கு­வோ­மாயின், விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவ முறை­யென்றால் ஒரு குறிப்­பிட்ட பல உறுப்­பினர் தேர்தல் வட்­டாரம் ஒன்றில் ஒவ்­வொரு உறுப்­பி­ன­ருக்கும் அல்­லது பல வேட்­பா­ளர்­களை உள்­ள­டக்­கிய ஒரு குழு­வுக்கோ அல்­லது கட்­சிக்கோ அளிக்­கப்­பட்ட வாக்­கு­களின் விகி­தா­சா­ரத்­துக்கு ஏற்ப ஆச­னங்­களை ஒதுக்கும் சில வகை­யான உபா­யங்­களை உள்­ள­டக்­கிய ஒரு வாக்­க­ளிப்பு முறை­யென வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தலாம்.

உதா­ர­ண­மாக, வட்­டா­ர­மு­றையில் 60 வீத உறுப்­பி­னர்­க­ளையும் விகி­தா­சார முறையில் 40 வீத உறுப்­பி­னர்­க­ளையும் தெரிவு செய்யும் கலப்­பு­மு­றையே தற்­பொ­ழுது நடை­மு­றைக்கு வர­வி­ருக்­கி­றது. இதன் பிர­காரம் ஒரு பிர­தேச சபைக்கு 60, வீத­மான உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை, வட்­டார ரீதி­யாக 10 பேர் ஆயின், விகி­தா­சார ரீதி­யாக 4 பேர் தெரிவு செய்­யப்­பட வேண்டும். இதன்­படி குறித்த பிர­தே­ச­சபை 14, உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­தாக இருக்கும்.

வேட்பு மனுவின் புதிய வடிவம்

வட்­டாரம், விகி­தா­சாரம் என்ற கலப்­பு­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதால் வேட்­பு­ம­னு­விற்கு சமர்ப்­பிக்­கப்­படும் விண்­ணப்­பப்­ப­டிவம் கடந்த காலங்கள் போல் அல்­லாது புதிய வடிவம் கொண்­ட­தாக இருக்கும்.

2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்­ளூ­ராட்சி தேர்தல் சட்­டத்தின் பிர­காரம் புதிய தேர்­தலில் வேட்பு மனுக்கள் ஒரே வேட்பு மனுப்­பத்­தி­ரத்தில் இரண்டு பகு­தி­க­ளாக தாக்கல் செய்­யப்­பட வேண்டும். இன்­னு­மொரு வகையில் கூறு­வ­தானால் பத்­திரம் 1, பத்­திரம் 2 என்றும் சுல­பத்­துக்­காக எடுத்­துக்­கொள்­ளலாம். அதா­வது ஒரே வேட்பு மனுப்­பத்­தி­ரத்தில் இரு­ப­கு­திகள் இருக்கும்.

முத­லா­வது பகு­தி­யா­னது வட்­டா­ரங்­களில் போட்­டி­யி­டு­கின்ற குறித்த கட்சி அல்­லது சுயேச்சைக் குழுக்­களின் வேட்­பா­ளர்­களின் பெயர்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். உதா­ர­ண­மாக 8, வட்­டாரம் கொண்­டது, ஒரு பிர­தேச சபை­யாயின் அந்த 8 வட்­டா­ரங்­க­ளிலும் யார் குறித்த கட்­சியின் சார்பில் போட்­டி­யி­டு­கின்­றார்கள் என்ற விபரம் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

இதில் அதி­முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டிய விடயம். சில வட்­டா­ரங்கள் இரண்டு அங்­கத்­தவர் அல்­லது மூன்று அங்­கத்­தவர் கொண்­ட­தாயின் குறித்த கட்­சியோ அல்­லது சுயேச்­சைக்­கு­ழுவோ இரு வேட்­பா­ளர்­களை நிறுத்த வேண்டும். இன்­னு­மொரு உதா­ர­ணத்தை எடுத்துக் கொள்­வோ­மாயின் கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு இருவர் தெரிவு செய்­யப்­படும் வட்­டா­ரங்கள் 13, உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் மூவர் தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டிய வகையில் மூன்று வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த வகையில் 13, வட்­டா­ரங்­க­ளுக்கும் 26, வேட்­பா­ளர்கள் ஒரு கட்­சியால் நிறுத்­தப்­பட வேண்டும். அதேபோல் 3 வட்­டா­ரங்­க­ளுக்கு 9 வேட்­பா­ளர்­களை நிறுத்த வேண்டும். இதில் ஒரு­வர்­கூட, குறை­ய­மு­டி­யாது.

வேட்­பு­ம­னுவின் இரண்­டா­வது பகு­தி­யா­னது, விகி­தா­சாரப் பட்­டியல் தொடர்­பா­னது. ஏலவே குறிப்­பிட்­ட­துபோல் ஒரு­ந­கர சபைக்கோ அல்­லது பிர­தேச சபைக்கோ 60, வீத­மான உறுப்­பி­னர்கள் வட்­டார முறையில் தெரிவு செய்­யப்­படும் முறைக்கு அப்பால் 40, வீதம் விகி­தா­சார முறை­யாக இருக்கும்.

இந்த வகையில் விகி­தா­சார முறையில் 9 உறுப்­பினர் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மாயின், வேட்பு மனு, இரண்டாம் பகு­தியில் 9+3=12 நபர்­க­ளு­டைய பெயர்கள் வரி­சைக்­கி­ர­மத்தில் எழு­தப்­பட்­டி­ருக்க வேண்டும். உதா­ர­ண­மாக கொழும்பு மாந­க­ர­ச­பையின் விகி­தா­சாரம் மூலம் தெரிவு செய்­யப்­பட வேண்­டி­ய­வர்கள் 44 உறுப்­பி­னர்­க­ளாயின் 44+3=47, நபர்­க­ளு­டைய பெயர்கள் இடப்­பட்­டி­ருக்க வேண்டும். பட்­டி­யலில் சேர்க்­கப்­படும் மூவர் மேல­தி­க­மா­ன­வர்­க­ளாகும்.

குறித்த விகி­தா­சாரப் பட்­டி­யலில் இருந்து உறுப்­பி­னர்கள் எவ்­வாறு தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள் எனின் குறித்த உள்­ளூ­ராட்சி சபையில் போட்­டி­யிட்ட மொத்த கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வட்­டாரம் முழு­வதும் பெற்ற வாக்கின் வீதத்தின் அடிப்­ப­டையில் விகி­தா­சார உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டுவர். இது­வொரு வாய்ப்­பாட்டு முறையின் அடிப்­ப­டையில் இடம்­பெறும்.

வேட்­பு­மனு நிரா­க­ரிப்பு

தேர்தல் முறையில் வேட்பு மனுவை தாக்கல் செய்­கின்­ற­போது அதில் ஏற்­படும். குறை­பா­டுகள் கார­ண­மாக நிரா­க­ரிக்­கப்­ப­டு­வது வழமை. இவ்­வ­கையில்­பார்ப்பின் எந்த சந்­தர்ப்­பங்­களில் வேட்பு மனு நிரா­க­ரிக்­கப்­ப­டலாம் என்­ப­தையும் தெரிந்து கொள்­வது நன்று.

(1) பெண்­க­ளுக்­கென நிர்­ண­யிக்­கப்­பட்ட பெண் வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை வேட்­பு­ம­னுவின் இரு பகு­தி­யிலும் இல்­லை­யாயின் அந்த வேட்பு மனு நிரா­க­ரிக்­கப்­படும்.

(2) வேட்பு மனுவின் இரண்டு பகு­தி­களும் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டா­விடின் அம்­மனு நிரா­க­ரிக்­கப்­படும்.

(3) கட்­டுப்­பணம் உரி­ய­தொகை செலுத்­தப்­ப­டா­விடின் நிரா­க­ரிக்­கப்­படும்.

(4) அர­சியல் கட்­சி­யாயின் கட்­சியின் செய­லா­ளரும் சுயேச்சைக் குழு­வாக இருப்பின் அதன் தலை­வரும் கையெ­ழுத்­தி­ட­வேண்டும். இல்­லை­யாயின் நிரா­க­ரிக்­கப்­படும். சமா­தான நீதிவான் கையெ­ழுத்தை அத்­தாட்­சிப்­ப­டுத்த வேண்டும்.

(5) வேட்­பு­ம­னுவை கட்­சி­யென்றால் செய­லா­ளரும் அல்­லது அவரால் அதி­காரம் அளிக்­கப்­பட்ட முக­வரும், சுயேச்­சைக்­கு­ழு­வாயின் அதன் தலை­வரும் அந்­தந்த மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­ல­ரிடம் கைய­ளிக்க வேண்டும். தவறும் பட்­சத்தில் மனு நிரா­க­ரிக்­கப்­படும்.

(6) வேட்­பு­ம­னு­வொன்றில் யாரா­வது ஒரு­வரோ இரு­வரோ கையெ­ழுத்­திடத் தவறின் அவ­ரு­டைய பெயர் மட்­டுமே நிரா­க­ரிக்­கப்­படும். முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது.

(7) நாடு பிள­வு­ப­டு­வ­தற்கு எதி­ராக வேட்­பாளர் ஒருவர் குறித்த பத்­தி­ரத்தில் உறு­தி­யுரை (சத்­தி­ய­வாக்கு) செய்ய வேண்டும். செய்­யத்­த­வறின் அந்த வேட்­பாளர் மட்டும் நிரா­க­ரிக்­கப்­ப­டுவார்.

கடந்த காலத் தேர்­தல்­களில் இளை­ஞர்கள் 40, வீதம் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டு­மென கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இம்­முறை அது கட்­டாயம் ஆக்­கப்­ப­ட­வில்லை.

பெண் வேட்­பா­ளர்கள்

இது­வரை இலங்கை தேர்தல் முறையில் உள்­ள­டக்­கப்­ப­டாத பெண்கள் பிர­திநி­தித்­துவம் புதிய உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் முக்­கியம் பெற்று நிற்­பது முக்­கிய மாற்­ற­மா­கவோ அல்­லது அம்­ச­மா­கவோ கரு­தப்­ப­டு­கி­றது.

புதிய சட்­ட­மூ­லத்­துக்கு அமை­வாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 25 வீதம் பெண்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நாட்டின் சனத்­தொ­கையில் 52 வீத­மா­ன­வர்கள் பெண்­க­ளாக இருக்­கின்ற போதிலும் நமது பாரா­ளு­மன்­றிலோ, மாகா­ண­ச­பை­க­ளிலோ அல்­லது உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலோ போதிய இடம் வழங்­கப்­ப­டு­வ­தில்­லை­யென்ற குற்­றச்­சாட்டு நீண்ட கால­மாகவே இருந்து வரு­கின்­றது. உதா­ர­ண­மாக தற்­போ­தைய பாரா­ளு­மன்றில் பெண்­களின் எண்­ணிக்கை வெறும் 13 பேர் மட்­டுமே. 225 உறுப்­பி­னர்­களை கொண்ட இலங்கை பாரா­ளு­மன்றில் பெண்­களின் விகிதம் எவ்­வ­ளவு என்­பது இதி­லி­ருந்து தெரிந்து கொள்­ள­மு­டியும். இக்­கு­றை­பாட்டை நீக்கும் முக­மா­கவே தற்­போது புதிய உள்­ளூ­ராட்சி மன்றத் திருத்­தங்­களை பெண்­க­ளுக்கு 25 வீத­மென உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­தப்­பின்­ன­ணி­யி­லேயே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுவில் இரு­வ­ழி­களில் பெண்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­துவம் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஏலவே குறிப்­பிட்­டது போல் வேட்­பு­மனு இரு பகு­தி­களைக் கொண்­டது. இதில் முதல் பகுதி வட்­டாரம் தொடர்­பா­னது. கட்­சிகள் அல்­லது சுயேட்சைக் குழுக்கள் வட்­டா­ரங்­க­ளுக்கு வேட்­பா­ளர்­களை நிய­மனம் செய்­யும்­போது மொத்த உறுப்­பி­னர்­களில் (விகி­தா­சாரம்+வட்­டாரம்) 10 சத­வீதம் பெண்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட வேண்டும். உதா­ர­ண­மாக திரு­மலை நகர சபையின் மொத்த உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 23 ஆயின், அதில் 10 வீத­மா­ன­வர்கள் சுமார் 3 பேர் வட்­டா­ரப்­பட்­டி­யலில் இடம்­பெற வேண்டும்.

விகி­தா­சாரப் பட்­டி­யலை நோக்­கு­வோ­மாயின், குறித்த ஒரு உள்­ளூ­ராட்சி சபைக்கு விகி­தா­சாரப் பட்­டியல் மூலம் 8 பேர் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மாயின் விகி­தா­சா­ரப் பட்­டி­யலில் 4 பேர் பெண்­க­ளாக இருக்க வேண்டும். அதா­வது 50 வீத­மா­ன­வர்கள் பெண்கள்.

இந்த வாய்ப்­பாட்­டின்­படி பார்க்­கின்­ற­போது 20 பேர்­களை உறுப்­பி­னர்­க­ளாகக் கொண்ட ஒரு உள்­ளூ­ராட்சி சபையில் 25 வீதம் பெண்கள் அங்­கத்­துவம் பெற வேண்­டு­மென்ற நிய­தியின் அடிப்­ப­டையில் 5 பேர் அச்­ச­பையில் பெண் உறுப்­பி­னர்­க­ளாக இருக்க வேண்டும். சில சமயங்களில் வட்டாரங்களிலிருந்து குறித்த வீதப் பெண்கள் தெரிவு செய்யப்படவில்லையாயின் வெற்றி பெற வில்லையாயின் 25 வீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய விகிதாசாரப் பட்டியலில் இருந்து நிரப்பு செய்யப்பட வேண்டும்.

உதாரணமாக குறித்த ஒரு மன்றில் 20 பேர் மொத்தமாக தெரிவு செய்யப்பட வேண்டுமாயின், அதில் வட்டார முறையில் 2 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என எடுத்துக் கொள்வோமாயின் தேவையான மூவரையும் 40 வீத விகிதாசாரப்பட்டியலில் இருந்தே தெரிவு செய்ய வேண்டும். இதனை எந்தக் கட்சியிலிருந்து தெரிவு செய்வது என்பது தேர்தல் ஆணையாளரே தீர்மானிப்பார். இதற்கான நியதிகள் அல்லது வாய்ப்பாடுகள் புதிய திருத்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

கட்டுப்பணம்

கட்டுப்பணம் என்ற விடயம் புதிய சீர்திருத்தத்தில் புதிய அம்சங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் போட்டியிடும் அனைத்து தரப்பினரும் கட்டுப்பணம் கட்டியாக வேண்டும். சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வேட்பாளர் ஒருவருக்கு தலா 5000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். இதேபோன்று கட்சிகளின் வேட்பாளர் ஒருவருக்கு 1500 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். இம்முறை கலப்புத் தேர்தல் முறையென்பதனால் வட்டார முறையில் போட்டியிடுபவர்களுக்கும் விகிதாசாரப் பட்டியலில் இடம்பெறுபவர்களுக்கும் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியது அவசியமானது.

புதிய தேர்தல் முறையில் கட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளை, கட்சியின் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமை மற்றும் விருப்புவாக்கு முறையென்பது இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

(தொடரும்)

திரு­மலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-09#page-2

  • தொடங்கியவர்

திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்குமா?

 

(கடந்தவாரத் தொடர்ச்சி)

திரு­கோ­ண­மலை மாவட்டம் 11 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களைக் கொண்­டது. இங்கு 13 பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்டு இரு நக­ர­ச­பைகள் 11 பிர­தேச சபை­களை உள்­ள­டக்­கிய மாவட்­ட­மாக காணப்­ப­டு­கி­றது. திரு­கோ­ண­மலை நக­ர­சபை, கிண்­ணியா நக­ர­ச­பை­யென இரு நகர சபைகள் இயங்­கி­வரும் நிலையில் பின்­வரும் 11 பிர­தே­சச­பைகள் காணப்­ப­டு­கி­ன்றன.

திரு­மலை பட்­ட­ணமும் சூழலும் பிர­தேச சபை, (உப்­பு­வெளி) வெருகல் பிர­தே­ச­சபை, கிண்­ணியா பிர­தேச சபை, குச்­ச­வெளி பிர­தே­ச­சபை, மூதூர் பிர­தே­சசபை, தம்­ப­ல­கமம் பிர­தே­ச­சபை, சேரு­வில பிர­தே­ச­சபை, மொற­வேவ பிர­தே­ச­சபை, பதவி ஸ்ரீபுர பிர­தே­ச­சபை, கோமரங்­க­ட­வல பிர­தே­ச­சபை, கந்­தளாய் பிர­தே­ச­சபை மேற்­படி 13, உள்­ளூ­ராட்சி சபை­களில் திரு­கோ­ண­மலை நக­ர­சபை, வெருகல் பிர­தே­ச­சபை, திரு­மலை பட்­ட­ணமும் சூழலும் பிர­தே­ச­சபை ஆகிய மூன்றும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வசமும், மீதி 10 சபை­களில் 5 முஸ்லிம் மற்றும் பெரும்­பான்மை கட்­சிகள் வசமும் ஏனைய 5 சபை­களும் கூடி­ய­வரை பெரும்­பான்மை கட்­சிகள் வச­முமே இருந்­துள்­ளன.

21.08.2017 ஆம் ஆண்டு திக­தி­யி­டப்­பட்ட உள்­ளூ­ராட்சி அதி­கா­ர­ச­பைகள் தேர்­தல்கள் கட்­டளைச் சட்டம் 262 அத்­தி­யாயம் 3 ஆம் பிரிவின் கீழ் வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள 13 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் 135 உறுப்­பி­னர்­களை தெரி­வு­செய்யும் முறையில் 126 வட்­டா­ரங்­களை உள்­ள­டக்­கி­ய­வை­யாக 13 சபை­களும் வகுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதனை அட்­ட­வணை தெளி­வு­ப­டுத்­து­கின்­றது.

உள்­ளூ­ராட்சி சபைகள் விகி­தா­சார தேர்தல் இருந்த காலத்தில் மிகக்­கு­றைந்­த­ள­வான அங்­கத்­தவர் தொகை கொண்­ட­தா­கவே உள்­ளூ­ராட்சி சபைகள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதை இன்­னொரு பட்­டி­யலில் விரி­வாகப் பார்ப்போம்.

2013 ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள 13 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் வட்­டா­ர­மு­றையில் இவ்­வ­ளவு எண்­ணிக்­கை­யுள்­ள­வர்கள் உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யப்­பட வேண்டும். ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி சபைக்கும் விகி­தா­சார அடிப்­ப­டையில் இத்­தனை எண்­ணிக்­கை­யுள்ள உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மென்ற விதப்­பு­ரை­யொன்று செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்த விதப்­பு­ரைக்கு அமை­வாக, வட்­டார ரீதியில் 132 உறுப்­பி­னர்­களும் விகி­தா­சா­ரப்­பட்­டியல் அடிப்­ப­டையில் 39 உறுப்­பி­னர்­களும் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மென்ற ஆலோ­சனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இது தற்­போது கொண்டு வரப்­பட்ட கலப்பு முறையின் ஆரம்ப வடி­வ­மாகக் கூட கரு­தலாம். ஆனால் இந்த விதப்­பு­ரைக்கு போதிய ஆத­ரவு கிடைத்­த­தாக தெரி­ய­வில்லை.

இந்­நி­லை­யில்தான் 21.08.2017 ஆம் ஆண்டு வர்த்­த­மானி அறி­வித்­தலும் அதனால் கொண்­டு­வ­ரப்­பட்ட கண்­ட­னங்­களும் எதிர்ப்­பு­களும் வாசகர் அறிந்த விடயம். தொடர்ந்து இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள், கலந்­து­ரை­யா­டல்கள், ஆலோ­சிப்­புக்­களைத் தொடர்ந்து 17.02.2017 ஆம் ஆண்டு புதி­ய­தொரு வர்த்­த­மானி அறி­வித்தல் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலையில் இவ்­வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட வழக்கு, அந்த வழக்கின் நிமித்தம் ஏற்­பட்ட சவால்கள், சர்ச்­சைகள் என ஏரா­ள­மான விவ­கா­ரங்கள் நடந்­தே­றி­ன.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் திருத்த சட்­ட­மூலம் 25.08.2017 பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்­டதன் மூலம் 60 வீதம் தொகு­தி­வா­ரி­யா­கவும் 40 வீதம் விகி­தா­சார ரீதி­யா­கவும் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டுவர். ஒரு சபையில் 25 பெண்கள் பிர­தி­நி­தித்­துவம் உறுதி செய்­யப்­ப­ட­வேண்­டு­மென்ற முக்­கிய அம்­சங்கள் கொண்­ட­தாக புதிய சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அந்த வகையில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள 13 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும், வட்­டார ரீதி­யா­கவும் விகி­தா­சார ரீதி­யா­கவும் தெரிவு செய்­யப்­படும் உறுப்­பி­னர்கள் தொகை. புதிய சட்ட மூலத்தின் மூலம் பின்­வ­ரு­மாறு வகுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வட்­ட­வ­ணையில் காட்­டி­ய­படி 60 வீத வட்­டார அடிப்­ப­டையில் 13 சபை­க­ளுக்கும் 136 உறுப்­பி­னர்­களும், விகி­தா­சார அடிப்­ப­டையில் 84 உறுப்­பி­னர்­களும் மொத்­த­மாக 220 உறுப்­பி­னர்­களும் அனைத்து சபை­க­ளுக்கும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அட்­ட­வ­ணையில் காட்­டப்­பட்ட இறுதி நிரல் முன்­னைய உறுப்­பினர் தொகையை எடுத்துக் காட்­டு­கி­றது.

திரு­கோ­ண­மலை நக­ர­சபை

திரு­கோ­ண­மலை நகர சபைக்கு புதிய திருத்தம் மூலம் மொத்­த­மாக 23 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். ஏலவே இருந்த முறையின் பிர­காரம் 12 உறுப்­பி­னர்­களே விகி­தா­சார தேர்தல் முறையில் தெரிவு செய்யும் வாய்ப்பு இருந்­தது. தற்­போது 11 பேர் மேல­தி­க­மாக திரு­கோ­ண­மலை நக­ர­ச­பைக்கு தெரிவு செய்யும் சந்­தர்ப்பம் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. இதில் 11 வட்­டா­ரங்­க­ளுக்கும், 14 உறுப்­பி­னர்­களும் , இணைப்பு இரண்டின் மூலம் (விகி­தப்­பட்­டியல் மூலம்) மேல­திக உறுப்­பி­னர்­க­ளாக 9 பேரும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

நக­ர­சபை 11 வட்­டா­ரங்­களில் அன்­பு­வ­ழி­புரம், அப­ய­புரம், மற்றும் முரு­கா­புரி ஆகி­யன இரட்டை அங்­கத்­த­வர்­களை தெரிவு செய்யும் வட்­டா­ரங்­க­ளா­கவும் ஏனை­யவை 8 வட்­டா­ரங்கள் தனி அங்­கத்­தவர் வட்­டா­ர­மா­கவும் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வகையில் திரு­கோ­ண­மலை நக­ர­சபை வட்­டா­ரங்கள் பின்­வ­ரு­மாறு வகுக்­கப்­பட்­டுள்­ளது. திரு­கோ­ண­மலை நக­ர­ச­பைக்கு உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் இரட்டை அங்­கத்­தவர் வட்­டா­ரங்­க­ளான அன்­பு­வ­ழி­புரம், அப­ய­புரம், முரு­கா­புரி ஆகிய வட்­டா­ரங்­களில் ஏனைய சமூ­கங்­க­ளான, இஸ்­லா­மிய மற்றும் பெரும்­பான்மை சமூ­கத்­த­வர்கள் கலந்து வாழு­கின்ற கார­ணத்­தினால் அச்­ச­மூ­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் வட்­டா­ரப்­பி­ரிப்பு இடம்­பெற்­றுள்­ளது.  

இதேபோல் சோன­க­வாடி என்னும் தனி வட்­டா­ரத்தில் முஸ்லிம் சமூ­கத்­த­வர்கள் கணி­ச­மாக வாழு­கின்ற கார­ணத்­தினால் அச்­ச­மூ­கத்தின் பிர­தி­நி­தித்­துவம் அழுத்­தப்­பட்­டுள்­ளது. இதேபோல் மனை­யா­வெளி என்னும் வட்­டா­ரத்தில் தமிழ் முஸ்லிம் சமூ­கத்­தவர் கணி­ச­மா­கவும் ஏனைய சமூ­கத்­தவர் குறித்­த­தொகை கொண்­ட­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர்.

திரு­கோ­ண­மலை பட்­ட ணமும் சூழலும் பி.சபை

உப்­பு­வெளி பிர­தே­ச­ச­பை­யென அழைக்­கப்­படும் பட்­ட­ணமும் சூழலும் பிர­தே­ச­ச­பை­யா­னது, 12 உறுப்­பி­னர்­களை வட்­டார ரீதி­யா­கவும், 8 உறுப்­பி­னர்­களை விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

உப்­பு­வெளி பிர­தேச சபையில் புளி­யங்­குளம், சிங்­க­புர, வெள்ளை மணல் ஆகிய மூன்று வட்­டா­ரங்­களும் இரட்டை உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் வட்­டா­ர­மா­கவும் ஏனைய ஆறு வட்­டா­ரங்கள் தனி அங்­கத்­த­வர்­க­ளையும் கொண்­ட­தாகும்.

உப்­பு­வெளி பிர­தே­ச­ச­பையின் வட்­டா­ரங்­களின் பிரி­வு­களை கீழ்­வரும் அட்­ட­வணை காட்­டு­கி­றது.

உப்­பு­வெளி பிர­தேச சபை­யா­னது மூன்று இனங்­க­ளையும் உள்­ள­டக்­கிய பிர­தேச சபை­யாக காணப்­ப­டு­கி­றது.

உப்­பு­வெ­ளிப்­பி­ர­தேச சபையின் 9 வட்­டா­ரங்­களில் கப்­பல்­துறை இரு இன வட்­டா­ர­மா­கவும் ஆண்டாங்குளத்திலுள்ள மிஹிந்தபுரம், ஆண்டாங்குளம் என்பன முழுமையாக சிங்களப் பெரும்பான்மையைக் கொண்டது. சிங்கபுர வட்டாரத்தில் சிங்கபுர மட்கோ ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் பெரும்பான்மை இனத்தவரும் லிங்கநகர் பூம்புகார் கிராமசேவகர் பிரிவுகளில் தமிழர் வாக்கும் சமமாக காணப்படுகிறது.

கவாட்டிகுடா வட்டாரத்தில் முற்று முழுதான முஸ்லிம் பிரதி நிதித்துவமே நிலைகொள்ளக்கூடியது. இதே போன்றே வெள்ளைமணல் வட்டாரமும் இத்தன்மை கொண்டது. இப்பிரதேச சபையில் சாம்பல்தீவு, புளியங்குளம், கன்னியா ஆகிய மூன்று வட்டாரங்களும் தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தாலும் ஏனையவை சவால்களைக் கொண்டதாகவே இருக்கப்போகிறது.

வெருகல் பிரதேச சபையைப் பொறுத்தவரை முற்றுமுழுதாக தமிழர் பிரதிநிதித்துவம் சுதாகரிக்கப்படக்கூடிய சூழ்நிலை காணப்பட்டாலும் மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி சபைகளில் தெரிவாகப்போகின்ற 220 உறுப்பினர்களில் எத்தனை உறுப்பினர்கள் தமிழர் தரப்பிலிருந்து தெரிவாகப் போகின்றார்கள். 13 சபைகளில் எத்தனை உள்ளூராட்சி சபைகளை தமிழ் கட்சிகள் ஆட்சி கொள்ளப்போகின்றன என்பதெல்லாம் மக்கள் அளிக்கப்போகின்ற வாக்களிப்பிலேயே தங்கியுள்ளது. 

திரு­ம­லை­நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-16#page-2

Page-14-copy-d097a43aa7a95ec069941983d39

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.