Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் நீதிபதி இளஞ்செழியன் விடைபெறுகிறாரா?

Featured Replies

யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் நீதிபதி இளஞ்செழியன் விடைபெறுகிறாரா?

 

யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் நீதிபதி இளஞ்செழியன் விடைபெறுகிறாரா?

யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்.அதற்கான மாற்றல் விரைவில் எனக்கு வரும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று(10) நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும் இடமாற்றலாகும் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழாவிலும் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்....

நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்த ஒன்றே நீதிமன்றக் குடும்பம். இந்த மூன்று தரப்பினரிடமும் ஒற்றுமை அவசியம். அதுவே எனது சேவையின் குறிக்கோளாகும்.
கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா.

அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது. யாழ்ப்பாணத்து வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டேன். அடுத்ததாக மட்டக்களப்புக்குச் செல்லவுள்ளேன்.

அந்த மாவட்ட மக்களுக்கு நான் சேவையாற்றவேண்டும் என மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/judge-illanseliyan-jaffna-courts

 

 

சிறிநிதி நந்தசேகரனுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கெளரவிப்பு….

srinithi1.jpg

சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரனுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கெளரவிப்பு வழங்கப்பட்டது. பெரும் நெருக்கடியான காலப்பகுதியிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க வலயத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் சேவையாற்றியமைப் பாராட்டியே அவருக்கு இந்தக் கெளரவிப்பு வழங்கப்பட்டது.

2018 ஜனவரி 2ஆம் திகதி முதல் வவுனியா மாவட்ட நீதிபதியாக சிறிநிதி நந்தசேகரன் மாற்றலாகிச் செல்கிறார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் ஆகியோரின் தலைமையில் மேல் நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்களால் இந்தக் கெளரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரனை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மலர் மாலை, பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், நீதிபதி சிறிநிதி நந்தசேகரனின் சேவையைப் பாராட்டி கௌரவச் சின்னமும் மேல் நீதிமன்ற நீதிபதி இ. கண்ணன் வாழ்த்துப்பாவும் வழங்கிவைத்தனர்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். இதேவேளை, இலங்கையில் மிக நெருக்கடியான மோதல் மிகு பிரதேசத்தில் எல்லா இனக்குழுமங்களையும் நீதியின் முன் சமமாக நடாத்துவதில் ஒரு சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் பொறுப்புணர்வையும் துணிவையும் வெளிப்படுத்திய ஒரு முன்னுதாரணராக நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் திகழ்கிறார் என அமெரிக்கா பாராட்டியிருந்தது. அதற்காக அவருக்கு ‘அமெரிக்காவின் வீரப்பெண்’ விருது அமெரிக்காவால் 2009 மார்ச் 24ஆம் திகதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

srinithi.jpg

http://globaltamilnews.net/archives/54325

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எந்த நோக்கத்தில் யாழ் வந்தார் எது நிறைவேற்றப்பட்டது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனால் இதுமாத்திரம் உண்மை 

சிறீலங்காவின் சட்டதிட்டங்கள் மற்றும் நீதி நிர்வாக அமைப்புப்பற்றியும் அதில் உள்ள ஓட்டை உடைசல்களைபற்றியும் குடாநாட்டுமக்களுக்கு இராணுவ ஆக்கிரமிப்பின்பின்பு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை அவர்களும் சட்டதிட்டங்கள் என்றால் விடுதலைப்புலிகளது நீதி நிர்வாக அமைப்புப்போல்தான் சிங்களத்தினதும் என நினைத்திருந்தனர் ஆனால் இப்போதுதான் சிறீலங்காவின் நீதிச்சட்டத்தில் எந்தவித குற்ற்ம்புரிந்தவனும் தண்டனையிலிருந்து தப்பிக்கவோ இலகுவில் விடுபடவோ அல்லது தண்டனையைப் பிந்தள்ளவோ முடியும்  தம்பிகளா பயப்பிடாமல் ஆவா சன்னா தாரா வாத்து கோழி இவைகல்பெயரில் ரவுடிக்கும்பலை நடத்துங்கோ எனச் சொல்லாமல் சொல்லிப்போடுப்போகப்போறர்.

இதில் கேவலம் என்னவென்றால் கடந்தமாதம் மல்லாகம் நீதிமன்ற வளாகத்திலிருந்து அவாகுழுவில் சந்தேகநபர் ஒருவர் தப்பிச்சென்றார் அவருக்கு நீதிமன்றத்தில் வக்காளத்து வாங்கியவர் ஒரு பெண்  அப்புக்காத்து அதே ஆவா குழுவில் ரவுடி இவரது மகளது மார்பி லோ அல்லது இவரது மார்பிலோ கைவைத்தால்தான் தெரியும் நிலைமையின் தீவிரத்தை.

இன்னும்,ஒரு கொசுறு கூடிய விரைவில் நான் வாழும் நாட்டுக்கு ஆவா குழுவுடன் தொடர்புடையவர் எனச்சந்தேகித்து நீதிமன்றத்தில்; மின்னிறுத்தி பிணையில் வெளிவந்தவர் ஒருவர் வேலைவாய்ப்புக்கான வதிவிட உரிமை பெற்று வரவிருக்கிறார். இதற்கான விலை விச்ச ஒழுங்கு செய்பவர் வரவிருப்பவரது நெருங்கிய உறவுப்பெண்ணை மணமுடிக்கவுள்ளார் இதனடிப்படையிலேயே இந்த டீல் அதாவது ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது தொழில்வழங்குபவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் தமிழீழத்தேசிய செயற்பாட்டாளர்கள் என ஒரு சில அலங்காரப்பதவியில் அமர்ந்திருபோரும் அள்ளிவளங்குவோருமாகும் இந்தகேவலத்தில் நாடின் விடுதலைபற்றிய அரசியல் எந்தக்கேவலத்தில் புலம்பெயர் நாடுகளில் இருக்கு என யூகிக்கவும். செய்யுறதையும் செய்துபோட்டு ஈழத்தேசியவாதிகளாகவும் தாராள மனம்படைத்தவர்களாகவும் தங்களைக்காட்டிக்கொள்ளக்கூடாது.

வாள் கத்திகளோட ஊரில திரிவம் எப்படியாகுதல் ஒரு துருமணப்பேச்சுக்கால் எங்களை வெளிநாடுக்குக் கூப்பிடும் என பொடியள் இன்னும் இறுக்கமாக வாள்களையும் கத்திகளையும் குடாநாட்டுத்தெருக்களில் பிடிக்கவைக்க புலம்பெயர் புலிவால்கள் என தங்களைக்காட்டிக்கொள்வோர் முனைகிறார்கள்.

இவர்களும் யாழ்ப்பாணத்துப் பெண் அப்புக்காத்துக்கள் போன்றோரே.ஆவா சன்னா தாரா எல்லோரும் வாங்கோ வந்து புலம்பெயர் புலிவால்கள் எனச்சொல்லப்படுவோர் பொண்டாட்டிகளையும் பொம்பிள்ளைப்பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுங்கோ அப்பவாது இவர்கள் திருந்துவார்களா எனப்பாக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

வித்யா கொலையாளிகளுக்கு தூக்கு விதிச்சதை தவிர்த்து, இளஞ்செழியன் ஐயா யாழ் நீதிபதியாக பொறுப்பேற்றதால் ஏற்பட்ட ஒரேயொரு நன்மை ..

பிக்குகள்காலில் விழுந்ததாலும், சிங்கள மெய்ப்பாதுகாவலரின் இறப்பிற்காக கதறி கதறி அழுததாலும்  சிங்களவர்களிடையே மிக பெரிய ஹீரோ ஆகிவிட்டார் என்பது!

மற்றும்படி, வாள்வெட்டுக்களும், கஞ்சா,போதை,கள்ளச்சாராய விற்பனைகளும் அப்படியே இருக்கு, அல்லது ஐயாவின் காலத்தின்பின் அதிகரிச்சிருக்கு என்றும் சொல்லலாம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.