Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரிய மீன்களின் ‘ சின்ன’ அரசியல்

Featured Replies

பெரிய மீன்களின் ‘ சின்ன’ அரசியல்

 

 

பெரிய மீன்களின் ‘ சின்ன’ அரசியல்

– இதயச்சந்திரன்

மீண்டும் தேர்தல்!

அதிகாரத்தின் பங்காளியாக மக்களைக் காட்டும் நாடகம்இ மறுபடியும் அரங்கேறப்போகிறது.
‘மக்கள் அதிகாரம்’ என்கிற ஜனநாயக வெள்ளையடிப்போடுஇ சர்வதேசவல்லரசுகளும் பூமழை பொழிய, இனிதே முடிவடையும் இந்த ஓரங்க நாடகம்.

பொருளாதார சுமைஇ வேலைவாய்ப்பற்ற கையறுநிலைஇ நிலமற்ற அகதிவாழ்வுஇ நில ஆக்கிரமிப்பு போரின் வடுக்கள்இ காணாமல்போகடிக்கப்பட்டோரை தேடும் அவலநிலைஇ இவற்றின் மத்தியில் ‘ தீர்வினைநோக்கிய பயணம்’ என்றவாறு முழக்கமிடும் கூட்டமைப்புஇ என்பவற்றைஎதிர்கொண்டவாறு நகரும் மக்கள் கூட்டம்.

அதற்குள் ‘ வேலை வேண்டுமா தீர்வு வேண்டுமா?’ என்ற குத்தல் கதை வேறு.

பண்டா காலத்திலிருந்து தீர்வைப் பற்றித்தான் பேசுகிறோம்.

கிழக்கில் அதிலும் குறிப்பாக அம்பாறையிலும் இ திருக்கோணமலையிலும்பூர்வீக நிலங்களை பறிகொடுத்ததுதான் மிச்சம்.

அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசசபைகளைஇழந்துள்ளோம்.

மிச்சமிருக்கும் பிரதேசசபைகளை காப்பாற்றுவதற்கே இப்போது போட்டிநடைபெறுகிறது.

இழந்தவற்றை மீட்கும் அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டது போல்தெரியவில்லை.

‘எங்களுக்குள் பிளவுபட்டு நின்றால்இ மூன்றாமவன் வென்றுவிடுவான்’ என்கிறபதட்ட அரசியலை முன்வைத்தே மக்களின் வாக்குகளைப் பெறுகிறார்கள்.

இழந்த இடங்களை மீட்க வக்கில்லாத அரசியல் தலைமைகள்இ இருப்பதைக்காப்பாற்றும் தந்திரைத்தையே வாக்குவங்கியை நிரப்பப்பயன்படுத்துகிறார்கள்.

இலங்கை அரசியலில் பொதுவாகவே தேர்தல் வந்தவுடன் கூட்டுக்களும்ஏற்படும் அதேவேளை இருக்கிற கூட்டணியும் உடையும்.

நடந்து முடிந்த ஆட்சிமாற்றத்திலும் இதனைப் பார்க்கலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான 2001 இலிருந்து இன்றுவரை ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி 2004 யிலும் அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் 2010 யிலும்இ 2017 இல் சுரேஷின் ஈபிஆர்எல்எப் அணியும் பிரிந்துசென்றதே சான்று.

தாம் பிரிந்து செல்வதற்கு கொள்கை முரண்பாடே காரணம் என்பதை முன்வைத்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதனை ‘இறுக்கமானபோக்குஇ தமிழ் தீவிரவாதம்’ என்றார்கள் கூட்டமைப்பினர்.

சுரேஸைப் பொறுத்தவரை கூட்டமைப்புத் தலைமை மீதும்இ அதனைவழிநடத்தும் தமிழரசுக் கட்சியின் மீதே தமது அதிருப்தியை முன்வைத்தார்.

அண்மைக்காலமாக பல போராட்டங்களில் ஒன்றிணைந்த இருவரும்இ தேர்தல்களத்தில் பிரிந்து நிற்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியவில்லை.

Uthayasooriyan

பெரிய மீன்களின் பின்னணியில் இப்பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பார்வைஉண்டு.

பக்கத்துநாட்டுக்காரருக்கோஇ தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமரசமற்றகொள்கை நிலைப்பாடானது தனது பிராந்திய அரசியல் பாதுகாப்பு நலனிற்குமுரணாக அமைகிறது என்கிற எரிச்சல் உண்டு.

மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் மீது ஏற்பட்டுவரும் அதிருப்தியானதுஇ தனதுநலனிற்கு முட்டுக்கட்டையாக வரக்கூடிய சக்திகளின் பக்கம்திரும்பிவிடக்கூடாதென்பதில் கரிசனை கொண்டுள்ளதாகவும் எண்ணலாம்.

வீட்டை எரிக்க உதயசூரியனே சரியான தெரிவு என்கிற ‘ சின்ன ‘ அரசியல்இபுதிய கூட்டணிக்கான நியாயப்படுத்தலாக இருக்க முடியாது.

பெரிய கட்சிச் சின்னங்களையேஇ புதிதாக வந்த ஈரோஸின் வெளிச்சவீட்டுச்சின்னம் மூழ்கடித்த வரலாறும் உண்டு.

உறுதியான அரசியல் கோட்பாடுகளோடு மக்கள்சார்ந்த அரசியலைமுன்னெடுத்தால் எதுவும் சாத்தியமே.

தமிழ்நாட்டு அரசியலில் இந்த சின்ன அரசியல் பொருந்திப்போகலாம்.

ஆனால் தமிழர் தாயகத்தில் அவ்வாறு இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பாதையை நோக்கினால்இ ‘ தீர்வைநோக்கி..’ என்கிற மாயமான் வேட்டையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேலாகநடை போடுவார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிஇ நாடாளுமன்றக்குழுவின் பிரதி தலைவர் பதவிஇஎன்று பல பதவிகள் தீர்விற்கு முன்பாக வந்து போகும். ஏன் மந்திரிப்பதவிகள்கூட வரலாம்.

மக்களோ….மூன்றாம்தர பிரஜைகளாக கிழக்கிலும்இ இரண்டாம்தரபிரஜைகளாக வடக்கிலும் வாழப்பழகிக் கொள்வார்கள்.

Tamil leaders_2

மாகாணசபைகளும் வரும். புதிய தலைகளும் முளைக்கும்.

வழமை போல் ஆளுநரோடு மோதல் தொடரும்.

ஒன்றுமே பெறமுடியாவிட்டாலும்இ இதையும்விட்டால் (?) வேறுவழி என்ன?என்கிற பிராந்திய நலன் அரசியலைப் பேசுவார்கள்.

இது ஒருபுறமிருக்கஇ வடக்கு அரசியலில் ஏற்கனவே பரீட்சயமான ஒருவரின்புதுவரவு நிகழப்போவதாக பேச்சடிபடுகிறது.

அவர் வேறுயாருமல்ல. முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாளே.

அவருக்கு இலங்கைக் குடியுரிமை மறுபடியும் கிடைத்துவிட்டது என்கிறசெய்தியும் வந்துள்ளது.

ஆகவே அவர் இனி தேர்தல்களில் குதிக்கலாம் என்பதும்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வரதரின் வருகைக்கும்இ சங்கரியாரின் மீள்வருகைக்கும் ஏதாவதுதொடர்புள்ளதா?.

வரதரின் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியானது தமிழ் தேசியக்கூட்டமைப்போடு தேர்தலின் பின் இணையலாம் என்கிற செய்தி வருகையில்இஆனந்த சங்கரி அவர்களின் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு சுரேஷ்அணியினர் சேர்ந்திருப்பதானதுஇ முடிவடையாமல் தொடரும் மோதல்வரலாற்றினை நினைவுபடுத்துகிறது.

வரதரை உள்வாங்குமுன்பாகஇ கூட்டமைப்பினை ஒரு ஒழுங்கிற்குள்கொண்டுவந்துஇ தமிழரசுக் கட்சியின் ‘ நிறைவேற்று’ அதிகாரத்தினைஸ்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பல உயர்மட்ட தலைவர்கள்கருதுகிறார்கள்.

ஏற்கனவே வடக்கில் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து இ நீண்ட வரிசையில்பலர் காத்திருக்கின்றனர்.

ஆனாலும் கிழக்கின் நிலைமை வேறு.

அங்கு இருப்புப் பிரச்சினை.

இரண்டுவிதமான இனமுரண்நிலைகள் வாக்குவங்கி அரசியலை முன்னிறுத்திஉருவாக்கப்படுகின்றன.

அதிலும் தமிழ்- முஸ்லீம் இனமுரண்பாடு முன்னெப்போதும் இல்லாதவாறுஅதிகரிக்கும்போது அதில் குளிர்காய நினைப்பவர்கள் இலாபமடைவார்கள்என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

08

சிலவேளைகளில் தேசியக் கட்சிகளை நோக்கி தமிழ் மக்களை நகர்த்தும்ஆபத்தும் ஏற்படலாம்.

ஆகவே நடைபெறப்போகும் இத்தேர்தல்இ இனிவரும் காலங்களில்ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்களுக்கு புதிய அடித்தளங்களைஇடப்போவதை உணர்ந்து கொள்ளலாம்.

இதனை மூன்று பெரும் அணியாகப் பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசிய சபைஇதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக்கு கூட்டணி ஆகியனபுரிந்து கொள்வது நன்று.

அடித்தட்டு மக்களோடு இணைந்த முற்போக்கு அரசியலை முன்வைக்கும்அதேவேளைஇ தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையினை விட்டுக்கொடாதஅரசியல் இயக்கத்தின் மீது மக்கள் அக்கறை கொள்வது சாலச் சிறந்தது.

இந்துமாகடல் பெரிய மீன்களின் தாளத்திற்கும்இ டியாககோர்காசியதளவாசிகளின் மேளத்திற்கும் ஆடுவோரைஇ இனங்காண்பதும் மக்களின்கடமை.

http://www.samakalam.com/blog/பெரிய-மீன்களின்-சின்ன-அர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.