Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகரசபைத் தேர்தல்: பொது அணி ஒன்றைக் களமிறக்க நடவடிக்கை!

Featured Replies

யாழ் மாநகரசபைத் தேர்தல்: பொது அணி ஒன்றைக் களமிறக்க நடவடிக்கை!

 

யாழ் மாநகரசபைத் தேர்தல்: பொது அணி ஒன்றைக் களமிறக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி, பொது அணி ஒன்றைக் களமிறக்கும்  பேச்சுக்கள் தற்பொழுது மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் பொது அணிக்கு சமூக அமைப்புக்கள், தமிழ் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன உள்வாங்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவை குறித்த பொது அணிக்காக பெறுவதற்கு தற்போது பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

முக்கியமாக, வடக்கு மாகாண முதலமைச்சர், க.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம் பெறுவதாக அறியமுடிகின்றது. இதுதவிர, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தனது ஆதரவை வழங்குவதோடு, இந்து மத அமைப்பான சிவ சேனை இந்த அணியுடன் இணையாமல் ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளதென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-municipal-council-election

  • தொடங்கியவர்

பொது அணியில் மேயர் வேட்பாளராக வித்தி ?

Vithyatharan-1.jpg?resize=1024%2C683

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுக்கள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

இந்தப் பொது அணியில் சமூக அமைப்புக்கள், தமிழ் கட்சிகள் சில, வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றினைந்துள்ளதாகவும் , அவர்களின் ஆதரவுடனையே களமிறக்க பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கு தற்போது பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம பெறுவதாக அறியமுடிகின்றது. வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றன.

அத்துடன், இந்து அமைப்பான சிவ சேனை இந்த அணியுடன் இணையாமல் ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனையே நியமிக்வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இன்று வலியுறுத்தியுள்ளார். எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ஏற்கனவே மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரனை களமிறக்க தமிழரசு கட்சிக்குள் பேச்சுக்கள் இடம்பெற்ற வேளை அதற்கு யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சி உறுப்பினருமான ஒருவர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், தமிழரசு கட்சி தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடமும் நேரில் தனது எதிர்ப்பை கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2017/55882/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.