Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்வதற்கு எதுவுமில்லை. எங்களை விடுங்கோ – மாவை:-

Featured Replies

சொல்வதற்கு எதுவுமில்லை. எங்களை விடுங்கோ – மாவை:-

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சொல்வதற்கு எதுவுமில்லை. எங்களை விடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சி தலைவருமான மாவை சேனாதிராஜா ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார். யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்பு மனுவை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

Mavai-Suma.jpg?resize=816%2C612

http://globaltamilnews.net/2017/56460/

  • தொடங்கியவர்
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழில் வேட்பு மனு தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்டம் முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

குறித்த வேட்புமனுக்கள் இன்று காலை யாழ். உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளது

யாழ். மாவட்டத்திலுள்ள ஒரு மாநகரசபை, மூன்று நகரசபைகள் மற்றும் 12 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன்,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் இணைந்து வேட்புமனுக்களை யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்துள்ளனர்.

http://newuthayan.com/story/56458.html

  • தொடங்கியவர்

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளது.

  • தொடங்கியவர்

வடக்கு கிழக்கில் பல அரசியல் கட்சிகள் இன்றும் வேட்பு மனு தாக்கல் செய்தன (படங்கள்)

வடக்கு கிழக்கில் பல அரசியல் கட்சிகள் இன்றும் வேட்பு மனு தாக்கல் செய்தன (படங்கள்)

 

 
 
248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்துள்ளன.

அதன்படி இன்றைய தினமும் பல அரசியல் கட்சிகள் தமது கட்சி சார்பாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ் மாவட்டம் முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகரசபை, மூன்று நகரசபை, பன்னிரெண்டு பிரதேச சபைகளிற்கான வேட்பு மனுக்களையே இவர்கள் தாக்கல் செய்தனர்.

இது தவிர யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி போட்டியிட ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று வியாழக்கிழமை (21) தாக்கல் செய்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் சமூக ஜனநாயக கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தலமையில் இன்று முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று (21) கிளிநொச்சியில் ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீலங்கா சுந்திர கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான குழுவினரும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக வைத்தியர் விஜயராஜன் தலைமையிலான குழுவினரும், ஈபிடிபி சார்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் தலைமையிலான அணியினரும் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதேவேளை காத்தான்குடி நகர சபைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனு இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஏழு உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்புமனுக்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அந்தக் கட்சி சார்பாக தாக்கல் செய்தார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=98600

  • தொடங்கியவர்

“எப்பவும் நீங்கள் தானே புகைப்படம் எடுக்கிறியள் இன்றைக்கு நான் எடுக்கிறன்” – சுமந்திரன்:-

Suma.jpg?resize=900%2C675

யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்பு மனுவை கையளித்த பின்னர் வெளியில் வந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவை ஊடகவியலாளர்கள் வழிமறித்த போது அவருடன் கூட வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் “ எப்பவும் நீங்கள் தான் எங்களை படம் எடுக்கின்றீர்கள், இன்றைக்கு நான் உங்களை படம் எடுக்க போகிறேன் “ என கூறி தனது கையடக்க தொலைபேசியில் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

http://globaltamilnews.net/2017/56636/

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் படம் பிடித்த ஊடகவியலாளர்களை இங்கு காணவில்லையே.? அவர்களுக்கு என்ன நடந்தது.?? :rolleyes: :shocked: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.