Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா பிக் பாஷ் டி20 லீக் செய்திகள்

Featured Replies

பிக் பாஷ் டி20 லீக்: வெயின் பிராவோ 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல்

 

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் காயத்திற்குப் பின் களம் இறங்கியுள்ள வெயின் பிராவோ ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்திள்ளார்.

 
பிக் பாஷ் டி20 லீக்: வெயின் பிராவோ 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல்
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரின்போது காயத்திற்குள்ளானார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சுமார் ஆறேழு மாதங்கள் ஓய்வில் இருந்த பிராவோ, தற்போது கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார்.

காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் கூட விளையாடவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்திற்கு எதிராக விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்கும் என வெயின் பிராவோ நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.

இதனால் இந்த வருடத்திற்கான பிக்பாஷ் லீக்கில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இன்று நடைபெற்ற லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இதில் வெயின் பிராவோ மெல்போர்ன் அணிக்காக விளையாடி வருகிறார்.

201712211605457192_1_Bravo001-s._L_styvpf.jpg

டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. வெயின் பிராவோ சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

காயத்தில் இருந்து மீண்டுள்ள வெயின் பிராவோ இந்த சீசனின் முதல் போட்டியிலேயே 5 விககெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அவர் நான்கு ஓவரில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/21160544/1135937/Big-Bash-2017-dwayne-Bravo-Get-5-wickets.vpf

  • தொடங்கியவர்

பிக் பாஷ் 2017-18: லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்சை வீழ்த்தியது மேர்போர்ன் ரெனிகேட்ஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மேர்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீழ்த்தியது.

 
 
பிக் பாஷ் 2017-18: லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்சை வீழ்த்தியது மேர்போர்ன் ரெனிகேட்ஸ்
 
பிரிஸ்பேன்:

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி  தொடங்கியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - மேர்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் ஹோபார்ட் மைதானத்தில் மோதின.

டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் டார்கி ஷார்ட், பென் மெக்டெர்மோட் ஆகியோர் தலா 34 ரன்களும், அலெக்ஸ் டூலன் 26 ரன்களும், ஜார்ஜ் பெய்லி 25 ரன்களும், டெனியல் கிறிஸ்டெய்ன்  23 ரன்களும் எடுத்தனர். மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி தரப்பில் வெயின் பிராவோ சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

201712220050119582_1_bigbash._L_styvpf.jpg

பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஹாரிஸ் - கேமரான் ஒயிட் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் அடித்தனர். ஹாரிஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய டாம் கூப்பர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து பிராட் ஹாட்ஜ்- ஒயிட்டுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஒயிட் 79 ரன்களுடனும், ஹாட்ஜ் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தார்

சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்கள் வீழ்த்திய மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியின் வெயின் பிராவோ ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/22005010/1135998/Melbourne-Renegades-beat-Hobart-Hurricanes-by-7-wickets.vpf

  • தொடங்கியவர்

டி20 கிரிக்கெட்டில் 47 வயதில் விக்கெட் வீழ்த்தி சாதனைப் புரிந்த பிராட் ஹாக்

 

ஆஸ்திரேலிய அணியின் இடது கை விரிஸ்ட் ஸ்பின்னரான பிராட் ஹாக் 46 வயது 318 நாளில் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

 
டி20 கிரிக்கெட்டில் 47 வயதில் விக்கெட் வீழ்த்தி சாதனைப் புரிந்த பிராட் ஹாக்
 
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் இடது கை விரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். தற்போது 46 வயதாகும் இவர் சர்வதேச போட்டியில் இடம்பிடிக்காவிடிலும், ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார். 1996-ம் ஆண்டு தனது 27 வயதில் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை.

201712221739150739_1_Bradhogg001-s._L_styvpf.jpg

தற்போது நடைபெற்று வரும் ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.

201712221739150739_2_Bradhogg002-s._L_styvpf.jpg

தொடக்க வீரராக களம் இறங்கிய டி'ஆர்சி ஜான் மேத்யூ ஷார்ட்-ஐ 34 ரன்னில் பிராட் ஹாக் வெளியேற்றினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் விக்கெட்டை வீழ்த்தி பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு அஜித் எகநாயககே 46 வயது 176 நாட்களில் டி20 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இவர்தான் மிகவும் அதிகமான வயதில் விக்கெட் வீழ்த்திய வீரராக இருந்தார். தற்போது பிராட் ஹாக் 46 வயது 318 நாளில் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/22173914/1136134/Brad-Hogg-Oldest-To-take-a-wicket-in-a-T20.vpf

  • தொடங்கியவர்

பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் பெர்த் ஸ்கார்சர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் வெற்றி

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டிகளில் பெர்த் ஸ்கார்சர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

 
பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் பெர்த் ஸ்கார்சர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் வெற்றி
 
பிரிஸ்பேன்:

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி  தொடங்கியது. நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. முதல் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் - பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின.

டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 18.4 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிட்னி அணியில் நிக் மேடின்சன் 31 ரன்களும், ஸ்வீவ் ஓ கீஃப், சீன் அபோட் ஆகியோர் தலா 23 ரன்களும் எடுத்தனர். பெர்த் அணி தரப்பில் அண்ட்ரூ டை 4 விக்கெட்களும், மிச்செல் ஜான்சன், ஜை ரிச்சர்ட்சன், டேவிட் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் கைப்பற்றினர்.
 
201712240125360869_1_perth._L_styvpf.jpg


பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி களமிறங்கியது. பெர்த அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஷ்டன் டர்னர் அதிரடியாக விளையாடி 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிட்னி அணியின் சீன் அபோட் 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்த் அணியின் ஆஷ்டன் டர்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து மெர்போர்னில் நடந்த லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அலெக்ஸ் ராஸ் 48 ரன்கள் எடுத்தார். மெல்போர்ன் அணி பந்துவீச்சில் ஜாக் வில்டர்மத் 3 விக்கெட்களும், பிராட் ஹாக், வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
 
201712240125360869_2_yamv5qnn._L_styvpf.jpg


இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 8 ரன்களிலும், மார்கஸ் ஹாரிஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேமரான் ஒயிட்டும், டாம் கூப்பரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர். மெல்போர்ன் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேமரான் ஒயிட் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் கூப்பர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். மெல்போர்ன் அணியின் ஜாக் வில்டர்மத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ள லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/24012536/1136376/Perth-Scorchers-and-Melbourne-Renegades-won-Big-Bash.vpf

  • தொடங்கியவர்

பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டியில் சிட்னி தண்டரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்

 

 
 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது.

 
பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டியில் சிட்னி தண்டரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்
 
 
பிரிஸ்பேன்:
 
இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி  தொடங்கியது. இன்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதின. மழை குறுக்கிட்டதால் இப்போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 
 
டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிட்னி அணி 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. சிட்னி அணியில் ஷேன் வாட்சன் 56 ரன்களும், கலம் பெர்க்யூசன் 37 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்தனர். பிரிஸ்பேன் அணி தரப்பில் சதப் கான், ஜோஷ் லாலர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
 
201712271740524405_1_bigbash-shanewatson._L_styvpf.jpg
 
பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. பிரிஸ்பேன் அணி 16.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ பர்ன்ஸ் 45 ரன்களும், ஜிம்மி பியர்சன் 43 ரன்களும், கிறிஸ் லின், அலெக்ஸ் ரோஸ் ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். சிட்னி அணி தரப்பில் மிட்செல் மெக்லினகன் 2 விக்கெட்களும், ஷேன் வாட்சன், அர்ஜீன் நாயர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
 
201712271740524405_2_bigbash-brisbane-main._L_styvpf.jpg
 
பிரிஸ்பேன் ஹீட் அணியின் அலெக்ஸ் ரோஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/27174053/1137011/Bigbash-league-Brisbane-heat-beat-Perth-scorchers.vpf

  • தொடங்கியவர்

பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்சை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வெற்றி பெற்றது. #BigBashLeague #MelbourneRenegades #PerthScorchers

 
 
பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்சை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
 
 
மெல்போர்ன்:
 
இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற 10-வது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதின. 
 
டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மெல்போர்ன் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸ் 32 ரன்களும், டாம் கூப்பர் 34 ரன்களும் எடுத்தனர். இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெர்த் அணி தரப்பில் மிச்செல் ஜான்சன், அண்ட்ரூ டை அகியோர் தலா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர்.
 
201712292059338290_1_perth-johnson._L_styvpf.jpg
 
பின்னர் 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மைக்கெல் கிளிங்கர் 37 ரன்களும், டேவிட் வில்லி 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்தவர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் ஒரு முனையில் கேப்டன் ஆடம் வோஜஸ் சற்றி நிதானமாக விளையாடி 24 ரன்கள் எடுத்தார். பெர்த் அணி 19 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மெல்போர்ன் அணி பந்துவீச்சில் பிராட் ஹாக் 2 விக்கெட்களும், முகமது நபி, ஜாக் வில்டர்மத், வெய்ன் பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
 
201712292059338290_2_mrlbourne-hogg._L_styvpf.jpg
 
அபாரமாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் மிச்செல் ஜான்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. 
 
நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
 
#BigBashLeague #MelbourneRenegades #PerthScorchers

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/29205934/1137432/Big-Bash-League-Perth-Scorchers-beat-Melbourne-Renegades.vpf

  • தொடங்கியவர்

பிக் பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி பெற்றது.

 
பிக் பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்
 
மெல்போர்ன்:

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மெல்போர்ன் அணி, 20 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆனது. அந்த அணியில் கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 50 ரன்கள் (39 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார். இதுதவிர கெவின் பீட்டர்சன் 30 ரன்களும், ஜேம்ஸ் பாக்னர் 20 ரன்களும் எடுத்தனர். பிரிஸ்பேன் அணி தரப்பில் மிட்செல் ஸ்வெப்சன் 3 விக்கெட்களும், பென் கட்டிங், மார்க் ஸ்டெகீட், யாசிர் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
201801022251075168_1_bbl1._L_styvpf.jpg

பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். மெக்கல்லம் 30 பந்துகளில் 61 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து லியாம் பவ்வே பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ பர்ன்ஸ் களமிறங்கினார். பிரிஸ்பேன் அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. கிறிஸ் லின் 63 ரன்களுடனும், ஜோ பர்ன்ஸ் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்றைய போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
201801022251075168_2_bblss._L_styvpf.jpg

சிறப்பாக விளையாடி மூன்று விக்கெட்கள் வீழ்த்திய பிரிஸ்பேன் அணியின் மிட்செல் ஸ்வெப்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

#BBL07 #MelbourneStars #BrisbaneHeat

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/02225108/1138139/Big-Bash-League-Brisbane-Heat-beat-Melbourne-Stars.vpf

  • தொடங்கியவர்

பிக் பாஷ் கிரிக்கெட்: சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வெற்றி பெற்றது.

 
பிக் பாஷ் கிரிக்கெட்: சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
 

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிட்னி அணி வீரர்கள் எதிரணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். சிட்னி சிக்ஸர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜொகன் போத்தா அதிகபட்சமாக 32 ரன்கள் (23 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார். இதுதவிர நிக் மேடின்சன் 24 ரன்களும், சாம் பில்லிங்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். மெல்போர்ன் அணி தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்களும், ஜாக் வில்டர்மத், பிராட் ஹாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
201801032310526735_1_bblbravo._L_styvpf.jpg 

பின்னர் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். மார்கஸ் ஹாரிஸ் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேமரான் ஒயிட், பிஞ்ச்சுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார். சிறப்பாக விளையாடிய பிஞ்ச் 51 ரன்கள் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதன்பின் வெய்ன் பிராவோ களமிறங்கினார். மெல்போர்ன் அணி 15.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. கெமரான் ஒயிட் 49 ரன்களுடனும், வெய்ன் பிராவோ 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்றைய போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
201801032310526735_2_bblfinch._L_styvpf.jpg

சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த மெல்போர்ன் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BBL07 #MelbourneRenegades #SydneySixers

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/03231053/1138329/Big-Bash-League-Melbourne-Renegades-beat-Sydney-Sixers.vpf

  • தொடங்கியவர்

பிக் பாஷ் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் விழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி பெற்றது. #BBL07 #BrisbaneHeat #PerthScorchers

 
பிக் பாஷ் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்
 
 
பிரிஸ்பேன்:
 
இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. 
 
டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிஸ்பேன் அணியின் கிறிஸ் லின், பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கிறிஸ் லின் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் லின் 2 சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம் பிக் பாஷ் லீக்கில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாம் ஹீஸ்லெட் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து மெக்கல்லமும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
201801052325522074_1_bbl-bencutting._L_styvpf.jpg
 
பிரிஸ்பேன் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. பென் கட்டிங் 46 ரன்கள் (1 பவுண்டரி, 5 சிக்ஸர்), ஜோ பர்ன்ஸ் 36 ரன்கள் எடுத்தனர். பெர்த் அணியில் டேவிட் வில்லி 2 விக்கெட்களும், ரிகர்ட்சன், ஆண்ட்ரூ டை, ஆஷ்டன் அகர், ஜோயல் பாரிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டெவிட் வில்லி 25 ரன்களிலும், கைக்கெல் கிளிங்கர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்தவர்கள் ரன் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஷ்டன் அகார் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பெர்த் அணி, 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிஸ்பேன் அணி பந்துவீச்சில் பிரண்டன் டோகெட் 5 விக்கெட்களும், மார்க் ஸ்டெகீட் 3 விக்கெட்களும், மிச்செல் ஸ்வீவ்சன், யாசிர் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
201801052325522074_2_bbl-mom._L_styvpf.jpg
 
சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட் வீழ்த்திய பிரிஸ்பேன் அணியின்  பிரண்டன் டோகெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி புள்ளிப்பட்டியலில் எட்டு புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. 
 
#BBL07 #BrisbaneHeat #PerthScorchers

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/05232553/1138690/Big-Bash-League-Brisbane-Heat-beat-Perth-Scorchers.vpf

  • தொடங்கியவர்

பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் வெற்றி

 
அ-அ+

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டிகளில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. #BBL07 #HobartHurricanes #PerthScorchers

 
பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் வெற்றி
 
பெர்த்:

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. ஹோபார்ட் நகரில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஹோபார்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டார்கி ஷார்ட் 42 ரன்களும், மேத்தீவ் வேட் 41 ரன்களும், டெனியல் கிறிஸ்டேன் 28 ரன்களும் எடுத்தனர். சிட்னி அணி பந்துவீச்சில் சீன் அபோட் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஒவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிட்னி அணியின் சாம் பில்லிங்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் (31 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்தார். அவரைத்தவிர ஜோர்டன் சில்க் 45 ரன்களும், டெனியல் ஹியூஸ் 33 ரன்களும் எடுத்தனர். ஹோபார்ட் அணியின் தைமால் மில்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். சிட்னி அணியின் சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

201801082254038798_1_bigbash1._L_styvpf.jpg

அதைத்தொடர்ந்து பெர்த் நகரில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெர்த் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் விளையாடிய மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. மெல்போர்ன் அணியின் கேமரான் ஒயிட் 68 ரன்களும், டாம் கூப்பர் 57 ரன்களும், மார்கஸ் ஹாரிஸ் 48 ரன்களும் எடுத்தனர். பெர்த் அணியின் அண்ட்ரூ டை 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் அணி விளையாடியது. அந்த அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெர்த் அணியில் அதிகபட்சமாக அஷ்டன் டர்னர் 32 பந்துகளில் 70 ரன்கள் ( 3 பவுண்டரி, 5 சிக்ஸர் ) எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வில்லி 55 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடி 70 ரன்கள் அடித்த பெர்த் அணியின் அஷ்டன் டர்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய போட்டிகளில் முடிவில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பத்து புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BBL07 #HobartHurricanes #PerthScorchers

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/08225404/1139174/Big-Bash-League--Hobart-Hurricanes-Perth-Scorchers.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.