Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சைக்கிள்" ஒரு, நினைவு மீட்டல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

 

நமக்கு மூணு இலை முளைத்த எண்பதுகளின் முற்பகுதிகளில் நிலவை அல்லது விடிவெள்ளியை துணை கொண்டு; அல்லது விளக்கின் துணை கொண்டு இரவுப்பயணங்கள் போகும் நாட்களின் அந்திம பகுதி முகிழ்ந்திருந்தது.

அநேகமானோரின் வாகனமாக ‘நடராஜாக்கள்’ இருந்தபோது ஒருவர் ‘பைசிக்கிள்’ அல்லது துவிச்சகர வண்டி வைத்திருப்பது கிராமத்தின் இன்னொரு கௌரவ அடையாளம்.இன்னொரு விதமாக இந்த காலத்தை கூறுவதாயின் “அநேகமான பெண்டுகள் சைக்கிள் வைத்திருக்கும் பெடியன்களையே லவ்வினார்கள்”

‘ஹீரோ’ , “லுமாலா’ மற்றும் ‘ரலி’ என்பன அந்த காலத்து இளையோரின் கனவு கன்னிகள்.ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து ஒரு ‘லுமாலா’ சைக்கில் வாங்குவது என்பது இந்த காலத்தில் மூணு லட்சம் ரூபாய் சேர்த்து ஒரு மோட்டார் பைசிக்கிள் வாங்குவதற்கு மேல்.

இன்னொரு விஷயம் இப்பத்தைய மாதிரி அப்ப இந்த லீசிங் புதினங்கள் எல்லாம் இல்லை.ரெண்டாயிரம் ரூபா எண்டாலும் அது சொந்த உழைப்பில வந்த பணம்தான்.அதால அந்த வாகனம் பெறுதியான ஒண்டுதான்.

பிள்ளை மாதிரி இந்த சைக்கிள்கள பராமரிச்ச கன பேர நான் கண்டிருக்கன்.எண்ணை போட்டு துடைத்து ரெண்டு டயருக்கும் காத்தடிச்ச பிறகுதான் நிறைய பேரின் நாட்கள் தொடங்கும்.விவசாயத்த அடிப்படையா கொண்ட எங்கட ஊருகளில தோட்டங்களுக்கான பிரதான வாகனம் இந்த சைக்கிள்கள்தான்.தண்ணி இறைக்க , பசளை கொண்டு போக ,மரக்கறி ஏற்ற இன்னும் அத்தனை பிற பயன்பாடுகளுக்கும் அது ஒரு சாமி.

இப்ப என்னடா எண்டா லேடீஸ் மோட்டார் பைக்குகளில எல்லாரும் தோட்டத்துக்கு போறாங்க.அனேகமா இன்னும் அஞ்சி வரிசம் கனக்க காரில போய் தோட்டம் செய்யுறதுக்கு.ஆனா அப்ப இந்த விவசாய பாரம்பரியம் இருக்காது.

இப்ப ஆரும் வாகனங்கள கடன் வாங்கி ஓட்டுறத நான் காணல்ல.ஆனா அந்த நாளில அடிக்கடி நான் கேட்ட வசனம் ‘இந்தா உன்ர சைக்கிள கொஞ்சம் தாவன்.நான் இவடத்த கல்லடி பிள்ளையார் கோவிலடிக்கு ஒரு தரம் போயிட்டு வாரன்’.

சைக்கில் டயர் தேய தேய ஓடியும் மசியாத பெண்கள் லண்டன் , கனடா போன கதைகளும் உண்டு.ரெண்டு சுத்திலேயே மடங்கி ‘கொண்டவனே கண் கண்ட தெய்வம்’ எண்டு ‘செட்டில்’ ஆனவங்களும் உண்டு.’சைக்கிள’ வெட்டி விட்டுத்து ‘காரேறி’ போன கனவு கன்னிகளும் இருந்தனர்.அது அவனவன் தலைஎழுத்து நாம என்ன பண்ணுறது.

சொல்ல மறந்து போனன் “ஓடிப்போய் கட்டுனவங்க’ கனபேர் கடைசில இந்த சைக்கிள்ல இந்த திசையில்தான் போனாங்க எண்டு ‘காட்டி கொடுக்கிற’ சாத்திரிமாரும் நிறைய இருந்தாங்க அந்த நாளில.

பாட்டாளி வர்கத்தின்ர வாகனம் இதுதான் இண்டைக்கும்.ஊருக்கு போய்வார நேரத்துல கட்டுமுறிவு காட்டுக்குள்ள போய் விறகு வெட்டி மட்டக்களப்பு ரோட்டுக்கு வாற கன சைக்கிள்கள இப்பையும் காணுறன்.அப்ப தொண்ணூறுகள்ள கிரான்குளம் தர்மபுரத்து விறகுகள் சைக்கிள்களில ஊருக்கு வராட்டி நிறைய வீடுகளில அடுப்பு எரியாது.

பொங்கல் பான சுமக்கிறதில இந்த சைக்கிள்கள் ‘விண்ணன்’ கண்டியலோ.நம்மட ஆத்தாள்களும் ஆச்சிகளும் பக்கத்தில இருக்கிற கோவில்கள விட்டுபோட்டு அங்கால ஆறு கடந்து இருக்கிற தான்தோன்றி அப்பனுக்கோ அல்லது தாந்தாமலையானுக்கோ நேர்த்தி வைச்சிட்டாங்கண்டா முடிஞ்சி கத.

ஒரு வெள்ளிகிழமையில பானையும் பொங்கலும் சைக்கிளும் பட்டது பாடுதான் போங்கோ.அந்த பானைய விழுந்து விடாம இந்த மாமாக்கள் கட்டுறதே ஒரு கலைநயம்தான்.மறக்க ஏலா கண்டியலோ சைக்கிள்ல கொண்டு வந்து சாப்பிட்ட பொங்கல.

Bild könnte enthalten: 1 Person, sitzt und Fahrrad

சைக்கிள் ‘சீற்றில’ ஒருவன் , “பாரில’ ஒருத்தன் , ‘கேரியர்ல’ ஒருத்தன் , ‘சைக்கில் கேண்டில்ல ஒருத்தன்’ எண்டு டபிள் ரிபிளாகி பிறகு நாலாகி சைக்கிள் கட்டி போய் “சாந்தி’ தியேட்டர்ல படம் பார்த்த கதைகள் ‘நினைவோ ஒரு பறவை.விரிக்கும் அதன் சிறகை.’

அந்த நாளில அனேகமாக எழுவான்கரையில இருந்துதான் ‘வாத்திமார்’ படுவான்கரைக்கு படிப்பிக்க போறவங்க.இண்டைய இளம் ஆசிரியர்மார் சிம்பிளா மோட்டர் சைக்கிள போற தூரங்களை எல்லாம் அந்த காலத்து ‘மூதாதையர்கள்’ சைக்கிள போய் படிப்பித்தார்கள்.இத்தனைக்கும் இடையில காத்து , மழை, வெள்ளம் , கண்ணி வெடி , பொம்பர் அடி , செல்லடி இதையெல்லாம் தாண்டி அவங்கட சேவை அங்க கிடைச்சிதெண்டால் அதின்ர பெருமையெல்லாம் இந்த சைக்கில்களுக்குதான் சேரும்.

எங்கட இனப்பிரச்சின காலத்திலையும் இந்த சைக்கிள்கள் மாறாத இடம்பிடிச்ச கதைகள் இனி.ஏராளமான போராளிகளும் கனக்க இயக்கங்களும் தொடங்கின அந்த காலத்துல செருப்பும் இல்லாம நடந்து போய்தான் போராளிகளின் காலம் நகர்ந்தது.

பிறகு சைக்கிள்களில துவக்குகளோட பெடியங்கள் போறத கண்டம்.சைக்கில்களிலையே போய் காவலரண தாக்கி போட்டு வந்த ‘மின்னல் வீரர்களும்’ அந்த நாளில இருந்தாங்க.’மண்மீட்பு நிதி’ கேட்டு கொடுக்காத வீடுகளில ‘சைக்கிள்கள’ கொடுக்க வேண்டி இருந்தது “விடுதலைக்கு விலையாய்’.

’அம்பிளாந்துறை ஒபிசில இருந்து வரும் கடிதம்.’கலந்துரையாட வேணும் வாங்க’ எண்டு.குருக்கள்மட துறையடி பொயின்ட் தாண்டுறது கஷ்டம் விசேட படையணி அங்க எண்டு பாதைய மாத்தி ; பட்டிருப்பு பால போலிஸ் பொயின்ரில சா வீட்டுக்கு போறன் இல்லாட்டி கலியாணத்துக்கு போறன் எண்டு சென்றி நிக்கிறவனுகள பேய்க்காட்டி லேசில கடந்தா; நீங்களும் உங்கட சைக்கில் நண்பனும் மேலதிகமா மிதிக்க வேண்டிய தூரம் பத்து கிலோமீட்டர்.

காலையில போற கணவன்மாரும் சோதரர்களும் மாலையில காணாமல் போய் நினைவுகளாய் எஞ்சி கிடக்குறது அவங்க கடைசியா போன ‘சைக்கிள்கள்’ மட்டும்தான்.

வீட்ட பிரச்சின பட்டு இல்லாட்டி விடுதலை வேட்கையில ‘ஆத்துக்கு அங்கால போற’ இளசுகளின்ர நினைவுகளாய் ‘இயக்க ஒபிசுகளில’ தாறது ‘பிள்ளைகளின்ர பள்ளி உடுப்பும் அவங்கட சைக்கிள்களும்தான்.எப்பயும் பெத்த மனம் பித்து கண்டியலோ.

தொண்ணூறுகளுக்கு பிறகு ‘ஆமியின்ர’ போக்கு மாறி போனது.அவங்களும் ‘பெடியங்களுக்கு’ பதிலாக ஊருக்குள்ள ‘சைக்கிள் பவனி’.இதை கொஞ்சம் கவனி எண்டு ஏதும் கட்டளை “ரெக்கிகாரனுகளுக்கு’ வந்திச்செண்டா பிறகென்ன ‘மின்னாம முழக்கம்தான்’.அந்த காலங்களில சைக்கிள் டியூபுகளும் சின்ன உருளை குண்டுகளும் பொருளாதார தடை.

இப்படியான காலங்களில தெருவுக்கு ஒண்டாய் ‘சைக்கில் திருத்தும் கடைகள் மற்றும் ‘பேட்ச்/patch ‘ போடும் கடைகள் நிறைந்து கிடந்தன.இந்த சைக்கிளுக்கு ‘பட்ச்’ போடுறத கண்டிருகிறயலோ.என்னவொரு நுட்பமான வேலை அது.காத்த அடிச்சி , தண்ணிக்க போட்டு ,தோடை முள்ள அடையாளத்துக்கு குத்தி அப்புடி செய்வாங்க வச்சி.

அந்த நாளில நாலு பேரும் கூடுற இடமாய் இருந்த இந்த ‘ரிப்பேரிங் கடைகளில’ சூடான விவாதங்களும் நடக்கும் கையில வீரகேசரி பேப்பரோட.இந்த மோட்டார் சைக்கிள்கள் மலிஞ்சு போனாலும் போச்சி அந்த அரசியல் அரங்குகளும் அருகி போச்சி.அரிதான ஒரு விஷயமா போச்சுது இந்த ‘சைக்கிள் ஒட்டு போடுற கடைகள்’.

நான் மட்டக்களப்புல நேர்சிங் ரெயினிங் இருந்த நேரத்துல இங்கால அரசடி பிள்ளையார் தாண்டி ஒரு வாய் பேசாத பெடியன்ர “சைக்கிள் திருத்திற கடை’ ஒண்டு இருந்திச்சி.வேலையென்டா அப்புடி வேல.அருமையா செய்து தருவான் பெடியன்.இப்ப போன மாசம் ஒப்பின் யூனிவசிட்டிக்கு லோ கிளாசுக்கு போகக்க எதேச்சையா கவனிச்சன்.இருபது வருசத்துக்கு பிறகும் இப்பையும் அந்த பெடியனும் கடையும் அப்புடியே இருக்கு.ஆனா நிறைய மாற்றங்களோட.காணவே சந்தோசமா கிடந்தது.

25507803_838459092993678_639949717109580159_n.jpg?oh=0001bbac820d2eec1d02a0578f8cd83b&oe=5AC6DAB3

மிச்சம் சின்ன வயசுல அப்பாட சைக்கிள்ல களுவாஞ்சிகுடி அப்பம்மாட வீட்ட போய் வந்தது பிறகு கொஞ்சம் வளர்ந்து பட்டிருப்பு ஸ்கூலுக்கு மாமாட சைக்கிள்ல போய் வந்த நினைவுகள் எல்லாம் நம்மட தியேட்டருல கறுப்பு வெள்ளை படமா ஓடுது.

வேலை கிடைச்சு முதன் முதல் சம்பளத்துல second hand ஆக வாங்கின நீல நிறத்து லுமாலா பைசிக்கிள் “கண்ணம்மா நீ என் குழந்தையடி’ நினைவுகளாக.அது போகாத இடமில்ல.சுற்றாத திருவிழாக்கள், தெருக்களும் இல்லை

.ஒரு உள்ளூராட்சி தேர்தல் தினம் ஒண்டில நானும் நண்பனுமாய் மட்டக்களப்பு – அக்கரைப்பற்று தூரத்தை வெறும் ரெண்டரை மணித்தியாலத்துல ஓடி முடிச்சம்.ஆனா நாங்க ஆதரிச்ச கட்சி அந்த தேர்தலில பாதி தூரம்தான் ஓடிச்சுது.

பிறகு ஒரு வைகாசி பௌர்ணமி அண்டைக்கு நானும் இன்னொரு தோழனுமாய் மட்டக்களப்பிலிருந்து செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோவில் கடைசி திருவிழாவுக்கு.அண்டைக்கு அந்த கிரான்குளம் , புதுக்குடியிருப்பு முந்திரிய மரத்தோட்டங்கள்தான் போதி மரங்களாய் தெரிந்தன.

இப்படி நிறைய நினைவுகளும் கனவுகளுமாய்.தோழர்களும் தோழிகளுமாய் பயணித்த ‘சமாந்தரத்து சைக்கிள் பயணங்கள்’ இன்னொரு ‘ஆட்டோகிராப்’.ஆனா இந்த இடத்துல மனசுக்குள்ள ஒலிக்கிற பாடல் ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் ..... அது ஒரு கானாக்காலம்’ எண்டுற ‘பாண்டவர் பூமி’ பாடல்தான்.

இன்னொரு தீர்க்கமான கட்டத்தில் மட்டக்களப்பு மணிக்கூட்டு சந்தியில் இருந்து மைக்கல் கொலிஜ் சந்திவரை பயணித்த சமாந்தரமாய் இரு சைக்கிள்களின் இடையே நிலவிய மௌனமானது தீராத இடைவெளி ஒன்றினையே பிரசவித்தது. இன்னும் நிரப்பபடாத இடைவெளிகள் ......

நன்றி: திருஞானசம்பந்தன்  லலிதகோபாலன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.