Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2017-ன் சிறந்த ஒருநாள் அணியில் தோனி இடத்தைப் பறித்தது யார்? #Rewind2017

Featured Replies

2017-ன் சிறந்த ஒருநாள் அணியில் தோனி இடத்தைப் பறித்தது யார்? #Rewind2017

 
 
Chennai: 

2017-ன் டெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பட்டையைக் கிளப்பினர். ஒருநாள் போட்டிகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தத் தவறவில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் மட்டும் ஏமாற்றம் கண்டது. பாகிஸ்தானின் அந்த ஆச்சர்ய வெற்றி மட்டுமல்ல... ஆப்கானிஸ்தான், பாப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து போன்ற அணிகள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றது என ஒருநாள் கிரிக்கெட் பல நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்றுள்ள 129 போட்டிகளில் (டிசம்பர் 26 வரை) பல வீரர்கள், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர். பல வீரர்கள் சர்வதேச அரங்கினுள் அடியெடுத்து வைத்தனர். பலர் ரீ என்ட்ரி கொடுத்தனர். பலர் மேட்ச் வின்னர்களாக ஜொலித்தனர். இவர்களில் இந்த ஆண்டின் சிறந்த 11 பேர் யார்?  #Rewind2017

பி.கு: வீரர்களின் செயல்பாடுகள் டிசம்பர் 26 வரை நடந்த போட்டிகளை வைத்தே அளவிடப்பட்டுள்ளது.

 

ரோஹித்

ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் துணைக் கேப்டன் ஆகிவிட்டார்... ஒரு தொடரில் அணியை வழிநடத்திவிட்டார்... ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இரட்டைச் சதத்தையும் அடித்துவிட்டார். ரோஹித் ஷர்மா - இந்த ஆண்டு நான் ஸ்டாப் அதிரடி. ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி, முதல் 9 வருடங்களில் 10 சதங்கள் மட்டுமே அடித்திருந்தவர், இந்த ஒரே ஆண்டில் 6 சதங்கள் அடித்துள்ளார். 21 போட்டிகளில், பதினோறு 50+ ஸ்கோர்கள். ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் இரண்டாவது சிறந்த பேட்ஸ்மேன். 46 சிக்சர்கள் அடித்து பௌலர்களை சிதறடித்துள்ளார்.

டி காக் - #Rewind2017

குவின்டன் டி காக்

ஓப்பனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என இரண்டு பாக்ஸ்களையும் டிக் செய்கிறார் டி காக். அதனால், தவான், அம்லா, வார்னர் ஆகியோரைப் பின்னுக்குத்தள்ளுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அம்லாவுடன் சேர்ந்து மிகச்சிறந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். இந்த ஆண்டு 19 போட்டிகளில் 956 ரன்கள் குவித்துள்ளார் டிகாக். வங்கதேசத்துடனான முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். இலக்கு இன்னும் அதிகமாக இருந்திருந்தால் டபுள் செஞ்சுரி கூடப் போட்டிருப்பார். விக்கெட் கீப்பிங்கில் 23 கேட்சுகளும், 2 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார். டீசன்ட்டான கீப்பர். மிடில் ஆர்டர் ஆப்ஷன்கள் அதிகம் இருப்பதால் சிறந்த விக்கெட் கீப்பரான தோனியின் இடத்தை இவருக்கே தரவேண்டியுள்ளது.

பாபர் ஆலம்

பாபர் ஆலம்

பாகிஸ்தான் அணியின் எழுச்சியில் மிகமுக்கியப் பங்காற்றி வருகிறார் இந்த 23 வயது இளம் வீரர். முதல் ஐ.சி.சி தொடர் என்பதால் சாம்பியன்ஸ் டிராபியில் பெரிய அளவில் சோபிக்கத் தவறினார். ஆனால், அதற்கு முன்பும் பின்பும் சிறப்பாகவே ஆடியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில், அந்த அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கினார். அதற்கடுத்த வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடர்களிலும் தன் ரன் குவிப்பைத் தொடர்ந்த ஆலம், இந்த ஆண்டு 2 அரைசதங்களும், 4 சதங்களும் அடித்துள்ளார். இந்த ஆண்டு இவரது சராசரி 67.07. சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் மீண்டு எழுவதில் மிகப்பெரிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லோயர் மிடில் ஆர்டரில் ராஸ் டெய்லருக்குத் தரவேண்டிய இடம்... துவண்டுகிடந்த அணிக்குத் தூணாக விளங்குவதாலும், அதற்கான மரியாதை அவசியம் என்பதாலும் நம்பர் 3-க்கு நமது சாய்ஸ் பாபர் ஆலம்.

விராட் கோலி

விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிராக புனேவில் நடந்த போட்டியில் சதத்தோடு 2017-யைத் தொடங்கிய கோலி, கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்து இந்த ஆண்டை நிறைவு செய்துள்ளார். மொத்தம் 6 சதங்கள். 7 அரைசதங்கள். அவற்றுள் 4 அரைசதங்கள் 75-க்கும் மேல் அடித்து ஆட்டமிழக்காதவை. இல்லாவிடில் அவையும் சதங்களாக மாறியிருக்கும். எந்த அணியையும் விட்டுவைக்காமல் வெறித்தனமாக ரன் குவித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் 1,460 ரன்கள். திருமணத்துக்காக இலங்கை தொடரிலிருந்து விலகாமல் இருந்திருந்தால், 1,700 வரைகூட சென்றிருப்பார். கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் கோலி ஓகே. சாம்பியன்ஸ் டிராபியை நழுவவிட்டது மட்டும் மைனஸ். டெஸ்ட் அணியைப் போல் ஒருநாள் அணிக்கும் கேப்டன் கோலிதான்!

ஜோ ரூட் - #Rewind2017

ஜோ ரூட்

இந்த ஆண்டு விளையாடிய 19 போட்டிகளில் இரண்டில் மட்டும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்துள்ளார் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன். 9 முறை ஐம்பதுக்கும் மேல் அடித்துள்ளார் (2 சதம், 7 அரைசதம்). டு பிளஸ்ஸிஸ் (60.33), ராஸ் டெய்லர் (60.50) மிடில் ஆர்டர் இடத்துக்குத் தகுதியானவர்களே. ஆனால், ரூட்டின் சராசரி அவர்களை விடவெல்லாம் பலபடி மேலே இருக்கிறது.  இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளுடனான தொடர்களில் மட்டுமல்லாமல், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சிறப்பாகவே விளையாடினார். இந்த வருடம் அடித்த 968 ரன்களில் 62 சதவிகிதத்தை ஓடியே எடுத்துள்ளார். அவ்வளவு பொறுப்பான கேம்பிளான்.

ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

இப்போதைக்கு உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் என்பதில் இரண்டாவது ஒபீனியன் இருக்கவே முடியாது. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் கலக்கும் ஸ்டோக்ஸ், அனைத்து ஃபார்மட்களிலும், அதற்கு ஏற்றார்போல் விளையாடி 'கம்ப்ளீட் கிரிக்கெட்டரா'க உருவெடுத்துள்ளார். இந்த ஆண்டு 14 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும், அதில் 616 ரன்கள் எடுத்துள்ளார். 14 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் இவர் அடித்த சதம் மாஸ்டர்பீஸ். Finisher, Anchor, Partnership breaker என கிரிக்கெட்டின் வகை வகையான ரோல்கள் அனைத்துக்கும் பெர்ஃபெக்ட் ஃபிட் - ஸ்டோக்ஸ்.

பாண்டியா

ஹர்டிக் பாண்டியா

இந்த ஆண்டு ஹர்டிக் பாண்டியாவுக்கு மறக்க முடியாத ஒன்று. கடந்த அக்டோபரில்தான் இந்திய அணிக்கு அறிமுகமானார். இந்த ஒரு வருடத்திலேயே, அணியின் மிகமுக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். போதாதற்கு டெஸ்ட் அறிமுகம் வேறு. 31 விக்கெட்டுகள் எடுத்து, ஒருநாள் போட்டிகளில், இந்த ஆண்டின் டப் விக்கெட் டேக்கர்கள் வரிசையில் 6-ம் இடத்தில் இருக்கிறார். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியடையவேண்டும். இருந்தாலும், தேவைப்படும்போதெல்லாம் அணிக்குக் கைகொடுக்கிறார். இந்திய அணியின் ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டருக்கான தேடல், இவரோடு முடியும் என்று அனைவரும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு இவரது வளர்ச்சி வலுசேர்க்கிறது. சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில், மொத்த அணியும் சோடைபோக, கொஞ்சமும் சலனமின்றி ஹர்டிக் ஆடிய அந்த ஆட்டம்...அவ்வளவு சீக்கிரம் எவராலும் மறக்க முடியாது.

பிளங்கட் - #Rewind2017

லியாம் பிளங்கட்

ஒருவகையில், பிளங்கட்டும் கம்பேக் கிங்தான். 2011-ல் முடிந்துபோயிருக்கவேண்டிய அவரது கிரிக்கெட் வாழ்க்கை, 2015-ல் புதுப்பிக்கப்பட்டது. முன்பு, சுமாரான பௌலராக இருந்தவர், கம்பேக்குக்குப் பிறகு சூப்பர் பௌலராக மாறிவிட்டார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து, இங்கிலாந்து ஒருநாள் அணியின் தவிர்க்க முடியாத பௌலராக உருவெடுத்துள்ளார். 18 போட்டிகளில் 36 விக்கெட்டுகள். ஒவ்வொரு 4 ஓவருக்கும் ஒரு விக்கெட். 3 முறை 4 விக்கெட்டுகளும், ஒருமுறை 5 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஜேக் பால், கிறிஸ் வோக்ஸ் போன்ற இங்கிலாந்து அணியின் இளம் பந்துவீச்சாளர்களை வழிநடுத்த சிறந்த சாய்ஸ்.

ரஷித் கான்

ரஷித் கான்

2015 ஐ.பி.எல் தொடரில் கலக்கிய முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கிறிஸ் ஜோர்டான் போன்றவர்களையெல்லாம் ஓரங்கட்டியபோதே, கிரிக்கெட் உலகம் இந்த ஆப்கானிஸ்தான் சிறுவனை உற்று நோக்கத் தொடங்கிவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியை, அதன் சொந்த மண்ணில், கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் வீழ்த்துவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தான். அந்தப் போட்டியில், தன் லெக்-ப்ரேக்குகளால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை மிரட்டி, 18 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் வீழ்த்தினான். இந்த ஆண்டின் டாப் விக்கெட் டேக்கர்கள் வரிசையில் இவனுக்குத்தான் இரண்டாம் இடம். இப்போது வெறும் 19 வயதுதான் ஆகிறது. இனி பல ஆண்டுகளுக்கு தன் பௌலிங்கால், பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாய் திகழ்வான்.

ஹசன் அலி

ஹசன் அலி

பாகிஸ்தான்னாலே ஃபாஸ்ட் பௌலர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். எந்தப் போட்டியாக இருந்தாலும், பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் மீதுதான் எதிரணியின் கவனம் இருக்கும். சாம்பியன்ஸ் டிராபியின்போது, முகம்மது ஆமிர், ஜுனைத் கான், வஹாப் ரியாஸ் போன்றோர் மீது வெளிச்சம் படர, நிழலிலிருந்து எழுந்து ஜொலித்தார் அந்த மிதவேகப்பந்துவீச்சாளர் - ஹசன் அலி. 5 போட்டிகளில் 13 விக்கெட்டுகள். தொடர் நாயகன். அடுத்த இலங்கை தொடரிலும் 14 விக்கெட்டுகள். இந்த ஆண்டின் டாப் விக்கெட் டேக்கர் ஹசன் தான்.

அடில் ரஷித்

அடில் ரஷித்

 

ஏற்கெனவே அணியில் 4 ஃபாஸ்ட் பௌலர்கள் இருப்பதால், இந்த ஸ்லாட் ஸ்பின்னருக்கு. இம்ரான் தாஹிர் இந்த ஆண்டு 27 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சான்ட்னர் (26), குல்தீப் (22), சாஹல் (21) போன்ற இளம் வீரர்களும் சர்வதேச அரங்கில் பட்டையைக் கிளப்பியுள்ளனர். ஆனால், நம் சாய்ஸ் இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் அடில் ரஷித்.  தாஹிரைவிட 1 விக்கெட் குறைவுதான். ஆனால், விக்கெட் வீழ்த்திய ஸ்டிரைக் ரேட்டில் தாஹிரைவிட (32.2) ரஷீத்துடையது (28.4) மிகவும் குறைவு. அதுமட்டுமல்ல, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தாஹிரைவிட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு பந்துவீசிய போட்டிகளில், 2 போட்டிகளில் மட்டுமே விக்கெட் வீழ்த்தத் தவறியுள்ளார்.

https://www.vikatan.com/news/sports/112015-the-best-odi-eleven-of-2017.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.