Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழுபடும் இனப்பிரச்சினைக்கான தீர்வு

Featured Replies

இழுபடும் இனப்பிரச்சினைக்கான தீர்வு

1-1397440680395f9fb6456c027bab11e3357b3c9a.jpg

 

இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வின் அவ­சியம் தொடர்பில் சகல மட்­டங்­க­ளிலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றன. சர்­வ­தே­சமும் இதற்­கான அழுத்­தத்­தினை வழங்­கிக்­கொண்டு இருக்­கின்­றது. எனினும் இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்த முன்­னெ­டுப்­புகள் உரி­ய­வாறு இடம்­பெ­று­கின்­ற­னவா? என்­பது இப்­போது கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. தமிழ் மக்­களின் வலி­களை ஆட்­சி­யா­ளர்கள் புரிந்­து­கொள்­ள­வில்லை. இத­ய­சுத்­தி­யுடன் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு ஆட்­சி­யா­ளர்கள் முன்­வ­ர­வில்லை என்­றெல்லாம் பல விமர்­ச­னங்­களும் இப்­போது மேலெ­ழுந்து வரு­வ­த­னையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை என்­பது உக்­கிர தன்­மையைக் கொண்­ட­தாகும். இனப்­பி­ரச்­சினை கார­ண­மாக நாடு பல்­வேறு துன்ப துய­ரங்­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கின்­றது. இலங்­கையின் வர­லாற்றில் இவை­ய­னைத்தும் கறை­ப­டிந்த அத்­தி­யா­யங்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன. இன­வாத சிந்­த­னை­யா­ளர்கள் தமது இருப்­பினைத் தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக நாட்டு மக்­க­ளி­டையே பிள­வு­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­வித்து வரு­கின்­றார்கள். ஏற்­க­னவே தோற்­று­வித்தும் உள்­ளார்கள். இன, மத, மொழி ரீதி­யி­லான புறக்­க­ணிப்­புகள் அதி­க­மாகத் திணிக்­கப்­பட்­டன. சிறு­பான்மை மக்­களை எல்லாத் துறை­க­ளிலும் ஓரம் கட்டும் நட­வ­டிக்­கைகள் முடுக்கி விடப்­பட்­டதன் விளை­வாக நாட்டின் அமைதி சீர்­கு­லைந்­தது.

யுத்த மேகங்கள் கருக்­கொண்ட நிலையில் நாடு அதல பாதா­ளத்­தினை நோக்கிப் பய­ணிக்க வேண்­டிய இக்­கட்­டான சூழ்­நி­லையும் உரு­வா­னது. யுத்­தத்­தினால் இலங்­கைக்கு ஏற்­பட்ட தழும்­புகள் இன்னும் மறைந்­த­பா­டில்லை. இலங்கை தேசத்தின் தேகத்தில் இத் தழும்­புகள் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றன. வர­லாறு இலங்­கைக்குப் பாடம் கற்­றுக்­கொ­டுத்­துள்­ளது. எனினும் இதனைப் பாட­மாகக் கொண்டு இன­வா­தி­களும் ஆட்­சி­யா­ளர்­களும் திருந்­து­வ­தாக இல்லை. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்­சு­வதைப் போன்று சிறு­பான்­மை­யினர் மீது மேலும் மேலும் அடக்கு முறை­க­ளையே பிர­யோ­கித்து வரு­கின்­றனர்.

வர­லாறு கற்­றுக்­கொ­டுத்த பாடங்­களை இவர்கள் மறந்­துபோய் இருக்­கின்­றார்கள். அல்­லது மறந்­து­விட்­டது போல் பாசாங்கு காட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இன­வாத சிந்­த­னை­களின் விதைப்பின் மூலம் கிடைக்­கின்ற அறு­வ­டை­யா­னது மிகவும் மோச­மா­ன­தா­கவே இருக்கும் என்­பது சொல்லித் தெரி­ய­வேண்­டி­ய­தொரு விட­ய­மல்ல. இது தெரிந்­தி­ருந்தும் தெரி­யா­தது போல் காரி­யங்­களை மேற்­கொள்­வது புத்­தி­சா­லித்­த­ன­மல்ல.

ஓர் இனம் இன்­னொரு இனத்தை அடக்­கி­யாள முற்­ப­டு­தல்­கூ­டாது. அவ்­வாறு அடங்கி வாழ வேண்­டிய அவ­சி­யமும் கிடை­யாது. இது பல்­லின மக்­களும் வாழு­கின்ற ஒரு நாடாகும். இங்கு அனைத்து இனங்­க­ளி­னதும் உரி­மை­களும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு இதற்கு தோள்­கொ­டுக்க வேண்டும். இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை நீண்டு கொண்டு செல்லும் நிலையில் இவற்­றுக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வு மிகவும் அவ­சி­ய­மாகி இருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொண்ட நிலையில் நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தனர். புற்­று­நோ­யாகிப் போய் இருக்­கின்ற இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட பல பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கிடைக்கும் என்­கிற நம்­பிக்­கையில் நாட்டு மக்கள் இருந்­தனர். கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்பில் நம்­பிக்கை இழந்­தி­ருந்த நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது பல்­வேறு சாதக விளை­வு­க­ளுக்கும் வித்­திடும் என்­பதும் நாட்டு மக்­களின் நம்­பிக்­கை­யாக இருந்­தது. எனினும் இன­வா­திகள் புதிய அர­சி­ய­ல­மைப்பு முயற்­சி­க­ளையும் இப்­போது குழப்­பி­ய­டித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சியம் குறித்து கடந்த ஆட்சிக் காலத்தில் வலி­யு­றுத்­தி­ய­வர்கள் கூட இப்­போது தன் நிலையை மாற்­றிக்­கொண்டு புதிய அர­சி­யல­மைப்பு தேவை­யில்லை என்­கிற ரீதியில் கருத்­து­களை தெரி­வித்து வரு­கின்­றனர். இவர்­களை சந்­தர்ப்­ப­வா­திகள் என்று சொல்­வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

நாட்டை குட்­டிச்­சு­வ­ராக்கி வரு­கின்ற இத்­த­கை­யோரை மக்கள் இனங்­கண்டு வேர­றுக்க வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது.

ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடக்­கி­யாள முற்­ப­டுதல் கூடாது. அவ்­வாறு அடங்கி வாழ வேண்­டிய அவ­சி­யமும் கிடை­யாது. ஒவ்­வொரு இனத்­த­வரும் தத்­த­மது உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்க வேண்டும். இது பல்­லின மக்கள் வாழு­கின்ற நாடு. இங்கு அனை­வ­ரது உரி­மை­களும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

சந்­தர்ப்­ப­வாத அர­சி­யலில் ஈடு­ப­டு­ப­வர்கள் இனங்­கா­ணப்­பட வேண்டும். இத்­த­கை­யோ­ரால்தான் பல்­வேறு பிரச்­சி­னை­களும் மேலெ­ழும்­பு­கின்­றன என்­ப­த­னையும் விளங்­கிக்­கொள்­ளவும் வேண்டும். இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்து கட்­சிகள் ஒவ்­வொரு நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருப்­பதும் தெரிந்த விட­ய­மாக உள்­ளது. இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி முறை­யி­லான தீர்வு மிகவும் பொருத்­த­மா­னது என்று வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. எனினும் சமஷ்டி என்ற சொல்லே இன­வா­தி­க­ளுக்கு வேப்­பங்­கா­யாக கசக்­கின்­றது. சமஷ்­டியை எதிர்ப்­ப­வர்கள் பலர் சமஷ்டி என்றால் என்­ன­வென்றே தெரி­யா­த­வர்­க­ளாவர். எதிர்க்க வேண்டும் என்­ப­தற்­காக இவர்கள் எதிர்க்­கின்­றார்கள். தமி­ழர்­க­ளுக்கு எந்த உரி­மையும் கிடைத்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக இவர்கள் எதிர்க்­கின்­றார்கள். சமஷ்­டியை விளங்கிக் கொண்­ட­வர்கள் சமஷ்­டியை ஒரு­போதும் எதிர்க்­க­மாட்­டார்கள். பல்­லின மக்கள் வாழு­கின்ற ஒரு நாட்டில் அனை­வரும் இணைந்து மகிழ்ச்­சி­யாக வாழ்­வ­தற்கு சமஷ்­டியே கைகொ­டுக்கும் என்­ப­தனை விளங்­கிக்­கொள்­வார்கள்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு மாகாண சபை முறைகள் ஒரு தீர்­வா­காது என்று ஜே.வி.பி. அண்­மையில் தெரி­வித்­தி­ருக்­கின்­றது. இது பற்றி ஜே.வி.பி. மேலும் தெரி­விக்­கையில்;

இலங்­கையில் சமஷ்டி முறை­மையை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது நடை­முறைச் சாத்­தி­ய­மற்­றது. அத்­த­கைய ஒரு பின்­பு­லத்தில் இனப்­பி­ரச்­சினை மேலும் மோச­மா­வ­தற்கு இட­ம­ளிக்­காமல் தற்­போ­தைய மாகாண சபைகள் முறையில் குறிப்­பிட்ட சில மாற்­றங்­களைச் செய்து தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு ஜே.வி.பி. இணங்கும் என்று தெரி­வித்­துள்­ளது. மாகாண சபை முறையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­துதல், 13 ஐயும் விஞ்­சிய தீர்வு, ஒற்­றை­யாட்­சிக்குள் நிரந்­தர அர­சியல் தீர்வு என்­றெல்லாம் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் கடந்த காலத்தில் பேசப்­பட்­டது. 13 ஆவது திருத்தச் சட்டம் முன்­வைக்­கப்­பட்ட கால­கட்ட சூழ்­நி­லை­களும் சம­கால சூழ்­நி­லை­களும் மாறு­பட்ட தன்­மை­யினைக் கொண்­ட­வை­யாக விளங்­கு­கின்­றன. எனவே 13 ஆவது திருத்தம் தொடர்­பான விட­யங்­களை இப்­போதும் பேசிக் கொண்­டி­ருப்­பது ஒரு­போதும் சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தப் போவ­தில்லை. எனவே 13 ஐயும் தாண்டி நாம் சிந்­தித்துப் பார்க்க வேண்­டி­யதே பொருத்­த­மாகும் என்று புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருந்­தனர்.

இதே­வேளை, இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு 13 ஐயும் விஞ்­சிய தீர்வு குறித்து சிந்­திக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்­தினை இந்­தியா உள்­ளிட்ட நாடுகள் வலி­யு­றுத்தி இருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்க ஒரு விட­ய­மாகும். 13 ஆவது திருத்­தச்­சட்டம் இப்­போது முழு­மை­யாக அமுல்­ப­டுத்தப் பட­வில்லை. காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் தொடர்பில் இன்னும் விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்த வண்ணம் உள்­ளன. 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தி­னாலே பல பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 13 ஆவது திருத்தச் சட்­டமே கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­போது 13 ஐயும் விஞ்­சிய தீர்வு தொடர்பில் அர­சாங்கம் சிந்­திக்­குமா? என்றும் அர­சியல் அவ­தா­னிகள் கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி இருந்­தனர்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்றுக் கொடுப்­பது தொடர்பில் இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கை­களே இன்­னு­மின்னும் தொடர்ந்த வண்­ண­மாக இருக்­கின்­றன. கலந்­து­ரை­யா­டல்கள், மாநா­டுகள் என்­றெல்லாம் காலம் கடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. தமிழ் மக்­களின் வலி இன்னும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. பல இழப்­பு­களை சந்­தித்த நிலையில் இனியும் இழப்­ப­தற்கு எதுவும் இல்­லாத நிலையில் இம் மக்கள் அழுது புலம்பிக் கொண்­டி­ருக்கின்றனர். அர­சியல் கைதி­களின் விடு­தலை கேள்­விக்­கு­றி­யாகி யுள்­ளது. காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் இன்னும் தமது உற­வு­க­ளைத்­தேடி அலைந்து கொண்­டி­ருக்­கின்­றனர். கண்ணீர்க் கதைக்கு இன்னும் முடிவு கிட்­ட­வில்லை.

இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­ப­டாத நிலையில் இம் மக்­களின் உரிமைப் போராட்­டத்­தினை மழுங்­க­டிப்பு செய்யும் நட­வ­டிக்­கை­க­ளிலும் சில சக்­திகள் ஈடு­பட்டு வரு­கின்­றமை தொடர்­பிலும் நீங்கள் நன்­க­றிந்­தி­ருப்­பீர்கள். இந்­நாட்டில் இருந்­தது பயங்­க­ர­வாத பிரச்­சி­னையே தவிர இனப்­பி­ரச்­சினை அல்ல என்று சிலர் மூடி மறைக்­கின்­றனர். உண்­மையை திரித்­துக்­காட்ட முற்­ப­டு­கின்­றனர். இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு இத்­த­கை­யோரால் கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. இதே­வேளை, வடக்கு இளை­ஞர்­களை போதைக்கு அடி­மை­யாக்கி அவர்­களின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கவும் சமூ­கத்தை மழுங்­க­டிப்பு செய்­வ­தற்கும் சில­சக்­திகள் முற்­பட்டு வரு­கின்­றன. வடக்கு இளை­ஞர்கள் இச்­சக்­தி­களின் மாய வலைக்குள் வீழ்ந்து விடக்­கூ­டாது. போதை­யைக்­காட்டி பாதையை மாற்­றி­ய­மைக்க முற்­படும் சக்தி­களை இனங்­கண்டு கொள்ள வேண்டும். சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். கலாசார சீரழிவுக்கு இடமளிக்கலாகாது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-28#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.