Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குறுதி மட்டுமல்ல திட்டமும் வேண்டும்!

Featured Replies

 

வாக்குறுதி மட்டுமல்ல திட்டமும் வேண்டும்!

 
 

உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகள் மெல்ல மெல்ல ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன. முக்கியமான கட்சி களின் பரப்புரைகள் தொடங்கவில்லை என்றாலும், சிறு சிறு கட்சிகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. இதில் ஆரம்பத்திலேயே கேட்க முடியும் குரல் ‘அபிவிருத்தி’ பற்றியதாகவே இருக்கிறது. மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களைப் போன்று அல்லாமல் தமது பகுதியின், வட்டாரத்தின் அபிவிருத்தி குறித்தே மக்கள் கவனத்தில் எடுப்பார்கள் என்று கருதுகின்ற அரசியல்வாதிகள் அது பற்றிய வாக்குறுதிகளையும் அள்ளி இறைக்கத் தயாராகி வருகின்றார்கள் என்பதை பரப்புரையின் ஆரம்பக் கட்டத்திலேயே பார்க்க முடிகிறது.

சிங்கப்பூர் ஆக்குவோம், மலேசியா ஆக்குவோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசத் தயாராகிவிட்டார்கள் அரசியல்வாதிகள். அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. தேர்தல் மேடைகளில் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அவர்கள் சொல்லாமல் விட்டால் தான் அதிசயம். கட்சிக் கூட்டங்களில் தேர்தல் மேடைகளைப் போல வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என்று ஒரு கட்சிப் பிரமுகர் சொல்லப் போய், அது ஊடகங்களில் அம்பலப்பட்டதும் இங்குதான் நடந்தது.

எனவே எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் அபிவிருத்தி தொடர்பான வாக்குறுதிகளுக்குப் பஞ்சம் இருக்காது என்பது தெளிவாகவே தெரிகிறது. அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதி வழங்குவதும், அது நிறைவேற்றப்படாமல்போவதும் காலங்காலமாக நடந்துவருவதுதான். கொடுக்கும் எல்லா வாக்குறுதிகளையும் குறிப்பிட்ட ஆட்சிக் காலத்திற்குள் நிறைவேற்றுவதும் சாத்தியப்படாது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தாம் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்கிற குறைந்தபட்ச திட்டமோ, சிந்தனையோ இல்லாமல் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை வழங்குவதுதான் வெட்கக்கேடான, மிக மோசமான அரசியல் நடவடிக்கை.

மண்ணைப் பொன்னாக்குவோம் என்கிற குரலுடன் ஆரம்பித்திருக்கும் இந்தப் பரப்புரையைப் பார்க்கும்போது, அப்படி வாக்குறுதி வழங்குபவர்களைப் பார்த்து மக்கள் கேட்கவேண்டிய கேள்வி உங்கள் வாக்குறுதிகளை எப்படி நீங்கள் நிறைவேற்றப்போகிறீர்கள் என்பதும், உங்கள் திட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்பதும் தான்.

அரசியல்வாதிகள் கூட தமது வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் என்கிற திட்டத்தை விலா வாரியாக மக்களுக்கு வெளிப்படுத்தும் கடமையைக் கொண்டிருக்கிறார்கள். திட்டமே இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிட்டு பின்னர் எந்த ஒன்றையும் செய்யாமல் காலத்தைக் கடத்தும் அரசியல்வாதிகளை அல்லது வெறும் அறிக்கைகளில் மட்டுமே தமது அரசியல் காலத்தைக் கடத்தி மக்களையும் குழப்பும் அரசியல்வாதிகளை மக்கள் புறந்தள்ளவேண்டும்.

நிறைவேற்ற முடியாவிட்டாலும்கூட தத்தம் பகுதிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த திட்டங்களைக் கொண்டிருக்கக்கூடி யவர்கள், குறைந்தபட்சம் மக்களுக்குத் தலைமைதாங்கும் தகுதியையாவது கொண்டிருப்பார்கள். அதைவிட்டு எம்மைத் தேர்வு செய்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறும் பொய்மைகளை அரசியல் களத்தில் இருந்தே மக்கள் அகற்றிவிடவேண்டும்.

உள்ளுராட்சித் தேர்தல் களம் அதற்கு மிக உகந்தது. வேட்பாள ராக இருப்பவர்கள் தொகுதி மக்களால் ஓரளவுக்காவது அறியப்பட்டவர்களாக இருக்கையில், அவர்களிடம் உள்ள திட்டம் பயனுள்ளதா? இல்லையா? என்பதைப் பார்த்து அவரைத் தெரிந்தெடுக்க முடியும். இல்லையேல் அவரது அரசியல்கொள்கைத் தெரிவுக்காகவாவது ஆதரிக்க முடியும். இவையெவையும் இல்லாமல் அறிக்கைகளைக் கொண்டும் வாக்குறுதிகளைக் கொண்டும் பதவிகளை மட்டும் குறி வைப்போரை மக்கள் நிராகரிக்கவேண்டும்.

http://newuthayan.com/story/58302.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.