Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமையே இறுதி ஆயுதம்

Featured Replies

ஒற்றுமையே இறுதி ஆயுதம்

 
ஒற்றுமையே இறுதி ஆயுதம்
 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றிபெறுமெனவும், இதன் மூலம் கூட்டமைப்பின் பலத்தை மீண்டும் நிரூபிக்க முடியுமெனவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஞாயிறு "சுடர் ஒளிக்கு' வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் வழங்கிய செவ்வி வருமாறு

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் புளொட்டுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. தற்போது சுமூகமான நிலை காணப்படுவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் என்ன நடந்தது? பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதா?

பதில்: கருத்து முரண்பாடுகள் தோன்றின. வேட்பாளர்கள் நியமனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தன்னிச்சையாக செயற்பட்டார் .நாங்கள் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்துவிட்டார். அதன் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையுடன் மூன்று கட்சிகளின் தலைவர்களும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்) மூன்று முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் பின்னர் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தோம். அந்த இணக்கப்பாட்டிற்கு அமைய, தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு எட்டப்பட்டது. உண்மையில் இந்த முரண்பாடுகளுக்கு பிரதான காரணம் எனது கட்சியான புளொட்டிற்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் என்றுமில்லாதவாறு இந்தத் தேர்தலில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஆகவே, அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சில முரண்பாடுகள் உருவாகின.சிலர் தாம் போட்டியிடுவதற்கு அல்லது தாங்கள் முன்மொழியும் வேட்பாளர்களை களமிறக்குவதற்கு அழுத்தத்தை பிரயோகித்தார்கள். இந்தக் காரணங்களே முரண்பாடுகளுக்கு காரணங்களாக அமைந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதனூடாக வெற்றி பெற முடியுமென்ற நம்பிக்கையிலேயே இந்த அழுத்தங்களை அவர்கள் தந்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே, ஒரு இணக்கத்துடன் கிளிநொச்சி இன்னும் ஒரு சில இடங்களைத் தவிர, வடக்கில் அனைத்து இடங்களிலும் மூன்று கட்சிகளும் ஒன்றாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். தமிழ்க் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) பிரிந்து சென்றமையால் கூட்டமைப்பு மீதான மக்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கை குறைந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.

கேள்வி: பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில் உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்தப் பிரிவால் வாக்குகள் சிதறடிக்கப்படும் என்ற எண்ணப்பாடு இருக்கின்றது. உண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணியாகட்டும், அகில இலங்கை தமிழிக் காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகட்டும் அவர்கள் அனைவருமே கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிட்டவர்களே. எனினும், அவர்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. சுரேஷின் பிரிவு நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் பாதிப்பினை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எனினும், அது வாக்குகளை பெறுவதில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுப்பதற்கில்லை. எனினும், அது தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் வெற்றியை பாதிக்காது.

கேள்வி: தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக புதிய யாப்பு ஒன்று உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்த சூழலில், தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற கூட்டமைப்பிற்குள் இவ்வாறான பிளவுகள் சரியானதாக அமையுமா?

பதில்: அரசியல் அமைப்பு வருமா, வராதா என்பது வேறு விடயம். எனினும், தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்து ஆதரிப்பதனூடாக மாத்திரமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப் பணிகளிலேயே எங்களது அழுத்தங்களை தொடர்ச்சியாக கொடுக்க முடியும். அது மாத்திரமல்ல, சர்வதேசத்தின் அழுத்தங்களாலேயே இந்த புதிய யாப்பு உருவாக்கப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பவீனமடையுமென்றால் அது தென்னிலங்கை சிங்களத் தரப்பிற்கு வாய்ப்பாக அமைந்துவிடும். ஆகவே, தமிழ் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகவே, இந்த புதிய யாப்புப் பணிகளை சிறப்பாக முன்னெடுக்க தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முழுமையான ஆதரவினை வழங்குவார்கள் என நம்புகின்றேன்.

கேள்வி: தமிழ்க் கூட்டமைப்பு ஒற்றையாட்சி என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமரும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும், தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை எந்தவித மறுப்பையும் வெளியிடவில்லை. ஆகவே, தமிழ்க் கூட்டமைப்பில் கொள்கையிலிருந்து விலகிவிட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை தமது முன்மொழிவுகளை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளது. ஆகவே, இடைக்கால அறிக்கை என்பது முறிந்த முடிவு அல்ல. ஆகவே, எமது கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு முன்வைக்கப்பட்டால் மாத்திரமே நாம் ஆதரிப்போம். பல கதைகள் வரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித் தமிழீழத்தை பெற்றுவிட்டது என்பது போல, தென்னிலங்கையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, ஒரு முழுமையான தீர்வு முன்வைக்கப்படும் வரை ஏதாவது கருத்துக்களை வெளியிட்டு குழப்பக்கூடாது என்ற காரணத்திற்காகவே தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு அமைதியாக இருக்கின்றது. மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதைவிட, தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு சந்தர்ப்பங்களை தவறவிடக் கூடாது என்பதற்காகவே தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் மௌனமாக இருக்கின்றார் என நான் நினைக்கின்றேன்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்க்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையீடு செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அது உண்மையா?

பதில்: தனிப்பட்ட ரீதியில் நான் பல விடயங்களை பேசி இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பிரதமர் முயற்சிக்கவில்லை.

கேள்வி: யாழ். மாநகர முதல்வர் பதவிக்கான வேட்பாளரை நியமிப்பதில் சில முரண்பாடுகள் காணப்படுகின்றனவே...

பதில்: யாழ்ப்பாண மாநாகர சபை வேட்பாளரை நியமிக்கும் பொறுப்பு தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடும் அதுதான். மாகாண சபை உறுப்பினர் இமானுவெல் ஆர்னல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதுதொடர்பில் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், தமிழரசுக் கட்சி நியமிக்கும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் அது. எமது கடமை.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொள்கையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும், கூட்டமைப்பின் தலைமைக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளை கண்டுகொள்வதில்லை எனவும் அவரது பேச்சுக்கு இணங்கி செயற்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் உங்கள் கருத்து...

பதில்: இது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. உண்மையில் சில பிரச்சினைகள் காணப்படுவது உண்மையே. எனினும், தமிழ்க் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சீர்குலைக்க முடியாது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதனால்தான் பல விட்டுக்கொடுப்புகளுடன் செயற்பட்டுகொண்டிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளினதும் ஆலோசனைக்கு அமையவே தீர்மானங்களை மேற்கொள்கின்றது. எம்.ஏ.சுமந்திரனின் பேச்சை கேட்டு தலைமை நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

https://www.sudaroli.com/special-interviews/item/3107-2017-12-25-10-26-24

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.