Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது…

Featured Replies

வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது…

 virus-fever.jpg?resize=800%2C499

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், இன்று (30.12.17) யாழ்ப்பாணத்தில்  உயிரிழந்துள்ளார். 44 வயதுடைய  முல்லைத்தீவைச் சேர்ந்த இந்தப் பெண் வைரஸ் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத்தரப்புகள்  தெரிவித்துள்ளன.. இவரின் உயிரிழப்புடன் வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக  கணக்கிடப்பட்டுள்ளது.

நோயால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண், முதலில்  முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் மருத்துவமனைக்கு இடம்மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2017/58446/

 

 

வடக்கை புரட்டி எடுக்கும் டெங்கு – வைரஸ் காச்சல் இளம் தாயான விவசாய போதனா ஆசிரியரும் மரணம்…

Kri.jpg?resize=552%2C276

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளந்தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை மேற்கைச் சேர்ந்த 27 வயதுடைய லக்சன் கிருத்திகா என்ற விவசாயப் போதனாசிரியரான இளந்தாய், கடந்த 23 ஆம் திகதி பிரசவத்திற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த தாய் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதன் காரணமாக கடந்த 25 ஆம் திகதி அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் யாழ் குடாநாட்டில் டெங்கு நோயாளர்கள் 5783 பேர் இனங்காணப்பட்டதாகவும், அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க. நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரப் பகுதி, சாவகச்சேரி, உடுவில், சண்டிலிப்பாய், தெல்லிப்பளை ஆகிய இடங்கள் டெங்கு நோயால் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் வைரஸ் காச்சல் காணமாக அனுமதிக்கப்பட்ட முல்லைத் தீவைச் செர்ந்த பெண் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2017/58476/

  • தொடங்கியவர்

யாழ்ப்­பா­ணத்தில் மர்மக் காய்ச்­சலால் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டு­வ­தாக செய்­திகள் போலி­யா­னவை

யாழ்ப்­பா­ணத்தில் மர்மக் காய்ச்­சலால் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டு­வ­தாக செய்­திகள் போலி­யா­னவை

யாழ்ப்­பா­ணத்தில் மர்மக் காய்ச்­சலால் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டு­வ­தாக செய்­திகள் போலி­யா­னவை. குறிப்­பாக இப் பகு­தியில் மர்மக் காய்ச்­சலால் இறப்­புக்கள் ஏதேனும் இடம்­பெற்­றி­ருந்தால் அவர்­கள் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­பார்கள். ஆனால் எமது வைத்­தி­ய­சா­லையில் இறப்­புக்கள் தொடர்­பான பதி­வு­களில் அவ்­வா­றான பதிவு ஒன்றும் செய்­யப்­ப­ட­வில்லை என்று யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் டாக்டர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­துள்ளார்
கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் முல்­லைத்­தீவில் இன்­பு­ளு­வன்சா பீ தொற்றால் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட போதும் அவ்­வா­றான காய்ச்சல் இப் பகுதியில் ஏற்படவில்லை. எனவே இது தொடர்பாக பொது மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்­பா­ணத்தில்-மர்மக/

  • தொடங்கியவர்

யாழில் திடீர் மரணங்களுக்கு காரணம் இதுதான்!

 

 

சிலர் ஒருவித நோய்க்கு ஆளாகி உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த உயிர்க்கொல்லி நோய் குறித்து யாழ் மக்களிடையே அச்சம் தோன்றியிருந்தது.

9_Jaffna.JPG

இந்நிலையில், இந்த உயிர்க்கொல்லி நோயை அடையாளம் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்குள் இடம்பெற்ற இந்த மரணங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அதில், உயிரிழப்புகளுக்கு காரணம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் நெருப்புக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களே என்றும் புதுவிதமான அல்லது எந்தவொரு மர்ம நோயும் இதற்குக் காரணம் அல்ல என்றும் தெரியவந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்வதன் மூலம் இந்த நோய் பரவுகையைத் தவிர்க்க முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/28795

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.