Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மக்களின் நம்பிக்கை

Featured Replies

முஸ்லிம் மக்களின் நம்பிக்கை

 

புதிய கலப்புத் தேர்தல் முறை­மை­யி­னூ­டாக உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

ஏறக்­கு­றைய 40 வரு­டங்­களின் பின்னர் கட்­சிக்கு மாத்­திரம் வாக்­க­ளிக்கும் முதல் சந்­தர்ப்பம் வாக்­க­ளிக்கத் தகைமை பெற்­றுள்ள 15.8 மில்­லியன் வாக்­கா­ளர்­க­ளுக்கு இத்தேர்த­லி­னூ­டாகக் கிடைக்­க­வுள்­ளது. 25 நிர்­வாக மாவட்­டங்­க­ளி­லு­முள்ள 24 மாந­கர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிர­தேச சபைகள் அடங்­க­லாக மொத்தம் 341 உள்­ளூராட்சி மன்­றங்­க­ளி­லி­ருந்து இத்தேர்தல் மூலம் 8,293 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இத்தேர்தல் முறைமை இரு­ம­டங்கு உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் சந்­தர்ப்­பத்­தையும் வழங்­கி­யி­ருக்­கி­றது.

பெரும்­பான்­மை­யி­னத்தைச் சார்ந்த பெரிய கட்­சி­­க­ளுக்கு இப்­பு­திய தேர்தல் முறைமை சாத­க­மா­னது எனத் தெரி­விக்­கப்­பட்டு வரும் நிலையில், சிறு­பான்­மை­யின மற்றும் சிறிய கட்­சி­க­ளுக்கு இத்தேர்தல் முறைமை பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெறு­வதில் தாக்­கத்தை உண்­டு­பண்ணும் அல்­லது பிர­தி­நி­தித்­து­வத்தை குறை­வ­டையச் செய்யும் எனப் பர­வ­லாகப் பேசப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு இத்தேர்தல் முறைமை பிர­தி­நி­தித்­து­வத்தைக் குறைக்­கு­மாயின் இத்தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முஸ்லிம் சமூகம் குரல் கொடுக்க வேண்­டு­மென சமூ­கத்தின் மத்­தி­யி­லுள்ள சிவில் அமைப்­புக்­களின் செயற்­பாட்­டா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் சமூக ஆர்­வ­லர்கள் தொடர்ச்­சி­யாகக் குரல்­கொ­டுத்து வரு­கின்­றனர். ஏனெனில், முஸ்­லிம்­களின் சனத்­தொகைப் பரம்­ப­லா­னது இத்தேர்தல் முறை­மை­யி­னூ­டாக பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொள்­வதில் பெரும் தாக்­கத்தைச் செலுத்­து­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

முஸ்­லிம்­களின் குடி­ச­னப்­ப­ரம்­பலும்

 அர­சியல் பிர­தி­நி­தித்­து­வமும்

இந்­நாட்டில் செறிந்தும், சித­றியும் வாழும் முஸ்­லிம்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இப்­பு­திய இத்தேர்தல் முறை­மை­யினால் குறை­வ­டை­யு­மென்ற அச்­சம்,இத்தேர்தல் சீர்­தி­ருத்தம் தொடர்பில் பேசப்­பட்ட காலம் முதல் தெரி­வு இருப்­பினும், பிர­தி­நி­தித்­து­வத்தைப் பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய முஸ்லிம் சமூ­கம்சார் இரு கட்­சி­க­ளி­னதும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட 8ஆவது பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­று­பட்டு செயற்­ப­ட­வில்லை என்­பது மக்கள் மத்­தியில் தற்­போது எழுந்­துள்ள ஆதங்­க­மாகும்.

ஆனால், இக்­கட்­சிகள் விட்ட தவறை மறைப்­ப­தற்­காக இத்தேர்தல் முறைமை தொடர்பில் பல்­வேறு கருத்­துக்­களை கட்சித் தலை­மைகள் மக்கள் முன் தெரி­வித்து வரு­வதைக் காண முடி­கி­றது. அந்­த­வ­கையில், கடந்த 16ஆம் திகதி புத்­த­ளத்தில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிறிய கட்­சி­க­ளுக்கு சாவு மணி அடிப்­ப­தற்­கா­கவே புதிய உள்­ளூராட்சி மன்றத்தேர்தல் முறைமை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அதே முறையை வைத்து பெரிய கட்­சி­க­ளுக்கு சாவு­மணி அடி­க்கின்ற நிலை­மைக்கு இந்த தேர்தலை மாற்ற வேண்டும் என்றும் அவர்­களின் புதிய தேர்தல் முறையை பெரிய கட்­சி­களின் கழுத்தில் சுருக்குக் கயி­றாக மாற்­று­வதே எங்கள் நோக்கம் எனவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அவரின் இக்­கூற்­றா­னது கண்­கெட்ட பின் சூரிய நமஸ்­காரம் என்­பதை ஒப்­பு­வைப்­ப­தா­கவே அமை­கி­றது.

இத்தேர்தல் முறைமை சமூ­கத்­திற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்று தெரிந்தும் கூட அவற்றின் திருத்­தத்­திற்கு சிவப்புக் கொடி காட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் ஒன்­று­பட்டு செயற்­பட்­டி­ருக்க முடியும். ஏனெ­னில் 8ஆவது பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசிசக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட்ட முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் 7 பேரும், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் 5 பேரு­மாக 12 உறுப்­பினர்கள் உள்­ளனர். ஆனால், அவர்­களால் இத்தேர்தல் முறை­மையின் பாதிப்­புக்கு எதி­ராக பல­மாகச் செயற்­பட முடி­ய­வில்லை என்­பதே உண்மை.

இலங்கை வாழ் முஸ்­லிம்­கள் மூன்­றி­லொரு வீதத்­தினர் வடக்குக் கிழக்கில் செறி­வாக வாழ்­கின்­ற­போ­திலும் மூன்றில் இரண்டு வீதத்­தினர் தென்­னி­லங்­கையின் பெரும்­பா­லான பிர­தே­சங்­களில் சிதறி வாழ்­கின்­றனர்.

2011ஆம் ஆண்டின் குடி­சனப் மதிப்­பீட்டின் பிர­காரம் ஏறக்­கு­றைய 22.2 மில்லியன் மக்கள் தொகையை இந்­நாடு கொண்­டுள்­ளது. இத்­தொ­கையில் 1,967,227 பேர் முஸ்­லிம்­க­ளாவர். 9.7 வீத­மான முஸ்­லிம்­களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் அதிலும், கிழக்கு மாகா­ணத்தில் அதி­க­ளவில் செறிந்து வாழ்­கின்­றனர். அம்­பாறை மாவட்­டத்தில் 245,085 முஸ்­லிம்­களும், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 152,854 பேரும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 133,844 பேரும் என கிழக்கின் மாவட்ட ரீதி­யி­லான முஸ்­லிம்­களின் குடி­சனப் பரம்பல் சுட்­டிக்­காட்­டு­கி­றது. 2011ஆண்டின் கணக்­கெ­டுப்பின் பிர­காரம் கிழக்கு மாகா­ணத்தில் மொத்­த­மாக 575,936 முஸ்­லிம்கள் உள்­ளனர்.

புள்­ளி­வி­பரத் திணைக்­க­ளத்­தினால் 2011ஆண்டு கணக்­கெ­டுக்­கப்­பட்டு 2012ஆம் ஆண்டு அமுல்­ப­டுத்­தப்­பட்ட குடித்­தொ­கைக்­கேற்ப மாவட்ட ரீதி­யி­லான முஸ்­லிம்­களின் குடி­சனப் பரம்பல் அடர்த்­தி­யா­கவும் அடர்த்தி குறைந்தும் காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடியும்.

மாவட்ட ரீதி­யான முஸ்­லிம்­களின் சனத்­தொகைப் பரம்­பலை நோக்­கு­கின்­ற­போது கிழக்கு மாகா­ணத்தின் 3 மாவட்­டங்­க­ளிலும் மற்றும் கொழும்பு, புத்­தளம் கண்டி, களுத்­துறை, குரு­நாகல் ஆகிய மாவட்­டங்­க­ளிலும் முஸ்­லிம்கள் அதி­க­ளவில் வாழ்­கின்­றனர். ஏனைய மாவட்­டங்­களில் சிறிய தொகை­யி­ன­ராக அடர்த்தி குறைந்து வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். இக்­க­ணக்­கெ­டுப்பில் வட மாகாண முஸ்­லிம்­களின் பூர­ண­மான சனத்­தொகை கணக்­கெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இவர்கள் இடம்­பெ­யர்ந்து வாழ்­வ­தனால் அவர்­களின் குடிப்­ப­ரம்பல் இம்­மா­காண மாவட்­டத்தில் கணக்­கெ­டுப்பில் கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது புள்­ளி­வி­ப­ரங்­களில் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இவ்­வாறு முஸ்­லிம்கள் சிதறி வாழும் பிர­தே­சங்­களின் அர­சியல் உரிமை அல்­லது பிர­தி­நி­தித்­து­வத்தை இத்தேர்தல் முறை பாதிக்­கு­மாயின் அவர்கள் வாழும் பிர­தே­சங்கள் அபி­விருத்தி ரீதி­யாகப் புறக்­க­ணிக்­கப்­ப­டு­மாயின் அதற்­கான முழுப் பொறுப்­பையும் இப்­பா­ரா­ளு­மன்­றத்­தி­லுள்ள 21 முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுமே சுமக்க நேரி­டு­மென முஸ்லிம் சமூக ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்டி வரு­வ­தனைக் குறிப்­பிட்­டாக வேண்டும்.

இந்­நி­லை­யில்தான், இக்­க­லப்புத் தேர்தல் மூல­மான உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமும் 10 நாட்­களும் உள்­ளன. தவ­று­களும், பிழை­களும் இதன் பாதிப்­புக்­களும் மறக்­கப்­பட்ட நிலையில் தங்­க­ளது அர­சியல் பலத்தை நிரூ­பிப்­ப­தற்­காக பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் இணைந்தும், தனித்தும், பதிவு செய்­யப்­பட்டு செயற்­ப­டாத கட்­சி­க­ளி­னூ­டா­க­வும இததேர்தலில் கள­மி­றங்­கு­வ­தற்­காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் மற்றும்

புதி­ய­தாக அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்­யப்­பட்ட நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஆகிய முஸ்லிம் சமூ­கம்சார் பிர­தான நான்கு கட்­சி­களும் நாட்டின் பல பாகங்­க­ளிலும் போட்­டி­யிட வேட்­பு­ம­னுக்­க­ளைத் தாக்கல் செய்­துள்­ளன.

இக்­கட்­சி­க­ளோடு சுயேச்சைக் குழுக்­களும் கட்­டுப்­ப­ணத்தை செலுத்தி மக்கள் வாக்­கு­களைப் பெற்று அதி­கா­ரங்­களை தம­தாக்கிக் கொள்­வ­தற்­காக முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக மற்றும் சிறி­ய­ளவில் வாழும் பிர­தே­சங்­களைக் கொண்ட உள்­ளூராட்சி மன்­றங்­களில் போட்­டி­யி­ட­வுள்­ளன. இதனால், முஸ்லிம் பிர­தே­சங்­களில் தேர்தல் நட­வ­டிக்­கைகள் சூடு­பி­டித்து விட்­டதை அவ­தா­னிக்க முடி­வ­தோடு.் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை வெற்­றி­கொள்­வதே முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும் சுயேச்­சைக்­கு­ழுக்­க­ளி­னதும் இலக்­கா­க­வுள்­ள­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

முஸ்லிம் கட்­சி­களும் தேர்தல் களமும்

575,936 முஸ்­லிம்கள் வாழும் கிழக்கு மாகாணம் இத்தேர்தலின் போராட்­டக்­க­ள­மாக இப்­போதே மாறி­விட்­டது. முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யா­க­வுள்ள உள்­ளூராட்சி மன்­றங்­களை கைப்­பற்­றிக்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் கட்­சி­களும் சுயேச்­சைக்­கு­ழுக்­களும் பெரும் பிர­யா­சித்தம் செய்து வரு­கின்­றன.

அதி­லும், முஸ்லிம் காங்­கி­ரஸின் கோட்­டை­யாகக் கரு­தப்­படும் அம்­பாறை மாவட்­டத்தில் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டித்­தன்மை கடந்த காலத் தேர்தல்­களை விடவும் அதிகம் என்­பதை இத்தேர்த­லுக்­கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்­யப்பட்ட தினத்­தி­லி­ருந்து இடம்­பெற்று வரு­கின்ற சம்­ப­வங்­களைக் கொணடு உணர்ந்­து­கொள்­ளலாம். கட்­சித்­தா­வல்­களும், பேரம் பேசல்­களும், பிர­தே­ச­வாத கோஷங்­களும், ஊர்­பற்றும் அதி­க­ரித்து வரும் சூழலில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களும் குற்­றச்­சாட்­டு­களும் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கின்­றன..

திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்­ட­மென அழைக்­கப்­ப­டு­கின்ற அம்­பாறை மாவட்­டத்தின் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களை உள்­ள­டக்­கிய உள்ளூராட்சி மன்­றங்­க­ளுக்­காக முஸ்லிம் காங்­கிரஸ் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து யானைச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­கி­றது. இது தவிர தெஹி­யத்­த­கண்­டிய மற்றும் பதி­யத்­த­லாவ பிர­தேச சபை­க­ளுக்­காக ஜன­நா­யக ஐக்­கிய முன்­ன­ணியின் இரட்டை இலைச்­சின்­னத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்­நி­லையில், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இம்­மா­வட்­டத்தின் பல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­காக ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்­புடன் கூட்­ட­மைத்து மயில் சின்­னத்தில் போட்­டி­யி­டு­கின்­ற­போ­திலும், கல்­முனை மாந­கர சபைக்­குட்­ப­டட சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்­கான 6 வட்­டா­ரங்­க­ளுக்கும் வேட்­பா­ளர்­களை நிறுத்­த­வில்லை. இருப்­பினும், முஸ்லிம் காங்­கிரஸ் இப்­பி­ர­தே­சத்தில் வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யுள்­ளது. இவ்­வாறு முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் நிறுத்­தப்­பட்­டுள்ள வேட்­பா­ளர்கள் இரு­வரின் வீடுகள் கடந்த வாரம் இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளினால் உடைக்­கப்­பட்­டதன் மூலம் இப்­பி­ர­தே­சத்தின் தேர்தல்­களம் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கெ­தி­ரான போராட்­டத்தின் ஆரம்ப புள்­ளி­யாக அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

அத்­தோடு, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புடன் இணைந்தும் தனித்தும் முன்னாள்அமைச்சர் அதா­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் இம்­மா­வட்­டத்தின் 8 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் போட்­டி­யி­டு­கி­றது. நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி இம்­மா­வட்­டத்தின் பெரு­ம்­பான்மை முஸ்லிம் பிர­தே­சங்­க­ளி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­காக இரட்டைக் கொடிச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­காக வேட்பு மனுக்­களைத் தாக்கல் செய்­துள்­ளது.

இவ்­வாறு கட்சி ரீதி­யாக உறுப்­பி­னர்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளைக் கைப்­பற்­று­வ­தற்­கு­மாக இம்­மா­வட்­டத்தில் இக்­கட்­சிகள் கள­மி­றங்கிச் செயற்­பட்­டாலும் கட்­சி­க­ளுக்கா அல்­லது சுயேச்சைக் குழுக்­க­ளு­க்காக வாக்­க­ளிப்­பது. பிர­தேச நலனா? தனி­நபர் செல்­வாக்கா? ஊர்­பற்றா? என விடை காண­மு­டி­யா­த­தொரு குழப்ப நிலை மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

மக்­களின் இக்­கு­ழப்­ப­க­ர­மான நிலையில், கிழக்கின் அம்­பாறை மாவட்­டத்தில் கட்சிப் பலத்தைப் புடம்­போ­டு­வதற்­காக ஏட்­டிக்குப் போட்­டி­யாக தனித்தும் கூட்­டி­ணைந்தும் வேட்­பா­ளர்­களைக் கள­மி­றக்­கி­யுள்ள இக்­கட்­சிகள் இம்­மா­கா­ணத்தின் ஏனைய இரு மாவட்­டங்­க­ளிலும் தங்­க­ளது கட்சி சார்பில் வேட்­பா­ளர்­களைக் போட்­டி­யிடச் செய்­துள்­ளன.

அந்­த­வ­கையில், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஐக்­கிய தேசிக் கட்­சி­யுடன் இணைந்­தும் முஸ்லிம் தேசியக் கூட்­ட­மைப்­பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ளர்­களைக் கள­மி­றக்­கி­யுள்­ளது. அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஐக்­கிய தேசிய முன்­னணி சார்­பிலும், ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பு மற்றும் ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பு சார்­பிலும் வேட்­பா­ளர்­களைப் போட்­டி­யிடச் செய்­தி­ருக்­கி­றது.

இதனால், மட்­டக்­க­ளப்பு மாவட்­டமும் முஸ்லிம் கட்­சி­க­ளுக்­கி­டையே வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வதில் போட்­டி­த்தன்மை வாய்ந்த தேர்தல் மாவட்­ட­மாக அமையும், ஏனெனில், இவ்­விரு முஸ்லிம் கட்­சி­க­ளோடு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்­புல்லா அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், பொறி­யி­யலாளர் ரஹ்­மானைத் தவி­சா­ள­ராகக் கொண்ட நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் போர் ­க­ளத்தில் நிற்­பதால் இங்கு வாக்கு வேட்­டைக்­கான பலப்­ப­ரீட்சை மிகக் கடு­மை­யாகக் காணப்­படும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பல உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்கு முஸ்லிம் கட்­சிகள் தனித்து கள­மி­றங்­கு­வ­தற்­காக வேட்பு மனுக்­க­ளைத்­தாக்கல் செய்­துள்­ளன. இவற்­றோடு வடக்­கிலும் மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளி­லுள்ள உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­காக இக்­கட்­சிகள் பெரும்­பான்­மை­யின கட்­சி­க­ளுடன் கூட்­டி­ணைந்தும், தனித்தும் போட்­டி­யிட வேட்­பா­ளர்­களைக் கள­மி­றக்கி தேர்தல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

இவ்­வாறு வடக்கு, கிழக்கில் இந்­நான்கு கட்­சிகள் போட்­டி­யி­டு­கின்­ற­வேளை தேசிய காங்­கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்­சிகள் தென்­னி­லங்­கை­யி­லுள்ள உள்­ளூராட்சி மன்­றங்­க­ளிலும் போட்­டி­யி­டு­வ­தற்­காக தனித்தும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்தும் போட்­டி­யிட்டு உறுப்­பி­னர்­களை வெற்­றி­கொள்­வற்­காக செயற்­பட்­டாலும் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும்

பிர­தே­சங்­களில் தனித்துக் கள­மி­றங்­கி­யி­ருப்­ப­தனால் முஸ்­லிம்­களின் வாக்­குகள் சித­ற­டிக்­கப்­ப­டு­வதைத் தவிர உறுப்­பி­னர்­களைப் பெற முடி­யாது என்­பது உண­ரப்­ப­ட­வில்லை என்றே கூற வேண்டும்.

தாங்கள் தலைமை வகிக்கும் கட்­சி­க­ளுக்கு எந்­தெந்தப் பிர­தே­சங்­களில் செல்­வாக்கு இருக்­கி­றது என்­பதைப் புடம்­போ­டு­வ­தற்கு முற்­பட்­டுள்ள கட்சித் தலை­மைகள் முஸ்­லிம்­களின் வாக்­குகள் சித­ற­டிக்­கப்­ப­டாமல் காப்­பாற்­றப்­ப­டு­வ­தற்கு முயற்­சிக்­க­வில்லை என பெரும்­பான்­மை­யின மக்கள் மத்­தியில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் முஸ்­லிம்கள் தங்­க­ளது ஆதங்­கங்­களை வெளியி­டு­கின்­றனர். இப்­பு­திய கலப்பு முறைமைத் தேர்தல் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கும் சிறிய கட்­சி­க­ளுக்கும் பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெறு­வதில் சிக்கல் தன்­மையை ஏற்­ப­டுத்தும் அல்­லது பிர­தி­நி­தித்­து­வத்தைக் குறைக்கும் என்று கூறப்­ப­டு­கின்­ற­போ­திலும், இக்­கட்சித் தலை­மைகள் ஒன்­று­பட்டு இததேர்தலைச் சந்­திக்க முற்­ப­டாது தனித்­தனிக் கட்­சி­க­ளாகப் பிரிந்து மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை­யாக பச்­சை­யிலும் நீலத்­திலும் இணைந்து போட்­டி­யி­டு­வது மாத்­தி­ர­மின்றி நாங்கள் இன்­னென்ன பிர­தேச சபை­களைக் கைப்­பற்­றுவோம் என்று நம்­பிக்­கையும் தெரி­வித்து வரு­வ­துடன் வீராப்புப் பேச்­சுக்­க­ளையும் பேசி வரு­கின்­றனர்.

நம்­பிக்­கையும் வாக்­கா­ளர்­களும்

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ருக்கு வெளியில் தலை­காட்ட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள மக்கள் காங்­கிரஸ் திரு­கோ­ண­மலை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அப்­ப­துல்லாஹ் மஹ்ரூப் இத்தேர்தலில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 4 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கைப்­பற்றும் என நம்­பிக்கை வெளியிட்­டுள்ளார்.

அதேபோல், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 12 உள்­ளூராட்சி மன்­றங்­களை ஜனா­தி­பதி தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்சி கைப்­பற்றும் என பிரதி அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார்.

தேசிய காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தின் அக்­க­ரைப்­பற்று மாந­கர சபை மற்றும் அக்­க­ரைப்­பற்று பிர­தேச சபை­களைக் கைப்­பற்றும் என அக்­கட்சித் தொண்­டர்கள் நம்­பிக்கை வெளியிட்டு வரும் வேளையில் மயில் சின்­னத்தில் போட்­டி­யிடும் ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பும் திகா­ம­டுல்ல மாவட்­டத்தின் சில உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் கைப்­பற்றும் என அதன் ஆத­ர­வா­ளர்கள் என்­பதை விட முஸ்லிம் காங்­கி­ரஸின் அதி­ருப்­தி­யா­ளர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில், என்­று­மில்­லா­த­வாறு ஐந்து முறை­களில் முஸ்லிம் காங்­கிரஸ் தனது வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கி­யுள்­ளது. புது­மை­யான வியூ­கங்­களை கையாண்டு வரும் முஸ்லிம் காங்­கிரஸ் பல பிர­தேச சபை­களைக் கைப்­பற்­று­வ­தற்­கான முஸ்­தீ­பு­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக முஸ்லிம் காங்­கிரஸின் இணை­யத்­த­ளத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இருப்­பினும், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணி­யினால் பிர­தேச சபை­களைக் கைப்­பற்றும் நம்­பிக்கை எவையும் வெளியி­டப்­ப­டாத நிலையில் மாற்­றத்தை விரும்­பு­ப­வர்கள் எங்­க­ளது கட்­சிக்கு நிச்சயம் வாக்­க­ளிப்பர் என அக்­கட்சி குறிப்­பிட்­டுள்­ளது. இவ்­வாறு ஒவ்­வொரு கட்­சியும், அக்­கட்­சிகள் இணைந்­துள்ள கூட்­ட­மைப்­புக்­க­ளையும் வெற்­றி­பெறச் செய்­வ­தற்­காக உழைத்து வருவதுடன் மக்களைத் தம்பக்கம் இழுத்துக்கொள்வதற்காக முன்னோடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதை கிழக்கில் மாத்திரமின்றி கிழக்கிற்கு வெளியிலும் அவதானிக்க முடிகிறது.

வெற்றி நம்பிக்கையும் வீராப்புப் பேச்சுக்களும் ஊடகங்களையும் தேர்தல் மேடைகளையும் அலங்கரித்தாலும் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் மனநிலையையும் இக்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் அறிவதும் அவசியமாகும்.

கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் அக்கறைகொள்ளாது தங்களது அரசியல் இருப்புக்களையும் பதவிகளையும் தக்க வைத்துக்கொள்வதற்காக அரங்கேற்றிய நாடகங்களை இததேர்தல் காலத்தில் மக்கள் ஞாபகமூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதேச மக்களோடு தொடர்பற்றவர்கள், பிரதேச நலன்களிலும், அபிவிருத்தியிலும் அக்கறை கொள்ளாதவர்கள், சமூகத்தின் அடிமட்டத்திலுள்ளவர்களின் இன்ப, துன்பங்களில் பங்குகொள்ளாதவர்கள், கரடி பிறை காண்பது போன்று ஆடிக்கு ஒரு தரம் ஆவணிக்கு ஒரு தரமென பிறந்த மண்ணுக்கு வந்து செல்கின்றவர்கள், குடும்பங்களோடு தலைநகரில் வாழ்கின்றவர்கள், பணத்திற்கும், பதவிக்கும் கட்சி தாவுகின்றவர்கள், பிரதேசவாதம் கலந்த ஊர்பற்றுக் கொண்டவர்கள், அவர்களுக்கு சகல உதவிகளும் புரிவோம் என்று கூக்குரல் எழுப்புகின்றவர்களின் அன்புக்குரியவர்கள் போன்ற இத்தகையவர்களை வேட்பாளர்களாகவும் கட்சியின் உயர் பதவி வகிப்பவர்களாகவும் தனதாக்கிக் கொண்டுள்ள கட்சிகள் மக்களின் அதிருப்தியை அதிகமாகக் கொண்டுள்ள நிலையில் எவ்வாறு உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்ற முடியும்.

கட்சியை விடவும் மக்களோடு மக்களாக இருந்து மக்களின் நலன்களில் அக்கறைகொள்ளும் நல்லவர்கள் எக்கட்சிசார்பாக போட்டியிடுகிறார்களோ அக்கட்சிக்கு வாக்களிக்கும் மனப்பாங்கில் பெரும்பாலான அடிமட்ட மற்றும் அறிவுசார் மக்கள் உள்ளனர் என்பதை இத்தேர்தல் களத்தில் அவதானிக்க முடிகிறது. இத்தகைய மக்களின் மனப்பாங்கிற்கு மத்தியில் கட்சிகளின் நம்பிக்கை வெற்றி பெறுமா? அல்லது தோல்வியைத் தழுவுமா? என்பதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியே தீர்மானிக்கும்.

எம்.எம்.ஏ.ஸமட்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-30#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.