Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் ஒரு துண்டுக் காணி கூட விடுவிக்கப்படவில்லை! - சிறிதரன் குற்றச்சாட்டு 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சியில் ஒரு துண்டுக் காணி கூட விடுவிக்கப்படவில்லை! - சிறிதரன் குற்றச்சாட்டு 
[Sunday 2017-12-31 19:00]
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள  1515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக, படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக, படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.   

இது தொடர்பில், அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சி - இரணைதீவை விடுவிக்கக்கோரி, அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த மே மாதம் 1ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களுடைய காணிகளை இன்னமும் அரசாங்கம் விடுவிப்பதற்கு தயாராகவில்லை. அதைவேளை, கிளிநொச்சி நகரப் பகுதியில், நீர்த்தாங்கி அமைந்திருந்த காணியை படையினர் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள போதும், அதில் பழைய நீர்த்தாங்கியை அகற்றுவதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 எக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவற்கு படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். எனினும், இதுவரை ஒரு துண்டு காணி கூட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் வழங்கப்படவில்லை. கிளிநொச்சி நகரில் வீழ்த்தப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி மட்டும், கட்டுப்பாட்டிலிருந்து கரைச்சிப்பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரணைமடு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 1,200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் எனவும் படையினர் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால், அது கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சேராது. அது முல்லைத்தீவு மாவட்டத்துக்குளேயே சேரும்” எனத் தெரிவித்தார்.http://www.seithy.com/breifNews.php?newsID=196669&category=TamilNews&language=tamil

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.