Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மஹிந்த ராஜபக்ச;கெஹலிய தகவல்

Featured Replies

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மஹிந்த ராஜபக்ச;கெஹலிய தகவல்

 

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மஹிந்த ராஜபக்ச;கெஹலிய தகவல் 

புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் முன்வைத்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரடியாகவே சந்தித்து நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கிய சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றும்படி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரிவருகின்ற போதிலும், நாட்டை அடகுவைக்கும் திட்டத்தை அமுல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

20181ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கண்டி மாவட்டத்திலுள்ள தனது தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடும் உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டியிலுள்ள தனது இல்லத்தில் வைத்து இன்றைய தினம் காலை சந்தித்தார்.

ஆதரவாளர்களுக்கு புத்தாண்டு சிற்றுண்டிகளைப் பகிர்ந்தளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, இதனையடுத்து நடப்பு அரசியல் விவகாரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்தவாரம் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடிய விடயங்கள் குறித்தும் இதன்போது கருத்து வெளியிட்டார்.

“நேற்று முன்தினம் சுமந்திரன் எம்.பி யாழ்ப்பாணத்தில் வைத்து மிகத் தெளிவான விடயமொன்றை கூறியிருந்தார். நாங்கள் புதியவொரு விடயத்தை கோரவில்லை. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறே கோருகின்றோம். அந்த வாக்குறுதிக்காக 6 இலட்சத்து 72 ஆயிரம் வாக்குகளை வடக்கில் பெற்றுக்கொடுத்துள்ளோம். அதனால் அரசியலமைப்பு திருத்தமல்ல, அன்று வழங்கிய வாக்குறுதியான புதிய சமஷ்டி அரசியலமைப்பையே கோருவதாக சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் சமஷ்டிக்கும் மேல்சென்ற அரசியலமைப்பை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். ஜே.வி.பி இதற்கு ஆதரவளிப்பதாக கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது இன்றைய இயற்கையாகும். அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தவர் மஹிந்த ராஜபக்ச. எனினும் அந்த இடத்தில் வேறு தலைவர்கள் இருந்திருந்தால் ஆம் அப்படியே அதனை செய்துவிடுவோம் என்று கோழைத்தனமாக சொல்லியிருப்பார்கள். மஹிந்த ராஜபக்சவைப் போன்று அவரையொத்த தலைவர்கள் இந்த நாட்டில் இல்லை”)

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து பிரிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இதுகுறித்து ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர்.

எனினும் தேர்தல் காலங்களில் இப்படியான வதந்திகள் பரவுவது சகஜமான விடயம் என்றாலும் இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று அவர் நிராகரித்துவிட்டார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Kehaliya-rambukwela-comment-on-MR-met-sampanthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.