Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றிலைக்கும் கைக்கும் மஹிந்த துரோகம் இழைக்கார்

Featured Replies

வெற்றிலைக்கும் கைக்கும் மஹிந்த துரோகம் இழைக்கார்

5-795b81f246a7b728d349bfe5806576d69bb4ae35.jpg

 

(ஆர்.ராம்)

இரண்டு தடவைகள் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்திற்கும், அரசியல் அடையாளத்தினை அளித்த சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ துரோகம் இழைக்கும் நிலைக்குச் செல்ல

மாட்டார் என்ற நம் பிக்கை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை வகிக்கும் இக்கட்சிக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர். உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான பொது ஜன பெரமுனவின் முதலாவது பிரதான கூட்டம் இன்று சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் பிரசார மேடையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரசன்னமாகவுள்ளதோடு பெரமுனவின் தலைமையை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் இவ்வாறு வேறொரு தரப்பினருக்காக அரசியல் பிரசாரத்தில் ஈடுபடும் பட்சத்தில் சுதந்திரகட்சி எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது குறித்து அக்கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் சந்திம வீரக்கொடி கேசரிக்கு தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் மக்கள் தௌிவாக உள்ளார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உண்மையான தரப்பினர் யார்? அதன் தலைவர் யார்? சுதந்திரக் கட்சியின் கொள்கை என்ன? என்பதையெல்லாம் மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

நாம் மக்களுக்கு எமது நிலைமைகளை வௌிப்படையாக தெரிவித்துள்ளோம். எமது மக்களிடத்தில் ஒழிப்பதற்கு எம்மிடத்தில் எதுவும் இல்லை. ஆகவே அவர்கள் தமது நிலைப்பாட்டினை இந்த தேர்தலில் நிச்சயமாக வௌிப்படுத்துவார்கள்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது நாம் மரியாதை வைத்திருக்கின்றோம். அவர் இந்த நாட்டில் யுத்தினை முடிவுக்கு கொண்டு வந்தவொரு தலைவர். ஆவர் சுதந்திரகட்சியின் சிரேஷ்டத்துவ உறுப்பினர். கைச் சின்னத்திலான சுதந்திரக் கட்சியே அவருக்கு அரசியல் அடையாளம் அளித்திருந்தது.

அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக அரசியானசனத்தில் இருந்துள்ளார். சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திலேயே அவர் இரண்டு தடவைகளும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

அத்தகையவொருவர் வேறொரு அரசியல் தரப்பினருக்கு தலைமையேற்கச் செல்வார் என்று நாம் நம்பவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அவர் துரோகமிழக்க மாட்டார். அவ்வாறு துரோகமிழைத்துச் செல்லும் அளவிற்கு நிலைமைகள் காணப்படவில்லை.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர்கள் அவ்வாறு செயற்படுவார்களானால் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதா இல்லை என்பது தொடர்பில் இதுவரையில் கட்சியினுள் எவ்விதமான தீர்மானங்களும் உத்தியோக பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.