Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மோசடியில் பிரதமருக்கு தொடர்பு : குற்றவாளிகளை காப்பாற்ற ஜனாதிபதி முயற்சிக்கின்றார்; ஜே.வி.பி கடும் குற்றச்சாட்டு

Featured Replies

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மோசடியில் பிரதமருக்கு தொடர்பு : குற்றவாளிகளை காப்பாற்ற ஜனாதிபதி முயற்சிக்கின்றார்; ஜே.வி.பி கடும் குற்றச்சாட்டு

2-93f0da665edf827def0d6133c58779d39750ff7e.jpg

 

(ஆர்.யசி)

மத்தியவங்கி பிணைமுறி ஊழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்

புபட்டுள்ளதற்கான காரணங்களும், ஆதாரங்களும் அதிகமாகவே உள்ளன.

மறுபுறம் குற்றவாளிகளை காப்பாற் றவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என சந்தேகம் கொள்வதாக மக்கள் விடு

தலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக

மக்களுக்கு குறித்த அறிக்கை தொடர்பில் அறிந்துகொள்ள தாம் ஜனாதிபதியின் செயலாளரை இன்று சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி

தலைமை அலுவலகத்தில் இடம்பெற் றது.இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி...

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக ஜனநாயகம் பேசப்பட்டு வந்ததைப்போலவே ஊழல், குற்றங்கள் குறித்தும் அதிகம் பேசப்பட்டது. ஊழல் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும், சட்டத்தின் மூலமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகமாக கூறப்பட்டது.

எனினும் அவ்வாறு கூறியதற்கு மாறாகவே அனைத்தும் இடம்பெற்று வருகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளில் குற்றங்கள் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஊழல் மத்திய வங்கி பிணைமுறி ஊழலாகும். பிணைமுறி விவகாரம் வெளிவரத் தொடங்கியதுடன் ஏனைய ஊழல் குற்றங்கள் அனைத்துமே மூடிமறைக்கப்பட்டுவிட்டன. .

அதேபோல் ஜனநாயகத்திற்கு முரணான வகையில் இவர்கள் அனைவரும் செயற்படவும் ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் வெளிவர ஆரம்பித்தவுடன் அரசாங்கம் துரிதமாக செயற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்தாலும் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவை அனைத்துமே குற்றவாளிகளை தண்டிக்கும் நோக்கத்தில் அமைந்ததாகவோ அல்லது ஊழல் திட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலோ அமையவில்லை.

ஜனாதிபதி கையில் தற்போது அறிக்கை உள்ளது. இதனை வைத்திருந்து எந்தப் பயனும் இல்லை, முதல் கட்டமாக இந்த அறிக்கையினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஜனநாயகம் குறித்து பேசி மேடைகளில் வார்த்தை ஜாலங்களை வெளிப்படுத்தும் ஜனாதிபதி ஜனநாயகத்தை கையில் எடுக்க வேண்டும். அதேபோல் குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களுக்கு சட்டத்தின் மூலமாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

 இலங்கையில் இதுவரை காலமும் ஒரு ஊழலை இன்னொரு ஊழலால் மூடி மறைத்த வழக்கமே இருந்து வருகின்றது. இம்முறை அவ்வாறு இடம்பெறக் கூடாது. மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதை போலவே இதற்கு முன்னர் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னர் இடம்பெற்றதை போல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மூடி மறைக்காது மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும். ஆகவே இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதில் எமது பங்களிப்பும் அதிகம் உள்ளதாக நாங்கள் நம்புகின்றோம். ஆகவே நாளை( இன்று) ஜனாதிபதி செயலாளரை சந்தித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை மக்களுக்கு வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தவுள்ளோம்.

ஊழல் செய்யமாட்டோம் என நெஞ்சில் கைவைத்து சத்தியப்பிரமாணம் எடுக்கும் நபர்கள் முதலில் நடந்த ஊழல் விடயங்கள் குறித்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தில் உள்ள அனைவரும் ஊழலுக்கு துணைபோய் உண்மைகளை மூடி மறைத்து ஒருசில முக்கிய குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு முரணான ஒன்றாகும். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிக தொடர்புகள் உள்ளன என்பதற்கான சாட்சிகளும் காரணிகளும் அதிகமாகவே உள்ளன. குற்றங்கள் நிருபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அதை அறிந்த காரணத்தினால் தான் இன்று குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  ஊழல் வாதிகளை ஆதரித்து அவர்களை மேலும் பலப்படுத்தும் செயற்பாடுகளை செய்தால் மக்களே ஊழலை ஆதரித்ததாகிவிடும். ஆகவே இந்த தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்தி ஊழல் இல்லாத தலைமைகளை உருவாக்க ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.