Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சா வியாபாரிக்கு துணைபுரியும் வவுனியா சிதம்பரபுரம் பொலிஸாா்!

Featured Replies

கஞ்சா வியாபாரிக்கு துணைபுரியும் வவுனியா சிதம்பரபுரம் பொலிஸாா்!

 

கஞ்சா வியாபாரிக்கு துணைபுரியும் வவுனியா சிதம்பரபுரம் பொலிஸாா்!

வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் சிறுவர்களுக்கு இலவசமாக கஞ்சா விற்பனை செய்யும் நபரொருவருக்கு எதிராக கிராம மக்கள் அரச அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கஞ்சா வியாபாரி தொடர்பாக விதவைப்பெண்ணொருவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவித்து கடந்த 27-12-2017 அன்று கஞ்சா வியாபாரியால் கோடாலி தாக்குதலுக்குள்ளான செல்வரட்ணம் ஆனந்தராணி கடும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிராம மக்களால் கடந்த 28-12-2017 அரச அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சிதம்பரபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரால் எழுதப்பட்டு கிராம மக்களின் கையொப்பத்துடன் முறைப்பாட்டு கடிதம் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , ஆசிக்குளம் கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், அரசாங்க அதிபர் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது......

குறித்த கஞ்சா வியாபாரியான (செல்வராசா துரேசிராசா) அக்கம் பக்கத்திலுள்ள கிராமத்து சிறுவர்களுக்கு கஞ்சாவை இலவசமாக வழங்கி வருவதுடன் கிராம மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனா்.

அத்துடன் இந்த நபா் கஞ்சா வழக்குகளில் பலமுறை சிறை சென்றுள்ளார். சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி வரும் இவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் பொலிசார் பக்கசார்பின்றி நடந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த கிராமவாசியொருவர்.....

குறித்த கஞ்சா குற்றவாளிக்கு எதிராக சிதம்பரபுரம் பொலிசில் தகவல் வழங்கினால் தகவல் கொடுத்தவரின் விபரம் உடனடியாக பொலிசாரிடமிருந்து கஞ்சா வியாபாரிக்கு வழங்கப்படுவதாகவும் அதன் பின் தகவல் கொடுத்த நபர் மீது கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தில் வாழ்ந்துவருவதுடன் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் விசனம் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/vavuniya-sithamparauram-police

18 hours ago, நவீனன் said:

குறித்த கஞ்சா குற்றவாளிக்கு எதிராக சிதம்பரபுரம் பொலிசில் தகவல் வழங்கினால் தகவல் கொடுத்தவரின் விபரம் உடனடியாக பொலிசாரிடமிருந்து கஞ்சா வியாபாரிக்கு வழங்கப்படுவதாகவும் அதன் பின் தகவல் கொடுத்த நபர் மீது கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தில் வாழ்ந்துவருவதுடன் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் விசனம் தெரிவித்தார்.

சொறிலங்காவின் சிங்கள போலீசும் சிங்கள முப்படையுமே வடக்கில் நிகழும் சமூகவிரோத செயற்பாடுகளுக்கு மூல காரணமாக உள்ளது என்பதற்கு இது இன்னுமொரு ஆதாரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.